என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள சுல்தான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    ரெமோ பட இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் சுல்தான். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இப்படத்திற்கு விவேக்-மெர்வின் இசையமைத்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் கார்த்தி கையில் சாட்டையுடன் மாஸான லுக்கில் இருக்கிறார். இப்படம் தியேட்டரில் தான் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை பொங்கல் தினத்தன்று வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பரபரப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் நடிகை சமந்தா சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்துள்ளார்.
    தென்னிந்தியாவில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தெலுங்கில் இதுவரை மூன்று சீசன்கள் முடிந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு 4-வது சீசன் தொடங்கியது. 3-வது சீசனைப்போல் இந்த சீசனையும், நாகார்ஜுனா தொகுத்து வழங்கி வந்தார். ஜூனியர் என்.டி.ஆர், நானி ஆகியோர் சீசன் 1, 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள்.

    இதனிடையே வெளிநாட்டில் நடைபெறும் ‘வைல்ட் டாக்’ என்கிற படத்தின் படப்பிடிப்புக்காக, பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சில வாரங்களுக்கு நாகார்ஜுனா விடுப்பு எடுத்துள்ளார். அவருக்கு பதிலாக நடிகை சமந்தா பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளதாக கூறப்பட்டது.

    பிக்பாஸ் 4 போட்டியாளர்கள்

    அதன்படி நேற்று பிக்பாஸ் 4 தொகுப்பாளராக சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்த சமந்தாவுக்கு நடிகர் நாகார்ஜூனா வீடியோ கால் மூலம் வாழ்த்து தெரிவித்தார். இதையடுத்து பிக்பாஸ் போட்டியாளர்களும் சமந்தாவை பார்த்ததும் ஆச்சர்யத்தில் துள்ளிக்குதித்து ஆரவாரம் செய்தனர். இன்னும் சில வாரங்களுக்கு சமந்தா தான் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை வழங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சூர்யாவின் 40-வது படத்தை இயக்க உள்ள பாண்டிராஜ், ஒரு தரமான சம்பவம் இருக்கு என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
    சூர்யாவின் 38-வது படம் சூரரைப் போற்று. இப்படம் வருகிற நவம்பர் 12-ந் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இதையடுத்து சூர்யாவின் 39-வது படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார். வாடிவாசல் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க உள்ளார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவாக உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

    இந்நிலையில், சூர்யாவின் 40-வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ள இப்படத்தை பாண்டிராஜ் இயக்க உள்ளார். ஏற்கனவே இவர் இயக்கிய பசங்க 2 படத்தில் சூர்யா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ‘சூர்யா 40’ படம் அரசியல் சம்பந்தப்பட்ட கதை என்றும் இதில் சூர்யா அரசியல்வாதியாக நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    பாண்டிராஜின் டுவிட்டர் பதிவு

    இப்படம் குறித்து டுவிட்டரில் பாண்டிராஜ் பதிவிட்டுள்ளதாவது: “இருக்கு ஒரு தரமான சம்பவம். மீண்டும் சூர்யா மற்றும் சன் பிக்சர்ஸ் உடன் இணைந்தது செம்ம ஹாப்பி” என பதிவிட்டுள்ளார். 
    அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள கோப்ரா படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
    டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றி படங்களை கொடுத்த அஜய் ஞானமுத்து, அடுத்ததாக இயக்கியுள்ள படம் ‘கோப்ரா’. விக்ரம் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வியாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். 

    இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடந்து வந்த சமயத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததால், படப்பிடிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு படக்குழு நாடு திரும்பியது. எஞ்சியுள்ள காட்சிகளை விரைவில் படமாக்க உள்ளனர்.

    இந்நிலையில், கோப்ரா படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி கோப்ரா படத்தின் டப்பிங் பணிகள் இன்று தொடங்கி உள்ளது. இதனை இயக்குனர் அஜய் ஞானமுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    கோப்ரா படக்குழு

    இப்படத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். ஆக்‌ஷன், திரில்லர் என முற்றிலும் மாறுபட்ட கதை அம்சத்தோடு மிகப் பிரம்மாண்டமாக தயாராகும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது. இப்படத்தில் விக்ரம் பல்வேறு கெட்டப்புகளில் நடித்துள்ளார்.
    சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புதிய படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் தலைப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் சிம்பு தற்போது சுசீந்திரன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். அவர் நடிக்கும் 46-வது படம் இது. பக்கா கமர்ஷியல் படமாக உருவாகிறது. இந்தப் படத்துக்காக சிம்பு உடல் எடையை குறைத்து நடித்து வருகிறார். இதில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பாரதிராஜா ஒப்பந்தமாகி உள்ளார். தமன் இசையமைக்கிறார்.

    சிம்பு

    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், முக்கிய அறிவிப்பு ஒன்றை சிம்பு தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதன்படி இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் தலைப்பை அறிவித்துள்ளார். இப்படத்திற்கு ‘ஈஸ்வரன்’ என பெயரிடப்பட்டுள்ளது. வருகிற 2021-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையன்று தியேட்டரில் இப்படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போஸ்டரில் அவரின் மெலிந்த தோற்றத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.
    சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
    சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் சூரரைப் போற்று. கடந்த ஏப்ரல் மாதமே ரிலீசாக வேண்டிய இப்படம், கொரோனா லாக்டவுன் காரணமாக தள்ளிப்போனது. 7 மாதங்களாக தியேட்டர்கள் மூடிக்கிடப்பதால், இப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட இருப்பதாக சூர்யா அறிவித்திருந்தார். இம்மாத இறுதியில் வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில், விமானப்படை தரப்பில் இருந்து தடையில்லா சான்று கிடைக்க தாமதமானதால் படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளிவைக்கப்பட்டது.

    இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்னர் தடையில்லா சான்றிதழ் கிடைத்த நிலையில், தற்போது படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ள படக்குழு, படத்தின் ரிலீஸ் தேதியையும் அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் தீபாவளி பண்டிகைக்கு 2 நாள் முன்னதாகவே (நவம்பர் 12-ந் தேதி) ரிலீஸ் செய்யப்படுகிறது.  


    இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. இறுதிச்சுற்று படத்தின் இயக்குனரான சுதா கொங்கரா இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும் தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் (நவம்பர்) 22-ந்தேதி நடைபெற இருக்கிறது.
    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு 2 வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும். புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் (நவம்பர்) 22-ந்தேதி நடைபெற இருக்கிறது. அதில் தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தர், ‘தேனாண்டாள் பிலிம்ஸ்’ என்.ராமசாமி என்கிற முரளி ராம.நாராயணன், பி.எல்.தேனப்பன் ஆகிய 3 பேர் போட்டியிடுகிறார்கள். துணைத் தலைவர்கள் பதவிக்கு சிவசக்தி பாண்டியன், பி.டி.செல்வகுமார், முருகன், ஆர்.கே.சுரேஷ் ஆகிய 4 பேர் போட்டியிடுகிறார்கள். செயலாளர்கள் பதவிக்கு ‘கலைப்புலி’ ஜி.சேகரன், மன்னன், சுபாஷ் சந்திரபோஸ், ராதாகிருஷ்ணன், ராஜேஷ் ஆகியோரும், பொருளாளர் பதவிக்கு கே.ராஜன், சந்திரபிரகாஷ் ஜெயின் ஆகியோரும் போட்டியிடுகிறார்கள்.

    வேட்பு மனு தாக்கல், கடந்த 15-ந் தேதி தொடங்கியது. டி.ராஜேந்தர், முரளி, பி.எல்.தேனப்பன் ஆகிய 3 பேரும் நேற்று முன்தினம் வேட்பு மனு தாக்கல் செய்தார்கள். வேட்பு மனுவை வாபஸ் பெற வருகிற 29-ந்தேதி கடைசி நாள். ஓட்டுப்பதிவு நவம்பர் 22-ந்தேதி காலை 8 மணிக்கு தொடங்கும். அன்று மாலையே முடிவுகள் அறிவிக்கப்படும்.
    ஜேம்ஸ்வசந்தன் இயக்கத்தில் ராதிகா, சுஹாசினி, குஷ்பு, ஊர்வசி நடித்துள்ள 'ஓ அந்த நாட்கள்' படத்தின் முன்னோட்டம்.
    மிராக்கிள் எண்டர்டைன்மென்ட் தயாரிப்பில் ‘ஓ அந்த நாட்கள்’ எனும் ‘ரொமாண்டிக் காமெடி’ திரைப்படத்தை இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் எழுதி, இசையமைத்து, இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் தயாராகும் இப்படத்தில் 1980’களின் நட்சத்திர நாயகிகள் ராதிகா, குஷ்பு, ஊர்வசி, சுகாசினி ஆகியோர் நடித்திருக்கின்றனர். 

    ஓ அந்த நாட்கள் படக்குழு

    இப்படத்தில், நான்கு நடிகைகளுடன் ஜித்தின் ராஜ் - லதா ஹெக்டே ஜோடியும், ஒய் ஜி மகேந்திரன், சுலக்ஷனா, மனோபாலா, பானுசந்தர் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். இயக்குனர் சுந்தர்.சி சிறப்பு வேடத்தில் வந்து மெருகேற்றுகிறார். இப்படத்தின் 80 சதவீத காட்சிகள் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் ஜேம்ஸ் வசந்தன். 
    தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் மகேஷ் பாபு, நயன்தாராவின் படத்துக்காக உதவி செய்ய உள்ளாராம்.
    நடிகை நயன்தாரா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மூக்குத்தி அம்மன்’. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ள ஆர்.ஜே.பாலாஜி, இயக்குனர் என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கி உள்ளார். வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே.கணேஷ் தயாரித்து இருக்கும் இப்படம் வருகிற தீபாவளி பண்டிகையன்று ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

    நயன்தாரா, ஆர்.ஜே.பாலாஜி

    இப்படத்தின் டிரெய்லர் தமிழ் மற்றும் தெலுங்கில் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் தெலுங்கு டிரெய்லரை வெளியிடப்போவது யார் என்ற தகவலை ஆர்.ஜே.பாலாஜி வெளியிட்டுள்ளார். அதன்படி பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு டிரெய்லரை வெளியிட உள்ளார். இதன் தமிழ் டிரெய்லர் நாளை நடைபெறும் ஐபிஎல் போட்டியின் இடையில் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
    சிம்புவின் 46-வது படத்தில் ஹீரோயினாக நடித்து வரும் நிதி அகர்வால் தற்போது பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
    தெலுங்கு நடிகையான நிதி அகர்வாலுக்கு தற்போது தமிழ் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி உள்ள பூமி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

          உதயநிதி ஸ்டாலின்

    இந்நிலையில், நிதி அகர்வால் மேலும் ஒரு தமிழ் படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தமாகி உள்ளார். மகிழ்திருமேனி இயக்க உள்ள புதிய படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக அவர் நடிக்க உள்ளாராம். முன்னதாக அனு இமானுவேல் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். தற்போது கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவர் விலகியதால் நிதி அகர்வாலை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
    பிரபல ஹாலிவுட் நடிகரான அர்னால்டு, தான் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும், தற்போது நலமுடன் இருப்பதாகவும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
    நுரையீரல் வால்வை மாற்றுவதற்காக கடந்த 2018 ஆம் ஆண்டில் அர்னால்டுக்கு முதல் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில், அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர், தான் இரண்டாவது இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும், தற்போது நலமுடன் இருப்பதாகவும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

    இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள டுவிட்டில், மருத்துவ குழுவுக்கு நன்றி. நான் தற்போது அருமையாக உணர்கிறேன். ஏற்கனவே கிளீவ்லேண்டின் தெருக்களில் உள்ள அற்புதமான சிலைகளை கண்டுகளித்தவாறு நடைபயிற்சி செய்தேன். எனக்கு சேவை செய்த செவிலியர்களுக்கும் மருத்துவர்களுக்கும் நன்றி" என கூறி உள்ளார்.

    அர்னால்டின் டுவிட்டர் பதிவு

    மேலும் தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும், நடைபயிற்சி செய்த போது எடுத்த புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
    தளபதி 65 படத்தில் இருந்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் விலகி உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
    விஜய் நடிப்பில் தற்போது மாஸ்டர் திரைப்படம் உருவாகி உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் ரிலீசுக்காக காத்திருக்கிறது. இதனிடையே விஜய்யின் 65-வது படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்த வகையில், விஜய்யின் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. 

    முருகதாஸ் அப்படத்தை இயக்க உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தளபதி 65 படத்தில் இருந்து விலகி உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் சொன்ன கதை விஜய்க்கு பிடித்திருந்தாலும், தயாரிப்பு தரப்பு சில மாற்றங்களை செய்ய சொன்னதாம். அதில் ஏ.ஆர்.முருகதாஸுக்கு உடன்பாடு இல்லாததால் அவர் அப்படத்திலிருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது.

    ஏ.ஆர்.முருகதாஸ்

    விஜய்யை வைத்து துப்பாக்கி, கத்தி, சர்கார் என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ் தளபதி 65 படத்திலிருந்து விலகி உள்ளதாக கூறப்படுவதால் ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர். சிலரோ இது வெறும் வதந்தியாக இருக்கும் என கூறி வருகின்றனர். அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் தான் எது உண்மை என்பது தெரியவரும்.  
    ×