என் மலர்
சினிமா செய்திகள்
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் கீர்த்தி சுரேஷ், புதிய அவதாரம் எடுக்க உள்ளாராம்.
நடிகை மேனகா, தயாரிப்பாளர் சுரேஷ் ஆகியோரின் மகளான கீர்த்தி சுரேஷ், 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். குறுகிய காலத்திலேயே விஜய், சூர்யா, விக்ரம் ஆகியோரின் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார். நிறைய கமர்சியல் படங்களில் நடித்த இவருக்கு, 'மகாநடி' படம் மிகப் பெரிய பெயரைப் பெற்றுக்கொடுத்தது. இப்படத்திற்காக இவர் தேசிய விருதும் பெற்றார்.

இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ், தயாரிப்பாளராக களமிறங்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. வெப் தொடர் ஒன்றைத் தயாரிக்க கீர்த்தி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த வெப் தொடரின் கதையைக் கேட்டதும் அவருக்குப் பிடித்துவிட்டதாம். அதனால், அதை அவரே தயாரிக்க முடிவெடுத்துள்ளாராம். அதில் அவரே நடிப்பாரா என்பது பின்னர் தான் தெரியவரும். விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில், கவிஞர் வைரமுத்து அதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
தமிழக அரசு ஊரடங்கை தளர்த்தியதன் மூலம் 5 மாதங்களுக்கு பிறகு நேற்று மீண்டும் பஸ்போக்குவரத்து தொடங்கியது. அலுவலகங்கள் செல்லும் ஊழியர்களால் சாலைகளில் கார், இருசக்கர வாகன போக்குவரத்து நெரிசல் அதிகம் இருந்தன. வணிக வளாகங்கள், வழிபாட்டு தலங்களிலும் மக்கள் குவிந்தனர்.
இ-பாஸ் ரத்தினால் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வோர் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது. இது ஒரு புறம் மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும் இந்த தளர்வினால் கொரோனா பரவுமோ என்ற பீதியும் நிலவுகிறது. அதிகம் பேர் முககவசம் அணியவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

இந்த நிலையில் ஊரடங்கு தளர்வு குறித்து கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் கவிதை வெளியிட்டுள்ளார். அதில், “ஊருக்கு வழங்கப்பட்ட ஊரடங்கின் தளர்வில் உயிர்க்கொல்லி நுழைந்து விடக்கூடாது. மீண்டும் இயங்கப்போகும் வாழ்வியல் வெளியில் கடும் கட்டுப்பாட்டைப் பெரிதும் கைக்கொள்வீர் பெருமக்களே. இது தீப்பிடித்த காடு. பறவைகளே பத்திரம்” என்று குறிப்பிட்டு உள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி, மீண்டும் பிரபல இயக்குனருடன் இரண்டாவது முறையாக இணைய இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் கார்த்தி. இவர் நடிப்பில் தற்போது சுல்தான் திரைப்படம் உருவாகியுள்ளது. ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். மேலும் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்திலும் கார்த்தி நடித்து வருகிறார்.

இந்நிலையில், இப்படத்தை அடுத்து முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் கார்த்தி ஏற்கனவே முத்தையா இயக்கத்தில் கொம்பன் படத்தில் நடித்துள்ளார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. இவர்கள் இணையும் படத்தின் முன்னணி பணிகள் தற்போது முழு வீச்சில் நடப்பதாக கூறப்படுகிறது.
விரைவில் தொடங்க இருக்கும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதற்காக பிரபல நடிகையிடம் அதிக தொகைக்கு பேச்சுவார்த்தை நடந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
வெளிநாட்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வந்த ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி கடந்த சில ஆண்டுகளாக இந்திய தொலைகாட்சிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தியில் இதுவரை 13 சீசன்கள் முடிந்துள்ளது.
தமிழில் 3 சீசன்கள் முடிந்துள்ளது. இதனை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழ் பிக்பாஸின் 4-வது சீசன் நடக்குமா என்பது கேள்விக்குறியாக இருந்தது. சமீபத்தில் இதன் புரமோ வெளியாகி பிக்பாஸ் 4 சீசன் விரைவில் தொடங்க இருப்பதாக உறுதி செய்யப்பட்டது.

இதில் பங்கு பெறும் போட்டியாளர்கள் யார் யார் விபரம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் 'இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்' பட கதாநாயகியான ஷில்பா மஞ்சுநாத் கலந்துக் கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதில் ஷில்பா மஞ்சுநாத் கலந்துக் கொள்வதற்கு சம்பளமாக ரூ.1 கோடி பேசியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் ஜெமினி, வில்லன், வின்னர் போன்ற படங்களில் நடித்த கவர்ச்சி நடிகை கிரண் கலந்துக் கொள்ள இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் பிரபல நடிகையாக இருக்கும் சாய் பல்லவியுடன் செல்பி எடுக்க மாணவர்கள், ரசிகர்கள் சூழ்ந்துக் கொண்டுள்ளனர்.
மலையாளத்தில் வெளியான பிரேமம் படம் மூலம் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் நடிகை சாய் பல்லவி. இவர் தமிழில் தனுஷுடன் மாரி 2, சூர்யாவுடன் என்.ஜி.கே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

இந்நிலையில் கல்லூரி ஒன்றிற்கு தேர்வு எழுத வந்துள்ளார் சாய் பல்லவி. அப்போது அங்கிருந்து சக தேர்வர்கள் அவரை கண்டுகொண்டு, செல்ஃபி எடுத்து கொண்டனர். சாய் பல்லவியுடன் மாணவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகை ரைசா, தற்போது காட்டுக்குள் தலைகீழாக தொங்கு புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் ரைசா. இவர் நடிப்பில் வெளியான பியார் பிரேமா காதல் என்ற திரைப்படம் ரசிகர்களிடையே அதிக வரவேற்பு பெற்று சூப்பர் ஹிட்டானது. தற்போது இவரது நடிப்பில் திரில்லர் படம் ஒன்று உருவாகி வருகிறது.
கார்த்திக் ராஜு இயக்கியுள்ள இப்படத்தில் ரைசாவுடன், ஹரீஷ் உத்தமன், பால சரவணன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். எமோசனலான த்ரில்லர் பாணியில் உருவாகி வரும் இப்படத்தை ராஜ்சேகர் வர்மா தயாரித்து வருகிறார்.

இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில் ரைசா காயங்களுடன் காட்டுக்குள் தலைகீழாக தொங்கும்படியாக உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்திற்கு தி சேஸ் (The Chase) என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
மெட்ராஸ் படம் மூலம் பிரபலமான நடிகர் கலையரசன், தற்போது ரஜினியின் காலா பட நடிகையுடன் கூட்டணி அமைத்திருக்கிறார்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான மெட்ராஸ் படம் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகர் கலையரசன். இவர் தற்போது குதிரைவால் என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் இவருடன் காலா படத்தில் புரட்சி பெண்ணாக நடித்த அஞ்சலி பாட்டீல் நடித்திருக்கிறார்.
வழக்கமான சினிமாவிலிருந்து முற்றிலும் மாறுபட்ட படமாக உருவாகியுள்ள இத்திரைப்படத்தை அறிமுக இயக்குநர்கள் மனோஜ் லியோனல் ஜாசன் - ஷ்யாம் சுந்தர் ஆகியோர் இயக்கியிருக்கிறார்கள். படத்துக்கான கதையை ராஜேஷ் எழுதியிருக்கிறார். பிரதீப் மற்றும் மார்டின் விசர் இசையமைத்திருக்கிறார்கள். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

யாழி பிலிம்ஸ் சார்பில் விக்னேஷ் சுந்தரேசன் தயாரித்திருக்கும் இப்படத்தை இப்படத்தை நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் பா.ரஞ்சித் வெளியிட இருக்கிறார்.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வரும் செல்வராகவன், நடிகர் தனுஷை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார்.
தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குநர்களுள் ஒருவர் செல்வராகவன். காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், என்.ஜி.கே என்று வித்தியாசமான கதையம்சம் உள்ள படங்களை கொடுத்தார்.

இந்நிலையில், இயக்குனர் செல்வராகவன், புதுப்பேட்டை படத்தின் காட்சி மற்றும் வசனத்தை வைத்து மீம் ஒன்றை பதிவிட்டு கொரோனாவுக்காக விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார். அந்த மீமில் புதுப்பேட்டையில் தனுஷ் கதாபாத்திரமான கொக்கி குமார் மாஸ்க் அணிந்தவாறு இருக்கிறார். மேலும் அதில், “இப்பல்லாம் உயிரோட இருக்கணும் குமாரு... அது மட்டும்தான் மேட்டரு” என குறிப்பிட்டுள்ளார். செல்வராகவனின் இந்த மீமை பார்த்த ரசிகர்கள், புதுப்பேட்டை 2 படத்தின் அப்டேட்டை கேட்டு வருகின்றனர்.
செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடித்த மன்னவன் வந்தானடி, எஸ்.ஜே.சூர்யா நடித்த நெஞ்சம் மறப்பதில்லை ஆகிய படங்கள் சில வருடங்களுக்கு முன்பே முடிந்தும் இன்னும் திரைக்கு வராமல் முடங்கி உள்ளன. இவர் அடுத்ததாக புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் பணியில் இறங்கி உள்ளார்.

இந்நிலையில், இயக்குனர் செல்வராகவன், புதுப்பேட்டை படத்தின் காட்சி மற்றும் வசனத்தை வைத்து மீம் ஒன்றை பதிவிட்டு கொரோனாவுக்காக விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார். அந்த மீமில் புதுப்பேட்டையில் தனுஷ் கதாபாத்திரமான கொக்கி குமார் மாஸ்க் அணிந்தவாறு இருக்கிறார். மேலும் அதில், “இப்பல்லாம் உயிரோட இருக்கணும் குமாரு... அது மட்டும்தான் மேட்டரு” என குறிப்பிட்டுள்ளார். செல்வராகவனின் இந்த மீமை பார்த்த ரசிகர்கள், புதுப்பேட்டை 2 படத்தின் அப்டேட்டை கேட்டு வருகின்றனர்.
மனோஜ் லியோனல் ஜாசன் மற்றும் ஷியாம் சுந்தர் இயக்கத்தில் கலையரசன் நடித்துள்ள ‘குதிரைவால்’ படத்தின் முன்னோட்டம்.
யாழி பிலிம்ஸ் சார்பில் விக்னேஷ் சுந்தரேசன் தயாரித்திருக்கும் படம் ‘குதிரைவால்’. கலையரசன் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக அஞ்சலி பாட்டீல் நடித்துள்ளார். முற்றிலும் மாறுபட்ட படமாக உருவாகியுள்ள இத்திரைப்படத்தை பா.ரஞ்சித் வெளியிட உள்ளார். அறிமுக இயக்குனர்கள் மனோஜ் லியோனல் ஜாசன் மற்றும் ஷியாம் சுந்தர் ஆகியோர் இணைந்து இயக்கி உள்ளனர். படத்துக்கான கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றை ஜி.ராஜேஷ் அமைத்திருக்கிறார். பிரதீப் குமார் மற்றும் மார்டின் விசர் இசையமைத்திருக்கிறார்கள்.

உளவியல், ஆள்மன கற்பனைகள் மற்றும் டைம் டிராவல் குறித்த ஒரு அறிவியல் புனைவுப்படமாகவும், வழக்கமான சினிமாவிலிருந்து மாறுபட்டு, மேஜிக்கல் ரியாலிச சினிமாவாக இது இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்திய சினிமாவில் இது ஒரு புதிய முயற்சியாகவும், பார்வையாளர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கும் விதமாகவும் இப்படத்தை உருவாக்கியுள்ளனர். படத்தின் பெரும்பாலான காட்சிகள் கிராபிக்ஸ் முறையில் உருவாக்கி உள்ளனர்.
பிரபல நகைச்சுவை நடிகையான வித்யூலேகாவிற்கு சஞ்சய் என்பவருடன் திருமணம் நிச்சயமாகி உள்ளது.
கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘நீதானே என் பொன்வசந்தம்’ படத்தின் மூலம் நகைச்சுவை நடிகையாக அறிமுகமானவர் வித்யூலேகா. இதையடுத்து தீயா வேலசெய்யனும் குமாரு, ஜில்லா, வீரம், புலி, வேதாளம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். இவர் தமிழைவிட தெலுங்கில் அதிக படங்களில் நடித்துள்ளார். இவர் பிரபல குணசித்திர நடிகர் மோகன் ராமனின் மகள் ஆவார்.

நடிகை வித்யூலேகா, இந்த ஊரடங்கு சமயத்தில் தனது உடல் எடையை வெகுவாக குறைத்து அனைவருக்கு அதிர்ச்சி அளித்தார். இந்நிலையில், நடிகை வித்யூலேகாவிற்கு, சஞ்சய் என்பவருடன் திருமணம் நிச்சயமாகி உள்ளது. இவர்களின் நிச்சயதார்த்தம் கடந்த மாதம் 26-ந் தேதி நடந்துள்ளது. இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
லட்சுமண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள ‘பூமி’ படம் குறித்த முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டு உள்ளது.
ஜெயம் ரவியின் 25-வது படம், ‘பூமி’. லட்சுமண் இயக்கி உள்ளார். இவர் ஏற்கனவே ஜெயம் ரவி நடித்த ‘ரோமியோ ஜூலியட்,’ ‘போகன்’ ஆகிய படங்களை இயக்கியவர். இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். சரண்யா பொன்வண்ணன், சதீஷ், தம்பி ராமையா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். இப்படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் சுஜாதா தயாரித்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தின் ‘தமிழனென்று சொல்லடா’ எனும் பாடலின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளனர். வருகிற செப்டம்பர் 10-ந் தேதி, நடிகர் ஜெயம் ரவியின் பிறந்தநாளன்று இப்பாடல் வெளியிடப்பட உள்ளது. இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சீரியல் நடிகைகளான சித்ரா மற்றும் ஷிவானி இருவரும் சமூக வலைதளத்தில் ஒருவரை ஒருவர் விமர்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பகல் நிலவு தொடரில் நடித்து பிரபலமான ஷிவானி சமூக வலைத்தளத்தில் தனது கவர்ச்சி படங்களை பகிர்ந்து வருகிறார். இதுபோல் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து பிரபலமான சித்ராவும் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார். அதை பார்த்த ரசிகர் ஒருவர் கவர்ச்சி புகைப்படங்களை எதிர்பார்க்கிறோம் என்றார்.
அதற்கு பதிலளித்த சித்ரா அதுபோன்ற படங்களை என்னிடம் எதிர்பார்க்க வேண்டாம். அப்படிப்பட்ட படங்கள் வேண்டும் என்றால் 2000-ல் பிறந்த அந்த நடிகையின் இன்ஸ்டாகிராம் பக்கத்துக்கு செல்லுங்கள் என்று பதிவிட்டார். அந்த பதிவுக்கு கீழே ஒரு ரசிகர் நடிகை ஷிவானியைத் தானே சொல்கிறீர்கள் என்று கேட்டார். இது சர்ச்சையானது. ஷிவானியும் சித்ரா மீது கோபமானார்.

சித்ராவுக்கு பதில் அளிக்கும் வகையில் “என்னை உனக்கு பிடிக்கவில்லை என்றாலும் தினமும் என்னை பார்க்கும் நீயும் எனது ரசிகைதான். மற்றவர்கள் பற்றி பேசும் முன் உன் முதுகை பார்” என்று பகிர்ந்து சித்ராவுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்தார். கெட்ட வார்த்தையிலும் திட்டினார். இதுபோல் இருவரின் ரசிகர்களும் பதிவுகளை வெளியிட்டு அவர்களின் மோதலை பெரிதாக்கினர்.






