என் மலர்
சினிமா செய்திகள்
தப்ப நீங்க பண்ணா சரியாகிடுமா என்று நடிகை வனிதாவின் மூன்றாவது திருமணம் குறித்து நடிகை சனம் ஷெட்டி கேள்வி எழுப்பியுள்ளார்.
நடிகை வனிதா சமீபத்தில் பீட்டர் பால் என்பவரை 3-வது திருமணம் செய்து கொண்டதை நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி ஆகியோர் விமர்சித்தார்கள். தனது சொந்த வாழ்க்கையில் தலையிட வேண்டாம் என்று நடிகை வனிதா கூறி வந்தார். இது நாளடைவில் பெரிய விவாதமாக மாறியது. சமூக வலைத்தளத்தில் வனிதா, லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி ஆகியோர் சண்டைப் போட்டுக் கொண்டார்கள்.
இந்நிலையில், வனிதாவிற்காக ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார் சனம் ஷெட்டி. அதில், வனிமா உங்களுடைய சமீபத்தில் வீடியோ பார்த்தேன். அதில் நீங்கள் பேசியது தவறு. எனக்கு ஒரு பிரச்சனை வந்த போது நீங்கள் குரல் கொடுத்தீர்கள். இப்போ தப்ப நீங்க பண்ணா சரியாகிவிடுமா என்று கேள்விக் கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் சனம் ஷெட்டி.
மேலும் பீட்டர் பாலின் மனைவிக்கு தேவையானதை கொடுத்துவிட்டு, முறைப்படி அவர்கள் விவாகரத்து பெற்ற பிறகு நீங்கள் உங்கள் வாழ்க்கையை தொடங்குகள் என்றும் வீடியோவில் சனம் ஷெட்டி கூறியுள்ளார்.
எனக்கு வரும் விமர்சனங்கள் புதிதல்ல என்று பிரபல நடிகை ரித்விகா சமூக வலைத்தள பக்கத்தில் ரசிகருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
பரதேசி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரித்விகா. இப்படத்தை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கிய கபாலி, மெட்ராஸ் உள்ளிட்ட படங்களில் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு டைட்டிலை தட்டிச் சென்றார்.
இவர் சமூக வலைதளத்தில் அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு வருவார். இதில் சமீபத்தில் வெளியிட்ட ஒரு புகைப்படத்திற்கு நெட்டிசன் ஒருவர் அவதூறாக பேசி பதிவிட்டுள்ளார். அதற்கு பதிலளிக்கும் விதமாக ரித்விகா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “தலித்தாக இருப்பின் மிக்க மகிழ்ச்சி அடைந்திருப்பேன். என்ன செய்ய? அப்பாக்கியம் நானடையேன். நானும் அடக்குமுறைகள் செய்த குற்றமிகு ஆதிக்க சாதிகளுள் பிறந்தவள் தான். வருந்துகிறேன். இனியாவது சாதிகளற்ற சமூகமாக, மனிதர்களாக வாழ முயற்சிப்போம். நிற்க.
இது போன்று எனக்கு வரும் விமர்சனங்கள் புதிதல்ல. இதற்கும் இனி வருமின் அதற்கான பதிலாகவும்... pic.twitter.com/6PF0sJj3Oo
— Riythvika✨ (@Riythvika) July 20, 2020
ஒருவகையில் நானும் தலித் தான். ஒடுக்கப்பட்டோர் அனைவரும் தலித் எனின் பெண்ணாகிய நானும் தலித் தானே. காலங்காலமாக ஆண்களால் ஒடுக்கப்பட்டோர் தானே. ஆம் தலித். எம்மை தலித்தாக்கிய பிழையும் பாவமும் தங்கள் ஆணினத்தையே சாரும். மற்றபடி எம் அழகைப் பாராட்டியதற்கு நன்றி.
பி.கு - தலித் பெண்கள் என்னை விட அழகு” என்று ரித்விகா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ரஜினியுடன் லம்போகினி காரில் சென்றது யார் யார் என்ற விவரம் வெளியாகி மீண்டும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் சினிமா படப்பிடிப்புகள் இன்னும் தொடங்கப்படவில்லை. நடிகர்கள், நடிகைகள் பலரும் சமூக வலைத்தளத்தில் ஆர்வம் காண்பித்து வருகின்றனர். இந்த நிலையில் ரஜினிகாந்த் மாஸ்க் அணிந்தபடி லம்போகினி காரை ஓட்டும் புகைப்படம் ஒன்று வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலானது.
மேலும் இந்த புகைப்படத்தை யார் எடுத்தது? அவர் எங்கே சென்று கொண்டிருக்கிறார்? அந்த காரில் யார் யார் இருந்தனர்? என்ற கேள்வி எழுந்தது. தற்போது அதற்கான விடையாக மீண்டும் ஒரு புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

தற்போது வெளியாகியுள்ள புதிய புகைப்படத்தில் ரஜினியுடன் அவரது இளைய மகள் செளந்தர்யா, அவரது கணவர் விசாகன் மற்றும் ஐஸ்வர்யாவின் குழந்தை ஆகியோர் உள்ளனர். மேலும் இந்த புகைப்படம் ரஜினியின் பண்ணை வீட்டில் எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
நடிகை வனிதா, பீட்டர் பால் என்பவரை 3-வது திருமணம் செய்து கொண்டதில் இருந்து பிரச்சனைகள் எழுந்து வருவதால் திடீர் முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
நடிகை வனிதா சமீபத்தில் பீட்டர் பால் என்பவரை 3-வது திருமணம் செய்து கொண்டதை நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் விமர்சித்தார். தனது சொந்த வாழ்க்கையில் தலையிட வேண்டாம் என்று வனிதா கண்டித்தார். இந்த தகராறு ஓய்ந்த நிலையில் இப்போது வனிதாவுக்கும் நடிகை கஸ்தூரிக்கும் இணைய தளத்தில் கடும் மோதல் ஏற்பட்டது. கஸ்தூரி வெளியிட்ட பதிவில், “லட்சுமி ராமகிருஷ்ணனை நினைக்கும்போது இதயத்தில் ரத்தம் கசிகிறது. வனிதாவின் செயல்பாடுகள் மோசமாக உள்ளது. இணையதள துஷ்பிரயோகம் செய்கிறார்” என்றார்.
இதற்கு பதில் அளித்த வனிதா, “எனது சொந்த வாழ்க்கையில் தலையிட முயன்றால் உங்கள் வாழ்க்கை பற்றி ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துவேன்” என்றார். இதற்கு பதிலடி கொடுத்த கஸ்தூரி, “எனக்கு வாழ்க்கையில் ஒரு அத்தியாயம் மட்டும்தான் உள்ளது என்பதை வனிதா உணர வேண்டும். எனது சொந்த வாழ்க்கையை பேசுவதில் பயனில்லை. உங்களைப்போல் சீசன் 1.2.3 போன்ற மெகா சீரியல் வாழ்க்கை எனக்கு இல்லை. நீங்கள் வாழ்க்கையில் தோல்வி அடைந்தவர். உங்களை பிரபலபடுத்த என்னை பயன்படுத்த வேண்டாம்”என்றார். இதையடுத்து வனிதா, “எனது டுவிட்டர் பக்கத்தில் இருந்து கஸ்தூரியை பிளாக் செய்கிறேன். காமெடி பீஸ்” என்றார். பயந்துட்டியா குமாரு என்று கஸ்தூரி பதில் கொடுத்தார். இவர்கள் மோதல் வலைத்தளத்தில் பரபரப்பானது.

இந்நிலையில், தற்போது வனிதா ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார். அதாவது, டுவிட்டரில் இருந்து அவர் திடீரென விலகியுள்ளார். வனிதாவின் டுவிட்டர் பக்கம் தற்போது காலியாக உள்ளது. வனிதாவின் இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம் என்பதும் தெரியவில்லை.
அறிமுக இயக்குனர் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் அருள்நிதி நடித்துள்ள படத்தின் தலைப்பை இயக்குனர் வெற்றிமாறன் வெளியிட்டுள்ளார்.
கே 13 படத்தை தொடர்ந்து அருள்நிதி, பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் படத்தில் நடித்து வந்தார். இப்படத்தை அறிமுக இயக்குனர் இன்னாசி பாண்டியன் இயக்கி உள்ளார். இவர், டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள், கோப்ரா போன்ற படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்துவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். யோகான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார். ராஜா சேதுபதி படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.

இன்று அருள்நிதியின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் தலைப்பை இயக்குனர் வெற்றிமாறன் வெளியிட்டுள்ளார். அதன்படி இப்படத்திற்கு டைரி என பெயரிட்டுள்ளனர். உண்மையில் நடந்த கதையில் கொஞ்சம் கற்பனை கலந்து டைரி படம் உருவாகியுள்ளது. படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. கொரோனா லாக்டவுன் முடிந்ததும் இப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் அருள்நிதி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள டைரி படத்தின் முன்னோட்டம்.
பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் உருவாகி வரும் படம் டைரி. அருள்நிதி ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் இன்னாசி பாண்டியன் இயக்கி உள்ளார். இவர், டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள், கோப்ரா போன்ற படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்துவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.
உண்மையில் நடந்த கதையில் கொஞ்சம் கற்பனை கலந்து டைரி படம் உருவாகியுள்ளது. யோகான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார். ராஜா சேதுபதி படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். படப்பிடிப்பு முடிந்து வேலைகள் நடைபெற்று வருகிறது.
நடிகர் விக்ரம் விரைவில் தாத்தா ஆகப்போவதால் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் விக்ரமின் மகள் அக்ஷிதாவிற்கும், மறைந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் கொள்ளுப்பேரன் மனு ரஞ்சித்துக்கும், கடந்த 2017-ம் ஆண்டு கருணாநிதி தலைமையில் கோபாலபுரம் இல்லத்தில் திருமணம் நடந்தது.
இந்நிலையில் அக்ஷிதா கர்ப்பமாக இருக்கும் தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக லாக்டவுன் போடப்பட்டு இருப்பதால் இருவீட்டார் மட்டும் கலந்து கொள்ளும் வகையில் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்களாம். விக்ரம் விரைவில் தாத்தா ஆகப்போகும் செய்தி அறிந்த ரசிகர்கள், அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

விக்ரம் தற்போது அஜய்ஞானமுத்து இயக்கி வரும் ‘கோப்ரா’, கவுதம் மேனன் இயக்கும் ‘துருவ நட்சத்திரம்’, மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ள ‘சீயான் 60’ படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் விக்ரம் மகன் துருவ்வும் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் 4-வது சீசன் எப்போது தொடங்கும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
வெளிநாட்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வந்த ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி கடந்த சில ஆண்டுகளாக இந்திய தொலைகாட்சிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தியில் இதுவரை 13 சீசன்கள் முடிந்துள்ளது. தமிழில் 3 சீசன்கள் முடிந்துள்ளது. இதனை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.
தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியும் இதுவரை 3 சீசன்கள் முடிந்துள்ளன. முதல் சீசனை ஜூனியர் என்.டி.ஆரும், 2-வது சீசனை நானியும் தொகுத்து வழங்கினார்கள். மூன்றாவது சீசனை மூத்த நடிகர் நாகர்ஜுனா தொகுத்து வழங்கினார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழ் பிக்பாஸின் 4-வது சீசன் நடக்குமா என்பது கேள்விக்குறி ஆகியுள்ளது.
இந்நிலையில், தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனுக்கான பணிகள் வேகமெடுத்துள்ளன. இந்த சீசனையும் நாகார்ஜுனா தொகுத்து வழங்க உள்ளார். கடந்த வருடம் ஜூலை மாதம் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி, இந்தாண்டு சற்று தாமதமாக ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம் வரும் அருண்விஜய், அடுத்ததாக இயக்குனர் ஹரி இயக்கும் படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் விஜயகுமாரின் மகனான அருண்குமார்,1995-ல் `முறை மாப்பிள்ளை' படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு கதாநாயகனாக அறிமுகமானார். பின்னர் ஏராளமான படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தாலும், முன்னணி நாயகனாக முடியாமல் போராடி வந்தார். இதையடுத்து தனது பெயரை அருண் விஜய் என்று மாற்றிக் கொண்டார்.
அதன்பிறகு அவருக்கு நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் அமைந்தன. குறிப்பாக, அஜித்குமாரின் `என்னை அறிந்தால்' படத்தில் வில்லனாக நடித்த பின், அவர் பக்கம் அதிர்ஷ்ட காற்று வீச ஆரம்பித்தது. தொடர்ந்து அவர் நடித்த `தடம்,' `குற்றம் 23,' `செக்கச் சிவந்த வானம்' ஆகிய படங்களின் வெற்றிகள், அருண் விஜய்க்கு திருப்பங்களாக அமைந்தன.

தற்போது அவர் கைவசம் அக்னி சிறகுகள், சினம், பாக்ஸர் போன்ற படங்களும், மிஷ்கின் மற்றும் அறிவழகன் ஆகியோரது பெயரிடப்படாத படம் என பிசியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், அவர் இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர் ஹரி, சூர்யாவின் அருவா படத்தை இயக்குவதாக இருந்தது. கொரோனா ஊரடங்குக்கு பின் சூர்யா, வெற்றிமாறன் படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளதால், அந்த இடைவெளியில் அருண் விஜய் படத்தை எடுத்து முடிக்க ஹரி ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
கனடாவில் பிலிம் மேக்கிங் படித்துவந்த நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் ஒருவழியாக நாடு திரும்பி உள்ளார்.
நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் கனடாவில் பிலிம் மேக்கிங் படித்து வந்தார். கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் லாக்டவுன் போடப்பட்டதால், தாயகம் திரும்ப முடியாமல் சஞ்சய் கனடாவிலேயே சிக்கி தவித்தார். மகன் தனியே வெளிநாட்டில் இருப்பதால் விஜய் குடும்பமே மிகுந்த வருத்தத்தில் உள்ளதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், விஜய்யின் மகன் சஞ்சய், ஒரு வழியாக நாடு திரும்பிவிட்டார். விமானம் மூலம் சென்னைக்கு வந்த சஞ்சய், நட்சத்திர ஹோட்டலுக்கு சென்று தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்ட பின்னர் நேற்று முன்தினம் தன் பெற்றோரை பார்க்கச் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது. மகன் நாடு திரும்பியதால் விஜய் மற்றும் அவரது குடும்பத்தினர் உற்சாகம் அடைத்துள்ளனர்.
ஊரடங்கில் தளர்வு ஏற்பட்டிருக்கும் நிலையில் நடிகர் ரஜினிகாந்த் லம்போகினி காரில் வலம் வந்திருக்கிறார்.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் சினிமா படப்பிடிப்புகள் இன்னும் தொடங்கப்படவில்லை. நடிகர்கள் நடிகைகள் பலரும் சமூக வலைத்தளத்தில் ஆர்வம் காண்பித்து வருகின்றனர். வீட்டில் இருக்கும் நடிகர் நடிகைகள் புகைப்படங்கள் வெளியாகி வைரலானது.


இந்த நிலையில் தற்போது ரஜினிகாந்த் தனது காரில் அமர்ந்து, தானே அதை ஓட்டுவது போன்ற ஒரு புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் மாஸ்க் அணிந்தபடி லம்போகினி காரை ஓட்டுகிறார் ரஜினி.. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
பிரபல நடன இயக்குனர் ஸ்ரீதர் மாஸ்டர் விஜய்யை தொடர்ந்து விஜய்சேதுபதிக்கு பாடலை சமர்ப்பணம் செய்ய இருக்கிறார்.
தமிழ் சினிமா டான்ஸ் மாஸ்டர்களில் முக்கியமானவர் ஸ்ரீதர் மாஸ்டர். தனித்துவம் கொண்ட அவரது நடன அசைவுகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் விஜய்க்கு "ரசிகனின் ரசிகன்" என்ற ஆல்பம் ஒன்றை சமர்ப்பணம் செய்திருந்தார். அந்த ஆல்பம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதைத் தொடர்ந்து தற்போது நடிகர் விஜய் சேதுபதிக்கு "அண்ணே வெயிட்டு வெயிட்டு" என்ற ஆல்பம் பாடலைச் சமர்ப்பணம் செய்யத் திட்டமிட்டுள்ளார் ஸ்ரீதர் மாஸ்டர்.






