என் மலர்tooltip icon

    சினிமா

    சிம்பு
    X
    சிம்பு

    மாஸ் வீடியோவுடன் சமூக வலைதளங்களில் ரீ-என்ட்ரி கொடுத்த சிம்பு.... கொண்டாடும் ரசிகர்கள்

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அனைத்து சமூக வலைதளங்களில் இருந்தும் விலகிய சிம்பு, தற்போது மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் சிம்பு தற்போது சுசீந்திரன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். அவர் நடிக்கும் 46-வது படம் இது. பக்கா கமர்ஷியல் படமாக உருவாகிறது. இந்தப் படத்துக்காக சிம்பு உடல் எடையை குறைத்து தயாராகியுள்ளார். இதில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பாரதிராஜா ஒப்பந்தமாகி உள்ளார். தமன் இசையமைக்கிறார்.

    சில வருடங்களுக்கு முன் அனைத்து சமூக வலைதளங்களில் இருந்தும் விலகிய  சிம்பு, தற்போது மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். முதல் பதிவாக அவர் உடல் எடையைக் குறைக்க பயிற்சி எடுத்துக்கொண்ட வீடியோக்களை தொகுத்து ஒரு டீசர் போல உருவாக்கி அதனை பகிர்ந்துள்ளார். சிம்புவின் என்ட்ரியை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

    Next Story
    ×