என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் பாக்ஸ் ஆபிஸில் முதலிடம் பிடித்துள்ளதாக பிரபல தயாரிப்பாளர் கூறியுள்ளார்.
    தமிழ் சினிமாவின் மார்க்கெட் வருடத்திற்கு வருடம் அதிகமாகிக் கொண்டே செல்கின்றது. தயாரிப்பாளரும்,  விநியோகஸ்தருமான  ஜி. தனஞ்ஜெயன் இதுவரை தமிழ் சினிமாவில் வெளியான படங்களில் டாப் 10 படங்களின் வசூல் விவரத்தை பல முக்கிய திரைப்பட விநியோகஸ்தர்களிடம் கலந்து பேசி தகவலை சேகரித்து, அந்த தகவலை ஒருங்கிணைத்து டாப் 10 படங்களின் வசூல் விவரத்தை ஒரு வீடியோவாக வெளியிட்டுள்ளார். 

    அந்த வரிசையில் இதுவரை தமிழ் சினிமாவில் வெளியான படங்களில் டாப் 10 படங்களின் வசூல் விவரம்: 

    விஜய்யின் 'பிகில் ' திரைப்படம் கிட்டத்தட்ட ரூ.152 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்து முதல் இடத்தில் உள்ளது. பிரபாஸின் 'பாகுபலி2'  கிட்டத்தட்ட ரூ.150 கோடி வசூல் செய்து 2 வது இடத்தை பிடித்துள்ளது. அஜித்குமாரின் 'விஸ்வாசம்' கிட்டத்தட்ட ரூ.140 கோடி வசூலித்து 3 வது இடத்தில் உள்ளது.

    தனஞ்ஜெயன்

    ரஜினிகாந்தின் '2 .0 ' திரைப்படம் கிட்டத்தட்ட ரூ.135 கோடி வசூல் செய்து 4 வது இடத்திலும் , விஜயின் 'மெர்சல் ' கிட்டத்தட்ட 130 முதல் 132 கோடி வசூல் செய்து 5 வது இடத்திலும் , ரஜினிகாந்தின் 'எந்திரன் ' கிட்டத்தட்ட 130 கோடி வசூல் செய்து 6 வது இடத்திலும், விஜயின் 'சர்கார்' கிட்டத்தட்ட 125 கோடி வசூல் செய்து 7 வது இடத்திலும் உள்ளது.

    ரஜினிகாந்தின் 'பேட்ட ' கிட்டத்தட்ட 110 கோடி வசூல் செய்து 8 இடத்திலும் ,  'கபாலி ' திரைப்படம் கிட்டத்தட்ட 100 கோடி வசூலில் 9 வது இடத்திலும் , விஜய்யின் தெறி மற்றும் சீயான் விக்ரமின் 'ஐ'  ஆகிய இரண்டு படங்கள் கிட்டத்தட்ட ரூ 100  கோடி வசூல் செய்து 10 வது இடத்தில் உள்ளது.

    இந்த டாப் 10 படங்களில் நான்கு படங்கள் தளபதி விஜய்யின் படங்கள், மேலும் நான்கு படங்கள் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படங்கள் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் இடத்தை பிடித்திருக்கும் தளபதி விஜய்யை  தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் கிங் என இந்த தகவலை தளபதி விஜய் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
    பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை லாஸ்லியா, அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
    இலங்கையை சேர்ந்த லாஸ்லியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். அந்நிகழ்ச்சி மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவானார்கள். அந்நிகழ்ச்சிக்கு பின் அவருக்கு பட வாய்ப்பும் குவிந்து வருகிறது. அந்த வகையில் அவர் தற்போது ‘பிரெண்ட்ஷிப்’ என்ற திரைப்படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் நடிகர் ஆரி அர்ஜுனாவுடன் சேர்ந்து ஒரு படத்திலும் நடிக்கிறார். 

    படக்குழுவினருடன் லாஸ்லியா

    இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பு கூட இன்னும் முடியாத நிலையில், லாஸ்லியா நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி மரகத நாணயம், ஓ மை கடவுளே போன்ற படங்களை தயாரித்த ஆக்சஸ் பிலிம் பேக்ட்ரி நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். லாஸ்லியாவுக்கு ஜோடியாக அறிமுக நடிகர் பூரணேஷ் நடிக்க உள்ளார். திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தை ராஜா சரவணன் இயக்க உள்ளார்.
    டாப்சி நடிக்கும் படத்தில் விஜய் சேதுபதி கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், அவர் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
    தனுஷ் ஜோடியாக ஆடுகளம் படத்தில் அறிமுகமாகி முன்னணி இடத்துக்கு வந்தவர் டாப்சி. காஞ்சனா-2, வந்தான் வென்றான், கேம் ஓவர், ஆரம்பம், வை ராஜா வை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜ் வாழ்க்கை கதை, தமிழில் ஜெயம் ரவியுடன் ‘ஜன கண மன’ உள்ளிட்ட சில படங்களை கைவசம் வைத்துள்ளார்.

    சமீபத்தில் டாப்சி நடிக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகின. இந்நிலையில், நடிகை டாப்சி சமீபத்திய பேட்டியில் அதனை உறுதிப்படுத்தி உள்ளார். 

    விஜய் சேதுபதி, டாப்சி

    அவர் கூறியதாவது: விஜய் சேதுபதியுடன் புதிய படத்தில் நான் இணைந்து நடிப்பது உண்மை தான். ஓராண்டுக்கு முன்பே இந்த படத்தில் நடிக்க சம்மதம் சொல்லிவிட்டேன். நான் தான் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என இயக்குனர் பிடிவாதமாக இருக்கிறார். கதையும் எனக்கு பிடித்திருந்ததால் ஒப்புக்கொண்டேன். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் ஜெய்பூரில் தொடங்க உள்ளது. இது ஒரு முழுநீள காமெடி படம். எனவே ஒரேகட்டமாக 28 நாட்கள் படப்பிடிப்பை நடத்தி முடிக்க முடிவு செய்துள்ளோம், எனக் கூறியுள்ளார்.  

    பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும்  இந்தப் படத்தினை இயக்குனர் விஜய்யிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய தீபக் சுந்தர்ராஜன் இயக்கவுள்ளார். இவர், பிரபல நடிகரும், இயக்குனருமான சுந்தர்ராஜனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. 
    தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, கர்ப்பம் குறித்த கேள்விக்கு சமூக வலைத்தளத்தில் கிண்டலாக பதிலளித்துள்ளார்.
    நடிகை சமந்தா கோலிவுட், டோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை கடந்த 2017-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, அவ்வப்போது ரசிகர்களுடன் உரையாடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார். 

    அவ்வாறு உரையாடும் போது அவரிடம் பெரும்பாலானோர் கேட்கும் கேள்வி உங்களுக்கு எப்பொழுது குழந்தை பிறக்கும்? என்பது தான்.

    சமந்தா

    இதற்காக ஒவ்வொரு முறையும் பதில் சொல்லி சலித்துப்போன சமந்தா, தற்போது அளித்துள்ள பதில் என்னவென்று பார்ப்போம். "ஆமாம் நான் கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து கர்ப்பமாக தான் உள்ளேன். ஏனோ தெரியவில்லை இந்த குழந்தை வெளியே வரமாட்டேன் என்று அடம் பிடிக்கிறது, என கிண்டலாக பதிலளித்துள்ளார்.
    தமிழ் திரைப்பட நடப்பு சங்க தலைவராக டைரக்டர் பாரதிராஜா தேர்வு செய்யப்பட்டார்.
    சென்னை:

    தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக டைரக்டர் பாரதிராஜா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். பொதுச்செயலாளராக டி.சிவா, துணைத்தலைவர்களாக ஜி.தனஞ்செயன், எஸ்.ஆர்.பிரபு, பொருளாளராக டி.ஜி.தியாகராஜன், இணைச்செயலாளர்களாக எஸ்.எஸ்.லலித்குமார், சுரேஷ் காமாட்சி ஆகியோரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி கே.விஜயகுமார் அறிவித்தார்.

    எஸ்.நந்தகோபால், பி.மதன், சி.விஜயகுமார், ராஜசேகர கற்பூர சுந்தரபாண்டியன், ஜி.டில்லிபாபு, கார்த்திகேயன் சந்தானம், ஆர்.கண்ணன், சுதன் சுந்தரம், விஜய் ராகவேந்திரா, ஐ.பி.கார்த்திகேயன், நிதின் சத்யா, பி.ஜி.முத்தையா ஆகிய 12 பேர் பொதுக்குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    தேர்தல் பணி முழுமையாகவும், திருப்திகரமாகவும் செய்து முடிக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி விஜயகுமார் கூறியிருக்கிறார்.
    தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஜெனிலியா, கொரோனாவில் இருந்து மீண்டு இருப்பதாக கூறியிருக்கிறார்.
    இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பாலிவுட் பிரபலங்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்பு அவர்கள் குணமடைந்து வீடு திரும்பினர்.

    இந்நிலையில் நடிகை ஜெனிலியா கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டதாகவும், தற்போது அதிலிருந்து குணமடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியதாவது, ‘கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு எனக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த 21 நாட்களாக எனக்கு எந்த அறிகுறியும் இல்லை. கடவுளின் ஆசிர்வாதத்தால் இன்று எனக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் நெகட்டிவ் என்று வந்துள்ளது. இந்த நோய்த்தொற்றுக்கு எதிராக என்னுடைய போராட்டம் எளிமையானதாக இருந்ததற்கு கடவுளுக்கு நன்றி செலுத்துகிறேன்.

    ஜெனிலியா

    ஆனால், அதே நேரத்தில் இந்த 21 நாட்களும் தனிமையில் இருந்தது மிகவும் சவாலான ஒன்றாக இருந்தது என்பதை நான் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். வீடியோ கால்களும், டிஜிட்டல் உலகில் மூழ்குதலும் தனிமையின் கோரமுகத்தைத் தடுத்துவிட முடியாது. என்னுடைய குடும்பத்துடன் மீண்டும் இணைந்ததில் மகிழ்ச்சி.

    உங்கள் அன்புக்குரியவர்களுடன் இருங்கள். இதுதான் ஒருவருக்கு மிகவும் தேவையான உண்மையான பலம். விரைவாகப் பரிசோதனை செய்து, ஆரோக்கியமான உணவுகளை உண்டு, திடமாக இருப்பதே இந்தப் பேயை எதிர்த்துப் போராட ஒரு வழி’ என்று கூறியிருக்கிறார். 
    நடிகர் கமல் தொகுத்து வழங்க இருக்கும் பிக்பாஸ் 4வது சீசனில் பிரபல கவர்ச்சி நடிகை கலந்துக் கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    வெளிநாட்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வந்த ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி கடந்த சில ஆண்டுகளாக இந்திய தொலைகாட்சிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தியில் இதுவரை 13 சீசன்கள் முடிந்துள்ளது.

    தமிழில் 3 சீசன்கள் முடிந்துள்ளது. இதனை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழ் பிக்பாஸின் 4-வது சீசன் நடக்குமா என்பது கேள்விக்குறியாக இருந்தது. சமீபத்தில் இதன் புரமோ வெளியாகி பிக்பாஸ் 4 சீசன் விரைவில் தொடங்க இருப்பதாக உறுதி செய்யப்பட்டது.

    நடிகை கிரண்

    இதில் பங்கு பெறும் போட்டியாளர்கள் யார் யார் விபரம் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கும் நிலையில், பிரபல கவர்ச்சி நடிகை கிரண் பிக்பாஸ் 4 சீசனில் கலந்துக் கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

    நடிகை கிரண், தமிழில் ஜெமினி, வில்லன், வின்னர் உள்ளிட்ட படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு பிறகு கார்த்தி, பார்த்திபன் இருவரும் புதிய படம் மூலம் இணைய இருப்பதாக வந்த செய்திக்கு நடிகர் பார்த்திபன் பதில் அளித்துள்ளார்.
    பிரித்விராஜ் மற்றும் பிஜு மேனன் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளிவந்த மலையாள படம் அய்யப்பனும் கோஷியும். இந்தப் படம் மிகப் பெரிய ஹிட்டான நிலையில் அதனை தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் ரீமேக் செய்யும் முயற்சிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

    தமிழ் ரீமேக்கில் பார்த்திபன் நடிக்க வாய்ப்பு இருக்கிறது என ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர். இந்நிலையில சமீபத்தில் ஆர்.பார்த்திபன் தான் சிம்புவுடன் விரைவில் இணைய வாய்ப்பு உள்ளது என கூறி இருந்தார். அதனால் அய்யப்பனும் கோஷியும் தமிழ் ரீமேக்கில் சிம்பு மற்றும் பார்த்திபன் நடிக்க வாய்ப்பு உள்ளது என செய்தி பரவியது. 

    இந்நிலையில் ஆயிரத்தில் ஒருவன் படத்திற்குப் பிறகு கார்த்தி மற்றும் பார்த்திபன் இருவரும் அய்யப்பனும் கோஷியும் தமிழ் ரீமேக் படம் மூலம் இணைய இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. அது பற்றி பார்த்திபனே ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.

    பார்த்திபனின் பதிவு

    "இச்செய்தி நற்செய்தி ஆகலாம்! ஆனால் இதுவரை தயாரிப்பாளர் திரு கதிரேசனை தவிர அனைவரும் என்னிடம் பேசிவிட்டார்கள். எனவே..." என அவர் கூறி இருக்கிறார். அதனால் அவரை தயாரிப்பாளர் அணுகவே இல்லை என்பது உறுதி ஆகி உள்ளது. அதனால் அய்யப்பனும் கோஷியும் ரீமேக் பற்றி தயாரிப்பாளர் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டால் தான் உறுதியாகும்.
    பெங்களூரு நகரில் பிரபல நடிகர் ஒருவர் சைக்கிளில் பயணம் செய்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    கன்னட திரை உலகில் பிரபல கதாநாயகனாக இருப்பவர் புனித் ராஜ்குமார். இவர் மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மகன் ஆவார். புனித் ராஜ்குமாரை கர்நாடக மக்கள் செல்லமாக ‘அப்பு‘ என்று அழைத்து வருகிறார்கள். பல்வேறு வெற்றிப்படங்களை கொடுத்த புனித் ராஜ்குமார், கொரோனா ஊரடங்கால் வீட்டிலேயே இருந்து வந்தார். மேலும் அவர் அவ்வப்போது தன்னுடைய உடற்பயிற்சி வீடியோக்களையும், தான் செய்த வித்தியாசமான செயல்கள் தொடர்பான வீடியோக்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வந்தார்.

    அதன் தொடர்ச்சியாக தற்போது தான், பெங்களூரு நகரில் சைக்கிளில் வலம் வருவதை சமூக வலைத்தளங்களில் புனித் ராஜ்குமார் வெளியிட்டுள்ளார். அவர் பெங்களூரு சதாசிவாநகரில் உள்ள தெருக்களில் சைக்கிள் பயணம் மேற்கொள்கிறார். பின்னர் அவர் மேக்ரி சர்க்கிள், வசந்த் நகர், சாளுக்கியா சர்க்கிள், விதான சவுதா, சின்னசாமி கிரிக்கெட் மைதானம், எம்.ஜி. ரோடு ஆகிய பகுதிகளில் சைக்கிளில் வலம் வருகிறார்.

    புனித் ராஜ்குமார்

    அவர் சைக்கிள் பயணம் மேற்கொண்டபோது அவரை பொதுமக்கள் யாரும் கண்டுபிடிக்கவில்லை. அவர் சாதாரணமாக மக்களோடு மக்களாக பயணம் செய்கிறார். இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் ஏராளமானோர் பார்த்துள்ளனர். இதற்கு முன்பாக பெங்களூரு அருகே உள்ள நந்தி மலைக்கு புனித் ராஜ்குமார் சைக்கிள் பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. 

    சந்திராம்பா தியேட்டர்ஸ் சார்பாக முத்து கிருஷ்ணன் தயாரிப்பில் ஆர்.ஜே.பார்த்திபன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜதுரா’ படத்தின் முன்னோட்டம்.
    இந்தியாவில் முதல் முறையாக ரியல் டைம் வி.எப்.எக்ஸ் தொழில் நுட்பத்தில் விர்சுவல் புரொடக்‌ஷன் முறையில் ஜதுரா என்ற திரைப்படம் படமாக்கப்பட்டு கொண்டிருக்கிறது. 

    ‘ஜதுரா’ படத்தை சந்திராம்பா தியேட்டர்ஸ் சார்பாக முத்து கிருஷ்ணன் தயாரித்து வருகிறார். ஆர்.ஜே.பார்த்திபன் இப்படத்தை இயக்குகிறார். வி.எப்.எக்ஸ் இயக்குனராக பெமில் ரோஜர் பணியாற்றுகிறார். ரட்சகன் ஸ்ரீதர் இசையமைக்கும் இப்படத்திற்கு மணிகண்ட ராஜா ஒளிப்பதிவு செய்கிறார். பிரதீப் ஜெனிபர் எடிட்டிங் பணியை மேற்கொள்கிறார். மைக்கேல் ராஜ் கலை இயக்குனராக பணியாற்றுகிறார்.

    இந்திய சினிமாவில் முன்னணி நடிகர்கள், நடிகைகளாக இருப்பவர்கள் இப்படத்தில் நடிக்க இருக்கிறார்கள். இவர்களின் பட்டியல் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிட இருக்கிறார்கள். தற்போது இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரபல ஒளிப்பதிவாளரான பி.சி.ஸ்ரீராம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தி இருக்கிறார். 
    மாரி 2, தடம் படங்களில் நடித்து பிரபலமான வித்யா பிரதீப், தற்போது பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
    மாரி 2, தடம் படங்களில் நடித்து பிரபலமானவர் வித்யா பிரதீப். இவர் சின்னத்திரையில் நாயகி தொடரிலும் நடித்து வருகிறார். தற்போது இவர் ‘எக்கோ’ என்னும் படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் பிரபல நடிகர் ஸ்ரீகாந்த்துக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார்.

    இன்டுடிவ்  சினிமாஸ் சார்பில் டாக்டர் ராஜசேகர் மற்றும் ஹாரூன் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்கள். சைக்கலாஜிக்கல் திரில்லராக உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குனர் நவீன் கணேஷ் இயக்குகிறார். முக்கிய வேடத்தில் ஆசிஷ் வித்யார்த்தி நடிக்கிறார். தடம், தூள், கில்லி படங்களின் ஒளிப்பதிவாளர் கோபிநாத் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

    ஸ்ரீகாந்த்

    செப்டம்பர் இரண்டாம் வாரம் முதல் சென்னையில் படப்பிடிப்பு துவங்குகிறது. தற்போது இதன் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. விரைவில் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகிறது.

    கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமான வசந்தகுமார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நடிகர் ராதாரவி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
    கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக கடந்த 10-ந்தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வசந்தகுமார் நேற்று இரவு 6.56 மணியளவில் காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் பிரமுகர்கள், பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ராதாரவி இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அதில், அண்ணன் வசந்தகுமார் எம்பி காலமாகிவிட்டார் என்ற செய்திக் கேட்டு மிகவும் அதிர்ச்சியுற்றேன். அவர் மீண்டு வந்துவிட வேண்டும் என்று மனம் மிகவும் ஏங்கியது. எனது குடும்ப நண்பரை இழந்துவிட்டேன். ஒட்டுமொத்த தமிழகத்துக்கே அவருடைய இழப்பு ஈடுசெய்ய முடியாதது. ஏனென்றால், ஒவ்வொருவருடைய குடும்பத்திலும் கலந்துவிட்டவர் வசந்தகுமார். நம் வீட்டில் இருக்கும் ஏதோ ஒரு பொருள் அவரை நினைவுப்படுத்தும். அந்தளவுக்கு தமிழகத்தில் வியாபாரத்தில் கொடிகட்டி பறந்தார். மேலும் அவர் எனக்கு தயாரிப்பாளரும் கூட, அவர் தயாரித்த படத்தில் நான் நடித்துள்ளேன்.

    வசந்த குமார்

    தன் வாழ்நாளில் அரசியல், தனிப்பட்ட வாழ்க்கை, தொழில் என அனைத்தையும் சீரான முறையில் கையாண்டவர் வசந்தகுமார். எப்போது சென்றாலும் சிரித்த முகத்துடன் வரவேற்பவர். அவர் முகத்தில் சிரிப்பு இல்லாமல் நான் பார்த்த நாட்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்தளவுக்கு புன்னகையுடனே இருந்தவர். இப்போது அந்த சிரிப்பு இல்லாத முகத்தை நான் எப்படி காண்பேன்.

    பணிவானவர், நேர்மையானவர், தொலைநோக்கு பார்வை கொண்ட மனிதர் என வசந்தகுமாரைப் பற்றி வார்த்தைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். அவரது இழந்து வாடும் அவருடைய அண்ணன் குமரி ஆனந்தன், அண்ணன் மகளும் மேதகு தெலுங்கான மாநில ஆளுநருமான திருமதி தமிழிசை செளந்தரராஜன், மகன்கள் விஜய்வசந்த், வினோத்,
     மகள் தங்க மலர் மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் வசந்த் அண்ட் கோ ஊழியர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    ×