என் மலர்tooltip icon

    சினிமா

    புனித் ராஜ்குமார்
    X
    புனித் ராஜ்குமார்

    பெங்களூரு நகரில் சைக்கிள் பயணம் செய்த பிரபல நடிகர்

    பெங்களூரு நகரில் பிரபல நடிகர் ஒருவர் சைக்கிளில் பயணம் செய்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    கன்னட திரை உலகில் பிரபல கதாநாயகனாக இருப்பவர் புனித் ராஜ்குமார். இவர் மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மகன் ஆவார். புனித் ராஜ்குமாரை கர்நாடக மக்கள் செல்லமாக ‘அப்பு‘ என்று அழைத்து வருகிறார்கள். பல்வேறு வெற்றிப்படங்களை கொடுத்த புனித் ராஜ்குமார், கொரோனா ஊரடங்கால் வீட்டிலேயே இருந்து வந்தார். மேலும் அவர் அவ்வப்போது தன்னுடைய உடற்பயிற்சி வீடியோக்களையும், தான் செய்த வித்தியாசமான செயல்கள் தொடர்பான வீடியோக்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வந்தார்.

    அதன் தொடர்ச்சியாக தற்போது தான், பெங்களூரு நகரில் சைக்கிளில் வலம் வருவதை சமூக வலைத்தளங்களில் புனித் ராஜ்குமார் வெளியிட்டுள்ளார். அவர் பெங்களூரு சதாசிவாநகரில் உள்ள தெருக்களில் சைக்கிள் பயணம் மேற்கொள்கிறார். பின்னர் அவர் மேக்ரி சர்க்கிள், வசந்த் நகர், சாளுக்கியா சர்க்கிள், விதான சவுதா, சின்னசாமி கிரிக்கெட் மைதானம், எம்.ஜி. ரோடு ஆகிய பகுதிகளில் சைக்கிளில் வலம் வருகிறார்.

    புனித் ராஜ்குமார்

    அவர் சைக்கிள் பயணம் மேற்கொண்டபோது அவரை பொதுமக்கள் யாரும் கண்டுபிடிக்கவில்லை. அவர் சாதாரணமாக மக்களோடு மக்களாக பயணம் செய்கிறார். இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் ஏராளமானோர் பார்த்துள்ளனர். இதற்கு முன்பாக பெங்களூரு அருகே உள்ள நந்தி மலைக்கு புனித் ராஜ்குமார் சைக்கிள் பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. 

    Next Story
    ×