என் மலர்
சினிமா செய்திகள்
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகை கீர்த்தி சுரேஷின் ஓணம் கொண்டாட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
நாடு முழுவதும் ஓணம் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. கேரளத்து பெண்ணான நடிகை கீர்த்தி சுரேஷும் ஓணம் பண்டிகையை தனது குடும்பத்தினருடன் கொண்டாடினார். மேலும் அவர் ஓணம் கொண்டாட்ட புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

'இது என்ன மாயம்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ், விஜய், சூர்யா, விக்ரம் ஆகியோரின் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார். நிறைய கமர்சியல் படங்களில் நடித்த இவருக்கு, 'மகாநடி' படம் மிகப் பெரிய பெயரைப் பெற்றுக்கொடுத்தது. இப்படத்திற்காக இவர் தேசிய விருதும் பெற்றார்.

தற்போது சிவா-ரஜினி கூட்டணியில் உருவாகும் ‘அண்ணாத்த’ படத்தில் நடிக்கிறார். இதுதவிற தெலுங்கில் 3 படங்களையும், மலையாளத்தில் ஒரு படமும் கைவசம் வைத்துள்ளார்.
விஜய்யின் மாஸ்டர் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் அடுத்த படத்தில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
மாநகரம், கைதி படத்தை அடுத்து விஜய் நடிப்பில் மாஸ்டர் படத்தை இயக்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்தப் படத்தை அடுத்து ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் படத்தை லோகேஷ் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாகவும், ரஜினிகாந்த் நடிக்கும் கடைசிப் படமாக இது இருக்கும் என்றெல்லாம் செய்திகள் வெளியானது.

இந்நிலையில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் நடிக்கும் படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் கமல் முதலில் நடிக்க இருப்பதாகவும், அதன் பின்னர் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் கமல்ஹாசன் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இரண்டு படங்களை இயக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
சூரரைப் போற்று திரைப்படத்தின் வருமானத்தில் மாணவர்களுக்காக ரூபாய் 2.5 கோடி ஒதுக்கி இருக்கிறார் சூர்யா.
சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படம் வரும் அக்டோபர் 30ஆம் தேதி ஓடிடியில் வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்தின் மூலம் கிடைத்த வருவாயில் ரூ.5 கோடி நன்கொடையாக கொடுக்கவிருப்பதாக சூர்யா அறிவித்திருந்தார். அதில் ரூ.1.5 கோடி ஏற்கனவே திரையுலகினர்களுக்கு கொடுத்துவிட்டார்.

இந்த நிலையில் தற்போது ரூ.2.5 கோடி மாணவர்களின் கல்விக்காக ஒதுக்கியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அனைவருக்கும் வணக்கம். 'ஈதல் இசைபட வாழ்தல்' என்பதே தமிழர் வாழ்க்கை நெறி. நாம் உண்ணும்போது அருகில் இருப்பவர்களுக்கு ஒரு 'கைப்பிடி' அளவேனும் இருப்பதைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிறது திருமந்திரம்.
கடுமையாக உழைத்து முன்னேறிய நிலையில் இருந்தவர்கள்கூட, திடீரென வாழ்வாதாரம் இழந்துள்ளனர். ஒவ்வொரு குடும்பமும் அடிப்படைத் தேவைகளுக்கே சிரமப்படும் நிலையில், மாணவர்களின் கல்விக்குப் பெரிய நெருக்கடி ஏற்பட்டிருப்பதை உணர முடிகிறது. பொதுமக்கள், 'திரைத்துறையினர், 'கொரானா தொற்றிலிருந்து' மக்களை பாதுகாக்க செயல்பட்டவர்கள் ஆகியோருக்கு 'சூரரைப் போற்று திரைப்படத்தின் விற்பனை தொகையிலிருந்து ஐந்து கோடி ரூபாய் பகிர்ந்தளிப்பதாக அறிவித்திருந்தோம்.
அதில் பொதுமக்கள் மற்றும் தன்னலமின்றி 'கொரானா தொற்று பாதித்தவர்களுக்கு பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், மற்ற மருத்துவதுறை பணியாளர்கள் மேலும் பொதுநல சிந்தனையுடன் கொரோனா பணியில் களத்தில் நின்று பணியாற்றிய காவல்துறையினர், பத்திரிகையாளர்கள், தூய்மை பணியாளர்கள், மயான பணியாளர்கள் ஆகியோரின் குடும்பத்தில் கல்வி பயில்பவர்களுக்கு 2.5 கோடி ரூபாயை கல்வி ஊக்கத் தொகையாக வழங்க முடிவு செய்திருக்கறோம்.
ஐந்து கோடி ரூபாயில் 2.5 கோடி ரூபாய் எனது திரைக்குடும்பத்தை சார்ந்தவர்களுக்கு சிறுபங்களிப்பாக வழங்க தீர்மானிக்கப்பட்டது. அதில் 1.5 கோடி ரூபாய் திரைப்படத் தொழிலாளார்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் சங்க அமைப்பைச் சேர்ந்தவர்களிடம் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டது. மேலே குறிப்பிட்ட அமைப்புகளின் உறுப்பினர்கள் அல்லாத, திரையுலகைச் சார்ந்த அன்புக்குரிய விநியோகஸ்தர்கள், மீடியேட்டர்கள், மக்கள் தொடர்பாளர்கள் திரையரங்க தொழிலாளர்கள் மற்றும் எனது நற்பணி இயக்கத்தை சார்ந்தவர்களுக்கு 1 கோடி ரூபாய் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவர்களின் குடும்பத்தில் பள்ளி/கல்லூரியில் பயில்கிறவர்களுக்குப் பத்தாயிரம் ரூபாய் கல்வி ஊக்கத்தொகையாக வழங்கப்படும். கல்வியே ஆயுதம்; கல்வியே கேடயம்' என்கிற அடிப்படை கொள்கையோடு இயங்கும் அகரம் ஃபவுண்டேஷன் அமைப்பின் வழிகாட்டுதலோடு, கல்வி ஊக்கத்தொகை பகிர்ந்தளிக்கப்படும். அதிக பொருளாதார தேவையுள்ள குடும்பத்திலிருந்து ஒரு மாணவ/மாணவிக்கு மட்டும், கல்வி கட்டணமாக அதிகபட்சம் பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படும். சான்றுகளின் அடிப்படையில் அது நேரடியாக மாணவர்கள் படிக்கும் கல்வி நிறுவனத்திற்கே அனுப்பி வைக்கப்படும்.
அகரம் வடிவமைத்துள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களின் நகல்களை இணைத்து, அஞ்சல் மூலமாக அகரம் ஃபவுண்டேஷன் முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்ப படிவத்தில் கூறியுள்ள வழிமுறைகள் மற்றும் விதிமுறைகளைப் பின்பற்றி உதவித் தொகைகான தேர்வு அமையும். இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கடலளவு தேவைகள் மிகுந்துள்ள தருணத்தில் இந்தப் பங்களிப்பு சிறுதுளிதான். இருப்பினும் 'இது சகோதர உணர்வுடன் கூடிய அன்பின் வெளிப்பாடாக அமையும் என நம்புறேன். இந்தப் பேரிடர் காலத்தில் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மாணவர்கள் கல்வியைப் பாதியில் கைவிடுவதாக யுனஸ்கோ அறிவித்திருக்கறது. இந்தத் தருணத்தில் பொருளாதார நெருக்கடியால் கல்வியைத் தொடர சிரமப்படும் மாணவர்களுக்கு அனைவரும் துணைநிற்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
முதலில் அம்மா... நேற்று அப்பா.. என்று நடிகை நிலா என்கிற மீரா சோப்ரா அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பலர் கொரோனாவில் இருந்து வெகு விரைவில் மீள்வது மகிழ்ச்சியளித்தாலும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் அன்பே ஆருயிரே உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்துள்ள நடிகை நிலா என்கிற மீரா சோப்ரா தனது சமூக வலைத்தள பக்கத்தில் உருக்கமான பதிவை எழுதியுள்ளார். அதில், என் நண்பர் ஒருவர் கொரோனாவினால் தனது பெற்றோரை இழந்து விட்டார்.

முதலில் அம்மா, நேற்று அப்பா. சில விஷயங்களுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது பாதுகாப்பானது அல்ல. தேவை இருந்தால் மட்டுமே வெளியே செல்லுங்கள். மாஸ்க் அணிந்து கொள்ளுங்கள்'' என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.
எஸ்.பி.பி.யின் நுரையீரலில் முன்னேற்றம் அடைந்து, சுவாசமும் சற்று சீராகியுள்ளது என்று அவரது மகன் எஸ்பிபி சரண் தெரிவித்துள்ளார்.
பிரபல பாடகர் எஸ்பிபிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடல்நிலை ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது.
தினமும் அவருடைய உடல்நிலை குறித்து எஸ்.பி.பி.யின் மகன் சரண் வீடியோ வெளியிட்டு வருகிறார். அதன்படி இன்று (ஆகஸ்ட் 31) எஸ்பிபி சரண் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:
முதலில், என் அம்மா நலமாக இருக்கிறார். நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார். நன்றாகத் தேறி வருகிறார். பலர் என் அம்மாவைப் பற்றி விசாரித்ததால் இதைச் சொல்கிறேன். வீட்டுக்குத் திரும்பிவிட்டார். நேற்றும் இன்றும் அப்பாவைப் பார்க்க மருத்துவமனை சென்றிருந்தேன்.
அப்பாவின் ஆரோக்கியம் குறித்து ஒவ்வொரு நாளும் மருத்துவர்கள் என்னிடம் பகிர்ந்து வருகின்றனர். அப்பாவின் நுரையீரல் எக்ஸ்ரேவை என்னிடம் காட்டினார்கள். நல்ல முன்னேற்றம் தெரிகிறது. அப்பா பிஸியோதெரபி சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். நீண்ட நாட்கள் படுக்கையிலேயே இருந்ததால் தசைகள் வலுப் பெற நிறைய உடற்பயிற்சி செய்து வருகிறார். அவரது சுவாசமும் சற்று சீராகியுள்ளது. எனவே அவரது நிலையில் நல்ல முன்னேற்றத்தைப் பார்க்க முடிகிறது.
உங்கள் பிரார்த்தனைகளுடன் அப்பா இதிலிருந்து விரைவில் மீண்டு வருவார், வீடு திரும்புவார் என்று நான் நம்புகிறேன். மீண்டும் உங்கள் அனைவரின் அன்பு, அக்கறை, பிரார்த்தனைகளுக்கு நன்றி. உங்களுக்கு நாங்கள் கடன் பட்டிருக்கிறோம்" இவ்வாறு எஸ்பிபி சரண் தெரிவித்துள்ளார்.
முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் ஓணம் பண்டிகையை கொண்டாடி இருக்கிறார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இவர்கள் இருவரும் அவ்வப்போது சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். கடந்த சில மாதங்களாக கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அவர்கள் இருவரும் வீட்டிலேயே முடங்கி இருந்தனர்.

இந்நிலையில், அவர்கள் இருவரும் தற்போது ஓணம் பண்டிகையை கொண்டாட கேரளாவுக்கு சென்றுள்ளனர். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கேரளாவுக்கு சென்றனர்.

தற்போது ஓணம் பண்டிகையை கொண்டாடியதாக விக்னேஷ் சிவன் தனது வலைத்தளத்தில்புகைப்படங்களை பதிவு செய்து இருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் சல்மான்கான், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்தி உள்ளார்.
தொலைக்காட்சிகளில் தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. தமிழ், தெலுங்கில் 3 சீசன்கள் முடிந்து 4-வது சீசன் தொடங்க உள்ளது. இவற்றை முறையே கமல்ஹாசன், நாகார்ஜுனா தொகுத்து வழங்க இருக்கிறார்கள். இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 14-வது சீசனை நடிகர் சல்மான்கான் தொகுத்து வழங்குகிறார். அவருக்கு ரூ.250 கோடி சம்பளம் பேசி உள்ளனர்.
ஒரு நாள் படப்பிடிப்புக்கு மட்டும் அவருக்கு சம்பளமாக ரூ.20 கோடியே 50 லட்சம் நிர்ணயித்து உள்ளார். ஒரு நாள் படப்பிடிப்பில் 2 எபிசோடுகளை எடுக்க திட்டமிட்டு உள்ளனர். பிக்பாஸ் 4-வது சீசன் முதல் 6-வது சீசன் வரை ஒரு நாள் சம்பளமாக ரூ.2 கோடியே 50 லட்சம் வாங்கினார். 7-வது சீசனில் இது ரூ.5 கோடி ஆனது. 2015-ல் எட்டு கோடியாகவும் பின்னர் ரூ.11 கோடியாகவும் உயர்த்தினார்.

தற்போது ஒரு நாள் சம்பளம் ரூ.20 கோடியே 50 லட்சமாக உயர்த்தி உள்ளார். கொரோனா ஊரடங்கில் திரையுலகம் முடங்கிய நிலையிலும் சல்மான்கான் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் சம்பாதிக்க ஆரம்பித்துள்ளார். இந்தியில் ஒரு படத்தில் நடிக்க சல்மான்கான் ரூ.40 கோடியில் இருந்து ரூ.50 கோடி வரை வாங்குகிறார். படத்தின் வசூலிலும் அவருக்கு பங்கு கொடுக்கப்படுகிறது.
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையான பிரியா பவானி சங்கர், அடுத்ததாக பிரபல நடிகையின் கணவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
`மேயாத மான்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். பின்னர் இவர் நடித்த கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் போன்ற படங்களும் நல்ல வரவேற்பை பெற்றன. இவர் தற்போது, கமல்-ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதேபோல் அதர்வாவுடன் குருதி ஆட்டம், எஸ்.ஜே.சூர்யாவுடன் பொம்மை, ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக ஒரு படத்திலும் நடிக்கிறார்.
இதுதவிர ஸ்ரீகாந்த் ரெட்டி என்பவர் இயக்கும் ‘அகம் பிரம்மாஸ்மி’ படம் மூலம் தெலுங்கில் அறிமுகமாகி உள்ளார். இப்படம் இன்னும் ரிலீசாகவில்லை.

இந்நிலையில், அவருக்கு மேலும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க வாய்ப்பு தேடி வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி தெலுங்கில் விக்ரம் குமார் இயக்கும் தேங்யூ, எனும் படத்தில் பிரியா பவானி சங்கரை நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தில் சமந்தாவின் கணவரான நடிகர் நாகசைதன்யா ஹீரோவாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உடல்நலக்குறைவால் காலமான பிரபல தொழிலதிபரும், எம்.பி.யுமான வசந்தகுமார், குறித்து அவரது மகன் டுவிட்டரில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
பிரபல தொழிலதிபரும், கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான வசந்தகுமார், கடந்த சில தினங்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். அவரது மறைவுக்கு அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்தனர். வசந்தகுமார் எம்.பி.யின் உடல் அவரது சொந்த ஊரான அகஸ்தீஸ்வரத்தில் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், தனது தந்தை குணமாக வேண்டி பிரார்த்தனை செய்தவர்களுக்கும், தனது தந்தை இறந்தவுடன் இரங்கல் தெரிவித்தவர்களுக்கும் நடிகரும் வசந்தகுமாரின் மகனுமான விஜய் வசந்த் டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது: “1970 ஆம் ஆண்டு எனது தந்தை வெறும் கனவுகளுடன் சென்னை வந்தார். 50 ஆண்டுகளுக்கு பின் தன் கனவுகளை எல்லாம் நிஐமாக்கிய ஒரு உன்னத மனிதராக அவரை அவரின் சொந்த ஊருக்கு கொண்டு வந்து சேர்த்தேன். தாங்கள் என் தந்தையை நினைவு கூர்ந்ததர்க்கு நன்றி. மிஸ் யூ அப்பா”. என பதிவிட்டுள்ளார்.
கொரோனா காரணமாக பண்டிகைகளை கொண்டாட முடியாதது வருத்தமளிப்பதாக நடிகை பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார்.
தமிழில் முகமூடி படத்தில் கதாநாயகியாக அறிமுகமான பூஜாஹெக்டே தெலுங்கு, இந்தி படங்களில் நடிக்கிறார். கொரோனா ஊரடங்கு அனுபவங்கள் பற்றி அவர் கூறியதாவது: “சினிமாகாரர்கள் என்றாலே படப்பிடிப்பில் பிஸியாக இருப்போம். ஆனால் இப்போது எல்லோருமே வீட்டில்தான் இருக்கிறோம். நான் மும்பையில் பிறந்து வளர்ந்தாலும் எங்கள் வீட்டில் தென்னிந்திய சூழலைத்தான் பார்க்க முடியும். தென்னிந்தியாவில் நடக்கும் எல்லா பண்டிகைகளையும் ஆர்ப்பாட்டமாக கொண்டாடுவோம்.
பொங்கல் என்றாலே எனது அம்மா செய்யும் லட்டுதான் நினைவுக்கு வரும். காத்தாடி பறக்க விடுவோம். தசரா என்றால் எங்கள் வீட்டில் கொலு இருக்கும். பஜனை நடத்துவோம். நான் நடிகையான பிறகும் கூட அந்த ஒன்பது நாட்கள் பஜனைக்கு வந்து உட்கார்ந்து விடுவேன்.

இப்போது கொரோனாவால் நண்பர்கள், உறவினர்களுடன் சேர்ந்து பண்டிகைகளை உற்சாகமாக கொண்டாட முடியவில்லை. விநாயகர் சதுர்த்தியை விமரிசையாக கொண்டாட முடியவில்லை. கொரோனா முடியும் முன்பு எல்லா பண்டிகைகளும் வீணாக போய் விடும் என்ற வருத்தம் இருக்கிறது.” இவ்வாறு அவர் கூறினார்.
நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் தனி விமானத்தில் சென்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இவர்கள் இருவரும் அவ்வப்போது சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். கடந்த சில மாதங்களாக கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அவர்கள் இருவரும் வீட்டிலேயே முடங்கி இருந்தனர்.
இந்நிலையில், அவர்கள் இருவரும் தற்போது ஓணம் பண்டிகையை கொண்டாட கேரளாவுக்கு சென்றுள்ளனர். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கேரளாவுக்கு சென்றுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

கேரளாவில் ஓணம் பண்டிகையை கொண்டாடி விட்டு இருவரும் அடுத்த வாரம் சென்னை திரும்புவார்கள் என்றும், அதன்பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடிக்க உள்ள ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் கூறப்படுகிறது.
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் ஓடிடியில் ரிலீசாக உள்ளதாக தகவல் பரவி வருகிறது.
கொரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் 5 மாதங்களுக்கு மேலாக மூடிக்கிடக்கின்றன. இதனால் புதிய படங்கள் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. ஏற்கனவே பொன்மகள் வந்தாள், பெண்குயின், டேனி, லாக்கப் உள்ளிட்ட படங்கள் ஓடிடியில் வந்தன. அடுத்ததாக சூர்யாவின் சூரரைப் போற்று வருகிற அக்டோபர் மாதம் 30-ந்தேதி ஓடிடியில் வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர்.
மேலும் சில படங்கள் ஓடிடியில் வெளியாக உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. அந்த வகையில், நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மூக்குத்தி அம்மன்’ படமும் ஓடிடியில் ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது. படக்குழு தரப்பில் இதுகுறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆனால் ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகி உள்ள இப்படத்திற்காக நயன்தாரா, 48 நாட்கள் விரதம் இருந்து நடித்துள்ளார். முழுக்கதையும் அவர் மீது பயணிப்பது போல திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ள ஆர்.ஜே.பாலாஜி, இயக்குனர் என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கி உள்ளார். வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே.கணேஷ் இப்படத்தை தயாரித்துள்ளார்.






