என் மலர்
சினிமா

திரிஷா, கவுதம் மேனன்
மீண்டும் கவுதம் மேனனுடன் இணைந்த திரிஷா
விண்ணைத்தாண்டி வருவாயா, என்னை அறிந்தால் போன்ற படங்களில் இணைந்து பணியாற்றிய திரிஷா - கவுதம் மேனன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.
சிம்பு - திரிஷா கூட்டணியில் வெளியாகி காதலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற படம் விண்ணைத்தாண்டி வருவாயா. கவுதம் மேனன் இயக்கத்தில் உருவான இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால் அது கைகூடவில்லை. பின்னர் கவுதம் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் படத்தில் திரிஷா அஜித்துக்கு ஜோடியாக நடித்தார். இதையடுத்து இவர்கள் இருவரும் இணைந்து படம் எதுவும் பண்ணவில்லை.
இந்நிலையில் நடிகை திரிஷா தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், திரிஷாவுக்கு மொபைல் கேமராவை எப்படி கையாள்வது என்பது குறித்து கவுதம் மேனன் வீடியோ காலில் கற்றுக்கொடுக்கிறார். என்ன ஒரு ஜாலியான காலைப்பொழுது. நாங்கள் என்ன படம் பிடித்திருக்கிறோம் என்பதை உங்களுக்கு காட்ட ஆர்வமாக இருக்கிறேன். நன்றி கவுதம் மேனன், என திரிஷா அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதன்முலம், திரிஷாவும் கவுதம் மேனனும் இணைந்து குறும்படம் ஒன்றை தயார் செய்து வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
What a fun morning🌼Can’t wait to show you guys what we filmed📱😉
— Trish (@trishtrashers) May 1, 2020
Thank you @menongauthampic.twitter.com/yt42CeI4nS
Next Story






