என் மலர்
சினிமா செய்திகள்
பல படங்களில் நடித்து பிரபலமாகி இருக்கும் நடிகை விஜயலட்சுமி மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கன்னட சினிமாவில் அறிமுகமானவர் நடிகை விஜயலட்சுமி. இவர் தமிழில் பிரண்ட்ஸ், பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். அண்மையில் இவர் தூக்க மாத்திரைகள் உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் தற்போது விஜயலட்சுமி மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 8 மாதங்களாக, விஜய லட்சுமி ஒரு தனியார் விடுதியில் தங்கி வந்துள்ளார். இதற்கான வாடகை பணம் சுமார் 3 லட்சத்தை அவர் தரவில்லை என அதன் உரிமையாளர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இதை தொடர்ந்து, நடிகை விஜய லட்சுமி அந்த விடுதியின் உரிமையாளருக்கு, கொடுக்க வேண்டிய மீதி தொகையை கண்டிப்பாக தருவதாக உறுதியளித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ள அனுபமா, அழகு குறித்து சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய ‘பிரேமம்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். தமிழில் தனுஷ் ஜோடியாக ‘கொடி’ படத்தில் நடித்திருந்தார். தற்போது ‘தள்ளிப்போகாதே’ படத்தில் அதர்வா ஜோடியாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வர தயாராக உள்ளது.

அவர் அளித்த பேட்டி வருமாறு: “நடிகைகள் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி உள்ளது. எனவே அவர்கள் வலிமையான மனதோடு இருக்க வேண்டும். படங்கள் தோல்வியானால் என்ன செய்வாய் என்று என்னிடம் கேட்பவர்களிடம் எனது படிப்புக்கு ஏற்ற வேலையை பார்ப்பேன் என்று பதில் சொல்லி வருகிறேன். சினிமாவுக்கு வந்த புதிதில் ஒளிவு மறைவு இல்லாமல் பேட்டிகள் கொடுத்து சமூக வலைத்தளத்தில் விமர்சனத்துக்கு ஆளானேன்.

ரொம்ப அகங்காரம் பிடித்தவள் என்றும் பேசினர். இது வருத்தமாக இருந்ததால் மலையாளத்தில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தேன். அப்போது தமிழ், தெலுங்கு படங்களில் நடித்தேன். எனது கண்களும் சிரிப்பும்தான் எனக்கு அழகு என்று எல்லோரும் சொல்கிறார்கள். எனது தலைமுடி அடர்த்தியாக இருக்கும். தினமும் தேங்காய் எண்ணை தேய்க்கிறேன். நடிகைகள் மீது பொறாமை கிடையாது. சக நடிகைகள் நடிப்பு பிடித்து இருந்தால் போன் செய்து பாராட்டுவேன். 3 படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறேன். எதிர்காலத்தில் டைரக்டராவேன்.” இவ்வாறு அனுபமா பரமேஸ்வரன் கூறினார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா திடீரென்று ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தற்போது விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நெற்றிக்கண் படத்தில் நடித்து வருகிறார்.

'அவள்' படத்தின் இயக்குநரான மிலந்த் ராவ் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நயன்தாராவுடன் அஜ்மல் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கிரிஷ் இசையமைத்து வரும் இந்தப் படத்துக்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு சுமார் 80% முடிந்த நிலையில், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பாதியில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் திடீர் என்று ‘நெற்றிக்கண்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

2011-ம் ஆண்டு வெளியான கொரியன் படமான 'ப்ளைண்ட்' படத்தின் தமிழ் ரீமேக் 'நெற்றிக்கண்' என்று கூறப்படுகிறது.
நடிகர் விஜய்சேதுபதி மகளுக்கு மிரட்டல் விடுத்தவரை கைது செய்யக்கோரி திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க மாட்டேன் என்பதை, நன்றி!வணக்கம் என்று மறைமுகமாக குறிப்பிட்டிருக்கிறார். இந்நிலையில், அவர் இலங்கை தமிழர்களின் மனதை புரிந்துகொள்ளாமல் அப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதை கண்டித்து, விஜய்சேதிபதியின் மகளை பாலியல் வன்கொடுமை செய்துவிடுவதாக டுவிட்டரில் மிரட்டல் விடுத்தார்.

மேலும் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களான மகேந்திர சிங் தோனியின் மகள் மற்றும் விராட் கோலி அவர்களின் மனைவி உள்ளிட்டவர்களை பற்றி சமூக வலைதளங்களில் ஆபாசமான பதிவிட்டுள்ளார் இதனை வன்மையாக கண்டித்தும் மேலும் இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் வண்ணம் இருக்க, திருவாரூர் SFI கூட்டமைப்புடன் திருவாரூர் மாவட்ட விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கம் கலந்து கண்டன ஆர்பாட்டம் திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் நடைப்பெற்றது.

சம்பந்தப்பட்டவரின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட வேண்டும் என்றும், பெண்கள் பாதுகாப்பு சட்டம், குழந்தையை பாலியல் வன்கொடுமை சட்டம், மேலும் லோக்பால் சட்டத்தின் கீழ் அவரை கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என்றும் ஆர்பாட்டம் நடைபெற்றது.
பாடகர், இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட ஹிப்ஹாப் ஆதி, மீண்டும் படம் இயக்க தயாராகி வருகிறாராம்.
பாடகர், இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் ஹிப்ஹாப் ஆதி. இவர் ஆம்பள, தனி ஒருவன், அரண்மனை 2, கதகளி, கத்தி சண்டை, இமைக்கா நொடிகள், கோமாளி, ஆக்ஷன் உள்பட பல படங்களுக்கு இசைமைத்துள்ளார். மீசையை முறுக்கு என்ற படத்தை இயக்கி கதாநாயகனாகவும் அறிமுகமானார். தொடர்ந்து நட்பே துணை, நான் சிரித்தால் ஆகிய படங்களிலும் கதாநாயகனாக நடித்தார். இந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றன.


சமீபத்தில் நான் ஒரு ஏலியன் என்ற இசை ஆல்பத்தை வெளியிட்டார். தொடர்ந்து புதிய படங்களில் நடிக்க பல இயக்குனர்கள் அவரிடம் கதை சொல்லி வந்தனர். இந்த நிலையில் ஹிப் ஹாப் ஆதியே புதிய படத்தை இயக்கி கதாநாயகனாக நடிக்க முடிவு செய்துள்ளார். இந்த படத்துக்கான வேலைகள் தொடங்கி உள்ளன. படத்தின் பெயர் மற்றும் இதர நடிகர், நடிகைகள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படம், திட்டமிட்டபடி வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாம்.
சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் சூரரைப் போற்று. இப்படம் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. இறுதிச்சுற்று படத்தின் இயக்குனரான சுதா கொங்கரா இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும் தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இப்படம் வருகிற அக்டோபர் 30-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இப்படம் திட்டமிட்டபடி வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தியே இப்படம் உருவாகியுள்ளதால், இந்திய விமானப்படை தரப்பிலிருந்து ஒப்புதல் கடிதம் வருவதற்காக படக்குழு காத்திருக்கிறதாம்.

அதனால் தான் தற்போது வரை படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் எதுவுமே தொடங்கப்படவில்லையாம். இந்த சான்றிதழ் கிடைக்க தாமதம் ஏற்பட்டால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் ஆர்.ஆர்.ஆர் படத்தின் பீம் டீசர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பிரம்மாண்ட இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஆர்.ஆர்.ஆர். ரூ.450 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படம், சுதந்திரப் போராட்ட வீரர்கள் அல்லூரி சீதாராம ராஜூ, கொமாரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்படுகிறது. சீதாராம ராஜூவாக ராம் சரணும், கொமாரம் பீமாக ஜூனியர் என்.டி.ஆரும் நடிக்கின்றனர்.
ஏற்கெனவே, ராமராஜூவாக ராம் சரண் தோன்றும் ஃப்ர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய படக்குழு, தற்போது கொமாரம் பீம் ஆக வரும் ஜூனியர் என்.டி.ஆரின் டீசரை வெளியிட்டுள்ளனர். இன்று காலை வெளியிடப்பட்ட ஜூனியர் என்.டி.ஆரின் 'பீம்' லுக் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருள் ஆகியுள்ளது. இதுவரை அவரை இத்தகைய தோற்றத்தில் பார்த்திருக்கவில்லை என ரசிகர்கள் சிலாகித்துக் கொண்டாடுகின்றனர்.
கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட பெரும் இடைவேளைக்குப் பின்னர், அத்தனை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடனும் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. 2021ம் ஆண்டு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இப்படம் தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் வெளியிடப்படுகிறது.
காத்திருப்பு முடிந்தது..
— Sathish Maalaimalar (@SatthiEshwar) October 22, 2020
இதோ உங்களுக்காக வலிமையின் அடையாளம்
The mighty Bheem @tarak9999 has been unveiled by Ramaraju @AlwaysRamCharan from #RRRMovie 🌊 https://t.co/woW7bWJlZn@ssrajamouli@ajaydevgn@aliaa08@DVVMovies@thondankani#RamarajuForBheem#BheemFirstLook#NM
சிரஞ்சீவி சர்ஜா- மேக்னா ராஜ் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதால் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
கன்னட திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகராக அறியப்பட்டவர் சிரஞ்சீவி சர்ஜா. இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக இறந்தார். இவரது மனைவி மேக்னா ராஜ். இவரும் பிரபல நடிகை ஆவார். சிரஞ்சீவி சர்ஜா இறந்த சமயத்தில் மேக்னா ராஜ் கர்ப்பமாக இருந்தார். இந்நிலையில், அவருக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. மறைந்த சிரஞ்சீவி சர்ஜாவே அவருக்கு குழந்தையாக பிறந்திருப்பதாக கூறி பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக சிரஞ்சீவி சர்ஜா- மேக்னா ராஜ் தம்பதியின் குழந்தைக்காக, சிரஞ்சீவி சர்ஜாவின் தம்பியும், நடிகருமான துருவ் சர்ஜா ரூ.10 லட்சம் மதிப்பிலான ஒரு வெள்ளி தொட்டிலை வாங்கியுள்ளார். வெள்ளி தொட்டில் அருகே நின்று துருவ் சர்ஜா எடுத்து கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.
நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த நபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வகையில் 800 என்ற தலைப்பில் திரைப்படம் தயாரிக்கப்போவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. நடிகர் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரன் வேடத்தில் நடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதற்கான ஏற்பாடுகள் நடந்தன. இந்த படத்தில் விஜய்சேதுபதி நடிப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்த நிலையில் முத்தையா முரளிதரன் விஜய்சேதுபதிக்கு விடுத்த வேண்டுகோளில் 800 என்ற திரைப்படத்தில் நடிக்க வேண்டாம் என்று கூறி இருந்தார். அதை ஏற்று விஜய்சேதுபதி 800 திரைப்படத்தில் நடிப்பதில் இருந்து விலகிக்கொண்டார். இதற்கிடையில் விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுத்து, நபர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஆபாச கருத்துகளை பதிவிட்டிருந்தார்.

இது தொடர்பாக கொடுக்கப்பட்ட புகார் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசார் 3 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். கலகத்தை தூண்டுதல், ஆபாச கருத்து பதிவிடுதல் மற்றும் தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் போன்ற 3 சட்டப்பிரிவுகளில் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளி இலங்கையைச் சேர்ந்தவர் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அவரை கைது செய்ய இலங்கை செல்ல உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அனைத்து சமூக வலைதளங்களில் இருந்தும் விலகிய சிம்பு, தற்போது மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் சிம்பு தற்போது சுசீந்திரன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். அவர் நடிக்கும் 46-வது படம் இது. பக்கா கமர்ஷியல் படமாக உருவாகிறது. இந்தப் படத்துக்காக சிம்பு உடல் எடையை குறைத்து தயாராகியுள்ளார். இதில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பாரதிராஜா ஒப்பந்தமாகி உள்ளார். தமன் இசையமைக்கிறார்.
சில வருடங்களுக்கு முன் அனைத்து சமூக வலைதளங்களில் இருந்தும் விலகிய சிம்பு, தற்போது மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். முதல் பதிவாக அவர் உடல் எடையைக் குறைக்க பயிற்சி எடுத்துக்கொண்ட வீடியோக்களை தொகுத்து ஒரு டீசர் போல உருவாக்கி அதனை பகிர்ந்துள்ளார். சிம்புவின் என்ட்ரியை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
Atman-SilambarasanTR#Atman#SilambarasanTR#STR
— Silambarasan TR (@SiIambarasanTR_) October 22, 2020
pic.twitter.com/3gE67VqX9P
குலசேகரப்பட்டினம் தசரா திருவிழாவை மையமாக வைத்து இயக்குனர் பரத்பாலா அறிதுயில் என்ற பெயரில் திரைப்படமாக உருவாக்கி இருக்கிறார்.
தமிழகத்தில் தசரா திருவிழாக்கள் மிகவும் பிரசித்திபெற்றவை. அதிலும் குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா என்பது உலகளவில் பிரபலம். ஏனென்றால் பலதரப்பட்ட மக்களும் ஒன்றுகூடி, வித்தியாசமாக வேடமிட்டு நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். அதனை புகைப்படமாகவும், வீடியோவாகவும் எடுக்க பலரும் ஒன்றுகூடுவார்கள்.
இந்தப் பாரம்பரியமான திருவிழாவினை முதன்முறையாக படமாக உருவாக்கியுள்ளார் இயக்குநர் பரத்பாலா.
'அறிதுயில்' என்ற பெயரில் உருவாக்கியுள்ளார். குலசேகரப்பட்டினம் தசரா திருவிழாவினை ஒரு கதையாகவே இதில் சொல்லியிருக்கிறார்கள்.
பரத்பாலாவால் உருவாக்கப்பட்ட இந்த 'அறிதுயில்' திரைப்படம் அபாரமான நவீன விளிம்பில் ஒரு பண்டைய திருவிழா பாரம்பரியத்தை படமாக்குகிறது.
இது குறித்து பரத்பாலா கூறும்போது, ‘“என்னை கவர்ந்தது என்னவென்றால், மக்களின் நம்பிக்கை மற்றும் அந்த ஆழ்ந்த நம்பிக்கை மற்றும் விசுவாசத்தின் மூலம் அவர்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கைக்கு எவ்வாறு தீர்வுகளை கண்டுபிடிக்கிறார்கள் என்பதும் ஆகும். இயக்குநர்களுக்கு இது ஒரு சொர்க்கம் - இங்கு ஒவ்வொரு திருப்பமும் ஒரு புதிய உலகத்தைக் கொண்டுவருகிறது" என்று கூறியுள்ளார்.
சொந்த வாழ்க்கையை வியாபாரம் பண்ணுறது என்ன பொழப்போ என்று வனிதா வெளியிட்ட வீடியோவிற்கு கஸ்தூரி கருத்து தெரிவித்துள்ளார்.
நடிகை வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவரை 3வது திருமணம் செய்துக் கொண்டார். இந்த அறிவிப்பு வந்ததிலிருந்து சர்ச்சையானது. இந்த சர்ச்சை முடிந்து சுமுகமாக சென்றுக் கொண்டிருக்கும் நிலையில், வனிதா தனது 40வது பிறந்தநாளை கொண்டாட பீட்டர் பால் மற்றும் குழந்தைகளுடன் கோவா சென்றார்.
அங்கு பீட்டர் பால் மது அருந்தியதால் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. சென்னை திரும்பிய பிறகும் பீட்டர் பால் தொடர்ந்து மதுவுக்கு அடிமையாகி இருக்கிறார். இதுகுறித்து வீடியோ வெளியிட்ட வனிதா, பீட்டர் பால் ரொம்ப குடிக்கிறார், நம்பி ஏமாந்துவிட்டேன். தற்போது என்னால் சிரிக்கக் கூட முடியவில்லை. அவர் வீட்டிற்கும் வருவது இல்லை, செல்போனையும் சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டார். ஹார்ட் அட்டாக் வந்து உயிர் பிழைத்த மனிதர் இப்படி மது அருந்துவதும், புகைப்பிடிப்பதுமாக இருக்கிறார் என்று கூறியிருந்தார்.
அந்த வீடியோவை பார்த்த ஒருவர், வனிதாவின் வீடியோ பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கஸ்தூரியிடம் கேட்டார். அதற்கு கஸ்தூரியோ, வீடியோ வேறையா? பார்த்துட்டு சொல்றேன். என் அனுபவத்தில் இது சொல்வதெல்லாம் பொய் ரகம் என்றார்.

வீடியோ பார்த்த கஸ்தூரி, ஓமைகாட், நான் அந்த கண்ணீர் வீடியோவை பார்த்தேன். அருமையாக எடிட் செய்து, ஸ்டைலான கார்டு எல்லாம் இருந்தது. சொந்த வாழ்க்கையை வியாபாரம் பண்ணுறது என்ன பொழப்போ, புரியலடா சாமி. எல்லாம் பொய், தற்புகழ்ச்சி, எல்லோரும் கெட்டவங்க, வனிதா மட்டும் தான் பாதிக்கப்பட்டவர். அது எல்லாம் எதிர்பார்த்தது தான். ஆனால் எலிசபெத் ஹெலன் மீது ஏன் புகார் தெரிவிக்கணும்? நம்ப முடியவில்லை.

வீடியோவில் நாலு விளம்பர இடைவேளை வேறு. ஸ்க்ரிப்ட் எடிட் செய்யப்பட்டு, நன்றாக பெர்ஃபார்ம் செய்யப்பட்ட இந்த வீடியோ மூலம் நிறைய சம்பாதிப்பார். பீட்டர் பாலின் மருத்துவ செலவுக்கான பணத்தை சம்பாதிக்க பார்க்கிறார். அதற்கு அவருக்கு உரிமை உள்ளது என்று தெரிவித்துள்ளார்.






