என் மலர்
சினிமா செய்திகள்
பிரபல நடிகையாக இருக்கும் பிரியாமணியின் பாடிபில்டிங் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை பிரியாமணி. நடிகர் கார்த்தி நடித்த முதல் படமான ’பருத்தி வீரன்’ திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது.
பிரியாமணி கடந்த 2017 ஆம் ஆண்டு முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த கொரோனா விடுமுறையில் தனது வித்தியாசமான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வரும் பிரியாமணி தற்போது பாடிபில்டிங் குறித்த ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

பிரியாமணி தனது இரண்டு கைகளையும் பின்பக்கம் வைத்து கொள்ள, அவருடைய இரண்டு கைகளாக அவருடைய கணவரின் கைகள் உள்ளது போல் கேமிரா ட்ரிக்கில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை நடிகை பிரியாமணி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
கொரோனா தொற்று பரவலை தடுக்க நடிகர் ஷாருக்கான் வசிக்கும் சொகுசு பங்களா, பிளாஸ்டிக் கவர் கொண்டு மூடப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு பாலிவுட் திரையுலகையும் விட்டுவைக்கவில்லை. நடிகர் அமிதாப் பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் மற்றும் பேத்தி ஆரத்யா ஆகியோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனால், திரையுலகமும் கொரோனா அச்சத்தில் மூழ்கியுள்ளது. நடிகர் ஷாருக்கான் ஏற்கனவே தனது 5 மாடி அலுவலகத்தை கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க, மாநகராட்சிக்கு வழங்கியுள்ளார்.

இந்த நிலையில், ஷாருக்கான் குடும்பத்தினருடன் வசிக்கும் சொகுசு பங்களா, பிளாஸ்டிக் கவர் கொண்டு மூடப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அர்ஜுனின் மகளும் நடிகையுமான ஐஸ்வர்யாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நடிகர் அர்ஜுனின் உறவினரும் பிரபல கன்னட நடிகருமான சிரஞ்சீவி சார்ஜாவின் திடீர் மரணம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. அந்த சோகத்தில் இருந்து ரசிகர்கள் மீளாத நிலையில், மற்றொரு அதிர்ச்சி செய்து கிடைத்துள்ளது.
சிரஞ்சீவி சார்ஜா மற்றும் அர்ஜுனின் சகோதரரும் நடிகருமான துருவா சார்ஜாவிற்கும் அவரது மனைவிக்கும் கொரோனா பாதித்தது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ததில் அர்ஜுனின் மகளும் நடிகையுமான ஐஸ்வர்யாவுக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், பாலிவுட், டோலிவுட் பிரபலங்களை ஓரங்கட்டி முதலிடம் பிடித்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் 19-ந் தேதி முதல் திரையரங்குகள் மூடப்பட்டது. சினிமா படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டது. ஊரடங்கு சமயத்தில் மக்கள் பொழுதுபோக்கிற்காக தொலைக்காட்சிகள் மற்றும் ஓடிடி தளங்களை பார்த்து வந்தனர். இதனால் தொலைக்காட்சி பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்தது.
இதன் காரணமாக அனைத்து தொலைக்காட்சி நிறுவனங்களும் மக்களை கவர்வதற்காக முன்னணி நடிகர்களின் ஹிட்டான படங்களை ஒளிபரப்பி வந்தன. அந்த வகையில் இந்த ஊரடங்கு சமயத்தில் ஒளிபரப்பப்பட்ட திரைப்படங்களில், அதிக பார்வையாளர்களை பெற்ற இந்திய நட்சத்திரங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது.

அதில் 117.9 மில்லியன் பார்வையாளர்களுடன் விஜய் முதலிடம் பிடித்துள்ளார். 76.2 மில்லியன் பார்வையாளர்களுடன் லாரன்ஸ் 2-ம் இடமும், 65.8 மில்லியன் பார்வையாளர்களுடன் ரஜினி மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளார். அக்ஷய் குமார், பிரபாஸ் ஆகியோர் முறையே 4-வது மற்றும் 5-வது இடத்தை பிடித்துள்ளனர்.
இந்த விவரங்கள் அனைத்தும் ஊரடங்கு போடப்பட்ட 13 வது வாரம் முதல் 27 வது வாரம் வரையிலான விவரங்களின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது.
Most Viewed Actors on Indian Television across all language based on #BARC Impressions
— Girish Johar (@girishjohar) July 19, 2020
Data courtesy @BARCIndia
... Thanx @mithunraman 👏🏼
Under Lock down Week(13-27) 2020@actorvijay: 117.9M 👑🌟💕@offl_Lawrence: 76.2M@rajinikanth: 65.8M@akshaykumar: 58.8M#Prabhas: 56.9M pic.twitter.com/MDtF8GbRuu
நேரலை நிகழ்ச்சியில் லட்சுமி ராமகிருஷ்ணனுடன் நடிகை வனிதா வாக்குவாதம் செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகை வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவரை கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டார். திருமணத்தை அடுத்து பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன், தனது கணவர் முறையாக விவாகரத்து பெறாமல் திருமணம் செய்து கொண்டதாகவும், மகளிர் காவல்நிலையத்தில் புகாரளித்தார். பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் கொடுத்த புகார் குறித்து விளக்கமளித்த வனிதா, சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்றும், பணத்திற்காக அவர் புகார் கொடுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
பீட்டர் பாலின் முதல் மனைவி புகார் கொடுத்திருக்கும் செய்தியை அறிந்த நடிகையும், இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் டுவிட்டரில், பீட்டர்பாலுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கிறார்கள். இன்னும் விவாகரத்தாகவில்லை. வனிதா - பீட்டர் பால் திருமணம் முடியும் வரை ஏன் முதல் மனைவி புகாரளிக்கவில்லை. திருமணத்தை ஏன் நிறுத்தவில்லை? என்று கேள்வி எழுப்பினார்.

லட்சுமி ராமகிருஷ்ணனின் இந்த பதிவுக்கு பதிலடி கொடுத்த வனிதா, இந்த விஷயத்தில் உங்களுடைய தலையீட்டை நிறுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்கு தெரியாத ஒருவரை பற்றி எந்தவித கருத்துக்களையும் நீங்கள் சொல்ல வேண்டாம். மேலும் இது உங்களுடைய தொலைக்காட்சி ஷோ அல்ல எனக்கூறியிருந்தார்.
இந்நிலையில் வனிதாவும், லட்சுமி ராமகிருஷ்ணனும் தனியார் இணைய ஊடகம் நடத்திய விவாத நிகழ்ச்சியில் வீட்டில் இருந்தபடியே கலந்துகொண்டனர். அப்போது இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் ஒருமையில் பேசிக்கொண்டது சர்ச்சையானது. இது தொடர்பான வீடியோவை வனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
கண்ணதாசனின் பேரன் ஆதவ்விடம் நடிகர் சிவகார்த்திகேயன் தன்னை அப்படி அழைக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் படம் ‘டாக்டர்’. ’கோலமாவு கோகிலா’ படத்தை இயக்கிய நெல்சன் இப்படத்தை இயக்குகிறார். கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க, வில்லனாக வினய் நடிக்கிறார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு தடை பட்டுள்ளது.
இதனிடையே இப்படத்தில் இடம்பெறும் செல்லம்மா எனும் பாடலை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. சிவகார்த்திகேயன் எழுதியிருந்த இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்பாடல் லிரிக்கல் வீடியோவில் சிவகார்த்திகேயன், அனிருத், நெல்சன் ஆகியோரது நடனம் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.
இந்நிலையில், கவிஞர் கண்ணதாசனின் பேரனும், நடிகருமான ஆதவ் கண்ணதாசன், டாக்டர் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “(சிவகார்த்திகேயன்) கவிஞரே பயங்கர பார்ம்ல இருக்கீங்க போல, செம்ம சாங் அனிருத். அராஜகம் பண்றீங்க நெல்சன்” என்று வாழ்த்தி இருந்தார்.
Hahahaha thank u bro 🤗🤗 but pls enna kavingarae nu ellam solladheenga thaatha kanavula vandhu ungala adippaanga🙏🙏
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) July 16, 2020
ஆதவ் கண்ணதாசனின் இந்த டுவிட்டுக்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், "“நன்றி பிரதர், பிளீஸ் என்ன கவிஞர்னு எல்லாம் சொல்லாதீங்க, தாத்தா கனவுல வந்து உங்கள அடிப்பாங்க” என்று கூறியுள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும் என்பது குறித்து தயாரிப்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.
சிம்பு நடிப்பில் உருவாக இருக்கும் படம் ‘மாநாடு’. வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தை சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் பூஜையுடன் தொடங்கியது.
சுமார் ஒரு மாதம் விறுவிறுப்பாக நடைபெற்ற படப்பிடிப்பு, கொரோனா ஊரடங்கு காரணமாக தடைபட்டது. இருப்பினும் சிம்பு ரசிகர்கள் சமூக வலைதளத்தில் படத்தைப் பற்றிய அப்டேட் தருமாறு தயாரிப்பாளரிடம் அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தனர்.

இதுகுறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “எல்லோரும் மாநாடு படத்தின் அப்டேட் என்ன என்று கேட்கிறார்கள். அரசாங்கத்தின் கிரீன் சிக்னலுக்காக திரையுலகத்தினர் காத்திருக்கிறார்கள். அனுமதி கிடைத்ததும் உடனடியாக படப்பிடிப்பை ஆரம்பிப்போம்,” என தெரிவித்துள்ளார்.
வீரப்பனின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து வெப் தொடர் ஒன்றை உருவாக்க உள்ளதாக இயக்குனர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் தெரிவித்துள்ளார்.
சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கையை மையமாக வைத்து, ஏற்கனவே ஏ.எம்.ஆர்.ரமேஷ் இயக்கத்தில் வனயுத்தம் என்ற பெயரிலும், ராம்கோபால் வர்மா இயக்கத்தில் வில்லாதி வில்லன் வீரப்பன் என்ற பெயரிலும் திரைப்படங்களாக வெளிவந்தன. வனயுத்தம் படத்தில் வீரப்பனாக கிஷோரும் போலீஸ் அதிகாரியாக அர்ஜுனும் நடித்திருந்தனர். இந்த படம் தணிக்கை குழுவின் எதிர்ப்பில் சிக்கி பல காட்சிகள் நீக்கப்பட்ட பிறகே திரைக்கு வந்தது.
இந்நிலையில் வீரப்பன் வாழ்க்கை கதையை மையமாக வைத்து வெப் தொடர் ஒன்றை எடுக்கப் போவதாக இயக்குனர் ஏ.எம்.ஆர். ரமேஷ் அறிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறும்போது, “வனயுத்தம் படத்தில் வீரப்பனின் வாழ்க்கை கதையை முழுமையாக வெளிப்படுத்த முடியவில்லை. நிறைய காட்சிகளை தணிக்கை குழுவினர் வெட்டி விட்டனர். இதனால் வெப் தொடராக எடுக்க உள்ளேன்.

வெப் தொடருக்கு தணிக்கை இல்லை என்பதால் வீரப்பனின் முழு வாழ்க்கையையும் இந்த தொடரில் கொண்டு வருவேன். காவல்துறை அதிகாரிகள், வீரப்பனுடன் பழகியவர்கள் போன்றோருடன் பேசி நிறைய தகவல்கள் சேமித்து வைத்துள்ளேன். அவை அனைத்தும் இந்த வெப் தொடரில் இடம்பெறும்.
இந்த வெப் தொடரில் வீரப்பன் கதாபாத்திரத்தில் கிஷோர் நடிக்கிறார். மேலும் பலர் நடிக்க உள்ளனர். அடுத்த மாதம் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளேன். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் இந்த தொடர் வெளிவரும்” என்றார்.
வீடுகள் இல்லாமல் தெருவில் வசிக்கும் நபர்களுக்கு 100 நாட்களாக உதவிய சூர்யா ரசிகர்கள், அவர்களுடன் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடியுள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகளுக்கு நடிகர் சூர்யா ரசிகர்கள் உதவி வருகின்றனர்.

இதில் வடசென்னை மாவட்ட சூர்யா நற்பணி இயக்கம் சார்பாக வட சென்னை மாவட்டத்தில், திரு. வி. க நகர் மண்டலத்தில் உட்பட்ட பெரம்பூர், கொளத்தூர், மாதாவரம் திருவிக நகர், பகுதிகளில், பெரம்பூர் பேருந்து நிலையம், பெரம்பூர் ரயில் நிலையம், ஜீவா ரயில் நிலையம், அயனாவரம், ஜமாலியா, புளியந்தோப்பு, மாதாவரம் பைபாஸ், மூலக்கடை போன்ற பகுதிகளில் லாக்டவுனில் வீடுகள் இல்லாமல் தெருவில் வசித்து வரும் நபர்களுக்கு கடந்த 100 நாட்களாக தினமும் மதியம் மற்றும் இரவு சூர்யா நற்பணி இயக்கத்தை சார்ந்த நண்பர்கள் தலைமையில் தினமும் உணவளித்து வருகிறார்கள். 100 நாட்களில் இதுவரை சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 100வது நாள் என்பதால் தெருவில் வசிக்கும் ஆதரவற்ற மக்களுடன் இணைந்து கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடி உள்ளனர். சூர்யா ரசிகர்களின் இந்த நற்செயலை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
தேசிய விருது வென்ற நடிகை கீர்த்தி சுரேஷ் அடுத்ததாக கவுதம் மேனன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
கமல்ஹாசன் நடித்து 2006-ல் திரைக்கு வந்த படம் “வேட்டையாடு விளையாடு”. இந்த படத்தில் நாயகியாக ஜோதிகா நடித்து இருந்தார். மேலும் கமாலினி, பிரகாஷ்ராஜ், டேனியல் பாலாஜி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வந்தனர். கவுதம் மேனன் இயக்கியிருந்த இப்படம் நல்ல வசூல் பார்த்தது. தற்போது அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க முயற்சிகள் நடந்து வருகிறது.

இந்த படத்தில் அனுஷ்காவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவைக்க முடிவு செய்து இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது அந்த கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷை நடிக்க வைக்க கவுதம் மேனன் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கீர்த்தி சுரேஷ் தற்போது, ரஜினியின் அண்ணாத்த படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை கைது செய்த போலீசார், அவர் குறித்த திடுக் தகவலை வெளியிட்டுள்ளனர்.
சென்னை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மாலை மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம ஆசாமி, நடிகர் அஜித் வீட்டில் வெடிகுண்டு வைத்து இருப்பதாகவும், அது வெடிக்கும் என்றும் கூறிவிட்டு போன் இணைப்பை துண்டித்து விட்டார்.
உடனடியாக நடிகர் அஜித் வீடு உள்ள திருவான்மியூர் மற்றும் நீலாங்கரை போலீசாருக்கு தகவல் தரப்பட்டது. நீலாங்கரை அருகே ஈஞ்சம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நடிகர் அஜித் வீட்டுக்கு நீலாங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசாரும், வெடிகுண்டு நிபுணர்களும் மோப்ப நாயுடன் விரைந்தனர்.
அப்போது வீட்டில் நடிகர் அஜித், தனது குடும்பத்தினருடன் இருந்தார். வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவலை போலீசார் தெரிவித்ததும், நடிகர் அஜித் முழு ஒத்துழைப்பு வழங்கினார். போலீசாரை முககவசத்துடன் ஒவ்வொரு அறையாக அழைத்துச்சென்று சோதனை செய்ய செய்தார். போலீசார் சுமார் 1 மணிநேரம் சோதனை செய்தும் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. பின்னர்தான் தொலைபேசியில் வந்த மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது.

அதேபோல் திருவான்மியூரில் உள்ள நடிகர் அஜித்தின் வீட்டுக்கு திருவான்மியூர் போலீசார் சென்று சோதனை செய்தனர். ஆனால் அங்கும் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. அதுவும் புரளி என தெரியவந்தது.
போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த செல்போன் எண் மரக்காணம், புதுச்சேரி பகுதியில் இருப்பதாக தெரியவந்தது. போலீசார் நடத்திய விசாரணையில் மிரட்டல் விடுத்தது மரக்காணத்தை சேர்ந்த புவனேஸ்வரன் எனத் தெரியவந்தது. பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட புவனேஸ்வரன், கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் விஜய் வீட்டுக்கும் இதுபோல் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கைது செய்யப்படவர் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆர்.எஸ்.விமல் இயக்கத்தில் விக்ரம் நடித்து வந்த ‘மகாவீர் கர்ணா’ திரைப்படம் கைவிடப்பட்டதா என்பது குறித்து படக்குழு விளக்கம் அளித்துள்ளது.
மலையாளத்தில், ‘என்னு நிண்டே மொய்தீன்’ எனும் படத்தை இயக்கிய ஆர்.எஸ்.விமல் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்டமாக இயக்கும் படம் ‘மகாவீர் கர்ணா’. மகாபாரதத்தில் இடம் பெற்றுள்ள கர்ணன் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தில் விக்ரம் கர்ணனாக நடிக்கிறார். தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மூன்று மொழிகளில் இப்படம் உருவாகி வருகிறது.
கடந்தாண்டு தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் மட்டுமே நடைபெற்றது. பின்னர் விக்ரம், கோப்ரா, பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் நடிக்க சென்றதால், ‘மகாவீர் கர்ணா’ கிடப்பில் போடப்பட்டது. இதனிடையே இப்படத்தின் இயக்குனர் ஆர்.எஸ்.விமல், சமீபத்தில் தனது அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டார். இதனால் ‘மகாவீர் கர்ணா’ படம் கைவிடப்பட்டதாக செய்திகள் பரவி வந்தது.

ஆனால் இதனை படக்குழு திட்டவட்டமாக மறுத்துள்ளது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு விக்ரம் கைவசம் உள்ள படங்களை நிறைவு செய்தபின் தொடங்கும். இப்படம் கைவிடப்படவில்லை எனக்கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.






