என் மலர்
சினிமா செய்திகள்
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் விவேக், தற்போது திடீரென்று ஒரு முடிவை எடுத்துள்ளார்.
சமூக வலைத்தளமான டுவிட்டரில் இருந்து மே 3ஆம் தேதி வரை விலகுவதாக நடிகர் விவேக் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே டுவிட்டரில் சமூக கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருபவர் நடிகர் விவேக். தற்போதைய கொரோனா குறித்து ஒருசில விழிப்புணர்வு வீடியோக்களை சமீபத்தில் வெளியிட்டார். இந்த வீடியோக்கள் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் மே 3 வரை சமூக வலைத்தளத்தில் இருந்து விலகுவதாகவும் ஒருசில தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மே 3ஆம் தேதி தான் ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வரும் நாள் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு ரசிகர்கள் பலரும் என்ன ஆனது என்று கேட்டு வருகிறார்கள்.
பத்திரம் என்ற கொரோனா விழிப்புணர்வு பாடல் ஒன்றை இசையமைப்பாளர் குமார் நாராயணன் உருவாக்கி வெளியிட்டிருக்கிறார்.
கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக பலரும் வீட்டுக்குள்ளே இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் பலர் நிலைமையைப் புரிந்து கொள்ளாமல் வெளியில் சுற்றி வருகிறார்கள்.
கொரோனா பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் ஏற்பட வேண்டும் எண்ணத்தில் பலரும் குரல் கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில் இசையமைப்பாளர் குமார் நாராயணன் விழிப்புணர்வு பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளார்.
பத்திரம் என்று தொடங்கும் இந்த பாடல், கொரோனா பற்றியும், வெளியில் செல்லும் போது எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி கூறியிருக்கிறார்கள். இந்த பாடல் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இசையமைப்பாளர் குமார் நாராயணன் இதற்கு முன், இந்தியாவின் முக்கிய நாட்களான சுதந்திர தினம், குடியரசு தினம், மற்றும் காதலர் தினம் மகளிர் தினம் ஆகிய தினங்களுக்கு சிறப்பு பாடல்களையும் உருவாக்கி வெளியிட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான ரைசா ரசிகர் ஒருவரின் கிண்டலுக்கு மிகவும் கூலாக பதில் அளித்துள்ளார்.
பிக் பாஸ் 2 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ரைசா. தற்போது தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து வருகிறார். கொரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் ரைசா வீட்டில் முடங்கியுள்ளார்.
வீட்டில் சும்மா இருப்பதால் ரைசா சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார். ரசிகர்கள் அவ்வப்போது கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பதுடன் தன்னை பற்றி வரும் கமெண்ட்டுகளுக்கும் பதில் அளிக்கிறார்.

இந்நிலையில் நெட்டிசன் ஒருவர் ரைசாவை பற்றி வடிவேலு மீம்ஸ் ஒன்றை ட்விட்டரில் போஸ்ட் செய்தார். அதாவது வடிவேலு ரைசாவிடம் பேர் என்ன என்று கேட்க, அதற்கு அவர் ரைசா என்கிறார். அதற்கு வடிவேலு சிக்கன் ரைசா இல்லை எக் ரைசா என்று கேட்கிறார்.
இந்த மீம்ஸை பார்த்த ரைசா கூலாக பிரியாணி ரைஸ் என்று கமெண்ட் போட்டுள்ளார். ரைசா போட்ட கமெண்ட்டை பார்த்த ரசிகர்களோ, இது தான் உங்களிடம் பிடிச்ச விஷயம் என்று தெரிவித்துள்ளனர்.
வீட்டில் சும்மா இருப்பதால் ரைசா சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார். ரசிகர்கள் அவ்வப்போது கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பதுடன் தன்னை பற்றி வரும் கமெண்ட்டுகளுக்கும் பதில் அளிக்கிறார்.

இந்த மீம்ஸை பார்த்த ரைசா கூலாக பிரியாணி ரைஸ் என்று கமெண்ட் போட்டுள்ளார். ரைசா போட்ட கமெண்ட்டை பார்த்த ரசிகர்களோ, இது தான் உங்களிடம் பிடிச்ச விஷயம் என்று தெரிவித்துள்ளனர்.
இதுவரை எனது வாழ்க்கையில் இதுபோல் இருந்தது இல்லை என்று தமிழ், தெலுங்கு மொழிகளில் பிரபலமாக இருக்கும் ரகுல் பிரீத் சிங் கூறியுள்ளார்.
கொரோனா ஊரடங்கில் வீட்டில் இருக்கும் நடிகை ரகுல்பிரீத் சிங், தனது தற்போதைய பொழுதுபோக்கு குறித்து விளக்கி உள்ளார். அவர் கூறியதாவது:-
வாழ்க்கையில் லட்சியத்தை அடைய தினமும் ஓடிக்கொண்டே இருக்கிறோம். ஆனால் இயற்கை விபத்து வந்தால் எந்த அளவுக்கு தாங்கிக்கொள்ள முடியும் என்பதையும், நமக்குள் எவ்வளவு சக்தி இருக்கிறது என்பதையும் கொரோனா உணர வைத்துள்ளது. நமது ஆரோக்கியம், குடும்பம், நம்மை நேசிப்பவர்கள், அவர்களோடு இணைந்த நினைவுகள் விலை மதிக்க முடியாதது.
மார்ச் 18-ந்தேதி நான் கடைசியாக சினிமாவில் வேலை பார்த்த நாள். அதன்பிறகு வீட்டில்தான் இருக்கிறேன். காலையில் எழுந்து யோகா பயிற்சியோடு எனது நாள் தொடங்குகிறது. அதன்பிறகு புத்தகங்கள் படிக்கிறேன். மதியம் சமூக வலைத்தளங்களை பார்க்கிறேன்.
மாலையில் படம் பார்க்கிறேன். சில வெப் தொடர்களையும் பார்க்கிறேன். ஆஸ்கார் விருது பெற்ற திரைப்படங்களையும் பார்க்கிறேன். சமையலும் செய்கிறேன். நம்மை வலுப்படுத்திக்கொள்ள இந்த நேரத்தை எப்படி பயன்படுத்துவது என்று நான் தெரிந்து வைத்து இருக்கிறேன். இந்த நீண்ட ஓய்வு இதுவரை எனது வாழ்க்கையில் வந்தது இல்லை.
இவ்வாறு ரகுல் பிரீத் சிங் கூறினார்.

ரஜினியின் திரைப்படமும், அஜித்தின் திரைப்படமும் ஒரே நாளில் வெளியாகி மோத இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
நடிகர் அஜித் நடிப்பில் பிரமாண்டமாக தயாராகி வரும் படம் வலிமை. இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு அதிகபட்சமான எதிர்ப்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு 40 சதவீதம் முடிய, மீதி படப்பிடிப்பு கொரோனா பிரச்சினைகள் முடிந்து தொடரும்.
படப்பிடிப்பு முடியாததால் இப்படம் தீபாவளிக்கு எப்படியும் வராது என்பது உறுதியாகியுள்ளது. இதனால் படம் அடுத்து பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என தெரிகிறது. ஆனால், அதேசமயம் ரஜினியின் அண்ணாத்த படமும் பொங்கல் தினத்தில் வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள்.
கடந்த 2019 ஆம் ஆண்டு ரஜினியின் பேட்ட திரைப்படமும், அஜித்தின் விஸ்வாசம் திரைப்படமும் பொங்கல் தினத்தில் வெளியானது.

பாலிவுட் நடிகர் இர்பான் கான் மறைவுக்கு நடிகை சாய் பல்லவி, நான் சந்தித்தது இல்லை... ஆனால், என் சொந்த இழப்பு என்று உருக்கமாக கூறியுள்ளார்.
பாலிவுட் நடிகர் இர்பான் கான் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 53. இரண்டு வருடங்கள் முன்பிருந்தே புற்றுநோயுடன் போராடி வந்த அவர் லண்டனில் சிகிச்சை பெற்று சில மாதங்கள் முன்பு தான் இந்தியா திருப்பினார்.
அவருக்கு சில தினங்கள் முன்பு உடல்நிலை மிக மோசம் அடைந்த நிலையில் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று மதியம் காலமானார். அவருக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதில், நடிகை சாய் பல்லவி ட்விட்டரில், "நான் உங்களை நேரில் சந்தித்தது கூட இல்லை சார். ஆனால் இந்த இழப்பு எனது சொந்த இழப்பாக உணர்கிறேன். உங்கள் நடிப்பு மற்றும் சினிமா மீதான காதல் உங்களை எங்கள் இதயத்திற்கு நெருக்கமானவராக ஆக்கியுள்ளது. உங்கள் ஆன்மா இன்னும் மகிழ்ச்சியான மற்றும் அமைதியான இடத்தில் இருக்கட்டும்" என பதிவு செய்துள்ளார்.
அவருக்கு சில தினங்கள் முன்பு உடல்நிலை மிக மோசம் அடைந்த நிலையில் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதில், நடிகை சாய் பல்லவி ட்விட்டரில், "நான் உங்களை நேரில் சந்தித்தது கூட இல்லை சார். ஆனால் இந்த இழப்பு எனது சொந்த இழப்பாக உணர்கிறேன். உங்கள் நடிப்பு மற்றும் சினிமா மீதான காதல் உங்களை எங்கள் இதயத்திற்கு நெருக்கமானவராக ஆக்கியுள்ளது. உங்கள் ஆன்மா இன்னும் மகிழ்ச்சியான மற்றும் அமைதியான இடத்தில் இருக்கட்டும்" என பதிவு செய்துள்ளார்.
ஊரடங்கை பற்றி ஆதவ் கண்ணதாசன் ஐபோனில் இயக்கி இருக்கும் குறும் படத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ளார்.
ஆதவ் கண்ணதாசன் இயக்கத்தில் ‘லாக்டவுன்’ எனும் குறும்படம் வெளியாகவுள்ளது. இதில் முக்கியக் கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ளார். இக்குறும்படம் குறித்து ஆண்ட்ரியா கூறியதாவது:-
ஆதவ் கண்ணதாசனை எனக்கு ஓராண்டுக்கும் மேலாகத் தெரியும். அவரிடம் நடிப்பை விட எழுத்தில் கவனம் செலுத்துமாறு நான் சொல்லிக் கொண்டே இருப்பேன். அதில்தான் அவரது உண்மையான திறமை இருக்கிறது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட ஆரம்ப நாட்களில் இந்தக் குறும்படம் குறித்து என்னிடம் ஆதவ் சொன்னார். ஆனால், அப்போது நான் சமையலில் பிஸியாக இருந்தேன்.
ஒருவழியாக இப்போதுதான் இதற்கான நேரம் வந்தது. இதற்கான முழுக் காரணமும் ஆதவ் மட்டுமே. இப்படத்தின் சிறப்பம்சமே இது முழுக்க முழுக்க ஐபோனில் எடுக்கப்பட்டது. இதைச் செய்ய வேண்டுமென்று நான் நீண்ட நாட்களாக விரும்பினேன். ஆனால், தரம் குறித்த விஷயங்களில் நாம் சமரசம் செய்யமுடியாது என்பதால் அது கைகூடவில்லை. ஆனால் இப்போது நமக்கு வேறு வழியில்லை. எனவே இதை ஐபோனில் படம்பிடிக்க முடிவு செய்தோம். ஆனால் எதிர்பார்த்ததை விட சிறப்பாக வந்திருக்கிறது. இப்போது நடந்துகொண்டிருக்கும் விஷயத்தைப் பொழுதுபோக்கு அம்சங்களுடன் சொல்ல முயற்சி செய்திருக்கிறோம். இவ்வாறு ஆண்ட்ரியா கூறியுள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகை இஷா குப்தா ஸ்பெயின் தொழில் அதிபரை காதலிப்பதாக கூறியிருக்கிறார்.
நடிகைகள் பிரியங்கா சோப்ரா அமெரிக்காவை சேர்ந்த நிக் ஜோனசையும், ஸ்ரேயா ரஷ்யாவை சேர்ந்த ஆன்ட்ரே கோச்சேவையும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இந்த வரிசையில் இந்தி நடிகை இஷா குப்தா வெளிநாட்டு தொழில் அதிபரை திருமணம் செய்து கொள்ள தயாராகிறார். இஷா குப்தா தமிழில் பிரபு, கிஷோர் நடித்த ‘யார் இவன்’ படத்தில் நடித்து இருக்கிறார். அக்ஷய்குமாருடன் ‘ரஸ்டம்’ படத்தில் நடித்துள்ளார். ஹன்ஷகல்ஸ், பாட்ஷாவோ, கமாண்டோ 2, ராஸ் 3 உள்ளிட்ட பல இந்தி படங்களில் நடித்துள்ளார். சமீப காலமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வந்தார். இஷா குப்தா ஒருவருடன் ரகசிய காதலில் இருப்பதாக கிசுகிசுக்கள் வந்தன. ஆனால் அதுபற்றி கருத்து சொல்லாமல் இருந்தார்.

தற்போது முதல் தடவையாக காதலர் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். காதலரின் பெயர் மானுவேல் காம்போஸ் குவல்லர். இவர் ஸ்பெயினை சேர்ந்த தொழில் அதிபர் ஆவார். இஷா குப்தா, மானுவேல் புகைப்படத்தின் கீழ் ‘ஐ லவ் யூ சோ மச்’ என்ற வார்த்தையை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் வைரலாகிறது. ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்த வரிசையில் இந்தி நடிகை இஷா குப்தா வெளிநாட்டு தொழில் அதிபரை திருமணம் செய்து கொள்ள தயாராகிறார். இஷா குப்தா தமிழில் பிரபு, கிஷோர் நடித்த ‘யார் இவன்’ படத்தில் நடித்து இருக்கிறார். அக்ஷய்குமாருடன் ‘ரஸ்டம்’ படத்தில் நடித்துள்ளார். ஹன்ஷகல்ஸ், பாட்ஷாவோ, கமாண்டோ 2, ராஸ் 3 உள்ளிட்ட பல இந்தி படங்களில் நடித்துள்ளார். சமீப காலமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வந்தார். இஷா குப்தா ஒருவருடன் ரகசிய காதலில் இருப்பதாக கிசுகிசுக்கள் வந்தன. ஆனால் அதுபற்றி கருத்து சொல்லாமல் இருந்தார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா தானம் வழங்க பாடகி கனிகா கபூர் முன்வந்துள்ளார்.
லண்டனில் இருந்து இந்தியா திரும்பிய பிரபல இந்தி பாடகி கனிகா கபூர், தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளாமல் லக்னோவில் 100 பேருடன் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றது சர்ச்சையானது. பின்னர் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதனால் அவரை கைது செய்ய வேண்டும் என்று கண்டனங்கள் எழுந்தன. போலீசாரும் கனிகா கபூர் மீது வழக்குப்பதிவு செய்தார்கள்.
தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து அவர் வீடு திரும்பி உள்ளார். உயிருக்கு ஆபத்தான தொற்றுநோயை பரப்பும் செயலில் ஈடுபட்டதாக கனிகா கபூர் மீது 269 மற்றும் 270 பிரிவின் கீழ் லக்னோ போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் போலீஸ் நிலையத்தில் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கும்படி அவரது வீட்டில் போலீசார் நோட்டீஸ் ஒட்டி உள்ளனர்.

இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா தானம் வழங்க கனிகா கபூர் முன்வந்துள்ளார். அவரது ரத்தத்தை மருத்துவர்கள் சோதனைக்கு எடுத்துள்ளனர். சோதனையின் முடிவில் பிளாஸ்மா திரவம் அளிக்கலாம் என கூறப்பட்டால் அவரிடம் இருந்து பிளாஸ்மா தானம் பெறப்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சுருதி ஹாசன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘லாபம்’ படத்தின் முன்னோட்டம்.
நடிகர் விஜய் சேதுபதியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் மற்றும் இயக்குநர் ஆறுமுக குமாரின் 7சி.எஸ். எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்துள்ளனர். கமர்சியல் கலந்து உருவாகி இருக்கும் இப்படத்தை எஸ்.பி.ஜனநாதன் இயக்கியுள்ளார். `லாபம்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ளார்.
அவருக்கு ஜோடியாக சுருதி ஹாசன் நடித்துள்ளார். ஜெகபதிபாபு, கலையரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைக்கும் இந்த படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். லாபம் படத்தில் விஜய் சேதுபதி இரண்டு வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்துள்ளார்.
கொரோனா, தமிழ் கலாச்சாரம் உள்ளிட்டவை குறித்து பிரபல தமிழ் திரைப்பட நடிகர் சந்தானம் கேட்ட கேள்விகளுக்கு சத்குரு பதிலளித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக திகழும் நடிகர் சந்தானம் கொரோனா பிரச்சினை, ஆன்மீகம், ஈஷா மஹாசிவராத்திரி போன்ற பல்வேறு விஷயங்கள் தொடர்பாக கேட்ட கேள்விகளுக்கு சத்குரு பதில் அளித்த சுவாரஸ்யமான வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதில் தமிழ் கலாச்சாரத்தின் சிறப்பு, ஈஷாவின் ஒரு சொட்டு ஆன்மீகம், மரணம் குறித்த விழிப்புணர்வு, ஈஷாவின் மஹாசிவராத்திரி சர்ச்சையாக்கப்பட்டதன் நோக்கம் என பல விஷயங்களை சத்குரு விரிவாக பேசி உள்ளார்.
கொரோனா பாதிப்பு மிகுந்த இச்சூழலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என நடிகர் சந்தானம் கேட்ட கேள்விக்கு சத்குரு அளித்த பதில்: நம் தமிழ் மண்ணில் பல ஆயிரம் தலைமுறைகளாக மக்கள் வாழ்ந்து வந்துள்ளார்கள். எந்த மாதிரி உணவுகளை சாப்பிட்டால் நாம் ஆரோக்கியமாக இருக்க முடியும் என்பது நம் கலாச்சாரத்துடன் சேர்ந்தே இருக்கிறது.
இப்போது நாம் எதை சொன்னாலும் இது விஞ்ஞானப்பூர்வமாக இல்லை என சிலர் சொல்கிறார்கள். அவர்களுடைய மனதில் விஞ்ஞானப்பூர்வமானது என்றால் அது மேற்கத்திய நாட்டில் இருந்து வர வேண்டும் என நினைக்கிறார்கள். இவ்வளவு காலமாக நாம் புரிந்துகொண்ட விஷயங்கள் எல்லாம் விஞ்ஞானம் இல்லை. மருத்துவ ஆய்வகத்தில் பரிசோதனை செய்தால் தான் விஞ்ஞானம் என அவர்கள் சொல்கிறார்கள்.
நாம் பாரம்பரியமாக சாப்பிடும் உணவு முறையிலேயே பல விதமான தன்மைகள் உள்ளன. மஞ்சள், புளி, தேன், வேப்பிலை, கறிவேப்பிலை போன்றவற்றை தினமும் உணவில் சேர்த்து கொண்டாலே நம் நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருக்க வாய்ப்பு உள்ளது.
கூடுதலாக தற்போதைய சூழலில் ஏதாவது செய்யவேண்டும் என்றால், தண்ணீரில் கொஞ்சம் மஞ்சள், கொஞ்சம் மல்லி ஆகியவற்றை போட்டு கொதிக்க வைக்க வேண்டும். பின்னர், அதில் தேன் கலந்து சாப்பிடலாம். இது கொரோனாவிற்கான சிகிச்சை முறை என்று நான் சொல்லவில்லை. ஆனால், சாதாரணமாக சளி, இருமல் தொந்தரவு வந்தாலே இதை சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளோம். இவ்வாறு சத்குரு பேசியுள்ளார்.
மேலும், மஞ்சள், வேப்பிலை, மலை நெல்லிக்காய், தேன், மிளகு போன்றவற்றை தினமும் உண்பதன் மூலம் நம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க முடியும் என்று சத்குரு தெரிவித்துள்ளார்.
உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த பிரபல பாலிவுட் நடிகர் இர்பான் கான், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பிரபல பாலிவுட் நடிகர் இர்பான் கான் 1988-ம் ஆண்டு வெளியான சலாம் பாம்பே என்ற படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் வில்லன், குணச்சித்திர வேடம் என அனைத்திலும் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்தார். இவர் பாலிவுட் மட்டுமல்லாது ‘லைஃப் ஆஃப் பை’, ஜுராசிக் வேர்ல்டு போன்ற ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். விளம்பர படங்களிலும் மாடலிங் செய்து வந்தார்.
இவர் நியூரோ எண்டாக்ரின் ட்யூமர் எனப்படும் அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக நேற்றிரவு அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 54. அவரது மறைவு பாலிவுட் பிரபலங்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சனிக்கிழமை இவரின் தாயார் சாயிதா பேகம், 95, ஜெய்ப்பூரில் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார். கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் லாக்டவுன் போடப்பட்டுள்ளதால், ஜெய்பூருக்கு செல்ல முடியாத நிலையில், வீடியோ காலில் அழுத படி தாயின் இறுதி சடங்குகளை இர்பான் கான் பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.