என் மலர்
சினிமா

நடிகை சாய் பல்லவி
நான் சந்தித்தது இல்லை... ஆனால், என் சொந்த இழப்பு - சாய் பல்லவி உருக்கம்
பாலிவுட் நடிகர் இர்பான் கான் மறைவுக்கு நடிகை சாய் பல்லவி, நான் சந்தித்தது இல்லை... ஆனால், என் சொந்த இழப்பு என்று உருக்கமாக கூறியுள்ளார்.
பாலிவுட் நடிகர் இர்பான் கான் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 53. இரண்டு வருடங்கள் முன்பிருந்தே புற்றுநோயுடன் போராடி வந்த அவர் லண்டனில் சிகிச்சை பெற்று சில மாதங்கள் முன்பு தான் இந்தியா திருப்பினார்.
அவருக்கு சில தினங்கள் முன்பு உடல்நிலை மிக மோசம் அடைந்த நிலையில் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று மதியம் காலமானார். அவருக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதில், நடிகை சாய் பல்லவி ட்விட்டரில், "நான் உங்களை நேரில் சந்தித்தது கூட இல்லை சார். ஆனால் இந்த இழப்பு எனது சொந்த இழப்பாக உணர்கிறேன். உங்கள் நடிப்பு மற்றும் சினிமா மீதான காதல் உங்களை எங்கள் இதயத்திற்கு நெருக்கமானவராக ஆக்கியுள்ளது. உங்கள் ஆன்மா இன்னும் மகிழ்ச்சியான மற்றும் அமைதியான இடத்தில் இருக்கட்டும்" என பதிவு செய்துள்ளார்.

Next Story