என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை காஜல் அகர்வால் வெளியிட்ட போட்டோவிற்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
    தமிழ், தெலுங்கு திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால், கமல்ஹாசன் உடன் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார். காஜல் அகர்வாலுக்கும் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் கவுதம் கிட்சுலுவுக்கும் அக்டோபர் 30-ம் தேதி மும்பையில் திருமணம் நடைபெற இருக்கிறது. 

    இத்தகவலை காஜல் அகர்வால் கடந்த அக்டோபர் 6-ம் தேதி சமூகவலைதளங்களில் வெளியிட்டிருந்தார். இதையடுத்து திருமணத்துக்கு முன்பாக நண்பர்களுடன் பேச்சிலர் பார்ட்டி கொண்டாடிய காஜல் அகர்வால் அதையும் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.

    வருங்கால கணவருடன் காஜல் அகர்வால்

    இந்நிலையில் முதல்முறையாக தனது வருங்கால கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டிருக்கும் அவர் தசரா வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். 
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஷால் ஒரே நாளில் இரண்டு படத்திற்கான பூஜை போட்டிருக்கிறார்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இவர் நடிப்பில் தற்போது சக்ரா திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் ரெஜினா, ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். எம்எஸ் ஆனந்தன் இயக்கியுள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. 

    அதுபோல் விஷால் நடிப்பில் உருவாகி வரும் மற்றொரு படம் துப்பறிவாளன் 2. இந்த படத்தை விஷாலே இயக்கிவருகிறார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்து வருகிறார்.

    பூஜை

    ஆயுத பூஜையை முன்னிட்டு சக்கரா படத்தின் பின்னணி வேலைகளுக்கான பூஜையும், துப்பறிவாளன் 2 படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்கான பூஜையும் ஒரே நாளில் போட்டிருக்கிறார் நடிகர் விஷால். 
    தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் நடித்து பிரபலமாக இருக்கும் சாய்பல்லவி குழந்தைகளை நெகிழ வைத்திருக்கிறார்.
    பிரேமம் என்ற மலையாள படம் மூலம் அறிமுகமான சாய்பல்லவி தமிழில் மாரி 2 என் ஜி கே ப டங்களில் நடித்தார். தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுடன் லவ் ஸ்டோரி எனும் படத்தில் சாய் பல்லவி தற்போது நடித்து வருகிறார். 

    அதற்கான படப்பிடிப்பின்போது கிராமத்து குழந்தைகளுக்கு நடிகை சாய் பல்லவி மெஹந்தி வைத்து அசத்தியுள்ளார்.
    உத்தரபிரதேசத்தில் இதற்கான படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், அங்கிருக்கும் கிராமத்து குழந்தைகளுக்கு நடிகை சாய் பல்லவி மெஹந்தி வைத்தார்.

    குழந்தைகளுடன் சாய் பல்லவி

    இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் அதிகமாக பகிரப்பட்ட நிலையில், ஆச்சரியப்பட்ட நடிகைகள் சமந்தா, அனுபமா ஆகியோர் சாய்பல்லவியை புகழ்ந்துள்ளார்கள்.
    தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களாக இருக்கும் ஜீவா மற்றும் அருள்நிதி இருவரும் களத்தில் சந்திக்க தயாராகி வருகிறார்கள்.
    பல மாதங்களுக்குப் பிறகு திரையரங்குகளில் படங்கள் ரிலீஸ் ஆகப்போகும் சூழலில் சூப்பர்குட் ஃபிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரியின் 90வது படமான 'களத்தில் சந்திப்போம்' திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஜீவா, அருள்நிதி இருவரும் கதாநாயகர்களாக நடிக்கும் இதில் மஞ்சிமா மோகன், பிரியா பவனி சங்கர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். மேலும் ராதாரவி, ரோபோசங்கர், பால சரவணன் இளவரசு, ஆடுகளம் நரேன், மாரிமுத்து, வேலராமமூர்த்தி, ரேணுகா, ஸ்ரீரஞ்சனி, பூலோகம் ராஜேஷ், பெனிடோ ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள் .

    இவர்களுடன் பிசாசு பட புகழ் பிரக்யா மார்ட்டின் கௌரவ வேடத்தில் தோன்றுகிறார்.

    அருள்நிதி - ஜீவா

    "களத்தில் சந்திப்போம்" படம் இரண்டு நண்பர்களுக்குள் உள்ள நட்பை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அதிரடி ஆக்சன் கமர்சியல் படமாக உருவாகியுள்ளது. நட்பு, காதல், நகைச்சுவை, அதிரடி என அனைத்து அம்சங்களும் நிறைந்த ஜனரஞ்சக படம் இது.

    தற்போது களத்தில் சந்திப்போம் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. டீசரை நடிகர் ஆர்யா மற்றும் விஜய்சேதுபதி ஆகியோர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர்.
    வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை கொடுப்பதில் கைதேர்ந்தவரான செல்வராகவன், அடுத்ததாக இளம் நடிகரின் படத்தை இயக்க உள்ளாராம்.
    தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனர்களுள் ஒருவர் செல்வராகவன். காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், என்.ஜி.கே என்று வித்தியாசமான கதையம்சம் உள்ள படங்களை கொடுத்தார்.

    செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடித்த மன்னவன் வந்தானடி, எஸ்.ஜே.சூர்யா நடித்த நெஞ்சம் மறப்பதில்லை ஆகிய படங்கள் சில வருடங்களுக்கு முன்பே முடிந்தும் இன்னும் திரைக்கு வராமல் முடங்கி உள்ளன. 

    கவுதம் கார்த்திக்

    இவர் அடுத்ததாக தனுஷை வைத்து படம் இயக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் தனுஷ் அடுத்தடுத்து வெவ்வேறு இயக்குனர்களின் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதால், அவர் செல்வராகவன் படத்தில் தற்போது நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

    இதனால் குறுகிய காலத்தில் ஒரு படத்தை எடுத்து முடிக்க செல்வராகவன் திட்டமிட்டுள்ளாராம். இந்த படத்தில் நடிக்க கவுதம் கார்த்திக்கிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    விசா வாங்க தான் கல்யாணமே பண்ணினேன் என ரஜினி பட நடிகை கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
    தமிழில் டோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச் செல்வன் ஆகிய படங்களில் நடித்தவர் ராதிகா ஆப்தே, கபாலி படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்ததன் மூலம் மேலும் பிரபலமானார். இந்தியில் பல்வேறு ஹிட் படங்களில் நடித்திருக்கும் இவர் ஹாலிவுட் படங்களிலும் நடித்து இருக்கிறார். இயக்குனர் ஒருவர் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். ராதிகா ஆப்தேவும் இங்கிலாந்தை சேர்ந்த இசைக்கலைஞர் பெனடிக்ட் டெய்லரும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர். கொரோனாவுக்கு முன்பு லண்டன் சென்றிருந்த அவர் தற்போது அங்கேயே தங்கி உள்ளார். 

    ராதிகா ஆப்தே, பெனடிக்ட் டெய்லர்

    இந்நிலையில் சமீபத்தில் தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றபோது ராதிகா ஆப்தேவிடம் திருமணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து அவர் பேசும்போது, “எனக்கு திருமணத்தின் மீது நம்பிக்கையில்லை. விசா பெறுவது பெரும் பிரச்சினையாக உள்ளது. லண்டனை சேர்ந்தவரை திருமணம் செய்தால் விசா எளிதாக கிடைத்துவிடும் என்று அறிந்தேன். அதனால் தான் திருமணம் செய்தேன். ஆனாலும் இது நியாயமற்ற செயல் தான்” என்றார். ராதிகா ஆப்தேவின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஒடிசாவை சேர்ந்த ரசிகை ஒருவர் எழுதிய கடிதத்தை படித்ததும் நடிகர் சிம்பு கண்கலங்கி விட்டதாக மஹத் தெரிவித்துள்ளார்.
    சிம்பு நடித்து வரும் ஈஸ்வரன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. இந்த படத்திற்காக அவர் கடந்த சில மாதங்களாக கடினமாக உடற்பயிற்சி செய்து உடல் எடையை வெகுவாக குறைத்து மெலிந்த தோற்றத்துக்கு மாறியுள்ளார். அவரின் தோற்றத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகினர். சிம்பு இஸ் பேக் என கொண்டாடி வருகின்றனர்.

    இந்நிலையில், ஒடிசாவை சேர்ந்த சிம்புவின் தீவிர ரசிகை ஒருவர் கடிதம் மூலம் தனது அன்பை வெளிப்படுத்தி உள்ளார். அந்த கடிதத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள அவர் கூறியதாவது: எனக்கு கடந்த 3 நாட்களாக தொண்டை வலி, தலைவலி மற்றும் காய்ச்சல் இருப்பதால் என்னால் எதையும் பதிவு செய்ய முடியாத நிலையில் இருக்கிறேன். வாழ்க்கை நிலையில்லாதது. அடுத்து என்ன நடக்கும்னு எனக்கு தெரியாது, எல்லாம் கடவுளின் கையில் உள்ளது. இந்த குறுஞ்செய்தி சிம்பு சாருக்காக.

    சிம்பு ரசிகையின் டுவிட்டர் பதிவு

    நீங்கள் மீண்டும் சமூக வலைதளத்திற்கு வந்துள்ளது எங்களுக்கு மனநிறைவை தந்துள்ளது. மோஷன் போஸ்டர் மெய்சிலிர்க்கவைத்தது, அதை பார்த்து பேச்சே வரவில்லை. என் வாழ்க்கையில் நீங்கள் மட்டும் தான் உத்வேகம் அளிக்கிறீர்கள். உங்களின் வசனங்கள், பாடல்கள், படங்கள் மூலம் எனக்கு நம்பிக்கை, அன்பு, உற்சாகம் அளிப்பதற்கு நன்றி. நீங்கள் சிறந்தவர் என்று அதில் தெரிவித்துள்ளார். 

    அவர் எழுதிய கடிதத்தை பார்த்து சிம்பு கண் கலங்கிவிட்டதாக, அவரின் நெருங்கிய நண்பரும், நடிகருமான மஹத் ராகவேந்திரா தெரிவித்துள்ளார். 
    போதைப்பொருள் விவகாரம் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், பிரபல தொலைக்காட்சி நடிகை ஒருவர் கஞ்சா வாங்கியபோது பிடிபட்டுள்ளார்.
    போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக இந்தி நடிகையும், மரணமடைந்த சுஷாந்த் சிங் காதலியுமான ரியா சக்கரவர்த்தி கைதானார். ரியாவின் சகோதரர் சோவிக் மற்றும் சாமுவேல் மிரண்டா ஆகியோரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். நடிகைகள் ரகுல் பிரீத் சிங், தீபிகா படுகோனே, ஷரத்தா கபூர், சாரா அலிகான் ஆகியோர் சம்மன் அனுப்பி விசாரிக்கப்பட்டனர். 

    இதேபோல் கன்னட நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோரும் போதைப்பொருள் விவகாரத்தில் கைதாகி சிறையில் உள்ளனர். 

    பிரீத்திகா சவுகான்

    இந்நிலையில் தற்போது மேலும் ஒரு நடிகையையும் கைது செய்துள்ளனர். அவரின் பெயர் பிரீத்திகா சவுகான். இவர் சி.ஐ.டி, தேவோ கே தேவ் மகாதேவ், சாவ்தான் இந்தியா, ஹனுமான் உள்பட பல டி.வி. சீரியல்களில் நடித்து இருக்கிறார். மும்பையில் ஒருவரிடம் இருந்து கஞ்சா வாங்கியபோது பிரீத்திகா சவுகானை போலீசார் கைது செய்துள்ளனர். போதைப்பொருள் விவகாரத்தில் நடிகைகள் அடுத்தடுத்து கைதாவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கொரோனா பயத்தை போக்க நடிகர்களும், ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்க்க வேண்டும் என தியேட்டர் அதிபர் பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம், சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: “கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சினிமா தியேட்டர்களும் கடந்த 8 மாதங்களாக மூடப்பட்டுள்ளன. கொரோனாவின் தாக்கம் தற்போது குறைந்து வருவதாலும், தியேட்டர் அதிபர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டும், தமிழகம் முழுவதும் உள்ள தியேட்டர்கள் விரைவில் திறக்கப்படும் என்று அரசு அறிவித்து உள்ளது.

    திரையரங்கம்

    அரசு உத்தரவின்படி, அனைத்து தியேட்டர்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் மீது ரசிகர்களும், பொதுமக்களும் நம்பிக்கை வைக்க வேண்டும். தமிழ்நாட்டில் ஒரு காலகட்டத்தில் பறவைக் காய்ச்சல் பரவியபோது அமைச்சர்கள், பொதுமக்களுடன் அமர்ந்து கோழிக்கறி சாப்பிட்டு, பொதுமக்களின் பயத்தை போக்கினார்கள். அதுபோல பொதுமக்களுக்கு பயம் வராமல் இருக்க அவர்களுடன் நடிகர்கள் அமர்ந்து படம் பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு பன்னீர்செல்வம் கூறினார்.
    இந்தி நடிகர் அமிதாப்பச்சன் தந்தை ஹரிவன்ஷ் ராய் பச்சனை கவுரவிக்கும் வகையில் போலந்து நாட்டின் ரோக்லா நகர நிர்வாகம், அங்குள்ள ஒரு சதுக்கத்துக்கு அவரது பெயரை சூட்டியுள்ளது.
    மும்பை:

    இந்தி நடிகர் அமிதாப்பச்சன் தந்தை ஹரிவன்ஷ் ராய் பச்சன், கடந்த 2003-ம் ஆண்டு காலமானார். அவர் புகழ்பெற்ற கவிஞரும் ஆவார். அவரை கவுரவிக்கும் வகையில், போலந்து நாட்டின் ரோக்லா நகர நிர்வாகம், அங்குள்ள ஒரு சதுக்கத்துக்கு அவரது பெயரை சூட்டியுள்ளது.

    இதை அமிதாப்பச்சன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். தந்தை பெயர் பொறிக்கப்பட்ட பெயர் பலகை படத்தையும் அவர் இணைத்துள்ளார்.

    அதில், “தசராவையொட்டி, இதைவிட பெரிய ஆசீர்வாதம் வேறு இருக்க முடியாது. இது எங்கள் குடும்பத்துக்கும், ரோக்லாவில் உள்ள இந்தியர்களுக்கும், இங்குள்ள இந்தியர்களுக்கும் பெருமைக்குரிய தருணம் ஆகும்” என்று அமிதாப்பச்சன் கூறியுள்ளார்.
    ராம்குமார் சுப்பாராமன் இயக்கத்தில் நந்திதா ஸ்வேதா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஐபிசி 376 படத்தின் முன்னோட்டம்.
    நந்திதா ஸ்வேதா நடிப்பில் ஐபிசி 376 என்ற ஆக்‌ஷன் ஹாரர் கலந்த மாஸ் கமர்சியல் படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் பெரும்பாலும் டூப் இல்லாமலே துணிச்சலாக நடித்துள்ளார் நந்திதா ஸ்வேதா. இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி படத்தை இயக்கி வருகிறார் ராம்குமார் சுப்பாராமன். இப்படம் பெண்களைப் போற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 

    படத்தின் தலைப்பில் உள்ள ஐபிசி 376 என்பது பெண்கள் மீதான பாலியல் கொடுமைக்கு எதிரான சட்டத்தைக் குறிக்கிறது. விறுவிறுப்பாக தயாராகி வரும் இப்படத்தில் அண்ணாதுரை, தகாராறு படங்களில் பணியாற்றிய கே.தில்ராஜ் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார். கோலமாவு கோகிலா படத்தின் எடிட்டர் நிர்மல் எடிட்டிங் பணியை கவனிக்கிறார். பவர்கிங் ஸ்டூடியோ சார்பாக எஸ்.பிரபாகர் படத்தை மிக பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.
    திரெளபதி படத்தின் மூலம் பிரபலமான மோகன் ஜி, தனது அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
    மோகன் ஜி இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான திரைப்படம் ‘திரெளபதி’. ரிச்சர்டு ரிஷி நாயகனாக நடித்திருந்த இப்படம் நாடக காதல், ஆணவக்கொலைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு, வசூலிலும் பல்வேறு சாதனைகளை படைத்தது. 

    இந்நிலையில் தான் இயக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பை இயக்குனர் மோகன் ஜி வெளியிட்டுள்ளார். அதன்படி இத்திரைப்படத்துக்கு ‘ருத்ர தாண்டவம்’ என பெயரிடப்பட்டுள்ளது. ‘திரெளபதி’ பட நாயகன் ரிச்சர்ட் ரிஷி தான் இந்தப் படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார். மேலும் இப்படத்திற்கு ஜூபின் இசையமைக்க உள்ளார்.

    ருத்ர தாண்டவம் பட போஸ்டர்

    மற்ற நடிகர், நடிகைகளின் தேர்வு நடைபெற்று வருவதாகவும், வருகிற டிசம்பர் மாதம் படப்பிடிப்பை தொடங்கி, 2021-ம் ஆண்டு மே மாதம் படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.
    ×