என் மலர்
சினிமா செய்திகள்
நடிகர் அஜித் அதிகம் வெளியே வராததற்கான காரணத்தை பிரபல பைக் ரேஸர் அலிஷா அப்துல்லா தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். இவர் மற்ற ஹீரோக்கள் போல் இல்லாமல் தனித்துவம் வாய்ந்தவர். சினிமா விழாக்களில் கலந்துகொள்ள மாட்டார். அதேபோல் பட புரமோஷன்களிலும் ஈடுபாடு காட்ட மாட்டார். திரைப்பிரபலங்கள் பலரும் அஜித் பட புரமோஷனுக்காவது வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். அஜித் சினிமா விழாக்களில் கலந்து கொள்ளாததற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணம் சொல்லி வருகின்றனர்.
இந்நிலையில், பிரபல பைக் ரேஸர் அலிஷா அப்துல்லா, அஜித் ஏன் வெளியே வருவதில்லை என்பதற்கான உண்மை காரணத்தை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: 'அஜித் பொது இடங்களுக்கு வராததற்கு காரணம், மக்கள் அவரைத் தனியாக விடமாட்டார்கள் என்பதால்தான். இது ரேஸ் ட்ராக்கில் நடந்த நிகழ்ச்சி ஒன்றின்போது எடுக்கப்பட்ட போட்டோ. அவரை மக்கள் நடக்கக்கூட விடவில்லை' என்று கூறியுள்ளார்.
The reason Ajith sir doesn’t come out in public, people don’t give him privacy,this was one of the events on the race track, where people didn’t allow him to even walk. pic.twitter.com/3WCrEQfgoR
— Alisha abdullah (@alishaabdullah) April 10, 2020
இதே போல மற்றொரு புகைப்படத்தை பதிவிட்டுள்ள அவர், 'இது இன்னொரு புகைப்படம். அவரால் ஒரு இன்ச் கூட நகர முடியவில்லை. இதுதான் கடைசி நாள். இதிலிருந்து தான் அவர் வெளியே வர வேண்டாம் என்று முடிவு செய்தார்' என குறிப்பிட்டுள்ளார்.
Another pic of our thala @ajithFC sir he couldn’t even move an inch, this as the last day he decided not to come out.. 😞 #Ajithpic.twitter.com/mRcMy1KDnc
— Alisha abdullah (@alishaabdullah) April 10, 2020
அலிஷா அப்துல்லாவின் இந்த டுவிட், சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அலிஷா பிரபல பைக் ரேஸர் அப்துல்லாவின் மகள் ஆவார். அப்துல்லாவும் அஜித்தும் ஒன்றாக, பைக் ரேஸில் பங்கேற்றுள்ளனர். அலிஷாவும் பைக் ரேஸர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல நடிகையின் பேஸ்புக் பக்கத்தை முடக்கி, ஹேக்கர்கள் கவர்ச்சி புகைப்படங்களை பதிவேற்றியது தொடர்பாக நடிகை போலீசில் புகார் அளித்துள்ளார்.
பிரபல நடிகைகளின் டுவிட்டர், முகநூல் பக்கங்களை சிலர் ஹேக் செய்து முடக்கும் விஷமத்தனங்கள் தொடர்ந்து நடக்கிறது. சமீபத்தில் நடிகை குஷ்புவின் டுவிட்டரை ஹேக் செய்தனர்.
இந்த நிலையில் பிரபல நடிகை அனுபமா பரமேஸ்வரன் முகநூல் பக்கத்தையும் தற்போது முடக்கி உள்ளனர். இவர் மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய ‘பிரேமம்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர். தமிழில் தனுஷ் ஜோடியாக ‘கொடி’ படத்தில் நடித்திருந்தார். தற்போது ‘தள்ளிப்போகாதே’ படத்தில் அதர்வா ஜோடியாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வர தயாராக உள்ளது.
முகநூல் பக்கத்தில் தனது புகைப்படங்கள், நடிக்கும் படங்கள் பற்றிய விவரங்கள் மற்றும் சமூக விஷயங்களை அனுபமா அடிக்கடி பகிர்ந்து வந்தார். ரசிகர்களுடனும் கலந்துரையாடினார். இந்த நிலையில் அனுபமா முகநூல் பக்கத்தையும் தற்போது ஹேக் செய்து அதில் கவர்ச்சியான பெண்ணின் உடலோடு அவரது தலையை ஒட்டி மார்பிங் செய்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளனர்.

இதை பார்த்த அனுபமா அதிர்ச்சியாகி, “இது மார்பிங் போட்டோ யாரும் நம்ப வேண்டாம். எனது புகைப்படத்தை இப்படி மார்பிங் செய்துள்ளீர்களே உங்களுக்கு அறிவு இல்லையா? உங்களுக்கு சகோதரியும், அம்மாவும் இல்லையா? இதுபோன்ற செயல்களுக்கு அறிவை பயன்படுத்துவதை விட்டுவிட்டு நல்ல காரியங்களுக்கு அறிவை பயன்படுத்துங்கள்” என்று கோபமாக சாடி உள்ளார். இந்த மார்பிங் புகைப்படத்தை யாரும் பகிர வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து சைபர் க்ரைம் போலீசிலும் புகார் அளித்துள்ளார்.
ஊரடங்கில் கடைகள் அனைத்தும் மூடியுள்ள நிலையில் உங்களுக்கு மட்டும் புகையிலை எப்படி கிடைத்தது மருந்து கடையில் வாங்கினீர்களா என வில்லன் நடிகரை ரசிகர்கள் சாடியுள்ளனர்.
தமிழில் நயன்தாராவின் இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்தவர் அனுராக் காஷ்யப். இந்தியிலும் பல படங்களில் நடித்துள்ளார். இந்தி திரையுலகில் முன்னணி இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் இருக்கிறார். ஊரடங்கில் இணையதளம் வழியாக கலந்துரையாடும் நிகழ்ச்சியொன்றில் அனுராக் காஷ்யப் பங்கேற்றார்.
அப்போது அவர் கஞ்சா போன்ற பொருளை காகிதத்தில் அடைத்து கையில் வைத்து இருப்பது போன்ற காட்சி இருந்தது. இதை பார்த்த ஒருவர் டுவிட்டர் மூலம் மும்பை காவல்துறைக்கு புகார் அனுப்பி, “இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ள கஞ்சாவை அனுராக் காஷ்யப் பயன்படுத்தி உள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வற்புறுத்தினார்.

அதற்கு டுவிட்டரில் பதில் அளித்த அனுராக் காஷ்யப், “நான் பயன்படுத்தியது வெறும் புகையிலைதான். இதை முழுமையாக விசாரித்து கேலி செய்பவர்களை போலீசார் திருப்திபடுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டு இருந்தார். ஊரடங்கில் கடைகள் அனைத்தும் மூடியுள்ள நிலையில் உங்களுக்கு மட்டும் புகையிலை எப்படி கிடைத்தது மருந்து கடையில் வாங்கினீர்களா? அல்லது காய்கறி கடையில் வாங்கினீர்களா? என்று மீண்டும் வலைத்தளத்தில் பலர் கேள்வி எழுப்பினர்.
இதனால் அனுராக் காஷ்யப்புக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
ரூ.400 கோடியில் ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர் நன்கொடை வழங்கியதை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலி தற்போது தெலுங்கின் முன்னணி கதாநாயகர்களான ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரையும் வைத்து ’ஆர்.ஆர்.ஆர்’(ரத்தம் ரணம் ரௌத்திரம்) என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். டிவிவி தானய்யா தயாரிக்கும் இந்த படம் சுமார் ரூ. 400 கோடியில் உருவாகி வருகிறது.
இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு ரத்தாகி உள்ளது. இதனால் வேலை இழந்து தவிக்கும் சினிமா தொழிலாளர்களுக்கு திரைப்பிரபலங்கள் உதவி செய்து வருகின்றனர். குறிப்பாக தெலுங்கு திரை நட்சத்திரங்கள் கோடி கோடியாக நிதியுதவி வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது, ஆர்.ஆர்.ஆர் படத்தின் தயாரிப்பாளர் ரூ.10 லட்சம் கொடுத்துள்ளார். இதனை ரசிகர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர். ரூ.400 கோடியில் படம் எடுத்தும் கொடுக்க மனமில்லையா என விமர்சிக்கின்றனர்.
விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கி இருக்கும் லோகேஷ் கனகராஜ், அடுத்த பட வேலையை ஆரம்பித்து இருக்கிறார்.
மாநகரம் படம் மூலம் அனைவரது கவனத்தையும் தன் பக்கம் இழுத்த லோகேஷ் கனகராஜ், கைதி பட வெற்றியின் மூலம் மேலும் உயர்ந்தார்.
தற்போது விஜய் மற்றும் விஜய் சேதுபதியை வைத்து அவர் இயக்கியுள்ள மாஸ்டர் திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது இப்படம், ஊரடங்கு முடிந்த பிறகு வெளியாக இருக்கிறது.
இப்படத்திற்கு பிறகு ரஜினியின் அடுத்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாகவும், கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டெர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியானது.
தற்போது அடுத்தப் படத்துக்கான கதை விவாத வேலைகளை லோகேஷ் ஆரம்பித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அது ரஜினி படமா என்பது விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிக்பாஸ் மற்றும் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து புகழ் பெற்ற அபிராமி திடீர் முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்றவர் அபிராமி. அஜித்துடன் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தார்.
இவர் சமூக வலைத்தளங்களிலும் சுறுசுறுப்பாக இயங்கி வந்தார். அவரது பெயரில் போலி டுவிட்டர் கணக்குள், டிக்டாக் கணக்குகள் பெருகிவிட்ட காரணத்தால் சமூக வலைத்தளங்களில் இருந்து வெளியேற முடிவு செய்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் எழுதியிருப்பதாவது: நான் இன்ஸ்டாகிராமில் மட்டும் தான் இருக்கிறேன். ஏனென்றால் இங்கு எனக்கு அதிகாரப்பூர்வ கணக்கு இருப்பதால் இங்கு எந்தப் பிரச்சினையும் வராது. இங்கிருந்தும் விரைவில் வெளியேறிவிடுவேன். டுவிட்டர் போலிக் கணக்குகளைப் போல டிக் டாக்கிலும் போலிக் கணக்குள் பிரச்சினை தருகின்றன என்று அபிராமி தெரிவித்துள்ளார்.
இவர் சமூக வலைத்தளங்களிலும் சுறுசுறுப்பாக இயங்கி வந்தார். அவரது பெயரில் போலி டுவிட்டர் கணக்குள், டிக்டாக் கணக்குகள் பெருகிவிட்ட காரணத்தால் சமூக வலைத்தளங்களில் இருந்து வெளியேற முடிவு செய்திருக்கிறார்.

பல வெற்றி திரைப்படங்களில் நடித்த விஷ்ணு விஷால் தான் நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பை அறிவித்திருக்கிறார்.
விஷ்ணு விஷால் தற்போது எப்.ஐ.ஆர் படத்தில் நடித்து வருகிறார். அவரது அடுத்தப் பட வேலையை ஏப்ரல் 11ல் ஆரம்பிக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக அது நடக்காமல் போய்விட்டது.
இந்நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், என்னுடைய புதிய படத்தை ஏப்ரல் 11 அன்று தொடங்குவதாக இருந்தேன். ஆனால் வாழ்க்கை வேறு திட்டங்களை வைத்திருக்கிறது.
புதிய படத்தின் தலைப்பு மற்றும் டீசரை வெளியிட வித்தியாசமான முயற்சி ஒன்றை செய்திருக்கிறோம் என்று கூறியிருந்தார். தற்போது, மோகன் தாஸ் என்று தலைப்பு வைத்து புதிய படத்தின் முன்னோட்டத்தையும் வெளியிட்டிருக்கிறார்.

சினிமா பெப்சி தொழிலாளர்களுக்கு அரிசி மூட்டைகளை "மாநாடு" தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வழங்கி இருக்கிறார்.
கொரோனாவால் உலகமே அவரவர் வீட்டிலிருக்கிறோம். அன்றாடம் வேலை செய்தால் மட்டுமே வயிறு நிறையும் என்ற நிலை இந்த கனவு சொர்க்கத்தில் இன்றும் இருக்கிறது.
சினிமா பெப்சி தொழிளாளர்களின் குடும்பங்கள் இந்த வேலையில்லாத நாட்களைக் கடந்து வர சிறு உதவியாக 50 அரிசி மூட்டைகளை (25 கிலோ) ஃபெப்சிக்கு (Film Employees Federation of South India ) வழங்கினார்
"மாநாடு" தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.
மாநாடு படத்தில் சிம்பு கதாநாயகனாக நடிக்கிறார். வெங்கட் பிரபு இயக்கி வருகிறார்.

ஊரடங்கு உத்தரவால் யாரும் வெளியே வர முடியாத நிலையில், நடிகர் ஒருவர் எளிமையாக திருமணம் செய்துள்ளார்.
கர்நாடக மாநிலம் மண்டியாவை சேர்ந்தவர் அர்னவ் வினாயஸ். அதுபோல் சிவமொக்காவை சேர்ந்தவர் விஹானா. இவர்கள் இருவரும் கன்னட திரையுலகில் இளம் நடிகர், நடிகை ஆவார்கள். இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் அர்னவ்- விஹானாவுக்கு திருமணம் செய்துவைக்க இருவரின் பெற்றோரும் முடிவு செய்திருந்தனர்.
இந்த திருமணத்தை பிரமாண்டமாக நடத்த கன்னட நட்சத்திர ஜோடி தீர்மானித்து இருந்தனர். ஆனால் தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் இவர்களது திருமணம் நேற்று சிவமொக்காவில் எளிமையாக நடந்தது. மணமக்கள் இருவரும் முகமூடி அணிந்திருந்தனர்.
அதுபோல் இதில் இருவரின் குடும்பத்தினர் மட்டுமே கலந்துகொண்டனர். மேலும் இவர்களது திருமணம் வீடியோ, புகைப்படம் எடுக்கப்பட்டது. அந்த கலைஞர்களும் முகமூடி அணிந்திருந்தனர்.

11 ஆண்டுகளுக்கு முன்பு கரண் நடிப்பில் வெளியான திரைப்படத்தின் பாடல் தற்போது டிரெண்டாகி வருகிறது.
2009 -ஆம் ஆண்டு ஜூலை 24 ஆம் தேதி, நடிகர் கரண், ஷம்மு, உதயதாரா, சக்திக்குமார், கஞ்சா கருப்பு, சரத் பாபு ஆகியோர் நடித்த படம் மலையன்.
இப்படத்தின் கதை சிவகாசி பட்டாசு தொழிற்சாலையில் வேலை பார்க்கும் ஒரு தொழிலாளி பற்றியது, இத்திரைப்படம் 2009 ஆம் ஆண்டு தமிழக அரசின் மூன்று விருதுகளை வாங்கியது.
இப்படம் வெளிவந்து 11 வருடங்கள் ஆகின்றன. இப்படத்திற்காக தீனா இசையில், சினேகன் எழுதிய "பொத்தி வெச்ச ஆசை எல்லாம் பத்திரமா இருக்குது ஐயா" என்ற பாடல் தற்போது Tik - Tok ல் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
கொரோனா பாதிப்பில் நாடு திரும்ப முடியமால் வெளிநாட்டில் இருக்கும் தன்னுடைய கணவனை நினைத்து உருகி தாலியை கையில் பிடித்து கொண்டு பெண்கள் டிக் டாக் செய்கிறார்கள்.
இது பார்ப்பவர் மனதை நெகிழ வைக்கிறது. 11 வருடங்கள் ஆனாலும் இந்தப்பாடல் நவீன டிக் டாக் காலத்திலும் ட்ரெண்டிங் ஆகி வருவதை எண்ணி படக்குழு மகிழ்ச்சி அடைகிறார்கள்.

தமிழில் கவர்ச்சி நடிகையாக வலம் வரும் சஞ்சனா சிங், சமூக வலைத்தளத்தில் வித்தியாசமான சவால் ஒன்றை விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க வேண்டும் என்பதற்காக போடப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால், பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை, அனைவரும் வீட்டிலேயே முடங்கி இருக்கும் சூழல் உருவாகியுள்ளது.
தற்போது கவர்ச்சி நடிகை சஞ்சனா சிங், உள்ளாடையோடு... தலைகீழாய் நின்றபடி உடை போடும் சேலஞ்சு செய்து இதனை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
முடிந்தவரை தங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்தும் பிரபலங்கள் பொழுதை போக்கி வருவதோடு, தங்கள் செய்த விஷயங்களை புகைப்படம் மற்றும் வீடியோ மூலம் ரசிகர்களுக்கும் தெரியப்படுத்தி வருகிறார்கள்.It’s lack of faith that makes people afraid of meeting challenges and I believe in myself to accept the challenges ,(always challenge to yourself ) pic.twitter.com/4Sz0u9OfJp
— Sanjana Singh (@SanjanaSingh_) April 10, 2020
தற்போது கவர்ச்சி நடிகை சஞ்சனா சிங், உள்ளாடையோடு... தலைகீழாய் நின்றபடி உடை போடும் சேலஞ்சு செய்து இதனை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மன அழுத்தத்தில் இருந்து மக்கள் விடுபட பாடகர்கள் புதிய முயற்சியில் இறங்கியுள்ளார்கள்.
இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கபட்டு வருகிறது. அதையும் மீறி சிலர் வெளியே சுற்றுவதால் அவர்கள் மூலம் கொரோனா பரவலாம் என்ற அச்சமும் நிலவுகிறது. நடிகர்-நடிகைகள் கொரோனா விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு மக்களை வீட்டில் இருக்கும்படி வற்புறுத்தி வருகிறார்கள்.
கொரோனா தடுப்பு பணிகளில் டாக்டர்கள், செவிலியர்கள், போலீசார், மருத்துவ ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் இரவு பகலாக உழைத்து வருகின்றனர். களத்தில் பணியாற்றும் இவர்களுக்காகவும் மக்களின் மன அழுத்தம் குறைக்கவும் பாடகர்கள் வீட்டில் இருந்தே பாடும் ‘சங்கீத கேது’ என்ற ஆன்லைன் இசை நிகழ்ச்சியை தொடங்கி உள்ளனர். இதனை இந்திய பாடகர்கள் கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.
தற்போதையை சூழ்நிலையில் நாட்டில் உள்ள முன்னணி பாடகர்கள் மூலம் மக்களின் மன அழுத்தம் கவலையை குறைக்க இந்த இசை நிகழ்ச்சி நடத்தப்படுவதாக அந்த அமைப்பு அறிவித்து உள்ளது. இதில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், கே.ஜே.ஜேசுதாஸ், லதா மங்கேஷ்கர், ஹரிஹரன், ஷங்கர் மகாதேவன், ஆஷா போஸ்லே, உதித் நாராயணன், ஷான், பங்கஜ் உதாஸ், சோனு நிகம் உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி பாடகர்கள் கலந்து கொண்டு வீட்டில் இருந்தே பாடுகிறார்கள். இந்த இசை நிகழ்ச்சி 3 நாட்கள் இரவு 9 மணிக்கு நடக்கிறது.