என் மலர்
சினிமா செய்திகள்
கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ள பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராதியாவுக்கும் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மும்பை:
பிரபல பாலிவுட் நடிகர்ளான அமிதாப் பச்சனுக்கும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கடந்த 12 ஆம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் இருவரும் மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையடுத்து பச்சன் குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அபிஷேக் பச்சனின் மனைவியும் பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராதியாவுக்கும் கொரோனா இருப்பது கடந்த 13 ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது.
வைரஸ் அறிகுறிகள் சிறிய அளவில் இருந்ததால் இருவரும் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டனர். இதனால் ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் இருவரும் கடந்த சில நாட்களாக வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டிருந்தனர்.
இந்நிலையில், தனிமைப்படுத்திக்கொண்ட ஐஸ்வர்யாவுக்கும் அவரது மகளுக்கும் நள்ளிரவு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனாவின் தாக்கம் அதிகமானதால் இந்த மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் என இருவரும் மும்பையில் உள்ள நனாவதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அவர்களது உடல்நிலை சீராக உள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமித்தாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் ஏற்கனவே கொரோனா காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்போது ஐஸ்வர்யா ராயும் அவரது மகள் ஆராதியாவுக்கு கொரோனா தீவிரமடைந்ததையடுத்து இவர்களும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கில் பிரபல நடிகராக இருக்கும் விஜய் தேவரகொண்டா முன்னணி நடிகர்களை பின்னுக்கு தள்ளியிருக்கிறார்.
தற்போது சமூக வலைத்தளங்களைத்தான் சினிமா பிரபலங்கள் அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள்.

இன்ஸ்டாகிராம் தளத்தை அதிகமான புகைப்படங்களைப் பகிரும் தளமாகவே பலரும் பயன்படுத்தி வருகிறார்கள். சில தனிப்பட்ட புகைப்படங்களையும் அத்தளத்தில்தான் முன்னணி நடிகைகள் அதிகம் பகிர்வார்கள்.

தென்னிந்திய நடிகர்களில் இன்ஸ்டாகிராம் தளத்தில் அதிக பாலோயர்களைப் பெற்றுள்ளவராக தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டா இருக்கிறார். தற்போது அவருடைய பாலோயர்களின் எண்ணிக்கை 8 மில்லியனைத் தொட்டுள்ளது. வேறு எந்த ஒரு தமிழ், தெலுங்கு, மலையாள, கன்னட நடிகரும் அவ்வளவு பாலோயர்களை இதுவரை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செல்லம்மா என்ற பாடல் வெளியாகியிருக்கும் நிலையில் தாத்தா கனவுல வந்து அடிப்பார் என்று சிவகார்த்திகேயன் கூறியிருக்கிறார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் ’டாக்டர்’ படத்தின் சிங்கிள் பாடலான ‘செல்லம்மா’ என்ற பாடல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் பாடல் வரிகளில் உருவாகியுள்ள இந்த பாடல் அனைத்து தரப்பினர்களையும் கவர்ந்து உள்ளது. சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் என்ற பாடலை பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் கண்ணதாசனின் பேரனும், நடிகருமான ஆதவ் கண்ணதாசன் இந்த பாடல் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது ’சிவகார்த்திகேயன்! கவிஞரே பயங்கர பார்முல இருக்கீங்க போல! செம கேட்சி சாங் அனிருத்! அராஜகம் பண்றிங்க நெல்சன்’ என்று குறிப்பிட்டுள்ளார். ஆதவ் கண்ணதாசனின் இந்த டுவீட்டுக்கு பதிலளித்துள்ள சிவகார்த்திகேயன், ‘தயவு செய்து என்னை கவிஞர்ன்னு எல்லாம் சொல்லாதீங்க. தாத்தா கனவுல வந்து உங்கள அடிப்பாங்க’ என்று கூறியுள்ளார். இந்த காமெடி ட்வீட்டுகள் தற்போது வைரலாகி வருகிறது.
முன்னணி நடிகையான சமந்தாவை நடிகை பூஜா ஹெக்டே சமூக வலைத்தளத்தில் முந்தி இருக்கிறார்.
சில நாட்களுக்கு முன்னர் சமந்தா மற்றும் பூஜா ஹெக்டே ஆகிய இருவருக்கும் பனிப்போர் நடந்தது. சமந்தா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பூஜா ஹெக்டே தனது சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவு போட்டிருந்தார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் திடீரென தனது சமூக வலைத்தள கணக்கு ஹேக் செய்யப்பட்டு விட்டதாகவும் தனது சமூக வலைத்தள கணக்கை மீட்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பூஜா விளக்கம் அளித்தார்.

ஆனால் இந்த விளக்கத்தை ஏற்றுக் கொள்ளாத சமந்தாவின் ரசிகர்கள் பூஜாவை கடுமையாக விமர்சனம் செய்தனர். பூஜாவின் ரசிகர்களும் இதற்கு பதிலடி கொடுத்தனர்.

இந்த நிலையில் தற்போது சமந்தாவை பூஜா ஹெக்டே ஓவர்டேக் செய்துள்ளார். இன்ஸ்டாகிராமில் பூஜா ஹெக்டேவுக்கு பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 11 மில்லியன்களை எட்டியுள்ளது. பூஜாவின் போட்டியாளரான சமந்தாவுக்கு 10.8 மில்லியன் உள்ளது. இதனால் சமந்தாவை பூஜா ஹெக்டே ஓவர்டேக் செய்துவிட்டதாக பூஜாவின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தமிழகத்தில் திரையரங்குகள் திறப்பது எப்போது என்ற கேள்விக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில் அளித்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் 16-ம் தேதி முதலே திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. புதிய திரைப்படங்கள் ரிலீஸ் செய்யப்படாமலிருப்பதால் திரையரங்க உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள் என திரைத்துறையினர் பெரும் பொருளாதார இழப்புக்கு ஆளாகியுள்ளனர்.
தற்போது ஊரடங்கில் அத்தியாவசிய தேவைகளுக்காக சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்திருந்தாலும் திரையரங்குகள் எப்போது மீண்டும் திறக்கப்படும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளிக்கும் என்று திரையரங்க உரிமையாளர்கள் சிலர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, “தொற்று எண்ணிக்கை முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு மக்கள் சகஜமாக திரும்பும் நிலை வந்த பின்னர்தான் தியேட்டர்கள் திறக்கப்படுவதற்கான சாத்தியம் உள்ளது. தற்போதைக்கு எந்த தளர்வும் வழங்கப்பட மாட்டாது” என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் விஷ்ணுவிஷாலின் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து அசத்தியுள்ளார் ஜூவாலா கட்டா.
வெண்ணிலா கபடி குழு, ஜீவா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் விஷ்ணுவிஷால். யார் மனைவியை விவகாரத்து செய்த பின் பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவுடன் நட்பு பாராட்டி வருகிறார்.

இதையடுத்து ஜூவாலா கட்டாவை விஷ்ணு விஷால் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அதை விஷ்ணு விஷால் மறுத்திருந்தார்.

இந்நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் விஷ்ணு விஷால் தனக்கு ஜூவாலா கட்டா சர்ப்ரைஸ் கொடுத்ததாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
ஜா.ரகுபதி இயக்கத்தில் பாலாஜி, நிகிலா விமல் நடிப்பில் உருவாகி இருக்கும் ஒன்பது குழி சம்பத் படத்தின் முன்னோட்டம்.
ஜா.ரகுபதி இயக்கத்தில் உருவாகி உள்ள படம் 'ஒன்பது குழி சம்பத்'. புதுமுக நாயகன் பாலாஜி ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நிகிலா விமல் நடித்துள்ளார். மேலும் அப்புக்குட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சார்லி இசையமைத்துள்ள இப்படத்திற்கு கொளஞ்சி குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படத்தை பற்றி இயக்குனர் ஜா.ரகுபதி கூறியதாவது: “கிராமத்தில் சிறுவர்களுடன் சேர்ந்து கோலி விளையாடியபடி திரிந்து கொண்டிருக்கிறான், ஒரு இளைஞன். அவன் வாழ்க்கையில் ஒரு பெண் குறுக்கிடுகிறாள். அதனால் அவன் வாழ்க்கை திசைமாறிப் போகிறது. ‘சஸ்பென்ஸ் காட்சிகள் நிறைந்த திகில் படம், இது.

தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத கிராமத்தில் நிகழும் சம்பவங்களே திரைக்கதை. இதற்காக பல கிராமங்களை பார்த்து, இறுதியாக திருச்சி அருகில் ஒரு கிராமத்தை தேர்வு செய்து படப்பிடிப்பை நடத்தினோம். திருநாவுக்கரசு தயாரித்துள்ளார். படம், ‘ஆன்லைன்’ தியேட்டரில் வெளியாகும்.” என கூறினார்.
டுவிட்டரில் உதயநிதி ஸ்டாலினை டேக் செய்து ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குவோம் என நடிகை மீரா மிதுன் பதிவிட்டுள்ளார்.
தமிழில் சில படங்களில் நடித்த மீரா மிதுன், பிக்பாஸ் வீட்டில் நுழைந்து மிகவும் பிரபலமானார். அதன்பின் சமூக வலைத்தளத்தில் புகைப்படங்கள் மற்றும் சர்ச்சையான கருத்துக்களை பதிவு செய்து வருகிறார். சமீபத்தில் திரிஷா தன்னை காப்பியடிப்பதை நிறுத்திக் கொள்ளாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து பதிவு செய்திருந்தார்.
இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலினுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை டுவிட்டரில் பதிவிட்டுள்ள மீரா மிதுன், அதில் உதயநிதியை டேக் செய்து 'ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குவோம்’ என்று பதிவிட்டுள்ளார். இதேபோல் திமுக தலைவர் முக ஸ்டாலினை டேக் செய்து ‘நாம் இணைந்து வெல்வோம்’ என்றும் பதிவு செய்துள்ளார். வழக்கம்போல் இந்த டுவிட்டும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
Let's create a new era @Udhaystalin
— Meera Mitun (@meera_mitun) July 16, 2020
Let's win together @mkstalinpic.twitter.com/X7Dxe86C1J
நடிகர், இயக்குனர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்ட கமல்ஹாசன், அடுத்ததாக ஓ.டி.டி-யில் தடம்பதிக்க தயாராகி வருகிறாராம்.
கொரோனா ஊரடங்கில் ஓ.டி.டி. தளங்களில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகின்றன. இதனால் முன்னணி நடிகர்கள் இயக்குனர்கள் டிஜிட்டல் தளத்துக்கு மாறுகிறார்கள். மணிரத்னம், சுஹாசினி, சித்தார்த், அரவிந்தசாமி, ஜெயேந்திரா, பிஜாய் நம்பியார் உள்பட 9 இயக்குனர்கள் இணைந்து புதிய வெப் தொடரை எடுக்க உள்ளதாகவும் அவற்றில் சூர்யா, விஜய் சேதுபதி, ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட 9 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசனும் ஓ.டி.டி. தளத்துக்கான திரைப்படங்களையும் வெப் தொடர்களையும் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான கதைகள் கேட்டு வருகிறார். நல்ல கதை அமைந்தால் தானே நடித்து இயக்கி ஓ.டி.டி. தளத்தில் வெளியிட முடிவு செய்து இருக்கிறார்.

சில வருடங்களுக்கு முன்பே தனது விஸ்வரூபம் படத்தை டி.டி.எச்சில் வெளியிட ஆயத்தமாகி எதிர்ப்பினால் கைவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியன்-2 பட வேலைகள் கொரோனாவால் முடங்கி உள்ளன. இந்த படத்தை முடித்து விட்டு முழுவீச்சில் ஓ.டி.டி. தளத்தில் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கந்தசஷ்டி கவசம் குறித்து நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கந்தசஷ்டி கவசம் குறித்து அவதூறாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இதுதொடர்பாக நடிகர்கள் நட்ராஜ், பிரசன்னா, சௌந்தரராஜா, ராஜ் கிரண் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில்,நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: அனைத்து முருக பக்தர்களுக்கும் வணக்கம், நான் உங்கள் அனைவருடனும் ஒரு கருத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். தினமும் கந்தசஷ்டி கவசத்தை கேட்டு வளர்ந்தவன் நான். என் அம்மா அதை தினமும் என்னிடம் காலையில் படித்துக் காட்டுவார். அதன் சக்தியை நான் உணர்ந்துள்ளேன். கந்தசஷ்டி கவசம் என்னைப் பாதுகாத்த ஒரு கேடயம் என்பதை நான் நம்புகிறேன்.

என் வீட்டில் உள்ள முருகன் சிலையை நான் தினமும் வணங்குவேன். நான் இதை எதற்காக சொல்கிறேன் என்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. நீங்கள் அனைவரும் அதை அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன். இதைப் பற்றி அதிகமாகப் பேசி யாரையும் பெரிய ஆளாக மாற்ற வேண்டாம். இந்த புகைப்படத்தில் முருகனின் அழகு, அன்பு மற்றும் சக்தியை பாருங்கள். அதற்கு முன் எல்லாம் மறைந்து போகும். அனைத்திற்கும் காலம் பதிலளிக்கும். இவ்வாறு லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
நடிகர் ஆதியும், நடிகை நிக்கி கல்ராணியும் காதலித்து வருவதாகவும், இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தமிழில் மிருகம் படத்தில் கதாநாயகனாக அறிமுகமான ஆதி, ஈரம், அய்யனார். ஆடுபுலி, அரவான், யாகாவாராயினும் நாகாக்க, மரகத நாணயம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும் கிளாப் என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆதிக்கும் நடிகை நிக்கி கல்ராணிக்கும் காதல் மலர்ந்துள்ளதாக தெலுங்கு இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது.
கன்னட நடிகையான நிக்கி கல்ராணி தமிழில் டார்லிங், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, மொட்ட சிவா கெட்ட சிவா, நெருப்புடா, ஹரஹர மகாதேவகி, கலகலப்பு-2, கீ போன்ற படங்களில் நடித்துள்ளார். ஆதியுடன் யாகாவாராயினும் நாகாக்க, மரகத நாணயம் ஆகிய படங்களில் ஜோடியாக நடித்துள்ளார். படப்பிடிப்பில் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு ரகசியமாக காதலித்து வருவதாக கூறப்படுகிறது.

இரு தினங்களுக்கு முன்பு ஆதி தனது தந்தையின் பிறந்த நாளை குடும்பத்துடன் கொண்டாடினார். கொரோனா ஊரடங்கினால் யாரையும் அழைக்கவில்லை. ஆனால் நிக்கி கல்ராணியை மட்டும் அழைத்து இருந்தார். அவரும் ஆதி குடும்பத்தினரோடு பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இருவரும் காதலிப்பது உண்மைதான் என்றும் விரைவில் திருமண அறிவிப்பு வெளியாகும் என்றும் தெலுங்கு திரையுலகினர் கூறுகிறார்கள்.
துப்பறிவாளன் 2-ம் பாகத்தை மீண்டும் மிஷ்கினே இயக்க இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், விஷால் தரப்பு அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது.
மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்த துப்பறிவாளன் இரண்டாம் பாகத்துக்கான படப்பிடிப்பு லண்டனில் சில வாரங்கள் நடந்தது. அங்கு விஷால்-மிஷ்கின் இடையே திடீர் மோதல் ஏற்பட்டு படப்பிடிப்பு நின்று போனது. படத்துக்கு அதிகம் செலவு வைத்து விட்டதாக மிஷ்கின் மீது விஷால் குற்றம் சாட்டினார்.
படத்தை தொடர்ந்து இயக்க தனக்கு ரூ.5 கோடி சம்பளம் தரவேண்டும் என்பது உள்பட 15 நிபந்தனைகளை மிஷ்கின் விதித்ததாக கடித நகல் வெளியானது. இந்த மோதலையடுத்து துப்பறிவாளன் 2-ம் பாகத்தை நானே இயக்குவேன் என்று விஷால் அறிவித்தார். கொரோனா ஊரடங்கு முடிந்ததும் படப்பிடிப்பை தொடங்கும் முடிவில் இருக்கிறார்.

இந்த நிலையில் மிஷ்கின்-விஷால் இடையே சமரசம் ஏற்பட்டு உள்ளது என்றும் துப்பறிவாளன் 2-ம் பாகத்தை மிஷ்கினே இயக்க இருப்பதாகவும் சமூக வலைதளத்தில் தகவல் பரவி வருகிறது.
இதனை விஷால் தரப்பில் மறுத்துள்ளனர். “மிஷ்கினுடன் சமரசம் ஏற்பட வாய்ப்பே இல்லை. சரியான திட்டமிடல் இல்லாமல் துப்பறிவாளன்-2 படத்துக்கு பலகோடி நஷ்டத்தை மிஷ்கின் ஏற்படுத்தி விட்டார். எனவே மீண்டும் படத்தை இயக்க அவரை அழைக்கும் எண்ணம் இல்லை. சக்ரா படத்தின் 4 நாள் படப்பிடிப்பு பாக்கி உள்ளது. அதை முடித்து விட்டு துப்பறிவாளன் 2-ம் பாகத்தை விஷால் இயக்குவார்” என்றனர்.






