என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாக இருக்கும் சந்திரமுகி 2 ஆம் பாகத்தில் நடிக்க பிரபல நடிகையிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.


    ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா நடிப்பில் 2005-ல் திரைக்கு வந்து வசூல் சாதனை நிகழ்த்திய படம் சந்திரமுகி. பி.வாசு இயக்கி இருந்தார். 

    தற்போது சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது. சந்திரமுகி படத்தில் மனோதத்துவ மருத்துவராக வரும் ரஜினிகாந்த், பிளாஷ்பேக்கில் வேட்டையன் என்ற கொடுங்கோல் மன்னனாக நடித்து இருந்தார். அவரால் கொலை செய்யப்படும் சந்திரமுகி, ஜோதிகா உடலுக்குள் ஆவியாக புகுந்து பழிவாங்க துடிப்பதுபோல் திரைக்கதையை அமைத்து இருந்தனர். படத்தில் ஜோதிகாவின் நடிப்பு பிரமாதமாக பேசப்பட்டது.

    இரண்டாம் பாகத்தில் வேட்டையன் மன்னனுக்கும், சந்திரமுகிக்கும் நடக்கும் மோதலை படமாக்குவதாகவும், வேட்டையனாக ராகவா லாரன்ஸ் நடிக்கிறார் என்றும் பி.வாசு தெரிவித்துள்ளார். சந்திரமுகியாக நடிக்கப் போவது யார்? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    ஜோதிகா


    அந்த கதாபாத்திரத்துக்கு ஜோதிகாவே பொருத்தமாக இருப்பார் என்று பேசப்படுகிறது. எனவே அவரை இரட்டை வேடத்தில் உருவாக்கி ஒரு கதாபாத்திரத்தை சந்திரமுகியாக மாற்றி, அதில் அவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இதில் ஜோதிகா நடிப்பாரா? என்பது உறுதியாகவில்லை.
    தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித்தின் பிறந்த நாளுக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
    நடிகர் அஜித்குமாருக்கு நேற்று 49-வது பிறந்தநாள். கொரோனா பாதிப்பினால் தனது பிறந்த நாளை யாரும் கொண்டாட வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார். அவர் நடிக்கும் ‘வலிமை’ படம் சம்பந்தமான தகவல்களை வெளியிடுவதையும் நிறுத்தி வைத்துள்ளனர்.

    ஆனாலும் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் ஹேஷ்டேக்கை உருவாக்கி அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறினர். இதுபோல் நடிகர்-நடிகைகளும் வலைத்தளத்தில் வாழ்த்தினர்.

    நடிகர் தனுஷ், “பிறந்த நாள் வாழ்த்துக்கள் அஜித் சார்” என்று கூறியுள்ளார். நடிகர் பார்த்திபன், “இல்லத்தை பூமியிலும், உள்ளத்தை வானத்திலும் வைத்து வாழும் அபூர்வ நடிகர். மாற்று இல்லாத அல்டிமேட் ஸ்டார். கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும். மே மாத கடவுளே தல தானே ரசிகர்களுக்கு” என்று கூறியுள்ளார்.

    நடிகை குஷ்பு வெளியிட்ட வாழ்த்து செய்தியில், “எனது ஜார்ஜ் க்ளூனிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். இன்றைக்கும் என்றைக்கும் உங்களுக்கு மகிழ்ச்சியும், ஆரோக்கியமும், செல்வமும் கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்” என்று கூறியுள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன், “நமது அன்பான தல அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார். நடிகர்கள் சிபிராஜ், அருண் விஜய், நடிகைகள் ராதிகா, ஹன்சிகா, இயக்குனர்கள் சேரன், வெங்கட் பிரபு, பாண்டிராஜ் உள்ளிட்ட மேலும் பலர் வாழ்த்தினர்.
    அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க விஜய் ரசிகர்கள் உருவாக்கிய #NanbarAjith என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.
    நடிகர் அஜித் இன்று தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலர் அஜித்துக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். இதற்காக #HBDDearestThalaAJITH என்ற ஹேஷ்டேக்கை அஜித் ரசிகர்கள் தேசிய அளவில் டிரெண்டாக்கி உள்ளனர்.

    இது ஒருபுறம் இருக்க அஜித்துக்கு வாழ்த்து கூற விஜய் ரசிகர்கள் செய்த செயல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர்களும் #NanbarAjith என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி அஜித்துக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். இதற்கு அஜித் ரசிகர்கள் பலர் நன்றி தெரிவித்துள்ளனர். 

    டுவிட்டர் டிரெண்டிங்கில் #NanbarAjith ஹேஷ்டேக்

    #NanbarAjith என்ற ஹேஷ்டேக் உருவானதற்கு காரணம் விஜய் தான். கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற மாஸ்டர்  இசை வெளியீட்டு விழாவுக்கு விஜய் கோட் சூட்டில் வந்திருந்தார். நண்பர் அஜித்தைப்போல் வரலாம்னு தான் கோட் சூட்ல வந்தேன் என விஜய் தெரிவித்திருந்தார். இதையடுத்து விஜய் ரசிகர்கள் #NanbarAjith என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் ஆக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. 
    நடிகர் ராகவா லாரன்ஸ் கேட்டவுடன் நூறு மூட்டை அரிசி வழங்கி உதவி செய்து இருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.
    கொரோனா வைரஸ் தொற்று பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக, வேலைக்கு செல்ல முடியாமல், பலர் உணவுக்கே கஷ்டப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் பலர் தங்களால் முடிந்த உதவியை முடியாதவர்களுக்கு செய்து வருகின்றனர்.

    இதில் நடிகர் லாரன்ஸ் செய்து வரும் உதவிகள் குறிப்பிடத்தக்கது. கொரோனா நிவாரண நிதியாக 3 கோடி அளித்த அவர், தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களை முடிந்தளவில் அளித்து வருகிறார். 

    இந்நிலையில் நடிகர் லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த கஷ்டமான சூழ்நிலையில் பலர் உதவி கேட்டு என்னை தொடர்பு கொண்டு வருகின்றனர். அவர்கள் கேட்பது பணம் அல்ல, உணவுக்கு தேவையான பொருட்கள் மட்டுமே. என்னால் முடிந்தளவு நானும் உதவிகள் செய்து வருகிறேன். என் ஒருவனால் மட்டுமே அனைவருக்கு உதவி செய்திட முடியாது.

    இதுகுறித்து என் தம்பியிடம் பேசிய போது, இந்த முயற்சியில் இன்னும் பலரை சேர அழைக்கலாம் என கூறினார். இதை பற்றி நடிகர் ரஜினியிடம் பேச, அவர் 100 மூட்டை அரிசிகளை அனுப்பி வைத்தார். இதையடுத்து இந்த முயற்சியில் கை கோர்க்க நான் அழைப்பு விடுக்கிறேன்.

    நடிகர்கள் கமல், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட நட்சத்திரங்களும் அவர்களின் ரசிகர்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் என உதவ விருப்பமிருப்பவர்கள் அனைவரும், இந்த முயற்சியில் இணையுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார். 
    தடம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான வித்யா பிரதீப் அது போலி அதை நம்பாதீர்கள் என்று கூறியிருக்கிறார்.
    அருண் விஜய் நடிப்பில் வெளியான தடம் படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்தவர் வித்யா பிரதீப். சின்னத்திரையில் நாயகி என்கிற சீரியலில் நடித்து வருகிறார். சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கும் சீரியல்களில் அதுவும் ஒன்று. மேலும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான தலைவி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    போலி கணக்கு
    இந்நிலையில் என் பெயரில் டிவிட்டரில் போலி கணக்கு தொடங்கி பதிவு செய்து வருகிறார்கள். அது போலி கணக்கு, அது என்னுடைய ட்விட்டர் கணக்கு அல்ல. நான் ட்விட்டரில் ஆக்டிவாக இல்லை. இதை ரிப்போர்ட் செய்த நண்பர்களுக்கு நன்றி என அவர் கூறியுள்ளார்.
    கலைத்துறை சொந்தங்களின் இழப்புகள் என்னை மிகவும் பாதிப்படைய செய்திருக்கிறது என்று ராதாரவி இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
    பாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் ரிஷி கபூர் மற்றும் நடிகர் இர்பான் கான் மறைவுக்கு ராதாரவி இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், பாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் ரிஷி கபூர் மற்றும் பன்முகத்திறமை வாய்ந்த நடிகர் இர்பான் கான் ஆகியோரது மறைவு எனக்கு மிகுந்த மனவருத்தம் ஏற்படுத்தியிருகிறது. உயிர்கொல்லி கொரோனா ஒரு புறம் உலகையே முடக்கி வைத்து பலி வாங்கிக்கொண்டிருக்க, இத்தகைய சூழலில் இந்த கலைத்துறை சொந்தங்களின் இழப்புகள் என்னை மிகவும் பாதிப்படைய செய்திருக்கிறது.

    ‘மேரா நாம் ஜோக்கர்’ (1970) என்ற தனது தந்தை ராஜ் கபூரின்  திரைப்படத்திலேயே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ரிஷி கபூர், 2000 வரையிலே நாயகனாகவும், அதன்பின் தேர்ந்தெடுத்த சவாலான கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார். சமீபத்தில் வெளியான ‘தி பாடி’ திகில் திரைப்படத்தில் அவரது நடிப்பு மிகுந்த வரவேற்பை பெற்றது.

    நடிகர் இர்பான் கான் ஹிந்தி சினிமாவில் மட்டுமின்றி இங்கிலாந்து மற்றும் அமெரிக்க திரைப்படங்களிலும் நடித்து உலகளாவிய ரசிகர்களை கொண்டவர். தனது 30 வருட திரைவாழ்வில், தேசிய விருது, ஆசிய விருது, மற்றும் இந்திய அரசின் நான்காவது மிகவும் உயரிய சிவிலியன் விருதான ‘பத்ம ஸ்ரீ’ விருதையும் வென்ற பெருமைக்குரியவர்.

    இத்தகைய சிறந்த கலைஞர்களின், சிறந்த மனிதர்களின் மறைவு என்னில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தி இருந்தாலும், அவர்களது குடும்பங்களுக்கு இந்த சங்கடமான நேரத்தில் நான் ஆறுதல் கூறவும் கடமைப்பட்டிருக்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடையட்டும் என்று கூறியுள்ளார்.
    சமூக வலைத்தளமான ட்விட்டரில் இருந்து விலக மாட்டேன் என்று நடிகர் பிரசன்னா கூறியிருக்கிறார்.
    அனூப் சத்யன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்து, தயாரித்த படம் 'வரனே அவஷ்யமுண்டு'. இந்தப் படத்தில் சுரேஷ் கோபி வளர்க்கும் நாய்க்கு பிரபாகரன் என்று பெயர் சூட்டி இருந்தார்கள். இந்த காட்சிக்கு தமிழர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    துல்கர் சல்மான் இதற்கு மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து துல்கர் சல்மான் தனது ட்விட்டர் பதிவில் ஒரு கடிதம் ஒன்றை வெளியிட்டார். அதில் தனது தரப்பு நியாயத்தை விளக்கி, அதற்கு மன்னிப்பும் கோரியிருந்தார்.

    துல்கர் சல்மான் இந்தக் கடிதத்தை வெளியிட்டு, இதற்காக தனது குடும்பத்தினரையும் யாரும் இந்த அளவுக்குத் திட்டியிருக்க வேண்டாம் என்ற வருத்தத்தையும் பதிவு செய்தார். இதற்கு பிரசன்னா துல்கருக்கு ஆறுதல் தெரிவித்து, மேலும் மன்னிப்பு கோரியிருந்தார்.

    பிரசன்னாவின் இந்தக் கருத்தை வைத்து பலரும் அவரையும் திட்டத் தொடங்கினார்கள். ஆனால், பிரசன்னா இதற்குப் பதிலடி கொடுக்காமல் அமைதியாகவே இருந்தார். இதை வைத்துப் பலரும் பிரசன்னா ட்விட்டர் தளத்திலிருந்து விலக முடிவு செய்துள்ளார் எனக் கூறினர்.

    இது தொடர்பாக பிரசன்னா கூறும் போது, "யாரோ ஒரு சிலர் நடந்துகொள்ளும் விஷயத்துக்காக நான் ட்விட்டரிலிருந்து விலகமாட்டேன். பலமுறை எனக்கு எவ்வளவோ அன்பும், ஆதரவும் ட்விட்டரில் கிடைத்துள்ளது" என்று தெரிவித்தார்.
    தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி இருக்கும் புட்ட பொம்மா என்ற பாடலுக்கு பிரபல கிரிக்கெட் வீரர் நடனம் ஆடி உள்ளார்.
    தெலுங்கில் அல்லு அர்ஜுன் மற்றும் பூஜா ஹெக்டே நடித்த அல வைகுந்தபுரம்லு படத்தில் வரும் புட்ட பொம்மா பாடல் மிகவும் பிரபலம். இந்த பாடலில் அவர்கள் ஆடும் நடனமும் சமூக வலைத்தளங்களில் அதிகம் ட்ரெண்ட்டானது.

    ரசிகர்கள் பலரும் அந்த பாடலுக்கு நடனம் ஆடி டிக் டாக்கில் வீடியோ வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது  ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர், தனது மனைவி மற்றும் மகள் உடன் சேர்ந்து புட்ட பொம்மா பாடலுக்கு ஆடியுள்ளார்.

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் வார்னர், தனது மனைவி மற்றும் மகளுடன் நடனமாடும் காட்சி


    அந்த டிக் டாக் விடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் வார்னர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் மிக வேகமாக பரவி வருகிறது. அதற்கு நடிகர் அல்லு அர்ஜுன் நன்றி தெரிவித்துள்ளார்.
    சமீபத்தில் நடந்த விழாவில் ஜோதிகா புகார் கூறிய மருத்துவமனையில் 10 பாம்புகள் பிடிபட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
    நடிகை ஜோதிகா சமீபத்தில் சினிமா விழா ஒன்றில் பேசியபோது, ‘தஞ்சை மருத்துவமனைக்கு படப்பிடிப்பின் போது தான் சென்றதாகவும் அப்போது அங்கு பராமரிப்பு சரியில்லாமல் இருப்பதை பார்த்ததாகவும் கோவில்களுக்கு செலவழிப்பது போல மருத்துவமனைகளுக்கும் பள்ளிக்கும் செலவு செய்யவேண்டும்’ என்றும் கோரிக்கை விடுத்தார்.

    ஜோதிகாவின் இந்த பேச்சு சர்ச்சைக்குள்ளானது. இந்த நிலையில் ஜோதிகா புகார் கூறிய அரசு மருத்துவமனையில் நேற்று 5 விஷத்தன்மை கொண்ட கட்டு விரியன் பாம்புகள் உள்பட 10 பாம்புகள் பிடிபட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

    மருத்துவமனை வளாகத்தில் பத்துக்கும் மேற்பட்ட பாம்புகள் சுற்றித்திரிந்த தகவல் அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கி உள்ளது.
    கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு உதவ ஜிவி பிரகாஷ், பேஸ்புக்கில் நிதி திரட்ட முடிவு செய்து உள்ளார்.
    கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளிலேயே  முடங்கியுள்ளனர். சினிமா படப்பிடிப்புகளும்  ரத்து செய்யப்பட்டதால் திரைப்பிரபலங்கள் வீட்டில் இருந்தபடியே சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்கர்களிடம் உரையாடி வருகின்றனர். அந்த வகையில், இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் சில தினங்களுக்கு முன்பு யூடியூப்பில் ரசிகர்களுடன் உரையாடி, அவர்கள் விரும்பி கேட்ட பாடல்களை பாடி அசத்தினார்.

    ஜிவி பிரகாஷ் பேஸ்புக் போஸ்டர்


    தற்போது பேஸ்புக் மூலமாக ரசிகர்களுடன் உரையாட இருக்கிறார். பேஸ்புக்  பக்கத்தில் மே 1ஆம் தேதி இரவு 8 மணிக்கு ஜிவி பிரகாஷ் கலந்து கொண்டு உரையாட இருக்கிறார். இதன் மூலம் வரும் வருமானத்தை கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு உதவ இருக்கிறார்கள். 
    பிரபல பாலிவுட் நடிகை வித்யாபாலன், டாக்டர்களுக்கு பாதுகாப்புக் கவச உடைகள் வழங்க நிதி திரட்டும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்.
    பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலன். கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் சூழ்நிலையில் பல்வேறு சமூக பணிகளையும் செய்து வருகிறார். இப்போது மருத்துவர்கள் மற்றும் சுதாதார பணியாளர்கள் 3500 பேருக்கு தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள், கருவிகளை வழங்கி இருக்கிறார்.

    பாதுகாப்பு கவச உடைகள் முக்கிமானது என்பதால் அதற்கான நிதி திரட்டும் பணியிலும் இறங்கி உள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: எங்கள் மருத்துவ ஊழியர்களுக்காக முழு உடல் பாதுகாப்பு கவசத்தை நன்கொடையாக அளித்து வருகிறேன், மேலும் இந்தியா முழுவதும் டாக்டர்களுக்கும், சுகாதார பணியாளர்களுக்கும், உடனடியாக தேவைப்படும் முழு கவச உடைகளுக்காக நன்கொடை திரட்ட முடிவு செய்திருக்கிறேன் என்றார்.

    நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 4வது சீசனில் பிரபல நடிகை கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    பிக்பாஸ் தமிழில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக பிக்பாஸ் சீசன் 4 தொடங்குவதில் தாமதம் ஏற்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

    தமிழகத்தில், மீண்டும் இயல்பு வாழ்க்கை திரும்ப ஆகஸ்டு மாதம் வரையாகலாம் என கூறப்படுகிறது. எனவே அதன் பிறகு தான் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்கிறார்கள்.

    நடிகை ரம்யா பாண்டியன்


    இது ஒருபுறம் இருக்க இந்த சீசனுக்கான போட்டியாளர்கள் தேர்வை தயாரிப்பு நிறுவனம் தொடங்கிவிட்டதாகவும் நடிகை ரம்யா பாண்டியன், சிவாங்கி, புகழ், மணிமேகலை ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
    ×