என் மலர்
சினிமா

சூரிக்காக அவரது பிள்ளைகள் வெட்டிய பிறந்தநாள் கேக் புகைப்படம்
400 ரூபா கேக்க கொடுத்துட்டு ரூ.4000 புடுங்கீட்டாங்க - புலம்பும் சூரி
தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம்வரும் சூரி, தனது பிள்ளைகள் தனக்காக வெட்டிய கேக்கின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
மதுரையை பூர்வீகமாகக் கொண்ட நடிகர் சூரி, தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். விரைவில் ஹீரோவாகவும் அறிமுகமாக உள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
இதனிடையே நடிகர் சூரி நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்தனர். சூரியின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவரது ரசிகர்கள் நற்பணி மன்றம் சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

இந்நிலையில், தனது பிள்ளைகள் பிறந்தநாளன்று தனக்காக வெட்டிய கேக்கின் புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள சூரி, “400ருவா கேக்க கொடுத்துபுட்டு 4000ருவாய புடிங்கிருச்சுங்க நாபெத்த பிள்ளைங்க. இருந்தாலும் இந்த கேக்கிற்கு எவ்வளவு விலை வேண்டுமானாலும் கொடுக்கலாம். தேங்க்யூ கட்டிபெத்தார்களா” என பதிவிட்டுள்ளார்.
Next Story






