என் மலர்
சினிமா செய்திகள்
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 4வது சீசனில் பிரபல நடிகை கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் தமிழில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக பிக்பாஸ் சீசன் 4 தொடங்குவதில் தாமதம் ஏற்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில், மீண்டும் இயல்பு வாழ்க்கை திரும்ப ஆகஸ்டு மாதம் வரையாகலாம் என கூறப்படுகிறது. எனவே அதன் பிறகு தான் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்கிறார்கள்.

இது ஒருபுறம் இருக்க இந்த சீசனுக்கான போட்டியாளர்கள் தேர்வை தயாரிப்பு நிறுவனம் தொடங்கிவிட்டதாகவும் நடிகை ரம்யா பாண்டியன், சிவாங்கி, புகழ், மணிமேகலை ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தமிழகத்தில், மீண்டும் இயல்பு வாழ்க்கை திரும்ப ஆகஸ்டு மாதம் வரையாகலாம் என கூறப்படுகிறது. எனவே அதன் பிறகு தான் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்கிறார்கள்.

இசையமைப்பாளர் அனிரூத் கொரோனா நிவாரணத்துக்காக நிதி திரட்ட யூடியூப் நடத்தும் நேரலை இசை நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.
கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். சினிமா படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் திரைப்பிரபலங்கள் பலர் வீட்டில் இருந்தபடியே சமூக வலைத்தளங்கள் வாயிலாக தங்களது ரசிகர்களுடன் கலந்துரையாடி வருகின்றனர். அதுமட்டுமின்றி விழிப்புணர்வு பிரச்சாரங்களும் மேற்கொள்கின்றனர்.
அந்த வகையில் இசையமைப்பாளர் அனிருத், யூடியூப் நடத்தும் நேரலை இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இன்று இரவு 8.52 மணிக்கு நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில் ரசிகர்கள் தங்களுக்கு விருப்பமான பாடல்களை கேட்கலாம் என தெரிவித்துள்ளார்.
Live on #OneNationAtHome at 8:52 pm today - https://t.co/i4NruPXQsK .. tune in to hear your fav tracks :)
— Anirudh Ravichander (@anirudhofficial) April 30, 2020
இந்த நிகழ்ச்சிக்கு "ஒன் நேசன்" என்று தலைப்பு வைக்கபட்டுள்ளது. இந்த நேரலையில் இந்தியாவின் பிரபலமான யூடியூப் பிரபலங்கள் மற்றும் பல முக்கிய கலைஞர்களும் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் இந்த நேரலை இசை நிகழ்ச்சியின் மூலம் வசூலாகும் பணத்தை மொத்தமாக கொரோனாவால் பாதிக்கபட்டவர்களுக்கு அளிக்க உள்ளனர்.
சமுக வலைத்தலங்களில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய நடிகை ஸ்ருதி ஹாசன், தனக்கு பிடித்த வாசனைகளில் சிகரெட்டும் ஒன்று என தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்துவருபவர் ஸ்ருதிஹாசன். இவர் தற்போது விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் லாபம் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். கொரோனா காரணமாக போடப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே முடங்கிக்கிடக்கும் ஸ்ருதி ஹாசன், அவ்வப்போது சமூக வலைத்தளங்கள் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடி வருகிறார்.

அந்தவகையில், அவர் தனக்கு மிகவும் பிடித்த வாசனைகள் குறித்து சமீபத்தில் பதிவிட்டிருந்தார். "ரோஸ், சாக்லேட், கேதுரு மரத்தின் வாசம், பென்சில் துகள்கள், சிகரெட் வாசனை - புகைக்க அல்ல, சாதாரணமாக அந்த புகையிலை வாசனை பிடிக்கும், குழந்தை பருவத்தில் அழிக்க பயன்படுத்திய ரப்பர் மற்றும் வெண்ணிலா " ஆகிய வாசனைகள் தனக்கு மிகவும் பிடிக்கும் என ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார்.
வலிமை படத்தின் அப்டேட்டுக்காக காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு, அறிக்கை வெளியிட்டு தயாரிப்பாளர் போனி கபூர் ஷாக் கொடுத்துள்ளார்.
நேர்கொண்ட பார்வை படத்துக்கு பிறகு மீண்டும் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு ‘வலிமை’ என்று பெயரிட்டுள்ளனர். போனிகபூர் தயாரிக்கிறார். அதிரடி சண்டை படமாக தயாராகும் இதில், அஜித்குமார் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பைக் ரேஸ் மற்றும் கார் ரேஸ் காட்சிகளும் இப்படத்தில் இடம்பெறுகின்றன. தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் படத்தின் படப்பிடிப்பு தடைபட்டுள்ளது.
#StayHomeStaySafepic.twitter.com/QnLMeOk8JJ
— Boney Kapoor (@BoneyKapoor) April 30, 2020
இதுவரை வலிமை படம் குறித்த எந்தவித அப்டேட்டும் வெளியாகவில்லை. இதனிடையே நடிகர் அஜித்தின் பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி வலிமை படக்குழு ஏதேனும் அப்டேட்டை வெளியிடும் என அஜித் ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் அவர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: "கோவிட் 19 என்னும் கொரோனா என்கிற கொடிய நோயின் தாக்கத்தில், அகில உலகமே போராடிக் கொண்டு இருக்கும் இந்த தருணத்தில் எங்கள் நிறுவனம் தயாரிக்கும் எந்த படத்துக்கும் எந்த விதமான விளம்பரமும் செய்ய வேண்டாம் என்று எங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் நடிகர், நடிகையர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் ஆகியோரை கலந்து ஆலோசித்து, ஒருமித்தக் கருத்தோடு முடிவெடுத்து உள்ளோம் என்பதை தெரிவித்து கொள்கிறோம். அதுவரை தனித்து இருப்போம், நம் நலம் காப்போம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
போனி கபூரின் இந்த அறிக்கை அஜித் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் மரணத்திற்கு நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோர் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
பழம்பெரும் பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவு திரையுலகினரிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு பாலிவுட் மட்டுமல்லாது பல்வேறு திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான ரஜினி மற்றும் கமல், ரிஷிகபூரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ள ரஜினி, "என்னுடைய மிக நெருங்கிய நண்பர் ரிஷி கபூரின் மறைவால் எனது இதயம் உடைந்து விட்டது; அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.
Heartbroken ... Rest In Peace ... my dearest friend #RishiKapoor
— Rajinikanth (@rajinikanth) April 30, 2020
இதேபோல் நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில், "எப்போதும் புன்னகை தவழும் முகத்துடன் இருக்கும் ரிஷி கபூரின் மறைவு நம்ப முடியாதது. ரிஷி கபூரும் நானும் ஒருவர் மீது ஒருவர் மரியாதை வைத்திருந்தோம்; அவரது குடும்பத்திற்கு இரங்கல் என பதிவிட்டுள்ளார்.
Cant believe it. Chintu ji @chintskap. (Mr.Rishi Kapoor) was always ready with a smile. We had mutual love and respect. Will miss my friend. My heartfelt condolence to the family.
— Kamal Haasan (@ikamalhaasan) April 30, 2020
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள மாஸ்டர் படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
விஜய்யின் 64 வது படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளார். மேலும் சாந்தனு, ஆண்ட்ரியா, கவுரி கிஷான், அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் வருகின்றனர். சேவியர் பிரிட்டோ தயாரித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கொரோனா ஊரடங்கால் இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.

இந்நிலையில், மாஸ்டர் படத்தின் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இதனை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சஸ்பென்சாக வைத்திருப்பதாகவும், அந்த கதாபாத்திரம் வித்தியாசமானதாக இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவலால் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. மாஸ்டர் படம் எப்போது வெளியானாலும் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் இருக்கும் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பழம்பெரும் இந்தி நடிகர் ரிஷி கபூர் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 67.
பழம்பெரும் இந்தி நடிகர் ரிஷி கபூர். 67 வயதான இவர் இயக்குனராகவும், பட தயாரிப்பாளராகவும் பணியாற்றியவர். பிரபல நடிகர் ராஜ் கபூரின் இரண்டாவது மகனான இவர் தந்தை நடிப்பில் வெளியான ‘மேரா நாம் ஜோக்கர்’ (என் பெயர் ஜோக்கர்) என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகில் அறிமுகமானார்.
தொடர்ந்து 1973-ம் ஆண்டு பாபி என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி பல படங்களில் நடித்துள்ளார். இதற்கிடையில், 2018-ம் ஆண்டு ரிஷி கபூருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், அவர் கடந்த ஒரு வருடமாக அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தார். இதையடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் அவர் அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பினார். பின்னர் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அவரது வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், வீட்டில் இருந்த ரிஷி கபூருக்கு இன்று திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் உடனடியாக மும்பையில் உள்ள ஹெச்.என். ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நேற்று நடிகர் இர்பான் கான் மரணமடைந்த துயரத்தில் இருந்து மீளாத பாலிவுட் பிரபலங்களுக்கு ரிஷி கபூரின் மறைவு மேலும் அதிர்ச்சி அளித்துள்ளது.
மக்கள் கூட்டத்தை பெருக்கும் தொழிற்சாலை போன்றே பெண்கள் இருப்பதாக நடிகை அமலாபால் காட்டமாக தெரிவித்துள்ளார்.
நடிகை அமலாபால் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- காதல், திருமணம், குழந்தைகள் பற்றிய எல்லா கேள்விகளும் பெண்களை பற்றியே கேட்கப்படுகின்றன. ஆண்களை பார்த்து, இந்த கேள்விகளை யாரும் கேட்பது இல்லை. பெண் அடிமைத்தனத்திலும், அவமானத்திலும் இருக்கிறாள். பொருளாதாரத்திலும் மற்றவர்களை சார்ந்து இருக்கிறாள்.
அவளை குழந்தை பெற்றுக் கொடுப்பவளாகவும் பார்க்கின்றனர். பல நூற்றாண்டுகளாகவே பெண் வலியுடன் வாழ்ந்து வருகிறாள். அவளுக்குள் வளரும் குழந்தை, அவளை சாப்பிட கூட அனுமதிப்பது இல்லை. எப்போதும் வாந்தி எடுப்பது போலவே உணர்கிறாள். வயிற்றில் குழந்தை ஒன்பது மாதம் வளர்ந்ததும் அதை பெற்று எடுப்பது என்பது மரணம் போன்றே இருக்கும்.
அவள் ஒருமுறை கர்ப்பமாகி அதில் இருந்து மீள முடியாது. மீண்டும் அவளை கர்ப்பமாக்க அவளது கணவன் தயாராக இருக்கிறான். மக்கள் கூட்டத்தை பெருக்கும் தொழிற்சாலை போன்றே இருக்கிறாள். பெண்ணின் வலியில் ஆண் பங்கெடுப்பது இல்லை.
ஆண்களை பொறுத்தவரை பெண்களை பாலுணர்வை பூர்த்தி செய்யும் ஒரு பொருளாகவே பயன்படுத்துகின்றனர். பெண்ணை உண்மையாக நேசித்து இருந்தால் உலகில் மக்கள் தொகை அதிகரித்து இருக்காது. அவன் சொல்லும் காதல் என்ற வார்த்தை போலி. பெண்ணை ஒரு வளர்ப்பு பிராணியாகவே அவன் நடத்துகிறான். இவ்வாறு அமலாபால் கூறியுள்ளார்.
பிரபாகரன் சர்ச்சை குறித்து துல்கர் சல்மானிடம் மன்னிப்பு கேட்ட பிரசன்னாவை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் திட்டி வருவதால் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
துல்கர் சல்மான் நடித்து தயாரித்து, அனுப் சத்யன் இயக்கி, கடந்த பிப்ரவரி மாதம் திரைக்கு வந்த மலையாள படம், ‘வரனே அவஷ்யமுண்டு.’ அதில் துல்கர் சல்மானுடன், சுரேஷ்கோபி, சோபனா, கல்யாணி பிரியதர்சன் ஆகியோர் நடித்து இருந்தார்கள். இந்த படம், கேரளாவில் வெற்றிகரமாக ஓடி, வசூல் சாதனை புரிந்தது.
படத்தில் இடம்பெற்ற ஒரு நகைச்சுவை காட்சியில், சுரேஷ்கோபி வளர்க்கும் நாய்க்கு, ‘பிரபாகரன்’ என்று பெயர் வைத்து அழைப்பார். இது, சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. துல்கர் சல்மான் உள்பட படக்குழுவினர் அனைவரையும் இணையதளங்களில் திட்டி தீர்த்தார்கள்.

இதுபற்றி நடிகர் பிரசன்னா தனது டுவிட்டரில், “நாம் பேசும் வசனத்தைப் போலவே அவர்கள் ஊரில் இந்த வசனம் பிரபலமானது. தவறான புரிதலின் அடிப்படையில், வெறுப்பை பரப்ப வேண்டாம்” என்று கேட்டுக்கொண்டார். இதற்காக பிரசன்னாவுக்கு, துல்கர் சல்மான் நன்றி தெரிவித்து இருக்கிறார்.
பிரசன்னா மேலும் கூறும்போது, “இந்த விவகாரம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் என்னை திட்டுகிறார்கள். அதோடு, என் பெற்றோர்கள், மனைவி மற்றும் குடும்பத்தினரையும் திட்டுகிறார்கள். என்னை திட்டுவது சரி, என் குடும்பத்தினரை திட்டுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. சமூக வலைத்தளங்களில் பிரச்சினைகளை உருவாக்கி, அதை பெரிதுபடுத்துகிறார்கள். அதனால் டுவிட்டர், பேஸ்புக் ஆகியவற்றில் இருந்து வெளிவந்து விடலாமா? என யோசிக்கிறேன்” என்றார்.
'ஓ மை கடவுளே' படம் மூலமாக சினிமாவில் அறிமுகமாகி பிரபலமடைந்த வாணி போஜன் அடுத்ததாக சூர்யாவின் 2 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான வாணி போஜன், ‘ஓ மை கடவுளே’ படம் மூலம் சினிமாவுக்கு வந்தார். அந்த படத்தில் வாணி போஜன் நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன. பட வாய்ப்புகளும் வந்தன. தற்போது விக்ரம் பிரபு ஜோடியாக புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதன் படப்பிடிப்பை கொரோனா ஊரடங்கு முடிந்ததும் தொடங்க உள்ளனர்.
இதுபோல் சூர்யா தயாரிக்கும் இரண்டு படங்களில் நடிக்கவும் தேர்வாகி உள்ளார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சத்தில் இந்த படங்கள் தயாராக உள்ளன. ஏற்கனவே வைபவ் உடன் ‘லாக்கப்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் இயக்குனர் வெங்கட் பிரபு வில்லனாக வருகிறார். இந்த படத்தை மே மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். ஆதவ் கண்ணதாசனுடன் பேய் படம் ஒன்றிலும் நடித்துள்ளார். இதுபோல் விதார்த் தயாரித்து நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக வருகிறார்.

இன்னொரு புறம் வெப் தொடர்களிலும் நடிக்கிறார். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவாகும் வெப் தொடரில் ஜெய் ஜோடியாக நடித்து வருகிறார். இதன் பட வேலைகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கும் வெப் தொடரில் நடிக்கவும் வாணி போஜனிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது. இந்த தொடரை முருகதாசின் துணை இயக்குனர் டைரக்டு செய்வதாக கூறப்படுகிறது.
பிரபல இந்தி நடிகர் ரிஷி கபூர் மூச்சுத்திணறல் காரணமாக மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மும்பை:
பழம்பெரும் இந்தி நடிகர் ரிஷி கபூர். 67 வயதான இவர் இயக்குனராகவும், பட தயாரிப்பாளராகவும் பணியாற்றியவர்.
பிரபல நடிகர் ராஜ் கபூரின் இரண்டாவது மகனான இவர் தந்தை நடிப்பில் வெளியான ‘மேரா நாம் ஜோக்கர்’ (என் பெயர் ஜோக்கர்) என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகில் அறிமுகமானார்.
தொடர்ந்து 1973-ம் ஆண்டு பாபி என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி பல படங்களில் நடித்துள்ளார். இதற்கிடையில், 2018-ம் ஆண்டு ரிஷி கபூருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது.
இதனால், அவர் கடந்த ஒரு வருடமாக அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தார்.
இதையடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் அவர் அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பினார். பின்னர் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அவரது வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், வீட்டில் இருந்த ரிஷி கபூருக்கு இன்று திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் உடனடியாக மும்பையில் உள்ள ஹெச்.என். ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரிஷி கபூரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
தமிழில் பிரபல நடிகையாக இருக்கும் ஓவியா தன்னுடைய பிறந்தநாளுக்கு தானே கேக் செய்து அசத்தி இருக்கிறார்.
மலையாளத்தில் ஒரு சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த ஓவியா 2010ல் களவாணி படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் அடுத்தடுத்த படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
அதன் பிறகு சிவகார்த்திகேயன் ஜோடியாக மெரினா, விமல் ஜோடியாக கலகலப்பு ஆகிய படங்களில் நடித்தார். கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிகவும் பிரபலமானார்.
இன்றைய தனது பிறந்தநாளைக் கொண்டாடி வரும் ஓவியா, கடந்த வருடம் நண்பர் ஆரவ்வுடன் கொண்டாடினார். தற்போதைய கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் தனியாகவே பிறந்தநாள் கொண்டாடி இருக்கிறார். மேலும் தன்னுடைய பிறந்த நாளுக்கு தானே கேக் செய்திருப்பதாக கூறியிருக்கிறார்.






