என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    நடிகர் தனுஷை வைத்து படம் இயக்கி வரும் பிரபல இயக்குனர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் அக்‌ஷய் குமார், தனுஷ், சாரா அலி கான் உள்ளிட்ட பலர் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் 'அத்ரங்கி ரே'. டி-சீரிஸ் நிறுவனம் வழங்க கேப் ஆஃப் குட் பிலிம்ஸ் மற்றும் கலர் யெல்லோ நிறுவனம் இணைந்து இப்படத்தைத் தயாரித்து வருகிறது. 

    இதன் படப்பிடிப்பு மதுரை, டெல்லி, ஆக்ரா உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வந்தது. சில தினங்களுக்கு முன்பு இந்தப் படத்தில் தனுஷ் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிவுற்றது. 

    இந்நிலையில் இன்று (டிசம்பர் 31) 'அத்ரங்கி ரே' இயக்குநர் ஆனந்த் எல்.ராய்க்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது தொடர்பாக இயக்குநர் ஆனந்த் எல்.ராய் தனது ட்விட்டர் பதிவில்,

    ஆனந்த் எல்.ராய்

    "எனக்கு இன்று கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. எனக்கு எந்த அறிகுறிகளும் இல்லை, நலமாகவே இருக்கிறேன் என்பதை அனைவருக்கும் தெரிவிக்க விரும்பினேன். அதிகாரிகளின் அறிவுறுத்தலின் படி தனிமையில் இருக்கிறேன். சமீபத்தில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தனிமைப்படுத்திக் கொண்டு, அரசாங்கத்தின் விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஆதரவுக்கு நன்றி." என்று பதிவு செய்திருக்கிறார்.

    இவ்வாறு ஆனந்த் எல்.ராய் தெரிவித்துள்ளார்.
    சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு, நிதி அகர்வால் நடிப்பில் உருவாகி இருக்கும் ஈஸ்வரன் படத்தின் முன்னோட்டம்.
    சிம்புவின் 46-வது படம் ஈஸ்வரன். சுசீந்திரன் இயக்கி உள்ளார். இந்த படத்துக்காக சிம்பு தனது உடல் எடையை 30 கிலோ வரை குறைத்து நடித்தார். கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய இப்படத்தின் ஷூட்டிங் ஒரே கட்டமாக நடத்தி 25 நாட்களில் முடிக்கப்பட்டது. கிராமத்து பின்னணியில் சென்ட்டிமெண்ட், எமோஷன், காதல், ஆகஷன், காமெடி என அனைத்தும் கலந்த ஜனரஞ்சகமான படமாக ஈஸ்வரன் உருவாகி உள்ளது. 

    சிம்பு

    இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். மேலும் பாரதிராஜா, நந்திதா, முனீஸ்காந்த், காளி வெங்கட், பாலசரவணன், யோகி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு திரு ஒளிப்பதிவு செய்துள்ளார். அந்தோனி படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். மாதவ் மீடியா சார்பில் பாலாஜி கப்பா இப்பாடத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். 
    வல்லவன், இது நம்ம ஆளு போன்ற படங்களில் ஜோடியாக நடித்திருந்த சிம்பு - நயன்தாரா, தற்போது மீண்டும் ஜோடி சேர உள்ளதாக கூறப்படுகிறது.
    2020ம் ஆண்டு திரையுலகிற்கு மோசமான ஆண்டாக அமைந்தாலும், நடிகர் சிம்புவுக்கு இந்தாண்டு திருப்புமுனையாக அமைந்தது. இந்த லாக்டவுன் காலகட்டத்தில் தீவிரமாக உடற்பயிற்சி செய்து உடல் எடையை 30 கிலோ வரை குறைத்த சிம்பு, ஒரே மாதத்தில் சுசீந்திரனின் ஈஸ்வரன் படத்தில் நடித்து முடித்தார். 

    தற்போது மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இப்படம் முடிந்ததும் பத்து தல படத்தில் நடிக்க உள்ளார். இவ்வாறு பிசியாக நடித்து வரும் சிம்பு, தங்க மீன்கள், பேரன்பு போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ராமிடமும் கதை கேட்டுள்ளாராம். 

    நயன்தாரா, சிம்பு

    இப்படத்தில் ஹீரோவை போன்று ஹீரோயின் கதாபாத்திரமும் படம் முழுக்க பயணிக்குமாம். இந்த கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை நயன்தாராவை படக்குழு அணுகி உள்ளதாக கூறப்படுகிறது. அவர் இப்படத்தில் நடிக்க ஓகே சொல்லிவிட்டால், இது சிம்புவுடன் அவர் நடிக்கும் மூன்றாவது படமாக அமையும். இவர்கள் இருவரும் ஏற்கனவே வல்லவன், இது நம்ம ஆளு போன்ற படங்களில் ஜோடியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
    சிந்துபாத் படத்தில் மகனை நடிக்க வைத்த விஜய் சேதுபதி, தற்போது தனது மகளையும் முகிழ் என்ற படத்தில் நடிக்க வைத்துள்ளார்.
    தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம்வருபவர் விஜய் சேதுபதி. இவர் விஜய்க்கு வில்லனாக நடித்துள்ள மாஸ்டர் படம் வருகிற பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 13-ந் தேதி ரிலீசாக உள்ளது. இதுதவிர சுமார் அரை டஜன் படங்களை கைவசம் வைத்துள்ளார். நடிகர் விஜய் சேதுபதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர்களில் மகன் சூர்யாவை சிந்துபாத் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தி தானும் அப்படத்தில் நடித்திருந்தார் விஜய் சேதுபதி. 

    விஜய் சேதுபதி

    இந்நிலையில், விஜய் சேதுபதியின் மகள் ஸ்ரீஜாவும் தற்போது அறிமுகமாக உள்ளார். விஜய் சேதுபதி, ரெஜினா கசண்ட்ரா நடிப்பில் உருவாகி உள்ள முகிழ் என்ற படம் மூலம் ஸ்ரீஜா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக உள்ளார். கார்த்திக் இயக்கியுள்ள இப்படத்தின் டிரெய்லரை நாளை புத்தாண்டன்று மாலை 5 மணிக்கு விஜய் சேதுபதி வெளியிட உள்ளார்.
    பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரித்து இயக்கும் ருத்ரன் படத்தில் லாரன்சுக்கு ஜோடியாக இந்தியன் 2 பட நடிகை நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
    நடிகர், இயக்குனர், நடன இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவர் ராகவா லாரன்ஸ். இவர் இயக்கிய காஞ்சனா படத்தின் 3 பாகங்களும் நல்ல வசூல் பார்த்தன. ராகவா லாரன்ஸ் அடுத்ததாக நடிக்கும் படம் ‘ருத்ரன்’. இப்படத்தை பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பதோடு மட்டுமல்லாமல், இதன்மூலம் இயக்குனராகவும் அறிமுகமாகிறார். ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

    இந்நிலையில், ருத்ரன் படத்தின் ஹீரோயின் யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, நடிகை பிரியா பவானி சங்கர் லாரன்சுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று பிறந்தநாள் கொண்டாடும் பிரியா பவானி சங்கருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக இந்த அறிவிப்பை ருத்ரன் படக்குழு வெளியிட்டுள்ளது. 

    பிரியா பவானி சங்கர்

    நடிகை பிரியா பவானி சங்கர், கமல்-ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2, அதர்வாவின் குருதி ஆட்டம், எஸ்.ஜே.சூர்யாவின் பொம்மை, ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக ஓமணப்பெண்ணே, சிம்புவின் பத்து தல போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    நடிகை நிதி அகர்வால் நடித்த இரண்டு தமிழ் படங்களும் ஒரே நாளில் ரிலீசாவதால் அவர் உற்சாகத்தில் திளைத்துள்ளாராம்.
    நடிகை நிதி அகர்வால் இந்தியில் மைக்கேல் என்ற படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் தெலுங்கில் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான ஐ ஸ்மார்ட் சங்கர் படத்தில் நடித்தார். இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டனது மட்டுமின்றி வசூலையும் வாரிக் குவித்தது. நிதி அகர்வால் நடிப்புக்கும் பாராட்டுகள் கிடைத்தன. 

    ‘ஐ ஸ்மார்ட் சங்கர்’ படத்தின் வெற்றிக்கு பின் அவர் தமிழில் ஒப்பந்தமான முதல் படம் பூமி. ஜெயம் ரவி நாயகனாக நடித்துள்ள இப்படத்தை லட்சுமண் இயக்கி உள்ளார். கடந்த மே மாதமே இப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். கொரோனா பரவல் காரணமாக லாக்டவுன் போடப்பட்டதால் இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. 

    பூமி, ஈஸ்வரன் பட போஸ்டர்

    இந்நிலையில், பூமி படத்தை வருகிற ஜனவரி 14-ந் தேதி பொங்கலன்று நேரடியாக ஓடிடி-யில் ரிலீஸ் செய்ய உள்ளனர். இதேபோல் சுசீந்திரன் இயக்கத்தில் நிதி அகர்வால் சிம்புவுக்கு ஜோடியாக நடித்துள்ள ‘ஈஸ்வரன்’ படமும் அதே நாளன்று தியேட்டரில் ரிலீசாக உள்ளது. தான் நடித்த இரண்டு படங்களும் ஒரே நாளில் ரிலீசாக உள்ளதால் நடிகை நிதி அகர்வால் மிகுந்த உற்சாகத்தில் உள்ளாராம்.
    சித்ரா வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்யவில்லை என ஆர்டிஓ விசாரணை அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
    சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த 9-ம் தேதி பூந்தமல்லி அருகே உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக நசரத்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் அடிப்படையில், சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் ஹேம்நாத் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை கடந்த டிச.14-ந் தேதி கைது செய்தனர்.

    பின்னர் இது தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ திவ்யஸ்ரீ கடந்த 14ஆம் தேதி முதல் விசாரணையில் ஈடுபட்டு வந்தார். முதல் நாள் விசாரணையில் சித்ராவின் பெற்றோர், சகோதரர், சகோதரி ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். தொடர்ந்து, ஹேம்நாத்திடமும், அவரின் பெற்றோரிடமும் விசாரணை நடத்தினார். 

    சித்ரா

    சித்ராவுடன் சீரியலில் நடித்த நடிகர்- நடிகைகள், சித்ரா மற்றும் ஹேம்நாத்தின் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் உள்பட 15 பேரிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டது. பின்னர் ஆர்டிஓ திவ்யஸ்ரீ தனது விசாரணை அறிக்கையை பூவிருந்தவல்லி உதவி ஆணையர் சுதர்சனத்திடம் ஒப்படைத்தார்.

    விசாரணை அறிக்கையில் சித்ரா வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்யவில்லை என கூறப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
    முத்தையா இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் நடித்துள்ள புலிக்குத்தி பாண்டி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
    கொம்பன், மருது, தேவராட்டம் போன்ற படங்களை இயக்கிய முத்தையா, அடுத்ததாக இயக்கி உள்ள படத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் மும்முரமாக நடைபெற்று வந்தது. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்துள்ளார்.

    புலிக்குத்தி பாண்டி பட போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி படத்துக்கு ‘புலிக்குத்தி பாண்டி’ என பெயரிட்டுள்ளனர். பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இதுவரை பார்த்திராத புதுவித கெட்டப்பில் விக்ரம் பிரபுவின் தோற்றம் அமைந்துள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    வலிமை படத்தில் இடம்பெறும் அஜித்தின் குடும்ப புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் லீக்கான நிலையில், அதை அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
    நேர்கொண்ட பார்வை படத்துக்கு பிறகு மீண்டும் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு ‘வலிமை’ என்று பெயரிட்டுள்ளனர். போனிகபூர் தயாரிக்கிறார். அதிரடி சண்டை படமாக தயாராகும் இதில், அஜித்குமார் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பைக் ரேஸ் மற்றும் கார் ரேஸ் காட்சிகளும் இப்படத்தில் இடம்பெறுகின்றன. 

    இப்படம் குறித்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அப்டேட்டும் வெளியிடப்பட வில்லை. இருப்பினும் வலிமை பட புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் லீக் ஆகி வருகின்றன. சமீபத்தில் அஜித் பைக் ஓட்டும் புகைப்படம் லீக் ஆகி வைரலானது. 

    அஜித்

    இந்நிலையில், தற்போது வலிமை படத்தில் இடம்பெறும் அஜித்தின் குடும்ப புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் கசிந்துள்ளது. இந்த புகைப்படத்தை பகிர்ந்து வரும் அஜித் ரசிகர்கள் டுவிட்டரில் ‘Valimaiதிருவிழாஆரம்பம்’ என்கிற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர்.
    பிக்பாஸ் பிரபலங்களான அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா, சுரேஷ் சக்ரவர்த்தி, ரேகா ஆகியோர் அனிதாவின் தந்தை உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
    பிரபல செய்தி வாசிப்பாளரும், நடிகையுமான அனிதா சம்பத், பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கடந்த வாரம் தான் எலிமினேட் செய்யப்பட்டார். இவரது தந்தையும், எழுத்தாளருமான சம்பத், வயது மூப்பு காரணமாக கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். தந்தையை இழந்த அனிதாவுக்கு ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.

    அர்ச்சனா, நிஷா, அனிதா

    இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனிதாவுடன் சக போட்டியாளர்களாக பங்கேற்ற அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா, சுரேஷ் சக்ரவர்த்தி, ரேகா ஆகியோர் அனிதாவின் தந்தை உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். மேலும் அனிதாவிற்கும் அவர்கள் ஆறுதல் கூறினர். இதேபோல் நடிகை சனம் ஷெட்டி, நடிகர் ஜித்தன் ரமேஷ் ஆகியோரும் அனிதாவின் தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
    பவர் ஸ்டார் பட அப்டேட்டை தயாரிப்பாளர் போனி கபூர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டதால் அஜித் ரசிகர்கள் கடுப்பாகி உள்ளனர்.
    அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார். போனி கபூர் தயாரிக்கிறார். இப்படம் கடந்தாண்டு பூஜையுடன் தொடங்கப்பட்டதுக்கு பின், எந்தவித அதிகாரப்பூர்வ அப்டேட்டையும் படக்குழு வெளியிடாமல் உள்ளது. குறிப்பாக இப்படத்தில் அஜித்தை தவிர யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பதைக்கூட இதுவரை தெரிவிக்கவில்லை. 

    இதனால் கடும் கோபத்தில் இருக்கு அஜித் ரசிகர்கள், அப்டேட் கேட்டு அடிக்கடி அன்புத்தொல்லை செய்வதும் உண்டு. நேற்று கூட டுவிட்டரில் ‘காத்திருக்கிறோம்தல’ என்கிற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கினர். வலிமை படத்தின் அப்டேட் புத்தாண்டன்று வெளியிடப்படும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த நிலையில், போனி கபூர் கொடுத்த அப்டேட் அஜித் ரசிகர்களை கோபத்துக்குள்ளாக்கியது. 

    போனி கபூரின் டுவிட்டர் பதிவு

    அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்த போனி கபூர், அதே படத்தை தெலுங்கில் வக்கீல் சாப் என்ற பெயரில் ரீமேக் செய்கிறார். இதில் அஜித் கதாபாத்திரத்தில் பவர் ஸ்டார் பவன் கல்யாண் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக போனி கபூர் டுவிட்டரில் பதிவிட்டதை பார்த்த அஜித் ரசிகர்கள், வலிமை அப்டேட்ட தவிர மத்த எல்லா அப்டேட்டும் கொடுக்குறீங்களே, ஏன் எங்கள இப்படி சோதிக்கிறீங்க என ஆதங்கத்துடன் பதிவிட்டு வருகின்றனர். 
    டைரக்டர் ஸ்ரீதர், "அழகே உன்னை ஆராதிக்கிறேன்'' படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் தயாரித்தார். மூன்றிலும் கதாநாயகியாக லதா நடித்தார்.
    டைரக்டர் ஸ்ரீதர், "அழகே உன்னை ஆராதிக்கிறேன்'' படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் தயாரித்தார். மூன்றிலும் கதாநாயகியாக லதா நடித்தார்.

    டைரக்டர் ஸ்ரீதரின் "உரிமைக்குரல்'' படத்தில் எம்.ஜி.ஆரும், லதாவும் நடித்தார்கள். ஸ்ரீதர் மீண்டும் தனது "அழகே உன்னை ஆராதிக்கிறேன்'' படத்தில் நடிக்க லதாவை அழைத்தார். ஒரு இளம் பெண்ணின் மன உணர்வுகளை படம் பிடித்த அந்த கதைக்கு `அழகே உன்னை ஆராதிக்கிறேன்' என்று கவித்துவமான பெயரை சூட்டினார்.

    இந்தப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் படமானது.

    இந்த மும்மொழிப் படத்தில் நடித்த அனுபவம் குறித்து லதா கூறியதாவது:-

    "உரிமைக்குரல்'' படத்தில் நடித்தபோதே ஸ்ரீதரின் அற்புதமான இயக்கும் திறமையை என்னால் உணர முடிந்தது. மறுபடியும் இவரது படத்தில் நடிக்க வேண்டும் என்கிற விருப்பம் உள்ளூர இருந்தது. நடிகர் சிவகுமாருடன் "கண்ணாமூச்சி'' என்ற படத்தில் நடித்துக் கொண்டிருந்த நேரத்தில் ஸ்ரீதரிடம் இருந்து அழைப்பு.

    "அழகே உன்னை ஆராதிக்கிறேன்'' என்று ஒரு படம் எடுக்கிறேன். நடிக்க வாய்ப்புள்ள கேரக்டர். தவிர, தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் ஒரே சமயத்தில் தயார் ஆகிறது. மூன்று மொழிகளுக்கும் நீங்கள்தான் கதாநாயகி'' என்றார். மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டேன்.

    தமிழில் விஜயகுமார், ஜெய்கணேஷ் ஆகியோர் என்னுடன் நடித்தார்கள். தெலுங்கில் சரத்பாபு, முரளி மோகன். கன்னடத்தில் ஸ்ரீநாத் நடித்தார். மூன்று மொழி கதாநாயகர்களுடனும் ஒரே நேரத்தில் மாறி மாறி நடித்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது.

    எனக்கு தெலுங்கு சரளமாக பேச வரும். கன்னட வசனங்களை மட்டும் தமிழில் எழுதி வைத்து பேசினேன்.

    தமிழில் வெள்ளி விழா கொண்டாடிய இந்தப்படம், மற்ற 2 மொழிகளிலும் 100 நாட்கள் ஓடியது. இந்தப் படத்துக்கு பிறகு சிறிது இடைவெளிவிட்டு, ஸ்ரீதர் இயக்கத்தில் எம்.ஜி.ஆர். ஹீரோவாக நடித்த "மீனவ நண்பன்'' படத்திலும் நடித்தேன். உணர்வுபூர்வமான கேரக்டர்கள் மூலம் ரசிகர்கள் மனதில் நின்றவர் டைரக்டர் ஸ்ரீதர்.''

    இவ்வாறு லதா கூறினார்.

    இந்தியில் அமிதாப்பச்சன் நடிப்பில் வெற்றி பெற்ற "சஞ்சீர்'' படத்தை, தமிழிலும், தெலுங்கிலும் எடுத்தார்கள். தமிழில் எம்.ஜி.ஆர் - லதா நடிக்க "சிரித்து வாழவேண்டும்'' என்ற பெயரில் தயாரானது. தெலுங்குப் பதிப்பில் என்.டி.ராமராவ் - லதா நடித்தனர்.

    இரண்டு படங்களும் எஸ்.எஸ்.பாலன் டைரக்ஷனில் தயாராயின.

    இந்தப் படங்களில் நடித்தபோது ஏற்பட்ட அனுபவம் குறித்து லதா கூறியதாவது:-

    "இரண்டு மொழிகளிலும் நான்தான் கதாநாயகி. இரண்டு படத்தின் சீன்களுமே அடுத்தடுத்து எடுக்கப்படும். தமிழ்ப்படம் என்றால், "தமிழ் ïனிட்டெல்லாம் வாங்க'' என்று அழைப்பார்கள். தெலுங்கு படப்பிடிப்பு என்றால், தெலுங்கு ïனிட்டை தயாராக இருக்கச் சொல்லி அறிவிப்பார்கள்.''

    இரண்டிலும் நான் இருப்பேன்.

    இந்தப் படத்தில் ஒரு முக்கியமான காட்சி. பள்ளிக் குழந்தைகள் 20 பேரை வில்லன் கூட்டம் கொன்றுவிடும். கொலையாளி யார் என்பது எனக்கு மட்டும் தெரியும்.

    ரோட்டில் நின்றபடி சாணை பிடிக்கிற கேரக்டரில் நான் நடித்தேன். கொலையாளி யாரென்று தெரிந்த நிலையிலும், பயம் காரணமாக வெளியே சொல்லாமல் மவுனமாகிவிடுவேன்.

    உண்மை எனக்குத் தெரிந்தும் சொல்லாமல் இருக்கிறேன் என்பது, ஹீரோவுக்கு தெரிந்து விடும். அதன் பிறகு என்னை சந்திக்கிற ஹீரோ (எம்.ஜி.ஆர்) நேராக குழந்தைகளின் உடல்கள் வைக்கப்பட்டுள்ள மார்ச்சுவரிக்கு இழுத்துப் போவார். உயிரிழந்த அந்த குழந்தைகளை காட்டி, "நல்லாப்பாரு! சாக வேண்டிய வயசா இவங்களுக்கு? இவங்கள்ல எத்தனை பேர் காமராஜர், அண்ணாவா வந்திருப்பாங்களோ? இந்தப் பிஞ்சுகளை கருக்கின பாவி பற்றி தெரிந்தும், நீ மவுனமாக இருந்தால் உன்னைவிட சுயநலவாதி யாருமில்லை'' என்கிற மாதிரி உணர்ச்சி பொங்க

    பேசுவார்.இந்த வசனத்தைப் பேசுவதற்கு முன் என்னை மார்ச்சுவரி அறை வரை கையை பிடித்து இழுத்துச் செல்லும் எம்.ஜி.ஆர்., உள்ளே என்னைப் பிடித்திருக்கும் கையை உதறிவிட்டு இப்படி பேசுவார். நான் அவர் சொல்வதை கேட்டு மனம் மாறுவது போல் காட்சி.

    மறுநாள் இதையே தெலுங்கில் எடுத்தார்கள். காட்சி படமாக்கப்பட்டபோது, கதாநாயகன் என்.டி.ராமராவ் வேகவேகமாக என் கையை பற்றிக்கொண்டு மார்ச்சுவரிக்கு இழுத்துப்போனார். அப்போதே அவர் அந்த கேரக்டருக்குள் `இன்வால்வ்' ஆகிவிட்டது தெரிந்தது.

    நேராக மார்ச்சுவரி அறையை அடைந்தவர், பிடித்துக் கொண்டிருந்த என் கையை உதறிவிட்டு குழந்தைகளைப் பார்த்து வசனம் பேசவேண்டும். ஆனால், என் கையை உதறுவதாக நினைத்துக் கொண்டு, வேகமாக தள்ளிவிட்டார். நான் கீழே விழுந்து விட்டேன்.

    ஆனால், உணர்ச்சிமயமாக நடிப்பில் மூழ்கிவிட்ட ராமராவ் அதை கவனிக்கவில்லை. உயிரற்ற குழந்தைகளைப் பார்த்து ஆக்ரோஷமாக பேசிக்கொண்டே போனார். வசனத்தை அவர் பேசி நிறுத்திய பிறகுதான், என்னை அவர் உதறிய வேகத்தில் நான் விழுந்ததை புரிந்து அதிர்ந்து போனார். என்னிடம் வருத்தம் தெரிவித்தார். பெரிய நடிகராக இருந்தும் அவர் வருத்தம் தெரிவித்தது என்னை நெகிழச் செய்தது. "அதெல்லாம் ஒன்றுமில்லை'' என்று கூறி அவரது வருத்தத்தை சரி செய்தேன்.

    தெலுங்குப் படப்பிடிப்புக்கு போனால் என்னைப் பார்த்த மாத்திரத்தில், "லதா காரு! பிரதர் நல்லாயிருக்காரா?'' என்று கேட்பார். அவர் `பிரதர்' என்று சொல்வது எம்.ஜி.ஆரை. இருவரிடமும் அப்படியொரு சகோதர பாசம் இருந்தது.

    தெலுங்கில் நாகேஸ்வரராவுடன் நான் நடித்த "அந்தால ராமுடு'' நன்றாக ஓடியது. "உலகம் சுற்றும் வாலிபன்'' படப்பிடிப்பு முடிந்த நேரத்தில் எம்.ஜி.ஆரிடம் அனுமதி பெற்று நடித்த படம் இது.

    அதுமாதிரி `காந்தி புட்டின தேசம்' படத்தில் கிருஷ்ணம ராஜ×வுடன் சேர்ந்து நடித்தேன். இப்படத்தில் நடித்ததற்காக, ஆந்திர அரசின் விருது எனக்குக் கிடைத்தது.''

    இவ்வாறு லதா கூறினார்.
    ×