என் மலர்
சினிமா செய்திகள்
நடிகர் விஜய் எதற்காக தன்னை சந்தித்தார் என்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்துள்ளார்.
நடிகர் விஜய் கடந்த சில தினங்களுக்கு முன்னர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். மாஸ்டர் படம் பொங்கலையொட்டி வெளியாக உள்ளதால் தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்குமாறு முதல்வரிடம் விஜய் வேண்டுகோள் விடுத்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில், சட்டமன்ற தேர்தலுக்காக திருச்சியில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, விஜய் எதற்காக தன்னை சந்தித்தார் என்பது குறித்து பேசினார்.

அதில் அவர் கூறியதாவது: “நடிகர் விஜய் மாஸ்டர் படத்துக்காக மட்டும் என்னை சந்திக்கவில்லை. ஏகப்பட்ட படங்கள் ரிலீசாகாமல் உள்ளது. பல கோடி ரூபாய் செலவு செய்து படம் எடுத்துருக்காங்க. நிறைய பேருக்கு நஷ்டம் ஆகிட்டு இருக்கு. அந்த எல்லா படத்தையும் கருத்தில் கொண்டு எங்களுக்கு உதவி செய்யுங்கள்” என விஜய் கேட்டுக்கொண்டதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் ஜெயம் ரவி, நடிகைகளுக்கு சிபாரிசு செய்வதுண்டா என்பது குறித்து சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ஜெயம் ரவி நடித்து பொங்கல் விருந்தாக ‘பூமி’ படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்து இருக்கிறார். ‘ரோமியோ ஜுலியட்,’ ‘போகன்’ ஆகிய படங்களை இயக்கிய லட்சுமன் இப்படத்தை இயக்கி உள்ளார்.
பூமி படத்தை பற்றி ஜெயம் ரவி சமீபத்திய பேட்டியில் கூறியதாவது: ‘பூமி,’ விவசாயிகள் பிரச்சினையை பற்றி பேசும் படம். சில பாரம்பரியமான நல்ல விஷயங்களை நாம் எங்கோ தூக்கிப்போட்டு விட்டோம். அவைகளை மறந்து விட்டோம். உதாரணத்துக்கு கொரோனாவின் தாக்குதல்களுக்கு பின்னர்தான் அதை தடுக்கும் மருந்து ஆயுர்வேதத்தில் இருப்பது தெரியவந்தது.
அதுபோல்தான் இயற்கை விவசாயமும் உள்ளது. பூமி படத்தின் மிக சிறந்த அம்சம், திரைக்கதை. அனைத்து தரப்பினரும் ரசிக்கிற மாதிரி கதை சொல்லப்பட்டுள்ளது. ரசிகர்களுக்கு ரொம்ப பிடிக்கும். மிக நேர்மையாக கதை சொல்லியிருக்கிறார், இயக்குனர் லட்சுமன்.

உங்களுக்கு ஜோடியாக நடிக்கும் கதாநாயகிகள் பற்றி ‘‘இவர் பொருத்தமாக இருப்பார்” என்று யாருக்காவது சிபாரிசு செய்வது உண்டா? என்ற கேள்விக்கு பதிலளித்த ஜெயம் ரவி, அந்த சைடில் நான் போவது இல்லை. கதையை தேர்வு செய்வதில் நான் கவனம் செலுத்துகிறேன். அது அப்பாவிடம் இருந்து கற்றுக்கொண்டது”. இவ்வாறு ஜெயம் ரவி கூறினார்.
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘திரிஷ்யம் 2’ படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் என மோகன்லால் அறிவித்துள்ளார்.
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் 2013-ல் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் திரிஷ்யம். பாலியல் தொல்லை கொடுத்த இளைஞனை கொலை செய்த மகளை காப்பாற்ற போராடும் தந்தை பற்றிய கதை. ரூ.5 கோடி செலவில் உருவான இந்த படம் ரூ.75 கோடி வசூல் குவித்தது.
இதன் வெற்றி இந்தியா முழுவதும் அனைத்து மொழி திரையுலகினரையும் திரும்பி பார்க்க வைத்தது. திரிஷ்யம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் கமல்ஹாசன், கவுதமி ஆகியோர் நடித்தனர். இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் சீன மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.
தற்போது 7 வருடங்களுக்கு பிறகு திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகத்தை ஜீத்து ஜோசப் இயக்கி உள்ளார். இதிலும் மோகன்லாலே ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மீனா நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
Georgekutty and his family are coming soon on @PrimeVideoIN#Drishyam2OnPrime#HappyNewYear2021#MeenaSagar#JeethuJoseph@antonypbvr@aashirvadcine@drishyam2movie#SatheeshKuruppic.twitter.com/5l7cfCdCS3
— Mohanlal (@Mohanlal) December 31, 2020
இந்நிலையில், இப்படத்தின் டீசரை வெளியிட்ட மோகன்லால். இப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்படும் என அறிவித்துள்ளார். அதன்படி இப்படத்தை விரைவில் அமேசான் பிரைமில் வெளியிட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். முன்னணி நடிகர் ஒருவரின் படம் ஓடிடி-யில் வெளியாக உள்ளது மலையாள திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பிக்பாஸ் வீட்டுக்கு வந்த சிவானியின் தாயார், அவரை திட்டியதற்கு, பாடகி சின்மயி டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் போட்டியாளர்களின் உறவினர்கள் வந்தனர். அதில் முதல் நபராக வந்த சிவானியின் அம்மா, சிவானியை வறுத்தெடுத்தார். சிவானியின் அம்மா நடந்து கொண்ட விதம் சக போட்டியாளர்களுக்கு மட்டுமின்றி பிக்பாஸ் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியாக இருந்தது.
ஒரு பக்கம் சிவானியை அவரது அம்மா கண்டித்ததற்கு சிலர் பாராட்டு தெரிவித்தாலும், தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சி என்று பார்க்காமல் தனது மகளை இவ்வாறு திட்டி அசிங்கப்படுத்தி இருக்கக்கூடாது என்றும் பலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாடகி சின்மயி இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். அதில், “நான் பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பார்ப்பதில்லை, ஆனால் அந்த தாய் தன் மகளை அசிங்கப்படுத்தியதை நான் கேள்விப்பட்டேன். அது எனக்கு மிகவும் தவறாக தெரிகிறது.
ஊர்ல 4 பேர் என்ன சொல்வாங்கனு சொல்லி பல அம்மாக்கள் தங்களுடைய மகள்களை அசிங்கப்படுத்துகிறார்கள். நீங்கள் பெற்றோர் எனில், தயவு செய்து உங்கள் மகளின் குணாதிசயங்களை அசிங்கப்படுத்துவதை நிறுத்திவிட்டு பொறுப்புடன் பேசுங்கள்” என சின்மயி கூறியுள்ளார்.
முத்தையா இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ள புதிய படம் தியேட்டருக்கு பதில் டி.வி.யில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
கொரோனாவால் சூர்யாவின் சூரரைப்போற்று விஜய் சேதுபதியின் க.பெ.ரணசிங்கம், ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷின் பென்குயின் உள்ளிட்ட சில படங்கள் தியேட்டர்களுக்கு பதிலாக நேரடியாக ஓ.டி.டி தளங்களில் வெளியிடப்பட்டன. தற்போது தியேட்டர்கள் திறக்கப்பட்டு சிறு படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வருகின்றன. பெரிய பட்ஜெட் படங்களான மாஸ்டர். ஈஸ்வரன் படங்கள் பொங்கலுக்கு தியேட்டரில் வெளியாக உள்ளன.
இந்த நிலையில் முத்தையா இயக்கத்தில் விக்ரம் பிரபு-லட்சுமி மேனன் ஜோடியாக நடித்துள்ள புலிக்குத்தி பாண்டி படத்தை பொங்கல் பண்டிகையில் தியேட்டர்களுக்கு பதிலாக தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்ப முடிவு செய்துள்ளனர். ஓ.டி.டி தளத்திலும் இந்த படம் வெளியாக உள்ளது.

ஏற்கனவே பத்ரி இயக்கத்தில் பிரசன்னா, ஷாம், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்த நாங்க ரொம்ப பிசி படமும் தீபாவளி பண்டிகையில் டி.வியில் நேரடியாக ஒளிபரப்பானது குறிப்பிடத்தக்கது
சினிமாவில் தோல்வியைச் சந்தித்த கோவி.மணிசேகரன், டெலிவிஷனுக்கு தொடர்கள் எழுதி வெற்றி பெற்றார்.
சினிமாவில் தோல்வியைச் சந்தித்த கோவி.மணிசேகரன், டெலிவிஷனுக்கு தொடர்கள் எழுதி வெற்றி பெற்றார்.
"மனோரஞ்சிதம்'' திரைப்படம் வெளிவராமல் போனதால் மணிசேகரன் மனம் வருந்தினார் என்றாலும், சினிமா மோகம் அவரை விடவில்லை.
கீதையை அடிப்படையாக வைத்து அவர் எழுதிய "யாகசாலை'' என்ற நாவலை சொந்தமாக படமாக்க எண்ணினார். 1,200 பக்கங்கள் கொண்ட பெரிய நாவல் இது.
"இலக்கிய உலகில் பேரும் புகழுமாக இருக்கிறீர்கள். சினிமா நமக்குத் தேவையா?'' என்று மனைவி சொன்னதை அவர் கேட்கவில்லை.
வேகமாக வசனங்களை எழுதி முடித்தார்.
இவருடைய நாவல்களில் மனதைப் பறிகொடுத்து, இவருக்கு நண்பரானவர் ஜெமினிகணேசன். அவருக்கு படத்தில் ஒரு முக்கிய வேடம் கொடுக்கத் தீர்மானித்தார்.
இதன்பின் நடந்தது பற்றி மணிசேகரன் கூறியதாவது:-
"யாகசாலை நாவலைப் படித்துப் பாராட்டியவர், எம்.ஜி.ஆர். நான் அந்த நாவலைப் படமாக்கப்போகிறேன் என்பதை அறிந்து `இது புரட்சிகரமான நாவல். படமாக வந்தால், நாவலின் ஜீவன் கெட்டுப்போகும். படமாக்கும் முயற்சியைக் கைவிடுங்கள் என்று கூறினார்.
நான் கேட்கவில்லை. அதாவது, என் விதி, அவர் அறிவுரையைக் கேட்க மறுத்து விட்டது!
படப்பிடிப்பைத் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் தொடர்ந்தன.
இந்தப் படத்தின் கதாநாயகி, நல்ல குடும்பத்தில் பிறந்து, விதி வசத்தால் கற்பை இழக்க, பிறகு அதுவே தொழிலாய் போய்விட, கடைசியில் நோய்வாய்படுகிறாள்.
இந்தக் காலக்கட்டத்தில் "சிவப்பு ரோஜாக்கள்'' படத்தில் அறிமுகமாகியிருந்த வடிவுக்கரசிக்கு, கதாநாயகி வேடம் கொடுத்தேன்.
படத்தில் இரு கதாநாயகர்கள். ஒருவர், கீதையில் வரும் கண்ணன் பாத்திரத்துக்கு ஒப்பானவர். அந்தக் கண்ணன் தேர் ஓட்டினான். இந்த கண்ணன் குதிரை ஓட்டுபவன். இந்தப் பாத்திரத்துக்கு பொருத்தமான நடிகர் அமையவில்லை. பலபேரை பார்த்தும் திருப்தி ஏற்படவில்லை.
இன்று திரை உலகிலும், அரசியலிலும் விஸ்வரூபம் எடுத்துள்ள விஜயகாந்த், அப்போதுதான் திரைப்பட உலகுக்கு வந்திருந்தார். அவரை என்னுடைய `கண்ணன்' கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்த நேரத்தில், விதி விளையாடியது.
என் கையில் போதிய பணம் இல்லை. படப்பிடிப்புக்கு செல்ல, மேலும் ரூ.30 ஆயிரம் தேவைப்பட்டது. அப்போது ஒரு புதுமுக நடிகர் என்னிடம் வந்தார். நல்ல கதாபாத்திரம் கொடுத்தால் ரூ.30 ஆயிரம் `பைனான்ஸ்' செய்வதாகக் கூறினார். இதனால் நான் விஜயகாந்தை இழக்க நேரிட்டது. அன்று நான் அவரை பயன்படுத்தி இருந்தால், ஒரு சரித்திரத்தின் முதல் அத்தியாயத்தைப் பார்த்தவனாக இருந்திருப்பேன். விதியின் சதியால், அந்த வாய்ப்பு எனக்குக் கிட்டாமல் போயிற்று.
படப்பிடிப்பு தொடங்கியது. முதலில் வெளிப்புறக் காட்சிகளை எடுக்கத் தீர்மானித்தேன். மதராந்தகத்தின் அருகேயுள்ள கோட்டைக்காடு கிராமத்தில் படப்பிடிப்பு நடந்தது. ஒய்.ஜி.மகேந்திரன், கே.நட்ராஜ், டி.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் நடித்தனர்.
மேற்கொண்டு, ஸ்டூடியோவில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டபோது, மீண்டும் பணமுடை ஏற்பட்டது. அப்போது, இப்ராகிம் என்ற தயாரிப்பாளர் என்னை நாடி வந்தார். என்னுடைய "அகிலா'' என்ற நாவல், நடிகை சுஜாதாவுக்கு மிகவும் பிடித்தமானதாகும். அவர் சொல்லி, அக்கதையை என்னுடைய இயக்கத்தில் படமாக்க விரும்பி, இப்ராகிம் வந்திருந்தார்.
வெளிப்படங்களுக்கு வசனம் எழுதி, டைரக்ட் செய்வதில்லை என்ற முடிவுக்கு வந்திருந்தேன். அதை அவரிடம் தெரிவித்து, "வேண்டுமானால் கதையை வாங்கிக் கொண்டு, நீங்களே தயாரியுங்கள். கூடுதலோ, குறைவோ, ஒரு தொகையை தவணை முறையில் கொடுக்காமல் மொத்தமாக கொடுத்துவிடவேண்டும்'' என்று தெரிவித்தேன்.
அதன்படி அவர்கள் ஒரே `செக்' கொடுத்தார்கள். அந்தத் தொகை, "யாகசாலை'' படத்தை தொடர்ந்து உருவாக்க உதவியது.
யாகசாலை தயாராகிக் கொண்டிருந்தபோதே, "அகிலா'' கதை "மீண்டும் பல்லவி'' என்ற பெயரில் படமாக வெளிவந்தது. `கதை: கோவி.மணிசேகரன்' என்று டைட்டிலில் போட்டார்கள்.
"யாகசாலை'' 95 சதவீதம் முடிந்து விட்டது. ஜெமினிகணேசன் சம்பந்தப்பட்ட காட்சிகள்தான் பாக்கி. இந்த நிலையில் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டதால், அவருடைய சம்மதத்தைப் பெற்று அந்தப் பாத்திரத்தில் பூரணம் விஸ்வநாதனை நடிக்க வைத்தேன். அவரும் நன்றாக நடித்தார்.
படம் ரிலீஸ் தேதியை நெருங்கியபோது, ஒரு கடன்காரர் வந்து மென்னியைப் பிடித்தார். படத்தை, "அவுட்ரைட்'' முறையில் நான் விற்று விட்டதால், படம் வெளியான பின்னர் பணம் வராது என்று அவர் நினைத்து விட்டார் போலும்!
வீடு கட்டுவதற்காக வாங்கியிருந்த நிலத்தை விற்று, கடனை அடைத்தேன்.
"யாகசாலை'' ரிலீஸ் ஆகியது. நான்கே நாளில் ரிசல்ட் தெரிந்து விட்டது. படம் "அவுட்!'' சென்னை எமரால்டு தியேட்டரில் மட்டும் நான்கு வாரம் ஓடியது.
அன்றே சினிமாவுக்கு தலைமுழுகத் தீர்மானித்தேன். ஒரு சனிக்கிழமையன்று, எண்ணை வாங்கி வரச்செய்து, தலைமுழுகினேன்!
என்னிடம் புகழ்வாய்ந்த - உறுதியான பேனா இருந்ததால், என் வாழ்க்கை தப்பியது. இல்லையென்றால், `நடுத்தெரு நாராயணன்' ஆகியிருப்பேன். நான் வணங்கும் சக்தி என்னைக் காப்பாற்றினாள்.
தொடர்ந்து இலக்கியப்பணிகளில் ஈடுபட்டேன்.
சென்னை தொலைக்காட்சிக்கு, புதுமுகங்களை வைத்து நான் தயாரித்த "ஊஞ்சல் ஊர்வலம்'' என்ற தொடர், பெரிய வெற்றி பெற்றது.
அதன் பிறகு திரிசூலி, அக்னிப் பரீட்சை முதலான தொடர்களும் வெற்றி பெற்றன.
பெரிய திரையில் வெற்றி பெறாமல் போன நான், சின்னத்திரையில் வெற்றி கண்டேன்.
சினிமாவில் இருந்து விடுபட்டு இலக்கியத்தில் கவனம் செலுத்தியதால், 3,571 பாடல்கள் கொண்ட "கோவி.ராமாயண''த்தை என்னால் எழுத முடிந்தது.
நான் விதி பற்றி பல முறை குறிப்பிட்டேன். நமக்கு நல்ல வாய்ப்பு வரும்போது, விதி குறுக்கிட்டு கெடுத்து விடும். உதாரணத்துக்கு ஒன்று சொல்வேன்.
இந்நாளைய இணையற்ற நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், 1973-ல் சினிமா உலகில் நுழைய முயற்சி செய்து கொண்டிருந்த சிவாஜிராவ். நான் பாலசந்தரிடம் பயிற்சி பெற்றுவிட்டு, சினிமா தயாரிக்கலாம் என்று இருந்த நேரம்.
ரஜினியுடன் நடிப்பு பயின்ற கோபால் என்ற நண்பர், ரஜினிக்கு வாய்ப்பு கேட்டு வந்தார். படம் தொடங்கும்போது நிச்சயம் அவர் இடம் பெறுவார் என்று கூறினேன்.
ரஜினி என் வீட்டுக்கு வருவார். சிகரெட் வித்தைகளை பிள்ளைகளிடம் காட்டி மகிழ்விப்பார்.
இதற்கிடையே ரஜினி, "அபூர்வராகங்கள்'' படத்தில் அறிமுகம் ஆகிவிட்டார். ஏராளமான படங்களுக்கு ஒப்பந்தம் ஆனார்.
"தென்னங்கீற்று'' படம் ஆரம்பம் ஆனதும், ரஜினியிடம் பேசினேன். "குரு! இருபது நாட்களுக்கு என்னை விட்டு விடுங்கள். அப்புறம் ஒரு வாரம் பெங்களூர் வந்து உங்கள் மனதைக் குளிரச் செய்கிறேன்'' என்றார்.
ஆனால், படத் தயாரிப்பாளரோ இதற்கு சம்மதிக்கவில்லை. ஏற்கனவே, மற்ற நடிகர் - நடிகைகளிடம் பெற்ற `கால்ஷீட்'படி உடனே படத்தைத் தொடங்க வேண்டும் என்றார். இதனால் என் படத்தில் ரஜினி இடம் பெறவில்லை. இதை விதி என்று சொல்லாமல், வேறு எப்படி சொல்வது?
சினிமா உலகில் நுழைந்து விடவேண்டும் என்ற ஆசை கொண்ட இளைஞர்களும், இளம் நங்கையர்களும் ஏராளம். அவர்களுக்கு ஒன்று
சொல்வேன்:`சினிமா என்பது பல ரசவாத வித்தைக் தெரிந்த ஒரு அழகான மாயமோகினி. அந்த மோகினியிடம் சென்றால், மீள்வது அரிது. அந்த மோகினியின் வித்தையில் பாதியேனும் தெரிந்தவர்கள் தப்பித்து திரும்பி வரலாம்; அல்லது மோகினியை அடிமைப்படுத்தி, அவளைக் காதலிக்கச் செய்யலாம். அந்த வித்தை தெரியாதவர்கள் நுழைந்து விட்டால், அந்த மோகினி நம் ரத்தத்தை உறிஞ்சி, சக்கையாகத்தான்
துப்புவாள்!''இவ்வாறு கோவி.மணிசேகரன் கூறினார்.
மணிசேகரன் - சரசுவதி தம்பதிகளுக்கு அம்பிகாபதி, மாமல்லன், செல்வக்கண்ணன் என்ற மூன்று மகன்கள். பீலிவளை, அம்மங்கை, ஸ்ரீ, சமயபுரி, வானதி என்று ஐந்து மகள்கள்.
மூத்த மகன் அம்பிகாபதி, இளம் வயதில் காலமாகிவிட்டார். மற்ற 7 பேரும் படித்து, பட்டம் பெற்றவர்கள். எல்லோருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

வர்மா படத்திற்கு பிறகு துருவ் விக்ரம் நடிக்க இருக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகனாக வலம் வருபவர் துருவ் விக்ரம். வர்மா படத்திற்கு பிறகு யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்று அடிக்கடி செய்திகள் வெளியாகி வந்தது.

சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த படத்தில் துருவ் விக்ரம் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. இதற்கு இருவருமே மறுப்பு தெரிவிக்காமல் இருந்ததால், இந்தக் கூட்டணி இணைவது உறுதிப்படுத்தப்பட்டது.

தற்போது, புத்தாண்டை முன்னிட்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதைத் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார் துருவ் விக்ரம்.
பிரபல பாலிவுட் நடிகரான சோனு சூட் உதவி செய்ததால், அவரது பெயரை பிறந்த குழந்தைக்கு சூட்டி ஒரு பெண் மகிழ்ந்திருக்கிறார்.
பிரபல பாலிவுட் நடிகரான சோனு சூட், கொரோனா வைரஸ் ஊரடங்கு நேரத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் உதவி செய்தார். அவர் செய்த உதவியால் ஏராளமான பொதுமக்கள் அவரை கடவுள் போல் வழிபட்டனர். சமீபத்தில் கூட தெலுங்கானா மாநிலத்தில் அவருக்காக கோவில் கட்டப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனக்கு பிறந்த குழந்தை மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், குறைமாதத்தில் பிறந்ததால் எடை குறைந்து இருப்பதாகவும் தனக்கு உதவும்படி சமூக வலைத்தளம் மூலம் பெண் ஒருவர் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த வேண்டுகோளை ஏற்ற சோனு சூட் மருத்துவமனையிடம் தொடர்பு கொண்டு, அந்த பெண்ணுக்கு கவலைப்பட வேண்டாம், எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது அந்த குழந்தை நல்ல நிலைமையுடன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளது. இதனை அடுத்து அந்தத் தாய் தனது சமூக வலைத்தள பக்கத்தில் சோனு சூட் அவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்து கொண்டதோடு, தனது மகனுக்கு ’சோனு’ என்ற பெயரை வைத்துள்ளதாகவும் அவருடைய உதவியால்தான் தன்னுடைய குழந்தை பிழைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையிலேயே சோனுசூட் அவர்கள் மீது தான் மிகவும் மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பதாகவும் அவருடைய உதவிக்கு மிகப்பெரிய நன்றியை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்வதாகவும் அந்த தாய் குறிப்பிட்டுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் ஈஸ்வரன் படத்தின் வெளியீட்டை தடுக்க நினைப்பவர்களுக்கு தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘ஈஸ்வரன்’. இதில் பாரதிராஜா, நிதி அகர்வால், பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்தப் படம் பொங்கல் வெளியீடாக ஜனவரி 14-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில், 'ஈஸ்வரன்' பட வெளியீட்டை தடுக்க பலரும் 'AAA' படத்தின் பிரச்சினையைக் கையில் எடுத்துள்ளனர். AAA திரைப்படம் படுதோல்வியைத் தழுவியதால், தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்கும் சிம்புவுக்கும் மோதல் உருவாகி, இது தொடர்பாக வழக்கும் நீதிமன்றத்தில் இருக்கிறது.
தற்போது 'ஈஸ்வரன்' வெளியீட்டைத் தடுக்கும் வகையில் செயல்படுபவர்களுக்கு தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
‘ஈஸ்வரன்’ திரைப்படம் வெளியிடுவது சம்மந்தமாக பிரச்சினைகள் நடந்து கொண்டிருக்கிறது. இது மிகவும் கண்டனத்திற்குரியது. ‘AAA’ படத்திற்கும் ‘ஈஸ்வரன்’ பட தயாரிப்பாளருக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. இந்த கொரோனா பிடியிலிருந்து மீண்டு வந்திரமாட்டோமா என்று அத்தனைபேரும் காத்துக்கொண்டிருக்கும் வேளையில், தைரியமாக ‘ஈஸ்வரன்’ படத்தை வெளியிட முன்வந்திருக்கும் அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு நம்ம வரவேற்பு கொடுக்கனும். அதை விட்டுவிட்டு அந்த தயாரிப்பாளரையும், படத்தை வாங்கிய விநியோகஸ்தரையும் போன் செய்து இந்த படம் வெளியிடனும்னா ‘AAA’ படத்திற்கு இவ்வளவு கோடி பணம் கட்டணும் என்று சொல்வது எந்தவகையிலும் நியாயம் இல்லை. அந்த தீய சக்திகளுக்கு எனது வன்மையான கண்டனத்தை இந்த நேரத்தில் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறோம்.

சொன்ன தேதியில் ‘ஈஸ்வரன்’ படம் வெளியாகும் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அந்த தயாரிப்பாளருக்கு தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் பக்க பலமாக இருக்கும். ‘AAA’ படம் சம்பந்தமாக நிறைய பிரச்சினைகள் இருந்தது. அதற்காக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அந்த படத்தின் கதாநாயகன் திரு. சிம்பு அவரது சம்பளத்தை விட்டுகொடுத்துள்ளார். மீண்டும் பலமுறை பேச்சுவார்த்தை நடைபெற்றும் இரண்டு பேருக்கும் உடன்பாடு ஏற்படவில்லை. ‘AAA’ படத்தின் தயாரிப்பாளருக்கும், நடிகர் சிம்புவுக்கும் சரியான புரிதல் இல்லை. அதன்பிறகு சங்கம் மூலமாக பேசியும், கட்டபஞ்சாயத்து மூலமாக பேசியும் எந்தவித பலனும் ஏற்படவில்லை. ஆகையால் சிம்பு அவர்கள் நீதிமன்றத்தை நாடியிருக்கிறார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
எனவே இந்த பிரச்சினையை நீதிமன்றத்தில் தான் பார்த்து கொள்ள வேண்டும். அதைவிட்டு விட்டு நாங்கள் கட்ட பஞ்சாயத்து செய்து பணத்தை வாங்கி கொடுத்துவிடுவோம் என்று சொன்னால், அவர்கள் மீது சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். ஆகையால் மீண்டும் ஒருமுறை எங்களது கண்டத்தை தெரிவிப்பதோடு, சொன்ன தேதியில் ‘ஈஸ்வரன்’ படம் வெளியிடப்படும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அந்த வார்த்தைகளை எப்பவும் பயன்படுத்த மாட்டேன் என்று பிரபல பாலிவுட் நடிகை சாரா அலிகான் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
2018 ஆம் ஆண்டு, ’கேதர்நாத்’ திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் சாரா அலிகான். இவர் நடிகர் சயிப் அலிகான் - அம்ரிதா சிங் தம்பதியின் மகள். சர்மிளா தாகூர், மன்சூர் அலிகான் பட்டோடியின் பேத்தி. தொடர்ந்து ’சிம்பா’, ’லவ் ஆஜ்கல் 2’, சமீபத்தில் ’கூலி நம்பர் 1’ என சாரா அலிகான் நடித்துள்ளார். தற்போது அக்ஷய் குமார், தனுஷ் ஆகியோருடன் ‘அத்ரங்கி ரே’ என்கிற படத்தில் சாரா நடித்து வருகிறார்.
சாரா அலி கான் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது: ’நான் நட்சத்திர அந்தஸ்தை பார்ப்பது இல்லை. ரசிகர்கள், நட்சத்திரம் என்ற வார்த்தைகளை பயன்படுத்த மாட்டேன். எனக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. வாராவாரம் வெள்ளிக்கிழமை தோறும் இது மாறும். நமது நோக்கம், கடின உழைப்பு, தாகம் ஆகியவையே முக்கியம். மற்றவை எல்லாம் மாறும், மாறிக்கொண்டே இருக்கும். எனக்குப் பிடித்த தொழிலில் நான் இருப்பது என் அதிர்ஷ்டம்.

எனக்குத் தெரிந்த என் நண்பர்கள், அவர்களுக்குப் பிடிக்காத வேலையை தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செய்கின்றனர். எனக்கு கிடைத்திருப்பது வேலையே இல்லை. எனது வாழ்க்கையில் எனக்கு அதிக ஆர்வத்தைத் தருவது என் வேலையே. மற்ற எதுவும் முக்கியமில்லை" இவ்வாறு சாரா கூறியுள்ளார்.
சேற்றில் ஒட்டாமல் இருப்பது நல்லது... ரஜினியின் அரசியல் முடிவு குறித்து நடிகரும் அவரது நெருங்கிய நண்பருமான மோகன் பாபு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருக்கும் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்தார். பின்னர், உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அரசியலுக்கு வரவில்லை என்று சமீபத்தில் அறிவித்தார். இது ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலரும் சமூக வலைதளத்தில் தங்களுடைய அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஒரு பக்கம், ரஜினியின் உடல்நிலை தான் முக்கியம் எனக் கருத்து தெரிவித்துள்ளனர். தற்போது, ரஜினியின் முடிவு குறித்து அவருடைய நெருங்கிய நண்பரும், தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகருமான மோகன் பாபு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ‘ரஜினிகாந்த் எனக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள், உடல்நிலை காரணமாக அவர் அரசியலில் இறங்கவில்லை என்று அறிவித்துள்ளார். அனைத்து ரசிகர்களுக்கும் ஏமாற்றமாக இருந்தாலும், அவரது உடல்நிலையை முழுமையாக அறிந்த ஒரு நண்பராக அது நல்லது என்று நம்புகிறேன்.

ரஜினி மிகவும் நல்லவர், எறும்புக்குக்கூட தீங்கு நினைக்காதவர். ரஜினி போன்ற நபருக்கும், என்னை போன்ற ஒரு நபருக்கும், அரசியல் பயனற்றது, ஏனென்றால் நாங்கள் இருப்பதைப் அப்படியே பேசுகிறோம். யாரை நம்புவது, யாரை நம்பக்கூடாது என்று கூட உங்களுக்குத் தெரியாது. அரசியல் என்பது ஒரு மயக்கம், ஒரு சேறு. அந்த சேற்றில் நீங்கள் ஒட்டாமல் இருப்பது நல்லது.
ரஜினிகாந்த் ரசிகர்கள் அனைவரும் ரஜினிகாந்த்தைப் போலவே நல்லவர்கள். நீங்கள் அனைவரும் எனது நண்பரின் முடிவை தயவுடன் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
2020 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் பல்வேறு விவகாரங்கள் சர்ச்சையை ஏற்படுத்தின, அதன் முழு தொகுப்பை காணலாம்.
2020 ஆம் ஆண்டு கொரோனாவால் திரையுலகமே முடங்கி இருந்தாலும், சர்ச்சைகள் குறைந்தபாடில்லை. அவ்வப்போது ஏதாவது ஒரு சர்ச்சை வெடித்துக்கொண்டே தான் இருந்தது. அதன் தொகுப்பை தற்போது காணலாம்.

பெரியார் சர்ச்சை
ஜனவரி மாதம் 14-ந் தேதி நடந்த துக்ளக் பத்திரிக்கையின் 50-வது ஆண்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், பெரியார் குறித்து கூறிய கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என பலர் வலியுறுத்தினர். ஆனால் ரஜினி, நான் நடந்ததை தான் சொன்னேன், இதற்காக மன்னிப்பு கேட்க முடியாது என திட்டவட்டமாக கூறினார்.
விஜய் வீட்டில் ரெய்டு
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'மாஸ்டர்' படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் நெய்வேலியில் நடந்து கொண்டிருந்தபோது, வருமானவரித் துறையினர் அங்கிருந்து விஜய்யை அவரது வீட்டிற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விசாரணை முடிந்து மீண்டும் நெய்வேலியில் நடைபெற்ற படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகர் விஜய்யை பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடினர். அப்போது ரசிகர்களை காண அங்கு வந்த விஜய், அங்கிருந்த வேனில் ஏறி ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார். இந்த செல்பி டுவிட்டரில் அதிகளவில் ரீ டுவிட் செய்யப்பட்ட டுவிட் என்கிற சாதனையைப் படைத்தது.
இந்தியன் 2 விபத்து
கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு பூந்தமல்லி அருகே உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் பிப்ரவரி மாதம் நடந்தபோது கிரேன் சரிந்து விழுந்ததில் 3 பேர் பலியானார்கள். இது திரையுலகினரை உலுக்கியது.

படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதுதொடர்பாக படத்தின் தயாரிப்பு நிறுவனத்துக்கு கடிதம் எழுதிய கமல்ஹாசன், படப்பிடிப்பில் எத்தகைய விபத்து நேர்ந்தாலும் அதற்கான முழு பொறுப்பையும் தயாரிப்பு நிறுவனம் ஏற்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். பின்னர் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு நிதி உதவி அளிக்கப்பட்டது.
திரெளபதிக்கு எதிர்ப்பு
இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் நடிகர்கள் ரிச்சர்ட், ஷீலா, கருணாஸ் ஆகியோர் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் 28-ந் தேதி வெளியான படம் திரெளபதி. இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியானதிலிருந்தே எதிர்ப்பு கிளம்பியது. சாதி மறுப்பு திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அதில் இடம்பெற்ற வசனங்கள் வன்முறையை தூண்டுவிதமாக இருப்பதாக கூறி சர்ச்சை எழுந்தது.

இந்தப் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனுவும் அளிக்கப்பட்டது. இத்தனை எதிர்ப்புகளையும் கடந்து வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. வசூலிலும் பல்வேறு சாதனைகளை படைத்தது.
ஜோதிகா சர்ச்சை பேச்சு
படப்பிடிப்பிற்காக தஞ்சாவூர் சென்ற நடிகை ஜோதிகா, அங்குள்ள அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையை பார்வையிட்டார். இதனைத்தொடர்ந்து விருது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய ஜோதிகா, கோயிலுக்கு செலவு செய்து பராமரிப்பது போல, மருத்துவமனைகளையும் பராமரிக்க வேண்டும் எனவும், கோயிலின் உண்டியலில் போடும் பணத்தை பள்ளிகள் மருத்துவமனைகளுக்கு கொடுக்கலாம் என்றும் பேசியிருந்தார்.

இதையடுத்து, ஜோதிகா கோயில்களுக்கு எதிரான கருத்தை கூறிவிட்டாதாக சர்ச்சை எழுந்தது. இந்த விவகாரத்தில் ஜோதிகாவிற்கு ஆதரவாக களத்தில் இறங்கிய சூர்யா, “ஜோதிகா கூறிய கருத்தை விவேகானந்தர் போன்ற ஆன்மீக பெரியவர்களும் கூறியிருக்கிறார்கள்” என அறிக்கை வெளியிட்டார். பின்னர் ஜோதிகா கொடுத்த ரூ.25 லட்சம் நிதி மூலம் தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை சீரமைக்கப்பட்டு புதுப்பொழிவு பெற்றது.
ஓடிடி ரிலீஸ் சர்ச்சை
கொரோனா லாக்டவுன் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால், சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்திருந்த 'பொன்மகள் வந்தாள்' திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு திரையரங்க உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்தாலும், இதற்கு ஆதரவு கருத்துகளும் வந்தன.

திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பை மீறி இப்படம் கடந்த மே 29-ந் தேதி ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது. இனிமேல் சூர்யா குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட படங்களை திரையரங்குகளில் திரையிட மாட்டோம் என்பன போன்ற கருத்துகளும் திரையரங்க உரிமையாளர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்டன.
வனிதா திருமணம்
நடிகர் விஜயகுமாரின் மகளும் நடிகையுமான வனிதா, பீட்டர் பால் என்பவரை கடந்த ஜூன் மாதம் 27-ந் தேதி 3-வது திருமணம் செய்துகொண்டார். இது பெரும் சர்ச்சையானது. பீட்டர் பாலின் முதல் மனைவி தனது கணவரை வனிதா பிரித்துவிட்டதாக போலீசில் புகார் அளித்தார். நடிகைகள் கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோர் முதல் மனைவியை விவாகரத்து செய்யாத பீட்டர் பாலை வனிதா மணந்தது தவறு என கண்டித்தனர்.

அவர்களுடன் வனிதா வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பீட்டர் பால் அன்பானவர், கனிவானவர், நேர்மையானவர் என்றும் எங்களை மரணம் பிரிக்கும் வரை சந்தோஷமாக இருப்பேன் என்றும் வனிதா கூறினார். பின்னர் தேனிலவுக்கு கோவா சென்ற இடத்தில் பீட்டர்பால் அளவுக்கு மீறி மது குடித்ததால் அவருடன் தகராறு செய்து பிரிவதாக அறிவித்தார்.
விஜய் சேதுபதியின் ‘800’
இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படமான '800' திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டதில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இலங்கையில் ஈழத் தமிழர்களின் படுகொலைக்கு முத்தையா முரளிதரன் ஆதரவாக குரல் கொடுத்தவர் என்பதால், விஜய் சேதுபதி அந்தப் படத்தில் இருந்து விலக வேண்டும் என அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலர் வலியுறுத்தினர்.

இதையடுத்து படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட போது எதிர்ப்புகள் மேலும் வலுத்தன. இறுதியில் படத்திலிருந்து விலகிக்கொள்ளுமாறு விஜய் சேதுபதியிடம் முத்தையா முரளிதரன் கோரிக்கை வைத்ததையடுத்து அவர் அப்படத்திலிருந்து விலகிக்கொண்டார்.
ஸ்நேக் சர்ச்சையில் சிக்கிய சிம்பு
சர்ச்சைகளுக்கு பெயர்போன சிம்பு இந்தாண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கினார். அவர் லாக்டவுனில் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு உடல் எடையைக் குறைத்து, சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்தார். அந்தப் படத்தின் போஸ்டர் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலானது. அதில் சிம்பு பாம்பு ஒன்றை கையில் வைத்திருப்பது போன்ற புகைப்படம் இடம்பெற்றிருந்தது.

இதனைப் பார்த்த சமூக ஆர்வலர்கள், சிம்பு உள்ளிட்ட படக்குழுவினர் பாம்பை கொடுமைப்படுத்தியதாகவும், வன உயிரின சட்டத்தை மீறியுள்ளதாகவும் புகார் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து விளக்கம் அளித்த அப்படத்தின் இயக்குனர் சுசீந்திரன் படப்பிடிப்பில் உபயோகிக்கப்பட்டது பிளாஸ்டிக் பாம்பு என்றும் அது கிராபிக்ஸ் முறையில் நிஜ பாம்பாக சித்தரிக்கப்பட்டுள்ளது என்றும் விளக்கம் அளித்தார்.
சித்ரா தற்கொலை
சின்னத்திரை நடிகை சித்ரா தனியார் ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் திரையுலக வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை உண்டாக்கியது. இந்தச் சம்பவத்தில் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக கூறி அவரின் கணவர் ஹேம்நாத்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக ஆர்டிஓ விசாரணையும் நடத்தப்பட்டது. அதில் சித்ராவின் பெற்றோர், உறவினர்கள், உடன் பணியாற்றிய நடிகர், நடிகைகள், ஹேம்நாத்தின் பெற்றோர் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இளையராஜாவும்.... பிரசாத் ஸ்டூடியோவும்
பிரசாத் ஸ்டூடியோவில் உள்ள அரங்கில் 5 அறைகளை இளையராஜா தனது இசைப் பயணத்திற்காக பயன்படுத்தி வந்தார். பல்வேறு பின்னணிப் பாடகர்கள், பாடகிகள் பிரசாத் ஸ்டூடியோவில் இருந்துதான் தங்கள் பாடல்களை பாடி இருக்கிறார்கள். இப்படி இளையராஜாவின் இசைப் பயணத்தில் பிரசாத் ஸ்டூடியோ மிகவும் முக்கியமானதாகவே இருந்து வந்தது.
பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்தினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது ஸ்டூடியோ அரங்கை பூட்டிவிட்டு கடந்த 2018-ம் ஆண்டு அங்கிருந்து வெளியேறினார். இதனையடுத்து அங்குள்ள தனக்குரித்தான பொருட்களை எடுக்கவும், அங்கு ஒரு நாள் தியானம் செய்யவும் நீதிமன்றத்தில் இளையராஜா அனுமதி கோரிய இருந்தார். அதற்கு நீதிமன்றம் அனுமதியளித்தது.

அதன்படி டிச.28-ந் தேதி இளையராஜா தியானம் செய்ய வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் வரவில்லை. இளையராஜா தரப்பில் இருந்து பிரசாத் ஸ்டூடியோவிற்கு சென்றிருந்த வக்கீல்கள், ஸ்டூடியோ பூட்டு உடைக்கப்பட்டு இருந்த இடம் தெரியாமல் ஆக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினர்.
ஸ்டூடியோவில் இருந்த பொருட்கள் அனைத்தும் ஒரு குடோனில் போட்டு வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தனர். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான இளையராஜா தனது வருகையை ரத்து செய்தார். இளையராஜா பயன்படுத்திய இசைக்கருவிகள், அவர் வாங்கிய விருதுகள், இசைக்குறிப்புகள் உள்ளிட்ட 160 பொருட்கள், 7 பீரோக்களில் பத்திரமாக அடுக்கப்பட்டது. பின்னர் அந்த பீரோக்கள் அனைத்தும் 2 லாரிகளில் எடுத்து செல்லப்பட்டன.
அரசியலுக்கு நோ சொன்ன ரஜினி
நடிகர் ரஜினி, அரசியல் கட்சி ஆரம்பிப்பதற்கான பணியை மேற்கொண்டு வந்தார். டிச.31-ந் தேதி அதுகுறித்த அறிவிப்பை வெளியிடவும் திட்டமிட்டிருந்தார். இதனிடையே அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக கடந்த டிச.14-ந் தேதி ஐதராபாத் சென்றிருந்தார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், கடந்த வாரம் படக்குழுவினர் 4 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

பின்னர் ரஜினிகாந்த் இரத்த அழுத்த மாறுபாடு காரணமாக ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 3 நாள் சிகிச்சைக்கு பின் சென்னை திரும்பிய அவர் அரசியல் கட்சி ஆரம்பிக்கப்போவதில்லை என அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார்.