என் மலர்
சினிமா செய்திகள்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் இசையமைப்பாளராகவும் இருக்கும் ஜி.வி.பிரகாஷ், தனது ஹாலிவுட் ஆல்பத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் இசையமைப்பாளராகவும் இருப்பவர் ஜி.வி.பிரகாஷ். இவர் நடிப்பில் தற்போது பல படங்கள் உருவாகி வருகிறது. மேலும் இவருடைய இசையில் உருவாகி இருக்கும் சூரரைப் போற்று திரைப்படம் அக்டோபர் 30ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில், ஜி.வி.பிரகாஷ் ஹாலிவுட் ஆல்பம் ஒன்றை உருவாகியுள்ளார்.
'கோல்ட் நைட்ஸ்' என்ற பெயரில் உருவாகியுள்ள ஆல்பத்தில், 'ஹை அண்ட் ட்ரை' என்ற பாடல் விரைவில் வெளியாகவுள்ளது. இந்தப் பாடல் ஜிவி பிரகாஷ் மற்றும் கனடாவைச் சேர்ந்த ஜூலியா கர்தா இருவரின் கூட்டு முயற்சியில் உருவாகியுள்ளது. இரண்டு விதமான உலகத்தின் கலவை இந்தப் பாடல். ஹை அண்ட் ட்ரை, ஜிவி பிரகாஷின் முதல் ஆங்கிலத் தனிப்பாடல். ஜிவி மற்றும் ஜூலியா இருவரும் இணைந்து இசையமைத்திருக்கும் இந்தப் பாடலுக்கான வரிகளை ஜூலியா எழுதியுள்ளார். இந்தப் பாடலுக்கான ப்ரோக்ராமிங் மற்றும் அரேஞ்மென்ட் (Programming and Arrangement) இரண்டையும் ஜிவி செய்துள்ளார்.

அசல் இசை மற்றும் கூட்டு முயற்சியைக் காட்டும் இந்தப் பாடல்கள் மூலம் தனது தாய்நாட்டுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே பாலமாக செயல்பட விரும்புகிறார் ஜிவி பிரகாஷ். இந்த ஆல்பம் செப்டம்பர் 17ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவித்திருக்கிறார்.
ரசிகர்களிடையே பெரிதும் வரவேற்கப்பட்ட ஜெயம்ரவியின் தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் எப்போது என்ற கேள்விக்கு மோகன்ராஜா பதிலளித்துள்ளார்.
மோகன்ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, நயன்தாரா, ஹரிஷ் உத்தமன், கணேஷ் வெங்கட்ராமன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான படம் ‘தனி ஒருவன்’.

இதுவரை ஜெயம்ரவியின் படங்களில் தனி ஒருவனுக்கென தனி இடம் என்றும் உண்டு. ரசிகர்களின் ஆதரவைப் பெற்று விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்ற இந்தப் படம் வெளியாகி 5 ஆண்டுகளாகிறது.

இதற்கு பலரும் படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்து சமூகவலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்கள். அதில் நடிகர் ஹரிஷ் உத்தமன், ‘தனி ஒருவன்’ தனது திரைப்பயணத்தில் ஒரு மைல்கல் என்று குறிப்பிட்டு ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். மேலும் ‘தனி ஒருவன் 2’ குறித்த அப்டேட் கேட்டு மோகன்ராஜாவை டேக் செய்திருந்தார்.
ஹரிஷ் உத்தமனின் இந்த ட்வீட்டுக்கு பதிலளித்த இயக்குநர் மோகன்ராஜா, “தனி ஒருவன் இரண்டாம் பாகத்துக்கான அப்டேட் விரைவில் வெளியாகும்” என்று கூறியுள்ளார்.
உலக புகழ் பெற்ற பிளாக் பேந்தர் நடிகர் சாட்விக் போஸ்மேன் உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்துள்ளார்.
உலக மக்களை பெரிதும் கவர்ந்த படம் அவெஞ்சர்ஸ். இப்படம் வெளியாகும் போது, தமிழ் நடிகர்கள் படம் வெளியாகும் அளவிற்கு ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு இருக்கும்.

இதில் நடித்த நடிகர்கள் அனைவரும் உலக மக்களிடையே மிகவும் பிரபலம். இந்நிலையில் இப்படத்தில் பிளாக் பேந்தர் கதாபாத்திரத்தில் நடித்த சாட்விக் போஸ்மேன் மரணமடைந்துள்ளார். இது உலக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

43 வயதான சாட்விக் போஸ்மேன் கடந்த 4 வருடமாக புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். இந்நிலையில் சிகிச்சை பலன் இன்றி மரணமடைந்துள்ளார். இவருக்கு பலரும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் சூரரைப் போற்று திரைப்படம் ரிலீசுக்கு முன்பே வசூலில் சாதனை படைத்துள்ளது.
சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் சூரரைப் போற்று. இப்படம் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. இறுதிச்சுற்று படத்தின் இயக்குனரான சுதா கொங்கரா இப்படத்தை இயக்கியுள்ளார். திரையரங்குகளில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஓடிடி தளமான அமேசான் பிரைமில் அக்டோபர் 30-ம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இப்படம் ரிலீஸுக்கு முன்னரே ரூபாய் 100 கோடி வியாபாரம் ஆகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது சூர்யா ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதை சூர்யா ரசிகர்கள் ட்விட்டரில் #SooraraiPottruHits100crPB என்ற ஹாஸ்டேக்கை டிரெண்டாக்கி வருகிறார்கள்.
• #SooraraiPottru Bags 100 Core Pre Business 💥🔥 Euphoria surrounding this Film was Massive and BiG 😎 Slated for a Grand digital Release on Oct 30th On @PrimeVideoIN#SooraraiPottruHits100crPB
— Suriya Fans Club™ (@SuriyaFansClub) August 28, 2020
@Suriya_offl@rajsekarpandian@2D_ENTPVTLTDpic.twitter.com/r934tGM6eY
சூரரைப் போற்று திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும் தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
சந்திராம்பா தியேட்டர்ஸ் சார்பாக முத்து கிருஷ்ணன் தயாரிப்பில், ஆர்.ஜே.பார்த்திபன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜதுரா திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவை தாண்டி ஹாலிவுட் படங்களை அதிக பேர் ரசிக்க காரணம் விஷுவல் எபெக்ட்ஸ். சிறந்த விஷுவல் எபெக்ட்ஸுடன் கூடிய படங்கள் உலக மக்களை பெரிதும் கவர்ந்துள்ளது. இந்த தரத்தில் தற்போது இந்தியாவில் முதல் முறையாக முழுக்க முழுக்க விஷுவல் எபெக்ட்ஸுடன் கூடிய ‘ஜதுரா’ என்னும் சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படம் உருவாகி வருகிறது.
ஜதுரா என்கிற தமிழ் மொழி திரைப்படம், இந்தியாவில் முதல் முறையாக ரியல் டைம் வி.எப்.எக்ஸ் தொழில் நுட்பத்தில் விர்சுவல் புரொடக்ஷன் முறையில் படமாக்கப்பட்டு கொண்டிருக்கிறது. தொழில் நுட்பத்திலும், தரத்திலும், திரைத்துறையில் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கான விஷயமாகும். இது வருங்கால இந்திய சினிமாவின் முதல் முயற்சி.

‘ஜதுரா’ படத்தை சந்திராம்பா தியேட்டர்ஸ் சார்பாக முத்து கிருஷ்ணன் தயாரித்து வருகிறார். ஆர்.ஜே.பார்த்திபன் இப்படத்தை இயக்குகிறார். வி.எப்.எக்ஸ் இயக்குனராக பெமில் ரோஜர் பணியாற்றுகிறார். ரட்சகன் ஸ்ரீதர் இசையமைக்கும் இப்படத்திற்கு மணிகண்ட ராஜா ஒளிப்பதிவு செய்கிறார். பிரதீப் ஜெனிபர் எடிட்டிங் பணியை மேற்கொள்கிறார். மைக்கேல் ராஜ் கலை இயக்குனராக பணியாற்றுகிறார்.
இந்திய சினிமாவில் முன்னணி நடிகர்கள், நடிகைகளாக இருப்பவர்கள் இப்படத்தில் நடிக்க இருக்கிறார்கள். இவர்களின் பட்டியல் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிட இருக்கிறார்கள். தற்போது இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரபல ஒளிப்பதிவாளரான பி.சி.ஸ்ரீராம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தி இருக்கிறார். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு வரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சுய நினைவுடன் உள்ளார் என்று மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
பிரபல பாடகர் எஸ்.பி.பி. கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை மூலமாகவும், அவரது மகனுமான எஸ்.பி.பி. சரண் வீடியோ மூலமாகவும் வெளியிட்டு வருகிறார்கள்.
எஸ்.பி.பி.சரண் நேற்று வெளியிட்டுள்ள வீடியோவில், அப்பாவின் உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். தற்போது பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.

தற்போது மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் சுய நினைவுடன் உள்ளார். பிசியோதெரபி சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. வெண்டிலேட்டர் உதவியுடன் எக்மோ சிகிச்சையும் தொடர்கிறது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழில் பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் செல்வராகவன், நமக்குள் இருக்கும் விலங்கை கொல்ல முடியாது என்று கூறியிருக்கிறார்.
காதல் கொண்டேன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். தனுஷ் நடிப்பில் வெளியான இப்படம் சூப்பர் ஹிட்டானது. இப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் செல்வராகவன். இதையடுத்து, 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் ஆகிய படங்களை கொடுத்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி இருக்கிறார் செல்வராகவன்.

பொதுவாக அதிகம் சமூகவலைதளங்கள் பக்கம் தலைகாட்டாத செல்வராகவன் இந்த லாக்டவுன் காலகட்டத்தில் சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருப்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. தத்துவங்கள், கேள்வி பதில்களை பகிர்ந்து வரும் செல்வராகவன் தற்போது ‘நமக்குள் இருக்கும் விலங்கை கொல்ல முடியாது. ஆனால் அன்பாக பேசி நண்பனாய் பாவித்து "இந்த உலகத்தை துன்புறுத்தாதே" என்று சொன்னால் அது கேட்டுக் கொள்ளும்!’ என்று பதிவு செய்திருக்கிறார்.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், வலிமை படத்தின் தயாரிப்பாளருமான போனி கபூருக்கு நடிகர் அஜித் வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.
அஜித்குமார் கதாநாயகனாக நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை, மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்தார். அந்தப் படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அஜித், ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தையும் போனிகபூரே தயாரிக்கிறார். வினோத் டைரக்டு செய்கிறார். படத்துக்காக அஜித், 6 பேக் உடற்கட்டுக்கு மாறுகிறார்.
‘வலிமை’ படத்தின் 2 கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. இந்த நிலையில், அஜித் வேறு ஒரு புதிய படத்தில் நடிக்கப்போவதாக வதந்தி பரவியது.

இதைத்தொடர்ந்து அஜித், போனிகபூரிடம் ஒரு வாக்குறுதி அளித்தார். “வதந்திகளை நம்ப வேண்டாம். ‘வலிமை’ படத்தை முடித்துக் கொடுத்துவிட்டுத்தான் அடுத்த படத்தை ஒப்புக்கொள்வேன்” என்று அவர் கூறியிருக்கிறார். இதனால் போனிகபூர் நிம்மதி அடைந்திருக்கிறார்.
நடிகர் சூர்யா 'சூரரைப் போற்று' வெளியீட்டுத் தொகையில் இருந்து சினிமா சங்கங்களுக்கு ரூ.1.5 கோடி நிதியுதவி வழங்கி உள்ளார்.
சூர்யாவின் நடிப்பில் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியிருக்கும் 2டி என்டர்டைன்மென்டின் 'சூரரைப் போற்று' திரைப்படம் வருகிற அக்டோபர் 30ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகிறது. 'சூரரைப்போற்று' திரைப்பட வெளியீட்டுத் தொகையிலிருந்து தேவையுள்ளவர்களுக்கு 5 கோடி ரூபாய் பகிர்ந்தளிக்க உள்ளதாக சூர்யா அறிவித்திருந்தார். 'பொதுமக்களுக்கும் திரையுலகைச் சார்ந்தவர்களுக்கும், தன்னலம் பாராமல் முன்னின்று பணியாற்றிய கொரோனா முன்கள பணியாளர்களுக்கும் இந்த 5 கோடி ரூபாய் பகிர்ந்தளிக்கப்படும்'
என்று சூர்யா தெரிவித்திருந்தார். தற்போது அதை செயல்படுத்தவும் தொடங்கியிருக்கிறார்.
முதல்கட்டமாக 1.5 கோடி ரூபாய் இன்று வழங்கப்பட்டது. இதில் திரையுலகத்தின் தொழிலாளர்கள் அமைப்பான 'பெப்ஸி' க்கு 1 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இத்தொகையை பெப்ஸியின் தலைவர் ஆர். கே. செல்வமணியிடம், 80 லட்ச ரூபாயும், பெப்ஸியின் அங்கமான இயக்குநர் சங்கத்தின் செயலாளர் இயக்குநர் ஆர்.வி. உதயகுமாரிடம் இருபது லட்ச ரூபாயும் பிரித்து வழங்கப்பட்டது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு 30 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. சங்கத்தின் சார்பில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அவர்கள் பெற்றுக்கொண்டு, அதை தயாரிப்பளர்கள் சங்க தனி அலுவலரிடம் வழங்குகிறார். தென்னித்திய நடிகர் சங்கத்திற்கு 20 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டடது. நடிகர் சங்கத்தலைவர் நாசர் பெற்றுக்கொண்டு அதை அவர், நடிகர் சங்க தனி அலுவலரிடம் வழங்குவார். இந்தத் தொகைகளுக்கான காசோலைகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில், தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா தலைமையேற்க, நடிகர் சிவகுமார் முன்னிலை வகித்தார். சூர்யாவின் 2டி பட நிறுவனத்தின் இணை தயாரிப்பாளர் ராஜ்சேகர் கற்பரபூரசுந்தரபாண்டியன் மற்றும் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், சுரேஷ் காமாட்சி, லலித்குமார் ஆகியோர் பங்கேற்றார்கள். மீதமுள்ள தொகையின் பகிர்ந்தளிப்பு விவரங்கள் விரைவில் அறிவிக்க உள்ளனர்.
அறிமுக இயக்குனர் ரோஜர் டேனி இயக்கத்தில் சாகர், சாயாதேவி நடிப்பில் உருவாகும் ‘கேக்காது’ படத்தின் முன்னோட்டம்.
கன்னட பட உலகின் கதாநாயகன் சாகர், ‘கேக்காது’ என்ற படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு வருகிறார். இவருக்கு ஜோடியாக இயக்குனரும் நடிகருமான ‘யார்’ கண்ணனின் மகள் சாயாதேவி அறிமுகமாகிறார். சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் பிரதாப்போத்தன், மனோபாலா, ஏ.எல்.அழகப்பன், மயில்சாமி, வையாபுரி, நெல்லை சிவா ஆகியோரும் நடிக்கிறார்கள். டேனியல் தயாரிக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார், ரோஜர் டேனி.
படத்தைப் பற்றி இயக்குனர் ரோஜர் டேனி கூறியதாவது: “உலகம் எங்கும் அறிவியல் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கிறது. வெளிப்பயன்பாட்டுக்கு மட்டுமே இருந்து வரும் அறிவியல் வருங்காலத்தில், ‘சிப்’ வடிவில் மனித உடலுக்குள் புகுந்து ஆட்டுவிக்கப் போகிறது. இதற்கான வேலைகள் ஒரு நாட்டில் ரகசியமாக நடக்கிறது.

இந்த உண்மையை கதாநாயகன் கண்டுபிடிக்கிறான். மனித உடலுக்குள் புகுந்து அறிவியல் என்ன மாற்றத்தை ஏற்படுத்தும்? என்ற உண்மையை அறிந்து அதிர்ச்சி அடைகிறான். அதன் பிறகு நடக்கும் விறுவிறுப்பான சம்பவங்கள், படத்தின் உச்சக்கட்டம். இந்த கதைக்குள் அரசியலும் இருக்கிறது.” என கூறினார்.
கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3-வது சீசனில் கலந்துகொண்டு பிரபலமான முகின் ராவ், ஹீரோவாக அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மலேசியாவை சேர்ந்த முகின் ராவ், கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3-வது சீசனில் கலந்துகொண்டு பிரபலமானார். அந்த சீசனின் வெற்றியாளரும் இவர்தான். இவர் ஹீரோவாக நடிக்க உள்ள முதல் படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தை பெண் இயக்குனர் அஞ்சனா அலிகான் இயக்க உள்ளாராம்.

இவர் ஏற்கனவே நானி, நித்யாமேனன் நடித்த ‘வெப்பம்’ படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் முகினுக்கு ஜோடியாக திவ்யா பாரதி அல்லது சீரியல் நடிகையான சிவானி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம்வரும் சூரி, தனது பிள்ளைகள் தனக்காக வெட்டிய கேக்கின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
மதுரையை பூர்வீகமாகக் கொண்ட நடிகர் சூரி, தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். விரைவில் ஹீரோவாகவும் அறிமுகமாக உள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
இதனிடையே நடிகர் சூரி நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்தனர். சூரியின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவரது ரசிகர்கள் நற்பணி மன்றம் சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

இந்நிலையில், தனது பிள்ளைகள் பிறந்தநாளன்று தனக்காக வெட்டிய கேக்கின் புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள சூரி, “400ருவா கேக்க கொடுத்துபுட்டு 4000ருவாய புடிங்கிருச்சுங்க நாபெத்த பிள்ளைங்க. இருந்தாலும் இந்த கேக்கிற்கு எவ்வளவு விலை வேண்டுமானாலும் கொடுக்கலாம். தேங்க்யூ கட்டிபெத்தார்களா” என பதிவிட்டுள்ளார்.






