என் மலர்
சினிமா செய்திகள்
விஜயேந்திர பிரசாத் இயக்கத்தில் நாகார்ஜுனா, சினேகா நடிப்பில் வெளியாகி இருக்கும் ராஜசிங்கம் படத்தின் விமர்சனம்.
நாயகி சினேகா, உயிர் போகும் நிலையில் தன் குழந்தையை ஆற்றில் விடுகிறார். அந்தக் குழந்தையை எடுத்து வளர்க்கிறார் நாசர். குழந்தை 10 வயதான நிலையில், தனது தந்தை யார் என்ற விவரத்தை அறிய முயற்சி செய்கிறார். இதற்கிடையில் அந்த குழந்தையை கொல்ல ஒரு கும்பல் முயற்சி செய்கிறது.


இறுதியில் அந்த குழந்தை தனது தந்தை யார் என்ற விவரத்தை அறிந்தாரா? குழந்தையை கொள்ள நினைப்பது யார்? காரணம் என்ன? என்பதே படத்தின் மீதி கதை.

தெலுங்கில் கடந்த 2011ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ராஜன்னா திரைப்படம் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு ராஜசிங்கம் என்ற பெயரில் வெளியாகி இருக்கிறது. சரித்திர படங்களுக்கு எப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த வகையில் ராஜசிங்கம் திரைப்படமும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
பிரபல கதாசிரியரும், இயக்குநருமான விஜயேந்திர பிரசாத் ரசிகர்கள் கவரும் வகையில் இயக்கி இருக்கிறார். நாகார்ஜுனா நடிப்பில் மிரட்டி இருக்கிறார். சினேகாவின் அலட்டல் இல்லாத நடிப்பு ரசிக்க வைக்கிறது. சிறுமி ஆனியின் நடிப்பு படத்திற்கு பெரிய பலம். இப்படத்திற்காக பல விருதுகளை இவர் பெற்றிருக்கிறார்.

கீரவாணியின் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை. பின்னணி இசையிலும் கவர்ந்திருக்கிறார். ஷ்யாம் கே நாயுடு, அனில் பந்தாரி, கன்று பூர்ணா ஆகியோரின் ஒளிப்பதிவை பாராட்டலாம்.
மொத்தத்தில் ராஜசிங்கம் பிரம்மாண்டம்.
பாரம்பரிய வேளாண் திருவிழாவில் வழங்கப்படும் நம்மாழ்வார் விருதுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அயலான், டாக்டர் திரைப்படம் உருவாகி உள்ளது. சிவகார்த்திகேயன் அவ்வப்போது நலிந்த கலைஞர்கள், கஷ்டப்படும் விவசாயிகள், ஏழை மாணவர்களின் படிப்பு ஆகியவற்றிக்கு தன்னால் முடிந்த உதவியை செய்து வருகிறார்.

அந்த வகையில் ஏழை மாணவியின் மருத்துவ கனவை நினைவாகியது, நெல் ஜெயராமன் மகனின் படிப்பு செலவை ஏற்றுக்கொண்டது, நடிகர் தவசியின் மருத்துவ செலவிற்கு உதவி செய்தது என பல உதவிகளை செய்து வருகிறார்.

இந்நிலையில் தமிழக பாரம்பரிய விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் ஐந்திணை வேளாண் கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை இணைந்து நடத்தும் பாரம்பரிய வேளாண் திருவிழாவில் வழங்கப்படும் நம்மாழ்வார் விருதுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
மனு பார்த்திபன் இயக்கத்தில் மொட்டை ராஜேந்திரன், மோனிகா கொட்லா நடிப்பில் வெளியாகி இருக்கும் டைம் அப் படத்தின் விமர்சனம்.
நாயகன் மனு பார்த்திபன், ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது தாயின் கட்டாயத்தின் பெயரில் சொம்பு சாமியாராக இருக்கும் லொள்ளு சபா மனோகரை சந்திக்க செல்கிறார். அங்கு வருபவர்கள் அனைவரும் சொம்பை நக்கி விட்டு செல்கிறார்கள். ஆனால், மனு பார்த்திபன் சொம்பை நக்காமல் செல்கிறார்.


ஒரு நாள் மொட்டை ராஜேந்திரன், மனு பார்த்திபனின் கனவில் வந்து, நீ முப்பது நாட்களில் இறக்க போகிறாய் என்று கூறுகிறார். இதைக் கேட்டு பயப்படும் மனு பார்த்திபன், பரிகாரம் சொல்லுங்கள் செய்கிறேன் என்று கேட்கிறார். அதற்கு மொட்டை ராஜேந்திரனும் மூன்று பரிகாரங்கள் செய்ய சொல்கிறார்.

இறுதியில் மொட்டை ராஜேந்திரன் செய்ய சொன்ன பரிகாரங்கள் என்ன? பரிகாரம் செய்து முப்பது நாட்களை மனு பார்த்திபன் கடந்தாரா? இல்லை இறந்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
பேண்டஸி காமெடி ஜானர்ல படத்தை இயக்கி நடித்திருக்கிறார் மனு பார்த்திபன். ஓரளவிற்கு ரசிகர்கள் ரசிக்கும்படி படத்தை இயக்கி இருக்கிறார். நடிப்பிலும் கவனம் பெற்றிருக்கிறார் மனு பார்த்திபன். முதல் படம் என்று தெரியாதளவிற்கு இயக்கி நடித்திருக்கிறார். சிறிய கதையை, பெரிய திரைப்படமாக எடுத்திருக்கிறார்.

நாயகியாக மோனிகா கொட்லா கொடுத்த வேலையை செய்திருக்கிறார். மாடர்ன் எமனாக வந்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் மொட்டை ராஜேந்திரன். இவரது நடிப்பும் கெட்டப்பும் படத்திற்கு பலம். பல இடங்களில் சிரிக்க வைத்திருக்கிறார்.
எல்.ஜி.பாலாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். தீபன் சக்ரவர்த்தியின் பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்கலாம். கனிராஜனின் ஒளிப்பதிவு சிறப்பு.
மொத்தத்தில் ‘டைம் அப்’ குட் டைம்.
சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் தற்போது உருவாகியுள்ள ஈஸ்வரன் படத்தின் அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிம்புவின் 46-வது படம் ஈஸ்வரன். சுசீந்திரன் இயக்கி உள்ளார். இந்த படத்துக்காக சிம்பு தனது உடல் எடையை 30 கிலோ வரை குறைத்து நடித்தார். கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய இப்படத்தின் ஷூட்டிங் ஒரே கட்டமாக நடத்தி 25 நாட்களில் முடிக்கப்பட்டது.

கிராமத்து பின்னணியில் சென்ட்டிமெண்ட், எமோஷன், காதல், ஆக்ஷன், காமெடி என அனைத்தும் கலந்த ஜனரஞ்சகமான படமாக ஈஸ்வரன் உருவாகி உள்ளது. இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். மேலும் பாரதிராஜா, நந்திதா, முனீஸ்காந்த், காளி வெங்கட், பாலசரவணன், யோகி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

வருகிற ஜனவரி 2-ந் தேதி ஈஸ்வரன் படத்தின் பாடல்கள் வெளியாக இருக்கும் நிலையில், இப்படம் ஜனவரி 14 ஆம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது இருக்கிறார்கள். மேலும் சென்சாரில் யூ சான்றிதழ் பெற்றிருப்பதாகவும் அறிவித்து இருக்கிறார்கள்.
நடிகரும் அரசியல்வாதியுமான சரத்குமார் தனது மனைவி ராதிகாவுடன் கோவிலில் சிறப்பு பிரார்த்தனை செய்து இருக்கிறார்.
நடிகரும் அரசியல்வாதியுமான சரத்குமாருக்கு சமீபத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஐதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், சமீபத்தில் குணமடைந்து வீடு திரும்பினார்.

இந்த நிலையில் கொரோனாவில் குணமாகி திரும்பி வந்த சரத்குமார் தனது மனைவி ராதிகாவுடன் காஞ்சி காமாட்சி கோவிலில் சென்று வழிபாடு நடத்தினார். அங்கு உள்ள கோவிலில் சரத்குமார் மற்றும் ராதிகா ஆகிய இருவரும் மாலையும் கழுத்துமாக இருப்பதும் பூசாரிகள் பூஜை செய்து அவருக்கு பிரசாதம் கொடுப்பதுமான புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் இதுகுறித்து ராதிகா தனது சமூக வலைத்தள பக்கத்தில், காஞ்சி காமாட்சியின் ஆசிர்வாதம் கிடைக்க கோவிலுக்கு வந்துள்ளோம். சரத்குமார் குணமாக பிரார்த்தனை செய்த அத்தனை மதங்களின் அற்புதமான ஆத்மாக்களுக்கு நன்றி. கொரோனாவில் இருந்து சரத்குமார் குணமாக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் கைகூப்பி எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
விஜய் இயக்கத்தில் நடித்தது உண்மையா? என்ற கேள்விக்கு மாஸ்டர் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேட்டியளித்துள்ளார்.
மாநகரம், கைதி படங்களை எடுத்து பிரபலமான லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படத்தில் விஜய் நடித்து முடித்துள்ளார். இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13ம் தேதி திரைக்கு வருகிறது. கதாநாயகியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். சாந்தனு, அர்ஜூன் தாஸ், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்புகாக மாஸ்டர் படத்தின் சில காட்சிகளை விஜய் இயக்கியதாகவும், அதில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடித்ததாகவும் தகவல்கள் வெளியானது. இதுகுறித்து லோகேஷ் கனகராஜ் அளித்த பேட்டியில், ‘விஜய் சார்தான் ஒரு நாள், 'நீ எங்க எல்லாரையும் நடிக்கச் சொல்லி டார்ச்சர் பண்ற, நீயும் ஒரு சீன்ல நடிக்கணும்'னு சொன்னார். நானும் முதல்ல சும்மாதான் சொல்றார், அப்புறம் மறந்திடுவார்னு நினைச்சேன்.

கரெக்ட்டா கடைசி நாள் ஷூட்ல அதை ஞாபகம் வெச்சிருந்து, ஒரு சீனில் நடிக்கச் சொன்னார். நான் நடிக்கணும்னா, அந்த சீனை நீங்கதான் டைரக்ட் பண்ணணும்னு சொன்னேன். இப்படி சொன்னா விட்ருவாருன்னு நினைச்சேன் ஆனால், 'பண்ணிட்டாப் போச்சு'ன்னார். அப்பறம் விஜய் சார் ஆக்ஷன், கட் சொல்லி நான் நடிச்சேன். என்று கூறியிருக்கிறார்.
ஜல்லிக்கட்டு போராட்டம் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சி கலந்துக் கொண்டு பிரபலமான ஜூலியின் கவர்ச்சி புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் கலந்து கொண்டு பலருடைய கவனத்தை ஈர்த்தவர் ஜூலி. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். அந்தப் போட்டியில் நடைபெற்ற சில சர்ச்சைகளினால் இவருக்கு ஆதரவுகளோடு எதிர்ப்புகளும் கிளம்பின.
பின்னர் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக மாறினார். அடுத்து சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி திரைத்துறையிலும் இவர் கால் பதித்தார். இவரது நடிப்பில் தற்போது “பொல்லாத உலகத்தில் பயங்கர கேம்“ என்ற படத்தில் நடித்துள்ளார்.

சமூக வலைத்தளத்தில் ஜூலி விதவிதமான போட்டோக்களை பதிவு செய்து வருவார். கடந்த வாரம் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்ட ஜூலி, தற்போது மார்டன் லுக்கில் சட்டை பட்டனை கழட்டி கவர்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
பின்னர் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக மாறினார். அடுத்து சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி திரைத்துறையிலும் இவர் கால் பதித்தார். இவரது நடிப்பில் தற்போது “பொல்லாத உலகத்தில் பயங்கர கேம்“ என்ற படத்தில் நடித்துள்ளார்.

சமூக வலைத்தளத்தில் ஜூலி விதவிதமான போட்டோக்களை பதிவு செய்து வருவார். கடந்த வாரம் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்ட ஜூலி, தற்போது மார்டன் லுக்கில் சட்டை பட்டனை கழட்டி கவர்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழில் கேளடி கண்மணி, டூயட், சதிலீலாவதி படங்களில் நடித்து பிரபலமான நடிகர் ரமேஷ் அரவிந்த், தனது மகள் திருமணத்தை வீட்டிலேயே நடத்தி இருக்கிறார்.
கர்நாடகாவைச் சேர்ந்த நடிகர் ரமேஷ் அரவிந்த், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என வெவ்வேறு மொழிகளில் 140 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். குறிப்பாக தமிழில் நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து பல படங்களில் பணியாற்றியுள்ளார். மனதில் உறுதி வேண்டும், உன்னால் முடியும் தம்பி, கேளடி கண்மணி, டூயட், சதிலீலாவதி, ஜோடி, ரிதம், பஞ்சதந்திரம், மும்பை எக்ஸ்பிரஸ், உத்தம வில்லன், என அவரது படங்களை பட்டியலிடலாம்.
இந்நிலையில் ரமேஷ் அரவிந்தின் மகளும், தயாரிப்பு மேலாளருமான நிஹாரிகாவின் திருமண கொண்டாட்ட விழா அவரது இல்லத்தில் ஒரு வார காலம் நடந்தது. இதையடுத்து டிஜிட்டல் வடிவமைப்பாளர் அக்ஷய் என்பவரை கரம் பிடித்திருக்கிறார் நிஹாரிகா. இவர்களது திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துக் கொண்டனர். 'தொற்றுநோய் காலம் என்பதால் நாங்கள் நினைத்தபடி இந்தத் திருமணத்தை பெரிதாக நடத்த முடியவில்லை. அதனால் அதை சரி செய்ய, வெவ்வேறு நிகழ்வுகளை உள்ளடக்கிய ஒரு வார கொண்டாட்டத்திற்கு திட்டமிட்டோம்' என ரமேஷ் அரவிந்தின் மனைவி அர்ச்சனா இது பற்றி தெரிவித்துள்ளார்.
Highlights from Niharika&Akshay wedding..🙏🏻 pic.twitter.com/g8QHkBG3AJ
— Ramesh Aravind (@Ramesh_aravind) December 29, 2020
அதோடு திருமணத்தின் போது எடுக்கப்பட்ட படங்கள் மற்றும் வீடியோக்களை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருக்கும் ரமேஷ், 'மணமக்களுக்கு உங்களது ஆசீர்வாதங்களை எதிர்பார்க்கிறோம்' எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தப் படங்கள், வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகின்றன.
அரவிந்த்ராஜ் இயக்கத்தில் ஜெ.எம்.பஷீர் இயக்கத்தில் உருவாகி வரும் தேசிய தலைவர் படத்தின் முன்னோட்டம்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறு 'தேசிய தலைவர்' என்ற பெயரில் திரைப்படமாக உருவாக உள்ளது. ட்ரென்ட்ஸ் சினிமாஸ் மற்றும் எம்டி சினிமாஸ் நிறுவனங்களின் சார்பில், இந்தப்படத்தை ஜெ.எம்.பஷீர் மற்றும் ஏ.எம்.சௌத்ரி இணைந்து தயாரிக்கின்றனர்.
தேவர் கதாபாத்திரத்தில் ஜெ.எம்.பஷீர் நடிக்கிறார்.. இஸ்லாமியரான இவர் விரதமிருந்து தேவராக வேடமிட்டு நடிக்கிறார். கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக இருந்ததால் அவரை தேர்வு செய்து இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் மகாத்மா காந்தி, நேரு, பெரியார் உள்ளிட்ட பல தலைவர்கள் கதாபாத்திரங்களுக்கும் நடிகர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
இசைஞானி இளையராஜா இசையமைக்கும் இந்த படத்தை, 'ஊமை விழிகள்', 'உழவன் மகன்', 'கருப்பு நிலா' என விஜயகாந்த் நடித்த வெற்றி படங்களை தந்த அரவிந்தராஜ் இயக்குகிறார்.
நேசமானவன் இயக்கத்தில் ஜிஜி, கமலி நடிப்பில் வெளியாகி இருக்கும் வாங்க படம் பார்க்கலாம் படத்தின் விமர்சனம்.
நாயகன் ஜிஜி, தனது அண்ணன், அண்ணியுடன் வாழ்ந்து வருகிறார். ஹீரோவாக வேண்டும் என்ற கனவுடன் இருக்கிறார் ஜிஜி. ஒரு கோடி ரூபாய் கொடுங்க நான் படத்தில் நடிச்சு ஹீரோ ஆயிடுறேன் என்று அவர் தனது அண்ணனிடம் கூறுகிறார். ஆனால் இவரது அண்ணனுக்கு அதில் உடன்பாடு இல்லாததால், ஜிஜியை வேலைக்கு செல்லுமாறு அறிவுறுத்துகிறார்.

அண்ணன் ஒத்துழைக்காததால், அவர் ஒரு குழுவுடன் இணைந்து படம் எடுக்க முடிவு செய்கிறார். அதற்காக ஹீரோயின் தேர்வு செய்யும்போது நாயகி கமலியை சந்திக்கும் நாயகன், அவர் மீது காதல் வயப்படுகிறார்.
நாயகன் ஜீஜியின் காதலை கமலி ஏற்றாரா? இல்லையா? இதையடுத்து இவர்கள் படம் எடுத்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.

நாயகன் ஜிஜிக்கு இது அறிமுக படம். முதல் படத்திலேயே நடனம், ஆக்ஷன், ரொமான்ஸ் என அனைத்தையும் முயற்சித்திருக்கிறார். இதில் எதுவுமே அவருக்கு கைகொடுக்கவில்லை. நாயகி கமலி கொடுத்த வேலையை கசித்தமாக செய்திருக்கிறார். லிவிங்ஸ்டன் தனது எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இயக்குனர் நேசமானவன் சின்ன கதையை 2 மணிநேரம் படமாக்க வேண்டுமே என்று இடையிடையே காமெடி டிராக், குத்து பாடல் என எங்கெங்கோ கொண்டுபோய் இருக்கிறார். காமெடி எதுவும் ஒர்க்அவுட் ஆகாதது படத்தின் மைனஸ். கதாபாத்திரங்களின் தேர்வில் கவனம் செலுத்தி இருக்கலாம்.
வினோத்தின் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம் தான். ரா ஆனந்தின் ஒளிப்பதிவில் தெளிவில்லை.
மொத்தத்தில் ‛வாங்க படம் பார்க்கலாம்’ சுமார்.
கார்த்தி நடித்துள்ள ஆயிரத்தில் ஒருவன் படம் ரீ-ரிலீஸ் ஆவது குறித்து இயக்குனர் செல்வராகவன் டுவிட்டரில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
12-ம் நூற்றாண்டின் சோழ பின்னணியைக் கொண்டு தமிழில் எடுக்கப்பட்ட படம் ஆயிரத்தில் ஒருவன். கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா, பார்த்திபன் நடித்த இந்த படத்தை செல்வராகவன் இயக்கினார். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார்.
2010-ஆம் ஆண்டு வெளியான இந்த படம் தமிழ் சினிமாவின் முக்கியமான முயற்சியாக அப்போது பார்க்கப்பட்டது. தமிழில் ஒரு புதிய கதைக் களத்தைப் படைத்த செல்வராகவன் குழுவுக்கு பாராட்டுகள் குவிந்தன.
இந்நிலையில், 10 ஆண்டுகளுக்கு பின் தற்போது, ஆயிரத்தில் ஒருவன் படத்தை ரீ-ரிலீஸ் செய்ய உள்ளனர். நாளை இப்படத்தை தமிழகத்தில் 40க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ரீ-ரிலீஸ் செய்ய உள்ளனர். இதுகுறித்து டுவிட்டரில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ள செல்வராகவன், ‘உங்கள் ஆதரவுக்கு என்றும் கடமைப் பட்டிருக்கிறேன். இதோ ! மீண்டும் ஆயிரத்தில் ஒருவன். டிசம்பர் 31, 2020 முதல். “ சோழன் பயணம் தொடரும்” எனக் குறிப்பிட்டுள்ளார். இதேபோல் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள புதுப்பேட்டை படமும் நாளை ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
உங்கள் ஆதரவுக்கு என்றும் கடமைப் பட்டிருக்கிறேன். இதோ ! மீண்டும் ஆயிரத்தில் ஒருவன். !
— selvaraghavan (@selvaraghavan) December 30, 2020
31 st. December 2020 முதல்.
“ சோழன் பயணம் தொடரும் “ pic.twitter.com/iGsrgZmGvi
மாஸ்டர் படம் ரிலீசாவது மூலம் தியேட்டர் கலாச்சாரம் என்பது மீண்டும் செழிக்கும் என நம்புவதாக நடிகர் தனுஷ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
நடிகர் விஜய்யின் 64-வது படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தை, கடந்த ஏப்ரல் மாதமே ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால், மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. இப்படத்தை ஓடிடி-யில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருப்பினும் படத்தை தியேட்டரில் தான் வெளியிடுவோம் என படக்குழு திட்டவட்டமாக கூறியது.
இப்படத்தை வருகிற ஜனவரி 13-ந் தேதி பொங்கல் பண்டிகையையொட்டி தியேட்டரில் ரிலீஸ் செய்ய உள்ளனர். மாஸ்டர் படக்குழுவின் இந்த முடிவுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் தனுஷ் இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம் ஜனவரி 13-ம் தேதி வெளியாகிறது. சினிமா பிரியர்களுக்கு இது மிகச் சிறந்த செய்தி. நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சென்று திரைப்படம் பார்க்க ஆரம்பித்தால் தியேட்டர் கலாச்சாரம் என்பது மீண்டும் செழிக்கும் என நம்புகிறேன்.
தியேட்டர் அனுபவம் போல எதுவும் கிடையாது. தேவையான அனைத்துப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துக்கொண்டு படத்தைத் தியேட்டரில் சென்று பாருங்கள்” என தனுஷ் அதில் குறிப்பிட்டுள்ளார்.






