என் மலர்
சினிமா செய்திகள்
சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஆச்சார்யா படத்தில் நடிக்க ஒப்பந்தமான காஜல் அகர்வால், அப்படத்திலிருந்து விலகியதாக தகவல் பரவி வருகின்றன.
சிரஞ்சீவி தனது கனவுப்படமான சைரா நரசிம்ம ரெட்டி படத்தை முடித்துவிட்டு ரசிகர்களுக்காக தற்போது ஆச்சார்யா என்கிற கமர்சியல் படத்தில் நடித்து வருகிறார். கொரட்டலா சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் கதாநாயகியாக திரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். விரைவில் இந்தப்படத்தின் படப்பிடிப்பில் அவர் கலந்துகொள்ள இருந்த நிலையில் திரிஷா திடீரென இந்த படத்திலிருந்து விலகினார்.

இதையடுத்து திரிஷாவுக்கு பதிலாக காஜல் அகர்வால் நடிக்க ஒப்பந்தமானார். இதனிடையே தமிழ் படத்திற்காக அதிக நாட்கள் கால்ஷீட் கொடுத்ததாகவும், இதனால் சிரஞ்சீவியின் ஆச்சார்யா படத்தில் இருந்து காஜல் அகர்வாலும் விலகியதாக செய்திகள் பரவின. இந்நிலையில், அதுகுறித்து விளக்கம் அளித்துள்ள காஜல் தரப்பு, அவர் தமிழ் படத்திற்காக அதிக நாட்கள் கால்ஷீட் கொடுத்தது உண்மைதான். இருப்பினும் அவர் சிரஞ்சீவியின் படத்தில் இருந்து விலகவில்லை. அதுபற்றிய செய்திகள் உண்மையில்லை என கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது..
விண்ணைத்தாண்டி வருவாயா, என்னை அறிந்தால் போன்ற படங்களில் இணைந்து பணியாற்றிய திரிஷா - கவுதம் மேனன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.
சிம்பு - திரிஷா கூட்டணியில் வெளியாகி காதலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற படம் விண்ணைத்தாண்டி வருவாயா. கவுதம் மேனன் இயக்கத்தில் உருவான இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால் அது கைகூடவில்லை. பின்னர் கவுதம் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் படத்தில் திரிஷா அஜித்துக்கு ஜோடியாக நடித்தார். இதையடுத்து இவர்கள் இருவரும் இணைந்து படம் எதுவும் பண்ணவில்லை.
இந்நிலையில் நடிகை திரிஷா தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், திரிஷாவுக்கு மொபைல் கேமராவை எப்படி கையாள்வது என்பது குறித்து கவுதம் மேனன் வீடியோ காலில் கற்றுக்கொடுக்கிறார். என்ன ஒரு ஜாலியான காலைப்பொழுது. நாங்கள் என்ன படம் பிடித்திருக்கிறோம் என்பதை உங்களுக்கு காட்ட ஆர்வமாக இருக்கிறேன். நன்றி கவுதம் மேனன், என திரிஷா அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதன்முலம், திரிஷாவும் கவுதம் மேனனும் இணைந்து குறும்படம் ஒன்றை தயார் செய்து வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
What a fun morning🌼Can’t wait to show you guys what we filmed📱😉
— Trish (@trishtrashers) May 1, 2020
Thank you @menongauthampic.twitter.com/yt42CeI4nS
பைக் ரேஸரான அஜித், ஒரு டிரிப்பின் போது ஏழை ரசிகரின் வேண்டுகோளுக்கிணங்க அவரது குடிசை வீட்டில் தேநீர் அருந்தியுள்ளார்.
நடிகர் அஜித் மே 1-ந் தேதி பிறந்தநாள் கொண்டாடினார். அவரது பிறந்தநாளுக்கு ரசிகர்கள் மட்டுமல்லாது திரையுலக பிரபலங்கள் என பலரும் வாழ்த்து கூறினர். அந்தவகையில் நடிகரும், அஜித்தின் நண்பரும், புரோ கபடி நிகழ்ச்சி தொகுப்பாளருமான சுஹேல் சந்தோக், அஜித்துடனான சுவாரஸ்யமான நிகழ்வை பகிர்ந்துள்ளார்.
கடந்த 2013-ம் ஆண்டு வீரம் படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் அஜித்தும், சுஹேலும் 500 கிலோமீட்டர் பைக் டிரிப் சென்றுள்ளனர். அப்போது டீ குடிப்பதற்காக ஓர் இடத்தில் நிறுத்தியுள்ளனர். அந்த சமயத்தில் அருகில் வசித்த குடும்பத்தினர் அஜித்தை தங்கள் குடிசை வீட்டுக்கு அழைத்து டீ போட்டு கொடுத்துள்ளனர்.
As promised, lovely moment on one of our rides. We stopped for tea & this family asked us to have tea in their hut & were too shy to ask for a picture. So #Thala#Ajith asked them himself, I clicked the picture & he then had it printed and sent to them!😇👌🏽#HBDDearestThalaAJITHpic.twitter.com/4kVGg4YfzP
— Suhail Chandhok (@suhailchandhok) May 1, 2020
அவர்கள் அஜித்துடன் புகைப்படம் எடுப்பதற்காக கேட்க வெட்கப்பட்டு தயங்கி நின்றுள்ளனர். இதை அறிந்த அஜித் அவர்களை அழைத்து புகைப்படம் எடுத்தது மட்டுமல்லாது. அந்த புகைப்படத்தை பிரிண்ட் போட்டு அனுப்பியும் வைத்ததாக சுஹேல் தெரிவித்துள்ளார். சுஹேல் சந்தோக், வீரம் படத்தில் அஜித்தின் தம்பியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மருதநாயகம் படம் குறித்து இன்ஸ்டாகிராம் நேரலையில் விஜய் சேதுபதியிடம் நடிகர் கமல்ஹாசன் பகிர்ந்து கொண்டார்.
கமல்ஹாசன் கனவு படமான மருதநாயகம் படவேலைகள் 1997-ல் தொடங்கப்பட்டு சில காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் நிறுத்தப்பட்டது. பட்ஜெட் மற்றும் சர்வதேச அளவிலான வினியோக சந்தை நிலவரம் உள்ளிட்ட சில காரணங்களால் படப்பிடிப்பை தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டது. 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் மருதநாயகம் படத்தை அவரால் எடுக்க முடியவில்லை. இப்படத்தை இனி தொடங்கினாலும் அதில் தான் நடிக்கப்போவதில்லை என கமல் கடந்தாண்டு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதியுடன் இன்ஸ்டாகிராம் நேரலையில் கமல் நேற்று கலந்துரையாடினார். அப்போது மருதநாயகம் படம் குறித்த கேள்வியை விஜய் சேதுபதி எழுப்பினார். இதற்கு பதிலளித்த கமல்ஹாசன், மருதநாயகத்தை புத்தகமாக வெளியிட வேண்டும் என்றால் உடனே வெளியிட்டு விடலாம். ஆனால் அதை படமாக எடுக்க பணம் வேண்டும். அந்த பணம் இருந்தால் உடனே உருவாகும். நான் உருவாக்க நினைத்த மருதநாயகம் 40 வயது கதாநாயகனுக்காக எழுதப்பட்டது. இப்போது என்னால் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க முடியாது. ஆகவே வேறு ஒரு நடிகரை அதில் நடிக்க வைக்க வேண்டும், இல்லையெனில் கதையையே மாற்ற வேண்டும் என்றார்.
தமிழில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபு, தமன்னாவை திருமணம் செய்ய ஆசைப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
‘கோல மாவு கோகிலா’ படத்தில் நயன்தாராவை, யோகி பாபு ஒரு தலையாக காதலிப்பது போன்ற காட்சிகள் வைக்கப்பட்டு இருந்தன. இந்தக் காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருந்தது.
இதையே யோகி பாபு கதாநாயகனாக நடித்து வரும் ‘பேய் மாமா’ படத்தில், டைரக்டர் சக்தி சிதம்பரம் காட்சிப்படுத்தி இருக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:-
“யோகி பாபு பிரபல கதாநாயகிகளை காதலிப்பது போல், ‘பேய் மாமா’ படத்தில் நகைச்சுவை காட்சிகள் வைக்கப்பட்டு இருக்கிறது. அவர் நயன்தாரா, சமந்தா ஆகிய இருவரையும் ஒரு தலையாக காதலித்து தோல்வி அடைவது போலவும், அதனால் அவருடைய காதல் தமன்னா பக்கம் திரும்புவது போலவும் நகைச்சுவையாக காட்சிப்படுத்தி உள்ளோம்.
திருட்டையே தொழிலாக கொண்ட அவர், அதன் மூலம் ரூ.100 கோடி சம்பாதிக்க திட்டமிடுகிறார். தமன்னாவை எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில், “ஓம் தமன்னாய நமஹ” என்று ஆயிரம் முறை மந்திரங்களை ஓதுவது போலவும், தன் படுக்கை அறை முழுவதும் தமன்னாவின் படங்களை ஒட்டி வைத்திருப்பது போலவும் காட்சிகள் இடம்பெறுகின்றன” என்றார்.

தமிழ் தெலுங்கு மொழிகளில் பிரபலமாக இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் படத்துக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் 200 படங்களுக்கு மேல் நடித்து, 44 படங்களை டைரக்டும் செய்த மறைந்த பழம்பெரும் நடிகை விஜய நிர்மலாவின் வாழ்க்கையை படமாக்க தெலுங்கு திரையுலகில் சிலர் திட்டமிட்டு வருகின்றனர். இதில் விஜய நிர்மலா கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேசை நடிக்க வைக்க அணுகி இருப்பதாகவும் தெலுங்கு இணையதளங்களில் தகவல் வெளியானது. கொரோனா ஊரடங்கு முடிந்ததும் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர் என்றும் கூறப்பட்டது.
இந்த படத்துக்கு தற்போது சிக்கல் உருவாகி உள்ளது. விஜய நிர்மலாவின் மகனும், தெலுங்கு நடிகருமான நரேஷ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-
எனது தாய் விஜய நிர்மலாவின் வாழ்க்கையை படமாக்க என்னிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால் இந்த படத்தை தயாரிக்க நான் யாருக்கும் அனுமதி கொடுக்கவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு எனது தாயாரின் வாழ்க்கையை படமாக்க நான் திரைக்கதை எழுதினேன். அதற்கு எனது தாயாரும் உதவினார். அவர் மறைந்ததும் அந்த பணிகளை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டேன். ஆனாலும் விரைவில் அந்த திரைக்கதையை எழுதி முடிக்க திட்டமிட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் ஜகமே தந்திரம் படத்தின் ரிலீஸ் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் ஜகமே தந்திரம். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று முடிந்துள்ளது.
உழைப்பாளர் தினத்தையொட்டி மே 1-ம் தேதி, அதாவது நேற்று ரிலீசாவதாக இருந்தது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜகமே தந்திரம் படத்தின் புதிய போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ஜகம் (உலகம்) சுகம் அடைந்த பிறகு படம் திரைக்கு வரும் என குறிப்பிட்டுள்ளனர். இந்த போஸ்டரை பார்த்து தனுஷ் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
உழைப்பாளர் தினத்தையொட்டி மே 1-ம் தேதி, அதாவது நேற்று ரிலீசாவதாக இருந்தது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மிஷ்கின் இயக்கிய பிசாசு படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை போலீசின் விழிப்புணர்வு வீடியோவில் நடித்துள்ளார்.
கொரோனா தாக்கம் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கை கடுமையாக அமல்படுத்த ஒவ்வொரு மாநில அரசும் காவல்துறையும் பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
அந்த விதமாக கேரள காவல்துறை மக்களை வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தும் விதமாக விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு சினிமா பிரபலங்களையும் உதவிக்கு அழைத்து கொள்கின்றனர்.
தமிழில் பிசாசு உள்ளிட்ட சில படங்களில் நடித்த மலையாள நடிகை பிரயாகா மார்டின் கேரள போலீசுக்கு உதவும் விதமாக அவர்கள் உருவாக்கி வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் பிரயாகா மார்ட்டின்.

விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படம் பற்றி வரும் வதந்திகளுக்கு தயாரிப்பாளர் லலித்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
விஜய் நடித்து, லோகேஷ் கனகராஜ் டைரக்டு செய்துள்ள ‘மாஸ்டர்’ படத்தில், மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார்.
இப்படம் கடந்த மாதம் 9-ந்தேதி திரைக்கு வர இருந்தது. கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக படத்தின் ‘ரிலீஸ்’ தேதி தள்ளிப்போய் இருக்கிறது. இந்த நிலையில், ஜோதிகா நடித்து கடந்த மாதம் வெளியாக இருந்த ‘பொன்மகள் வந்தாள்’ படத்தை இணையதளத்தில் ‘ரிலீஸ்’ செய்ய ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.
இதேபோல் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ படமும் இணையதளத்தில் ‘ரிலீஸ்’ ஆகும் என்று சமூக வலைத்தளங்களில் சில தகவல்கள் வெளிவந்தன. இதுபற்றி அந்த படத்தின் இணை தயாரிப்பாளர் லலித்குமாரிடம் கேட்ட போது, “மாஸ்டர் படம் இணையதளத்தில் ‘ரிலீஸ்’ செய்யப்படும் என்பது வெறும் வதந்தி. சந்தர்ப்பம் பார்த்து யாரோ வதந்தியை பரப்புகிறார்கள். பல கோடி செலவில் உருவான ‘மாஸ்டர்’ படம் தியேட்டர்களில்தான் வெளிவரும். இணையதளத்தில் ‘ரிலீஸ்’ ஆகாது” என்று அவர் கூறினார்.

அதர்வா நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க 66 அழகிகளை நிராகரித்ததாக இயக்குனர் கூறியிருக்கிறார்.
அதர்வா முரளி கதாநாயகனாக நடிக்க, மைக்கேல் ராயப்பன் தயாரிக்கும் படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. ரவீந்திர மாதவா டைரக்டு செய்கிறார். இவர், எம்.பி.ஏ. பட்டதாரி. பூபதி பாண்டியன், சுசீந்திரன், தெலுங்கு டைரக்டர் கொரட்டால சிவா ஆகியோரிடம் உதவி டைரக்டராக பணிபுரிந்தவர். தனது முதல் படம் பற்றி அவர் கூறும்போது,
“இந்தப் படத்தின் கதாநாயகன் அதர்வா முரளி, கதாபாத்திரத்துக்கு நூற்றுக்கு நூறு பொருத்தமாக இருப்பார். கதாநாயகியை தேர்வு செய்வதற்கு பல மாதங்கள் ஆகிவிட்டன. அழகு, மென்மை, நடிப்பு திறன் ஆகிய மூன்றும் கலந்தவராக இருக்க வேண்டும். படத்தில் அவர் சும்மா வந்து போகிறவராக இல்லை. வில்லனை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் கனமான கதாபாத்திரம், அது.
அப்படி ஒருவரை தேர்வு செய்ய நாடு முழுவதும் தேடினோம். 66 அழகிகளை பார்த்தோம். கடைசியாக லாவண்யா திரிபாதியை தேர்வு செய்தோம். இவர் தனது அழகாலும், நடிப்பு திறனாலும் ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்வார் என்பது உறுதி’’ என்கிறார், டைரக்டர் ரவீந்திர மாதவா.

பிரபல இந்தி நடிகர் நசுருதீன் ஷாவின் உடல் நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் வந்த செய்திக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
பிரபல இந்தி நடிகர்கள் இர்பான்கான், ரிஷி கபூர் ஆகியோர் அடுத்தடுத்து மரணம் அடைந்ததால் திரையுலகினர் சோகத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் பிரபல இந்தி நடிகர் நசுருதீன் ஷா உடல் நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. அவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு உள்ளது என்றும், கவலைக்கிடமான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகிறார் என்றும் கூறப்பட்டது. இது நடிகர்-நடிகைகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரசிகர்களும் சமூக வலைத்தளத்தில் கவலையை பதிவிட்டு வந்தார்கள்.
ஆனால் தனது உடல் நிலை குறித்து பரவும் தகவலை நசுருதீன் ஷா மறுத்துள்ளார். முகநூல் பக்கத்தில், “நான் நலமாக உள்ளேன். கொரோனா ஊரடங்கை கடைப்பிடித்து வீட்டில் இருக்கிறேன். என் உடல் நிலை குறித்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். எனது உடல் நலன் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

நடிகர் சிவாஜிகணேசன் பணத்தை தொட்டது கிடையாது என்று விஜய் சேதுபதியிடம் கமல் நேரலையில் கூறியுள்ளார்.
நடிகர் கமலும் விஜய் சேதுபதியும் இன்று சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் நேரலையில் பேசிக்கொண்டனர். அப்போது கமலின் சினிமா வாழ்க்கை பற்றிய பல விஷயங்களை விஜய்சேதுபதி கேட்டார்.
சிவாஜிக்கும் உங்களுக்கும் உள்ள அனுபவங்களைப் பற்றி விஜய் சேதுபதி கேட்டார், அதற்கு கமல் சிவாஜியிடம் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். அவர் பயந்த சுபாவம் கொண்டவர். அவர் பணத்தை தொட்டது கிடையாது. சிவாஜி ஒரு படத்தின் படப்பிடிப்பில் நிறைய நாணயங்கள் கொட்டி வைத்து படப்பிடிப்பு நடத்தினார்கள். அப்போது அவர் இதுதான் புது நாணயங்களா என்று ஆச்சரியத்துடன் கேட்டார்.
இதைப் பார்த்த பலரும் ரூபாய் நோட்டுக்களை வைத்திருப்பவர்களுக்கு நாணயம் எப்படி தெரியும் என்று பேசிக்கொண்டார்கள். ஆனால் உண்மையிலேயே அவர் பணத்தை அதிகம் பார்த்ததில்லை. நானே அட்வான்ஸ் கொடுத்து இருக்கிறேன். ஆனால் அவர் கையால் அதை வாங்கவில்லை.
ஒரு நாள் எப்படி வெளிநாட்டுக்கு செல்கிறார் என்று என்னிடம் கேட்டார். நான் டிக்கெட் எடுத்துக்கொண்டு விமானத்தில் செல்வேன் என்றேன். நீயே டிக்கெட் எடுத்து நீயே அந்த ஊருக்கு தனியாக சென்று விடுவாயா என்று கேட்டார். ஆமாம் என்றேன். என்னை தனியாக விமான நிலையத்தில் விட்டால் நான் அழுது விடுவேன் என்று அவர் சொன்னார். எனக்கு அந்த அளவுக்கு அந்த ஊருக்கெல்லாம் போக தெரியாது என்று சிவாஜி சொன்னதாக விஜய் சேதுபதியிடம் கமல் பகிர்ந்துகொண்டார்.