என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ஓ.டி.டி. தளங்கள் ஆபாச தளங்களாக உள்ளதாகவும், அவற்றுக்கு தணிக்கை முக்கியம் எனவும் நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.
    கொரோனாவால் அனைத்து மொழி படங்களும் ஓ.டி.டி. தளங்களில் வெளியாகி வருகின்றன. வெப் தொடர்களுக்கு தணிக்கை இல்லை என்பதால் ஆபாச காட்சிகள் தாராளமாக உள்ளன என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் இரட்டை அர்த்தம் கொண்ட வாசகங்களோடு சல்மான்கான், ரன்வீர்சிங், கேத்ரினா கைப் ஆகியோரின் புகைப்படங்கள் கொண்ட மீம்ஸ்கள் பகிரப்பட்டன. 

    கங்கனா ரணாவத்

    இதனை ஸ்கிரீன்ஷாட் எடுத்து கங்கனா ரணாவத் தனது டுவிட்டரில் பகிர்ந்து கூறும்போது, “திரையரங்குகளில் எல்லோரும் படம் பார்க்கும் அனுபவம் அலாதியானது. டிஜிட்டலுக்கு கலை மாறி வரும் நெருக்கடியை பார்க்கிறோம். ஓ.டி.டி. தளங்கள் ஆபாச தளங்களாக உள்ளன. திரைப்படங்களை குடும்பத்தினர் எல்லோரும் சேர்ந்து பார்ப்பது சமூக அனுபவம். எல்லோரும் சேர்ந்து படம் பார்ப்பதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படும். படங்களுக்கு தணிக்கை முக்கியம். தணிக்கை என்பது நமது மனசாட்சி” என்று தெரிவித்துள்ளார்.
    மக்கள் இயக்க நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் நடிகர் விஜய் பல்வேறு அறிவுரைகளை வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
    விஜய்யின் மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறும் என எஸ்.ஏ.சந்திரசேகர் கூறிய நிலையில், நடிகர் விஜய் திடீரென மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் பனையூர் இல்லத்தில் ஆலோசனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.  

    அந்த கூட்டத்தில், மாவட்ட நற்பணி மன்றங்கள் தன்னை அரசியலில் தொடர்புப்படுத்தி போஸ்டர்கள் ஒட்டுவதை அவர் கண்டித்ததாகவும், அத்தகைய போஸ்டர்கள் ஒட்டுவதை தவிர்க்குமாறு அவர் கேட்டுக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும் மக்கள் பணிகளை, மக்களுக்கான உதவிகளை தொடர்ந்து செய்யுங்கள் என அறிவுறுத்திய விஜய், வழக்கம்போல் தேவையான உதவிகள் என்னிடம் இருந்து வரும் என உறுதியளித்தாராம்.

    மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் விஜய்

    மக்கள் இயக்கத்தை வலுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனைகள் நடைபெற்றதாக கூறப்படும் நிலையில், அரசியல் கட்சி அல்லது தேர்தல் குறித்த ஏதேனும் ஆலோசனைகள் நடந்தினாரா என்பது குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை. 

    இன்றைய ஆலோசனை கூட்டத்தில் திருச்சி வடக்கு, திருச்சி தெற்கு, மதுரை வடக்கு, மதுரை தெற்கு நிர்வாகிகள் மற்றும் கன்னியாகுமரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கடலூர் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வரும் நாட்களில் மற்ற மாவட்ட நிர்வாகிகளை அவர் சந்தித்து பேசுவார் என கூறப்படுகிறது. 
    பனையூர் இல்லத்தில் நடிகர் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை நடத்தினார்.
    சென்னை அருகே பனையூர் இல்லத்தில் நடிகர் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை நடத்தினார்.

    விஜயின் மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறும் என எஸ்.ஏ.சந்திரசேகர் கூறிய நிலையில் ஆலோசனை நடைபெற்று உள்ளது.

    ஆலோசனை கூட்டத்தில் மாணவரணி, இளைஞரணி, தொண்டரணியினர் கலந்து கொண்டனர்.

    திருச்சி வடக்கு, திருச்சி தெற்கு, மதுரை வடக்கு, மதுரை தெற்கு நிர்வாகிகள் மற்றும் கன்னியாகுமரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கடலூர் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    மகாராஷ்டிராவை சேர்ந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளும் ஆலோசனையில்  கலந்து கொண்டனர்.

    விரைவில் கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு உள்ளிட்ட பிற மாவட்ட நிர்வாகிகளையும் நடிகர் விஜய் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

    தனது மக்கள் இயக்கத்தை வலுப்படுத்துவது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விஜய் ஆலோசித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.


    மிலிந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள நெற்றிக்கண் படத்தின் முன்னோட்டம்.
    ‘அவள்’ படத்தின் இயக்குநர் மிலிந்த் ராவ் அடுத்ததாக நயன்தாராவை வைத்து ‘நெற்றிக்கண்’ என்கிற திரில்லர் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை ரவுடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் தயாரிக்கிறார். அவர் தயாரிக்கும் முதல் படம் இதுவாகும். கார்த்திக் கணேஷ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பை கவனிக்கிறார். கமலநாதன் கலை இயக்கத்தில் நவீன் சுந்தரமூர்த்தி வசனத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.

    இப்படத்தில் நயன்தாராவுடன் ஒரு நாய்க்கும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் உள்ள வகையில் திரைக்கதை அமைத்துள்ளதாக இயக்குனர் மிலிந்த் ராவ் தெரிவித்துள்ளார். இப்படத்தில் நயன்தாரா கண் பார்வையற்ற பெண்ணாக நடிக்கிறார். அஜ்மல் வில்லனாக நடிக்கிறார். மேலும் இப்படம் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான ’பிளைண்டு’ என்ற கொரியன் படத்தின் ரீமேக்காகும்.
    நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் ரிலீஸ் குறித்து அதிகாரப்பூர்வ தகவலை அப்படத்தின் ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார்.
    நடிகை நயன்தாரா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மூக்குத்தி அம்மன்’. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ள ஆர்.ஜே.பாலாஜி, இயக்குனர் என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கி உள்ளார். முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகி வரும் இப்படத்திற்காக நயன்தாரா, 48 நாட்கள் விரதம் இருந்து நடித்துள்ளார். 

    வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே.கணேஷ் தயாரித்து இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு லாக்டவுனுக்கு முன்னரே நிறைவடைந்தது. படத்தை மே 1-ந் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தனர். கொரோனா ஊரடங்கு காரணமாக படம் திட்டமிட்டபடி ரிலீசாகவில்லை.

    இந்நிலையில், இப்படம் வருகிற தீபாவளி பண்டிகையன்று ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இப்படத்தின் டிரெய்லர் வருகிற அக்டோபர் 25-ந் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்தியன் 2 படப்பிடிப்பை தொடங்குங்கள் அல்லது என்னை வேறு படங்களில் பணி செய்ய விடுங்கள் என தயாரிப்பு நிறுவனத்திற்கு கடிதம் எழுதியிருக்கிறார் இயக்குனர் ஷங்கர்.
    ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படம் இந்தியன்-2. இதில் காஜல் அகர்வால், சித்தார்த், விவேக், பாபிசிம்ஹா, ரகுல் பிரீத் சிங், வித்யூத் ஜமால், பிரியா பவானி சங்கர் என பலர் நடித்து வந்தனர். இந்தியன்-2 படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை சென்னையில் தொடங்கிய படக்குழுவினர், பின்னர் ஐதராபாத், போபால் உள்ளிட்ட இடங்களில் படமாக்கினர். 

    இதனிடையே கடந்த பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து, பின்னர் கொரோனா ஊரடங்கு போன்ற காரணங்களால் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு கடந்த 6 மாதங்களுக்கு மேலாக நடைபெறாமல் உள்ளது. கொரோனா காலத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை குறைக்க படத்தின் பட்ஜெட்டை மேலும் குறைக்குமாறு தயாரிப்பு நிறுவனம் ஷங்கரிடம் வலியுறுத்தியதாகவும், ஏற்கனவே 400 கோடியில் இருந்து 220 கோடியாக குறைக்கப்பட்ட பட்ஜெட்டை மேலும் குறைக்க முடியாது என ஷங்கர் சொல்லிவிட்டதாகவும் தெரிகிறது.

    ஷங்கர்

    தற்போது மத்திய அரசு சினிமா படப்பிடிப்புகளில் தளர்வு அறிவித்திருக்கும் நிலையிலும் இந்தியன் 2 படத்தின் பணிகளை துவங்க தயாரிப்பு நிறுவனம் முன்வரவில்லை. இதனால் கோபமடைந்த ஷங்கர் படப்பிடிப்பை தொடங்குங்கள் அல்லது என்னை வேறு படத்தின் பணிகளை செய்ய விடுங்கள் என்று கடிதம் எழுதியுள்ளதாக சொல்லப்படுகிறது. 

    ஆனால் தயாரிப்பு தரப்பு அதனை மறுத்துள்ளது. தற்போது அனுமதிக்கப்பட்டிருக்கும் 100 பேர் என்ற எண்ணிக்கை இந்தியன் 2 மாதிரியான பிரம்மாண்ட படங்களுக்கு போதாது எனவும், குறைந்தபட்சம் 500 பேர் தேவைப்படுவதால் படப்பிடிப்பை தற்போது தொடங்க முடியவில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
    சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புதிய படத்தில் பிரபல நடிகை ஒருவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம்.
    சிம்புவின் 46-வது படத்தை மாதவ் மீடியா நிறுவனம் தயாரிக்கிறது. சுசீந்திரன் இயக்கும் இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார். தமன் இசையமைக்கும் இப்படத்திற்கு திரு ஒளிப்பதிவு செய்கிறார். இது, பக்கா கமர்ஷியல் படமாக உருவாகிறது. இந்தப் படத்துக்காக சிம்பு உடல் எடையை குறைத்து மெலிந்த தோற்றத்துக்கு மாறியுள்ளார். 

    இந்தப் படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடித்து பொங்கல் பண்டிகைக்கு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

    நந்திதா

    இந்நிலையில், இப்படத்தில் சிம்புவின் தங்கை கதாபாத்திரத்தில் நந்திதா நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே அட்டகத்தி, புலி, உள்குத்து, எதிர்நீச்சல் போன்ற படங்களில் நடித்துள்ளார். 
    வலிமை படத்தின் தீம் மியூசிக் குறித்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு நடிகர் அஜித் அறிவுரை கூறினாராம்.
    அஜித்தின் 60-வது படம் வலிமை. வினோத் இயக்கும் இப்படத்தை போனிகபூர் தயாரிக்கிறார். அதிரடி சண்டை படமாக இது தயாராகி வருகிறது. யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். 

    இந்நிலையில், இப்படம் குறித்த ருசீகர தகவலை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். ‘நேர் கொண்ட பார்வை’ படத்திற்கு இசையமைக்கும் போதே அஜித் எனக்கு போன் செய்து பில்லா, பில்லா-2, மங்காத்தா என்று நிறைய தீம் மியூசிக் கிட்டார் வைத்து பண்ணி விட்டோம். ஆனால் ‘வலிமை’ படத்தில் கிட்டார் இல்லாமல் தீம் மியூசிக் அமைக்க முயற்சி செய்யுங்கள்’என்று அறிவுரை கூறினார்.

    யுவன் சங்கர் ராஜா

    அவர் சொன்னதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு, கிட்டார் பயன்படுத்தாமல் ‘வலிமை’ படத்தில் தீம் மியூசிக்கை உருவாக்கி இருக்கிறேன். இதுவரை மூன்று பாடல்கள் முடிந்துவிட்டது. ஒரு சின்ன தீம் மியூசிக்கும் முடிந்துவிட்டதாக யுவன் கூறியுள்ளார்.
    பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் உடல்நலம் குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
    திரையுலக பிரபலங்கள் குறித்து அவ்வப்போது வதந்திகள் பரவுவதும், பின்னர் சம்பந்தப்பட்டவர்கள் அதுகுறித்து விளக்கம் தருவதும் தொடர்கதை ஆகி வருகிறது. அந்தவகையில் இன்று காலையிலிருந்து பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் உடல்நலம் குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. இது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கவுண்டமணி

    இதைடுத்து கவுண்டமணி தரப்பில் இதுகுறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: நடிகர் கவுண்டமணி நலமாக உள்ளார். அவர் வழக்கமான பணிகளை செய்கிறார். அடுத்த பட பணிகளில் ஆர்வமாக, தீவிரமாக இருக்கிறார். அவர் உடல்நிலை குறித்து சிலர் அடிக்கடி தவறான தகவல் பரப்புகின்றனர். அதை யாரும் நம்ப வேண்டாம்’ என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது
    சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் சிம்பு தற்போது சுசீந்திரன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். அவர் நடிக்கும் 46-வது படம் இது. பக்கா கமர்ஷியல் படமாக உருவாகிறது. இந்தப் படத்துக்காக சிம்பு உடல் எடையை குறைத்து தயாராகியுள்ளார். இதில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பாரதிராஜா ஒப்பந்தமாகி உள்ளார். தமன் இசையமைக்கிறார்.

    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், முக்கிய அப்டேட் ஒன்றை சிம்பு தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதன்படி இப்படத்தின் மோஷன் போஸ்டர் வருகிற 26-ந் தேதி விஜயதசமி தினத்தன்று வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

    ‘சூரரைப்போற்று’ படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது ஏன் என்பது குறித்து நடிகர் சூர்யா அறிக்கை மூலம் விளக்கம் அளித்துள்ளார்.
    சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘சூரரைப்போற்று’. இந்தப் படத்தை வருகிற 30ம் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட இருப்பதாக சூர்யா அறிவித்திருந்தார். இதனிடையே, அமேசான் பிரைம் வெளியிட்டுள்ள இந்த மாதத்துக்கான படங்கள் வெளியீட்டுப் பட்டியலில் சூரரைப் போற்று இடம் பெறவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் ஏன் என்று கேள்வி எழுப்பி வந்தனர்.

    இந்நிலையில் நடிகர் சூர்யா, அறிக்கை மூலம் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சூரரைப்போற்று படம் விமானப் போக்குவரத்து சம்பந்தமான கதைக்களத்தை கொண்டது. மேலும் இந்திய விமானப்படை மற்றும் நாட்டின் பாதுகாப்பு தொடர்புடையது என்பதால், அவர்களிடம் பல அனுமதிகளை பெற வேண்டி இருந்தது. இன்னும் சில என்.ஓ.சி. எனப்படும் தடையில்லா சான்றிதழ்களுக்கு ஒப்புதல் பெற வேண்டியுள்ளது.

    சூர்யா

    அதனால் இந்த காத்திருப்பு தவிர்க்க முடியாததாக உள்ளது. இதனால் படம் ரிலீஸ் ஆவதற்கு எதிர்பார்த்ததை விட அதிக நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்தப் படத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் நலம் விரும்பிகளை மேலும் காக்க வைப்பதை நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது. ஆனால் அவர்கள் இதை அன்புடன் ஏற்றுக்கொள்வார்கள் என நம்புகிறேன். இவ்வாறு சூர்யா அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
    பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனை நடிகை சமந்தா சில வாரங்களுக்கு தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    தென்னிந்தியாவில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தெலுங்கில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன், சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. முன்னணி நடிகர் நாகார்ஜுனா இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஜூனியர் என்.டி.ஆர், நானி ஆகியோர் சீசன் 1, 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள். 3-வது சீசனையும் தற்போது நடந்து வரும் 4-வது சீசனையும் நாகார்ஜுனா தொகுத்து வழங்கி வருகிறார்.

    'வைல்ட் டாக்' என்கிற படத்தின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடைபெற உள்ளதால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சில வாரங்களுக்கு நாகார்ஜுனா விடுப்பு எடுத்துள்ளார். அவருக்கு பதிலாக நடிகை சமந்தா பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சமந்தா, நாகார்ஜுனா

    முன்னதாக 3-வது சீசனின் போது நாகார்ஜுனா சில காரணங்களுக்காக இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதால், அவருக்கு பதிலாக நடிகை ரம்யா கிருஷ்ணன் சில வாரங்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×