என் மலர்
சினிமா செய்திகள்
நடிகர் கமலுக்கு எழுதிய கதையை ரஜினி விரும்பியதாகவும் இறுதியாக அந்த படத்தில் அஜித் நடித்ததாகவும் பிரபல இயக்குனர் ஒருவர் கூறியிருக்கிறார்.
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல், ஜோதிகா, ஜெயராம், தேவயானி உள்ளிட்டோர் நடித்த தெனாலி படம் ரிலீஸாகி 20 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்நிலையில் தெனாலி பட அனுபவங்கள் பற்றி ரவிக்குமார் கூறியதாவது, கமல் சாரின் மருதநாயகம் படம் தள்ளிப்போனது. அதனால் அவர் என்னை தன் அலுவலகத்திற்கு வரச் சொல்லி, தான் ஓராண்டில் இரண்டு படங்களில் நடிக்க திட்டமிட்டிருப்பதாக கூறினார். ஒரு படத்தை நானே இயக்கி நடிக்கிறேன், இன்னொரு படத்தை நீங்கள் இயக்குகிறீர்களா என்று கேட்டார். நானும் சரி என்றேன்.
சில நாட்கள் கழித்து மீண்டும் என்னை அலுவலகத்திற்கு வரவழைத்து, நான் இயக்கும் படத்தை நானே தயாரிக்கிறேன், நீங்கள் இயக்கும் படத்தை நீங்கள் தயாரிக்கிறீர்களா என்று கேட்டார். நான் தயாரிப்பாளர் ஆவது பற்றி யோசிக்கவே இல்லை. அதனால் அது குறித்து முடிவு எடுக்க அவகாசம் கேட்டேன்.
அதற்கு அவரோ, தைரியமா பண்ணுங்க சார். நான் கால்ஷீட் தருகிறேன். உங்க ஆபீஸுல வந்து படுத்துடுறேன். எப்போ வேணுமோ கூப்பிடுங்க என்றார். படையப்பா அப்பொழுது தான் ரிலீஸாகியிருந்தது. அது பெரிய ஹிட்டானது. ரஜினி சார் அடிக்கடி என் அலுவலகத்திற்கு வருவார். ஒரு நாள் அவரிடம் கமல் சார் சொன்னதை கூறினேன். அதற்கு ரஜினி சாரோ, நல்ல விஷயமாச்சே, போய் எவ்வளோனு கேளுங்க, கேட்டு அட்வான்ஸ் கொடுங்க என்றார்.

எல்லோரும் ஊக்குவித்ததால் நான் பணத்திற்கு ஏற்பாடு செய்தேன். படத்திற்கு தெனாலி என்கிற தலைப்பை பரிந்துரை செய்ததே ரஜினி சார் தான். கமல் சார் அவர் படத்தை 6 மாதத்தில் முடித்துவிடுவார் என்று நினைத்தேன், ஆனால் ஓராண்டு ஆகிவிட்டது, அது ஹேராம். அப்பொழுது ரஜினி சார் என்னிடம், நான் உங்கள இழுத்துவிட்டுட்டேனா என்று கேட்டார். இல்லை, இல்லை இந்த நேரத்தை பயன்படுத்தி நான் கமல் சாருக்காக சில கதைகள் எழுதுகிறேன் என்றேன்.
நான் எழுதிக் கொண்டிருந்த மற்றொரு கதையை கேட்ட ரஜினி சார், இந்த படத்தை கமல் பண்ணாவிட்டால் நான் நடிக்கிறேன் என்றார். அந்த படத்திற்கு மதனா என்று தலைப்பு வைத்தார் ரஜினி. அந்த படத்தை தான் நான் பின்னர் வரலாறு என்கிற பெயரில் அஜித்தை வைத்து எடுத்தேன். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவரான விவேக்கின் சால்ட் அண்ட் பெப்பர் லுக் போட்டோஷூட் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் விவேக். காமெடி நடிகர் மட்டுமில்லாமல் குணசித்திர கதாபாத்திரத்திலும் நடித்து அசத்தி இருக்கிறார். கருத்தோடு காமெடி சொல்லும் இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. மேலும் தமிழ் சினிமாவில் சின்ன கலைவாணர் என்ற அழைக்கப்பட்டு வருகிறார்.
இந்நிலையில், நடிகர் விவேக் போட்டோஷூட் ஒன்றை எடுத்துள்ளார். வெள்ளை நிற உடையில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் ஸ்டைலிஷாக இருக்கும் விவேக்கின் இந்த போட்டோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

என்னுடைய இந்த தோற்றத்திற்கு முழு காரணம் காஸ்ட்யூம் ஸ்டைலிஷ் சத்யாவும், அவர் குழுவும் தான் காரணம் என்று கூறி அவர்களுக்கு நன்றி கூறியிருக்கிறார் விவேக்.
கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 4 போட்டியில் இருக்கும் அர்ச்சனா, மகன் பாசத்திற்காக ஏங்கி அழும் வீடியோ வெளியாகி இருக்கிறது.
கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 4 போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் ஜித்தன் ரமேஷ், ஆரி, ரியோ, பாலாஜி, ஆஜித், அனிதா சம்பத், அறந்தாங்கி நிஷா, சுரேஷ் சக்ரவர்த்தி, ஷிவானி, கேப்ரியல்லா, சனம் ஷெட்டி, ரேகா, ரம்யா பாண்டியன், சோம், சம்யுக்தா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில் நடிகை ரேகா முதல் ஆளாக வெளியேற்றப்பட்டார்.

கடந்த சில தினங்களாக பாலாவுக்கும் அர்ச்சனாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. தற்போது புதிய புரமோ வெளியாகி இருக்கும் நிலையில், அதில், அர்ச்சனா பாலாவிடம் கண் கலங்கி கதறி அழுவது போல காட்டப்படுகிறது. மேலும், ''நீ எனக்கு புள்ளையா வேணும்டா.. எனக்கு புள்ளை கிடையாதுடா..'' என அர்ச்சனா கதறி, பாலா அவரை தேற்றுவது போலவும் எமோஷனலாக இந்த புரமோ வெளியாகியுள்ளது.
கே.ஜானகி ராமன் இயக்கத்தில் துருவா, பாலசரவணன், சஞ்சிதா ஷெட்டி நடிப்பில் உருவாகி இருக்கும் தேவதாஸ் பிரதர்ஸ் படத்தின் முன்னோட்டம்.
எக்ஸட்ரா எண்டர் டெய்ன்மெண்ட் சார்பில் தயாராகும் படம் தேவதாஸ் பிரதர்ஸ். துருவா, பாலசரவணன், அஜய் பிரசாத், ‘மெட்ராஸ்’ ஹரிகிருஷ்ணன் என 4 பேர் நாயகர்கள். சஞ்சிதா ஷெட்டியுடன், அறிமுகங்கள் ஷில்பா, தீப்தி மன்னே, ஆரா என 4 பேர் நாயகிகள். இவர்களுடன் மயில்சாமி, ரோபோ சங்கர் உள்பட பலர் நடிக்கிறார்கள். இப்படத்தை கே.ஜானகி ராமன் இயக்கி உள்ளார். தரன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் கூறியதாவது: சென்னையில் அடையாறு, ஆழ்வார்பேட்டை, கே.கே.நகர், வியாசர்பாடி என நான்கு வெவ்வேறு பகுதிகளில் வசிக்கும் நான்கு இளைஞர்கள் ஒருவரையொருவர் அறியாமலேயே ஒருவர் வாழ்க்கையில் மற்றவர்கள் சம்பந்தப்படுகிறார். அது தெரிந்த பிறகு அவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் திருப்பங்கள் என்ன என்பது கதை. அவர்கள் யார் எப்படி ஒன்று சேருகிறார்கள் என்பது திரைக்கதையின் போக்காக இருக்கும் என கூறியுள்ளார்.
பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் புதிய படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார்.
நடிகர், இயக்குனர், நடன இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவர் ராகவா லாரன்ஸ். இவர் இயக்கி, நடித்த காஞ்சனா படத்தின் 3 பாகங்களும் நல்ல வசூல் பார்த்தன. இவர் தற்போது காஞ்சனா படத்தை இந்தியில் ‘லட்சுமி பாம்’ என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார். அக்ஷய் குமார் ஹீரோவாக நடித்துள்ள இப்படம் அடுத்த மாதம் ஓடிடி-யில் ரிலீசாக உள்ளது.
இதனிடையே இவர் நடிக்கும் அடுத்த படத்தை பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்க உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், அப்படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் முதன்முறையாக லாரன்ஸ் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இப்படத்தின் தலைப்பு மற்றும் இதர விவரங்களை நாளை வெளியிட உள்ளனர்.
நடிகை சமீரா ரெட்டி மீண்டும் தமிழ் படத்தில் நாயகியாக களமிறங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஷால், ஆர்யா ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்கள். பாலா இயக்கிய ‘அவன் இவன்’ படத்தில் இருவரும் இணைந்து நடித்தார்கள். சில வருட இடைவெளிக்குப்பின் இரண்டு பேரும் ஒரு புதிய படத்தில் மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள். இன்னும் பெயர் சூட்டப்படாத இந்த படத்தை ஆனந்த் சங்கர் இயக்குகிறார். இவர் ‘அரிமா நம்பி,’ ‘இருமுகன்,’ ‘நோட்டா’ ஆகிய படங்களை இயக்கியவர். எஸ்.வினோத்குமார் தயாரிக்கிறார்.

இதில் விஷால் கதாநாயகனாகவும், ஆர்யா வில்லனாகவும் நடிக்கிறார்கள். விஷாலுக்கு ஜோடியாக மிருணாளினி நடிக்க இருக்கிறார். அதேபோல் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிகை சமீரா ரெட்டி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே ஆர்யாவுடன் வேட்டை படத்தில் இணைந்து நடித்திருந்தார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத், ஊட்டி ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது. முக்கிய காட்சிகள் மலேசியாவில் படமாக்கப்பட உள்ளன.
மணிரத்னம் தயாரிப்பில் உருவாகும் ‘நவரசா’ என்ற படத்தில் பிரபலங்கள் பலர் சம்பளம் வாங்காமல் பணியாற்றி உள்ளார்களாம்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மணிரத்னம், அடுத்ததாக ‘நவரசா’ என்ற ஆந்தாலஜி படத்தை ஜெயேந்திராவுடன் இணைந்து தயாரித்து வருகிறார். நவரசங்களை அடிப்படையாக கொண்டு உருவாகும் இந்த ஆந்தாலஜி படத்தை கார்த்திக் நரேன், கார்த்திக் சுப்புராஜ், கே.வி. ஆனந்த், பிஜாய் நம்பியார், பொன்ராம், கவுதம் மேனன், ரதீந்திரன் பிரசாத், ஹலீதா ஷமீம், அரவிந்த்சாமி ஆகிய 9 இயக்குனர்கள் இயக்குகின்றனர். இதன் மூலம் நடிகர் அரவிந்த்சாமி இயக்குனராக அறிமுகமாகிறார்.
கொரோனாவால் கடும் பாதிப்பை சந்தித்துள்ள திரையுலகிற்கு நிதி திரட்டும் நோக்கில் இந்த ஆந்தாலஜி படத்தை எடுத்துள்ளனர். இந்த திரைப்படத்தில் பணியாற்றும் அனைத்து கலைஞர்களும், திரைத்துறைக்கு ஆதரவு தர வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன், இலவசமாகப் பணியாற்றியுள்ளனர்.

நடிகர்கள் சூர்யா, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, சித்தார்த், பிரகாஷ் ராஜ், சரவணன், அழகம் பெருமாள், பிரசன்னா, விக்ராந்த், கவுதம் கார்த்திக், அசோக் செல்வன், ரோபோ சங்கர், ரமேஷ் திலக் ஆகியோர் இதில் நடித்துள்ளனர். நடிகைகள் ரேவதி, நித்யா மேனன், பார்வதி, ஐஸ்வர்யா ராஜேஷ், பூர்ணாம் ரித்விகா ஆகியோரும் நடித்துள்ளனர்.
இதில் சந்தோஷ் சிவன், பாலசுப்பிரமணியம், மனோஜ் பரமஹம்சா, ஹர்ஷ்வீர் ஓபராய், சுஜித் சராங், வி.பாபு, விராஜ் சிங், அபிநந்தன், ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஆகியோர் ஒளிப்பதிவாளராக பணிபுரிகின்றனர்.
இதற்கு ஏ.ஆ.ரஹ்மான், டி இமான், ஜிப்ரான், அருள்தேவ், கார்த்திக், ரோன் எத்தன் யோஹான், கோவிந்த் வசந்தா, ஜஸ்டின் பிரபாகரன் ஆகியோர் இசையமைக்க உள்ளனர்.
எழுத்தாளர்கள் பட்டுக்கோட்டை பிரபாகர், செல்வா, மதன் கார்க்கி, சோமிதரன் ஆகியோர் இந்த ஆந்தாலஜி படத்தில் பணியாற்றியுள்ளனர். இந்த படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிட உள்ளனர்.
தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் என்பது குறித்து இயக்குனர் சீனு ராமசாமி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக இயக்குனர் சீனு ராமசாமி இன்று காலை டுவிட்டரில் பதிவிட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அதுகுறித்து விளக்கம் அளிக்க சென்னையில் உள்ள தனது இல்லத்தில் இயக்குனர் சீனுராமசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: “விஜய் சேதுபதி நலன் கருதியே 800 படத்தில் நடிக்க வேண்டாம் என கூறினேன். அப்படி நடித்தால் தமிழர்களின் விரோதத்தை எதிர்கொள்ள நேரிடும் என அறிவுறுத்தினேன். எல்லோரும் சொன்னதுபோல் நானும் விஜய் சேதுபதியிடம் கோரிக்கை தான் வைத்தேன். அது தவறா?

விஜய் சேதுபதிக்கு எதிராக நான் செயல்பட்டதாகக் கூறி தொடர்ந்து மிரட்டல்கள் வருகின்றன. விஜய்சேதுபதிக்கும் எனக்கும் தனிப்பட்ட பிரச்சனை என சித்தரித்துள்ளனர். வாட்ஸ் அப் மூலமும், போனிலும் தொடர்ந்து மிரட்டல் வந்துகொண்டு இருக்கின்றன. சமூக வலைதளங்களில் ஆபாச வார்த்தைகளால் என்னை திட்டுகின்றனர். விஜய் சேதுபதி ரசிகர்கள் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடமாட்டார்கள். அவர்கள் மிரட்டவும் வாய்ப்பில்லை.
அவர்கள் எனது தம்பிகள். மிரட்டல்கள் தொடர்பாக, போலீசிடம் விரிவாக புகார் அளிக்க உள்ளேன். குடும்பத்துடன் வசிக்கும் எனக்கு இதுபோன்ற மிரட்டல்கள் தொடர்ந்து வருவதால், முதல்வர் கவனத்துக்கு உடனே கொண்டு செல்ல விரும்பினேன். யார் இதுபோன்ற செயல்களை செய்கிறார்கள் என்பது எனக்கு தெரியவில்லை” என்றார்.
தமிழ், தெலுங்கில் முன்னணி ஹீரோயினாக வலம்வரும் கீர்த்தி சுரேஷ், அடுத்ததாக பிரபல நடிகருக்கு தங்கையாக நடிக்க உள்ளாராம்.
சிவா இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் மற்றும் பலர் நடிக்க 2015ம் ஆண்டில் வெளிவந்து பெரிய வெற்றியைப் பெற்ற படம் 'வேதாளம்'. இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்வதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்கிறார்.
இயக்குனர் மெஹர் ரமேஷ் இப்படத்தை இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே சிரஞ்சீவி நடித்த 'பில்லா' படத்தின் தெலுங்கு ரீமேக்கை இயக்கியுள்ளார். வேதாளம் படத்தில் அஜித்தை அடுத்து மிக முக்கியமான கதாபாத்திரம் என்றால், அது லட்சுமி மேனன் கதாபாத்திரம் தான். தெலுங்கில் இந்த கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

இந்நிலையில், வேதாளம் ரீமேக்கில் சிரஞ்சீவிக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ், தெலுங்கில் முன்னணி ஹீரோயினாக வலம்வரும் கீர்த்தி சுரேஷ், தங்கை கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக இயக்குனர் சீனு ராமசாமி பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் சீனு ராமசாமி. இவர் தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். தற்போது விஜய் சேதுபதியை வைத்து மாமனிதன் எனும் படத்தை இயக்கி உள்ளார். இப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
இந்நிலையில் இன்று காலை சீனு ராமசாமி டுவிட்டர் பக்கத்தில், என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன். முதல்வர் அய்யா உதவ வேண்டும் அவசரம் என பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருந்த 800 படத்தில் இருந்து விலக வேண்டும் என வலியுறுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று காலை சீனு ராமசாமி டுவிட்டர் பக்கத்தில், என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன். முதல்வர் அய்யா உதவ வேண்டும் அவசரம் என பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருந்த 800 படத்தில் இருந்து விலக வேண்டும் என வலியுறுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த சின்னத்திரை நடிகை ஒருவருக்கு கத்திக்குத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மும்பையைச் சேர்ந்த சின்னத்திரை நடிகை மால்வி மல்கோத்ரா. இவர் இந்தி சீரியல்களில் நடித்து வருகிறார். நேற்று இரவு இவர் தனது வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது திடீரென காரை யோகேஷ் என்பவர் வழிமறித்துள்ளார்.

தன்னை ஒரு தயாரிப்பாளர் என்றும் தன்னை திருமணம் செய்து கொண்டால் அவருக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாகவும் கூறியுள்ளார். ஆனால் அதற்கு மறுத்த மல்கோத்ரா அவரிடமிருந்து தப்பிக்க முயற்சி செய்தார். இதனால் ஆத்திரமடைந்த யோகேஷ் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மல்கோத்ராவின் வயிற்றிலும் கைகளிலும் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

படுகாயம் அடைந்த நடிகை மல்கோத்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மால்வி மல்கோத்ராவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாகவும் மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கத்தியால் குத்திய யோகேஷ் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.
முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாராவுக்கு போட்டியாக பிரபல நடிகையும் பிக் பாஸ் போட்டியாளரான கஸ்தூரி களமிறங்கியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இவர் அம்மன் வேடத்தில் நடித்த ’மூக்குத்தி அம்மன்’ என்ற திரைப்படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வர உள்ளது. ஆர் ஜே பாலாஜி படத்தை இயக்கியுள்ளார். சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டிரைலர் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் திடீரென தனது சமூக வலைதளப் பக்கத்தில் நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான கஸ்தூரி, அம்மன் வேடத்தில் இருந்த புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். அதில் அவர் ’அனைவருக்கும் விஜயதசமி வாழ்த்துக்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த சிலர் நயன்தாராவுக்கு போட்டியா என்று கருத்து தெரிவித்துள்ளார்கள். மேலும், கஸ்தூரிக்கும் அம்மன் வேடம் கச்சிதமாக பொருந்தி இருப்பதாக ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.






