என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    கார்த்தீஸ்வரன் இயக்கத்தில் அவரே நாயகனாகவும், காயத்ரி ரமா நாயகியாகவும் நடித்து வெளியாகியிருக்கும் பேய் இருக்க பயமேன் படத்தின் விமர்சனம்.
    நாயகன் கார்த்தீஸ்வரன் திரைப்பட இயக்குனர் ஆக வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார். ஆனால், இவரது தாய் திருமணம் செய்து வைக்கிறார். விருப்பம் இல்லாமல் நாயகி காயத்ரி ரமாவை திருமணம் செய்து கொள்கிறார் கார்த்தீஸ்வரன்.

    திருமணத்திற்கு பின்பு, பேய் இருக்கும் வீடு என்று தெரிந்து கார்த்தீஸ்வரன்- காயத்ரி ரமா இருவரும் ஹனிமூன் செல்கிறார்கள். அங்கு இருக்கும் பேய்கள் கார்த்தீஸ்வரன்- காயத்ரி ரமா இருவருக்கும் பல தொந்தரவு செய்கிறது.

    இறுதியில் அந்த வீட்டில் பேயாக இருப்பது யார்? எதற்காக பேயாக மாறினார்கள்? கார்த்தீஸ்வரன்- காயத்ரி ரமா இருவரும் பேயை எப்படி சமாளித்தார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    விமர்சனம்

    நாயகனாக நடித்திருக்கும் கார்த்தீஸ்வரனும், நாயகியாக நடித்திருக்கும் காயத்ரி ரமாவும் ஓரளவிற்கு நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். விருப்பம் இல்லாத திருமணத்தால், எலியும், பூனையுமாக சண்டை போட்டுக்கொள்ளும் காட்சி சில இடங்களில் ரசிக்க வைக்கிறது. கார்த்தீஸ்வரனின் காமெடி கலந்த நடிப்பு பெரியதாக எடுபடவில்லை.

    போலி சாமியார் கோதை சந்தானம், ஆவி ஆராய்ச்சியாளர் முத்துக்காளை, நிஜ சாமியார் நெல்லை சிவா, பேய்களாக நடித்திருக்கும் அர்ஜுன், நியதி ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். 

    விமர்சனம்

    ஹீரோவாக நடித்திருக்கும் கார்த்தீஸ்வரனே இப்படத்தை இயக்கி இருக்கிறார். பேய் படங்கள் என்றாலே, பழிவாங்குதல், பெரிய பிளாஷ்பேக் என்று வழக்கமான படங்கள் போல் இல்லாமல் வித்தியாசமான முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர் கார்த்தீஸ்வரன். படத்தின் நீளத்தையும், தேவையற்ற காட்சிகளையும் குறைத்திருந்தால் ரசித்திருக்கலாம். 

    அபிமன்யுவின் ஒளிப்பதிவு சுமார் ரகம். ஜோஸ் பிராங்கிளின் இசையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

    மொத்தத்தில் 'பேய் இருக்க பயமேன்' திகில் குறைவு.
    இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
    இளையராஜா பிரசாத் ஸ்டுடியோவில் ஒருநாள் தியானம் செய்ய அனுமதி கேட்டிருந்த நிலையில் அவருக்கு நீதிமன்றம் அனுமதியளித்தது. ஆனால் அவரது அறையிலிருந்த பொருட்கள், விருதுகள், இசைக்கருவிகள் அனைத்தும் வெளியேற்றப்பட்டதால் அவர் மிகுந்த வருத்தம் அடைந்து, அங்கு செல்லவில்லை.

    இதுகுறித்து, இளையராஜா மன அழுத்ததில் இருப்பதாகவும் அதனால் அவர் பிரசாத் ஸ்டுடியோ செல்லவில்லை எனவும் தகவல் வெளியானது. பின்னர் இளையராஜாவின் பொருட்கள் மொத்தமும் பிரசாத் ஸ்டுடியோவிலிருந்து ஒரு லாரியின் மூலம் இல்லத்திற்கு அவரது உதவியாளர்கள் எடுத்துச் சென்றார்கள்.

    இந்நிலையில் இளையராஜாவின் ரசிகர்கள் ஒரு போஸ்டர் ஒட்டிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

    ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்

    அதில், தமிழக அரசே இசைகடவுள் இளையராஜா அவர்களின் இசைச் சொத்துகளை சூறையாடிய பிரசாத் ஸ்டுடியோ கும்பலைக் கைது செய்! 40 ஆண்டுகாலமாக இசைஞானி பயன்படுத்தி வந்த பிரசாத் ஸ்டுடியோவை அரசுடைமையாக்கி இசை மியூசியத்தை உருவாக்கி என்று கூறிக் கீழே இசைஞானி பக்தர்கள் இசைஞானி இசையால் இணைந்தோம் - வாட்ஸ் ஆப் குரூப் சென்னை என்று தெரிவித்துள்ளனர்.
    தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் டி.இமான் தற்போது புதிய அவதாரம் எடுத்துள்ளார்.
    தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் டி.இமான். இவர் தற்போது ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

     இசையில் தனித்தன்மையுடன் பெரும் வெற்றியை பெற்றிருக்கும் இமான் திரைப்பயணத்தில் தயாரிப்பாளராக தனது புதிய பயணத்தை துவங்கவுள்ளார். “DI Productions” எனும் பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை துவக்கியுள்ளார் டி.இமான்.

    இமான்

     இந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக “தேங்க் யூ ஜீஸஸ்” ( Thank You Jesus ) எனும் ஆன்மீக ஆல்பம் உருவாகிறது. முழுக்க இயேசு கிறிஸ்துவை போற்றும்படி ஆங்கில மொழியில், ஆன்மீக அன்பர்கள் எழுதி, பாடும் இந்த ஆல்பத்தில் 8 பாடல்கள் அடங்கியுள்ளது. 
    மம்முட்டி, ஆர்யா, சினேகா நடிப்பில் வெளியாகி இருக்கும் தி கிரேட் ஃபாதர் படத்தின் விமர்சனம்.
    மம்முட்டி, ஆர்யா நடிப்பில் மலையாளத்தில் வெளியான தி கிரேட் ஃபாதர் திரைப்படம் தற்போது தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி இருக்கிறது.

    நாயகன் மம்முட்டி பில்டராக இருக்கிறார். இவர் மனைவி சினேகா, மகள் அனிகா ஆகியோருடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் சைக்கோ மனிதன் ஒருவன் ஊரில் உள்ள சிறுமிகளை கற்பழித்து கொலை செய்து வருகிறான். இதை போலீஸ் அதிகாரியாக இருக்கும் ஆர்யா, விசாரித்து வருகிறார்.

    இந்நிலையில், மம்முட்டியின் மகளான அனிகாவை சைக்கோ மனிதன் கற்பழித்து விடுகிறான். இதை அறிந்த மம்முட்டி சைக்கோ மனிதனை கண்டுபிடித்து கொலை செய்ய நினைக்கிறார். அதே சமயம் ஆர்யாவும் சைக்கோ மனிதனை தேடுகிறார்.

    விமர்சனம்

    இறுதியில், சைக்கோ மனிதனை மம்முட்டி கண்டுபிடித்து கொலை செய்தாரா? ஆர்யா கைது செய்தாரா? சைக்கோ மனிதன் யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நாயகனாக நடித்திருக்கும் மம்முட்டி, முதல் பாதி பில்டராகவும், இரண்டாம் பாதி தாதாவாகவும் நடித்து அசத்தி இருக்கிறார். டாக்டராகவும் தாயாகவும் நடிப்பில் பளிச்சிடுகிறார் சினேகா. போலீஸ் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார் ஆர்யா. அனிகாவின் அலட்டல் இல்லாத நடிப்பு அருமை.

    விமர்சனம்

    கிரைம் திரில்லர் பாணியில் படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் ஹனீப் அடேனி. அடுத்து என்ன நடக்கும், யார் குற்றத்தை செய்திருப்பார்கள் என்று திரைக்கதையில் சுவாரஸ்யத்தை கொடுத்திருக்கிறார். ஸ்லோ மோசன் காட்சிகளை தவிர்த்திருக்கலாம். படத்தில் நடித்திருக்கும் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் ஸ்லோ மோசன் காட்சிகளை வைத்திருப்பது படத்திற்கு பலவீனமாக அமைந்துள்ளது. மலையாளத்தில் வெளியான இப்படத்தை தமிழில் டப் செய்து வெளியிட்டு இருக்கிறார்கள்.

    கோபி சுந்தர் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். ரோபி வர்கீஸ் ராஜின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

    மொத்தத்தில் தி கிரேட் ஃபாதர் விறுவிறுப்பு.
    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படத்தின் எமோஜி டுவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.
    விஜய் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

    இந்நிலையில் மாஸ்டர் படத்திற்கு டுவிட்டர் எமோஜி வெளியிடப்பட்டுள்ளது. #MasterFilm, #MasterPongal, #மாஸ்டர், #మాస్టర్, #VijayTheMaster  உள்ளிட்ட ஹேஷ் டேக்குகளுக்கு எமோஜி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த எமோஜிகளுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

    மாஸ்டர் ஏமோஜி

    இதற்கு முன்னர் விஜய்யின் மெர்சல், பிகில் படங்களுக்கு டுவிட்டர் பிரத்யேக எமோஜியை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
    பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் தீபிகா படுகோனே திடீரென்று தனது புகைப்படங்களை நீக்கியதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
    பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருப்பவர் தீபிகா படுகோனே. இவர் இன்ஸ்டாகிராம், ட்விட்டரில் மிகவும் ஆக்டிவானவர். இன்ஸ்டாகிராமில் மட்டும் 52.5 மில்லியன் ஃபாலோவர்களைக் கொண்டுள்ளார். ட்விட்டரில் 27.7 மில்லியன் ஃபாலோவர்களைக் கொண்டுள்ளார்.

    இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போஸ்டுகள் அனைத்தையும் முற்றிலுமாக அழித்துள்ளார். அதோடு டிபியும் மாற்றப்பட்டுள்ளது. அவரின் இந்த திடீர் முடிவு பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தீபிகா படுகோனே

    அவரது அக்கவுண்டுகள் ஹாக் செய்யப்பட வில்லை என்றும், அவரே புகைப்படங்களை வேண்டும் என்றே நீக்கியதாகவும் கூறப்படுகிறது.
    நீண்ட இடைவேளைக்கு பிறகு பிரசாந்த் மற்றும் சிம்ரன் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
    ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'அந்தாதூன்'. 2018-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் பிரசாந்த் நாயகனாக நடிக்கிறார்.

    இதில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரசாந்துடன் இணைந்து நடிக்க இருக்கிறார் சிம்ரன். பொன்மகள் வந்தால் பட இயக்குனர் பேட்ரிக் இயக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். 

    அந்தகன்

    இந்நிலையில் இந்த படத்திற்கு அந்தகன் என்று தலைப்பு வைத்து இருக்கிறார்கள். மேலும் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர்.
    ரஜினியுடன் பாட்ஷா படத்திலும் விஜயுடன் குருவி படத்திலும் நடித்த நடிகர் உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்துள்ளார்.
    பிரபல தெலுங்கு நடிகர், நர்சிங் யாதவ். தமிழ், தெலுங்கு, இந்தி என சுமார் 300 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். ராம்கோபால் வர்மாவின் அனைத்து படங்களிலும் பார்க்கலாம்.

    தமிழில், ரஜினியின் சூப்பர் ஹிட் படமான பாட்ஷா, ஹரி இயக்கத்தில் விஷால், ஸ்ருதிஹாசன் நடித்த பூஜை, சுசீந்திரன் இயக்கத்தில் விக்ரம் நடித்த ராஜபாட்டை, சக்தி, ரம்யா நம்பீசன் நடித்த ஆட்டநாயகன், பிரபு சாலமன் இயக்கத்தில் சார்மி நடித்த லாடம், விஜய், த்ரிஷா நடித்த குருவி உட்பட பல படங்களில் நடித்திருக்கிறார்.

    நர்சிங் யாதவ்,

    கடந்த சில மாதங்களாகவே சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த நர்சிங் யாதவ், அதற்கான சிகிச்சையை பெற்று வந்தார். இந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நர்சிங்கின் மரணத்திற்கு ரசிகர்களும், திரையுலகினரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
    தமிழ் திரையுலகில் தனித்துவமான படங்களை எடுக்கும் செல்வராகவன், ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் எடுப்பேன் என தெரிவித்துள்ளார்.
    12-ம் நூற்றாண்டின் சோழ பின்னணியைக் கொண்டு தமிழில் எடுக்கப்பட்ட படம் ஆயிரத்தில் ஒருவன். கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா, பார்த்திபன் நடித்த இந்த படத்தை செல்வராகவன் இயக்கினார். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். 2010-ஆம் ஆண்டு வெளியான இந்த படம் தமிழ் சினிமாவின் முக்கியமான முயற்சியாக அப்போது பார்க்கப்பட்டது. தமிழில் ஒரு புதிய கதைக் களத்தைப் படைத்த செல்வராகவன் குழுவுக்கு பாராட்டுகள் குவிந்தன. 

    ஆயிரத்தில் ஒருவன் போஸ்டர், செல்வராகவன்

    10 ஆண்டுகளுக்கு பின் தற்போது, ஆயிரத்தில் ஒருவன் படத்தை ரீ-ரிலீஸ் செய்துள்ளனர். நேற்று (டிச.31-ந் தேதி) தமிழகமெங்கும் தியேட்டர்களில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட இப்படத்திற்கு தற்போதும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஏராளமான ரசிகர்கள் செல்வராகவனிடம் ஆயிரத்தில் ஒருவன் 2-ம் பாகம் எடுக்குமாறு டுவிட்டரில் வேண்டுகோள் விடுத்தனர். இதற்கு பதிலளித்த செல்வராகவன், ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் எடுப்பேன் என தெரிவித்து உள்ளார்.
    அறிமுக இயக்குனர் ஸ்ரீகண்டன் ஆனந்த் இயக்கத்தில் வெற்றி, அனுசித்தாரா நடிப்பில் உருவாகி வரும் வனம் படத்தின் முன்னோட்டம்.
    இயக்குனர் பாலுமகேந்திராவின் சினிமா பட்டறையில் பயிற்சி பெற்றவர், ஸ்ரீகண்டன் ஆனந்த். 10-க்கும் மேற்பட்ட குறும்படங்களை இயக்கிய இவர், முதல்முறையாக, ‘வனம்’ என்ற முழு நீள படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி உள்ளார். ‘8 தோட்டாக்கள்’ படத்தில் நடித்த வெற்றி கதாநாயகனாக நடிக்கிறார்.

    சில மலையாள படங்களில் நடித்த அனுசித்தாரா, ‘தடம்’, ‘மூக்குத்தி அம்மன்’ படங்களில் நடித்த ஸ்ம்ருதி வெங்கட் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இவர்களுடன் அழகம் பெருமாள், வேல ராமமூர்த்தி இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். கிரேஸ் ஜெயந்தி ராணி, ஜெபி அமலன், ஜெபி அலெக்ஸ் ஆகிய மூன்று பேரும் தயாரிக்கிறார்கள்.

    வனம் பட போஸ்டர்

    இந்தப் படத்தை பற்றி இயக்குனர் ஸ்ரீகண்டன் ஆனந்த் கூறியதாவது: “இது, மறுபிறவி கதையம்சம் கொண்ட திகில் படம். கதாநாயகன், கலைக்கல்லூரி மாணவர். கதாநாயகி, காட்டுவாசி. இன்னொரு நாயகி, டாகுமென்டரி படம் எடுப்பவர். ரான் ஏதன் யோஹான் இசையமைக்கிறார். இவர், ‘மாயா’, ‘கேம் ஓவர்’, ‘ஒப்பம்’ ஆகிய படங்களுக்கு இசையமைத்தவர். படத்தின் பெரும்பகுதி காட்சிகள் தேனி மாவட்டம் குரங்கனி பகுதியில் படமாக்கப்பட்டன”.
    முதல்வரிடம் நடிகர் விஜய் விடுத்த கோரிக்கை ஏற்கப்படாததால் திரையுலகினர் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
    கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த சூழலை மாற்றி 100 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்கள் இயங்க அனுமதிக்க வேண்டும் என்று நடிகர் விஜய் சமீபத்தில் முதல்வரை சந்தித்தபோது வேண்டுகோள் விடுத்தார்.

    இந்நிலையில், ஊரடங்கை கூடுதல் தளர்வுகளுடன் ஜனவரி 31 வரை நீட்டித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று அறிவிப்பு வெளியிட்டார். அதில், சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகளில், பணியாற்றும் பணியாளர்கள் எண்ணிக்கைக்கு உச்ச வரம்பு இல்லை என்ற புதிய அறிவிப்பையும் வெளியிட்டிருந்தார். ஆனால், திரையரங்குகளில் அனுமதிக்கப்படும் இருக்கைகள் எண்ணிக்கை 50 சதவீதம் என்ற நிலையே நீடிக்கிறது.

    எடப்பாடி பழனிச்சாமி, விஜய்

    ஊரடங்கு நீட்டிப்பு உத்தரவின்போது, தியேட்டர்கள் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதி அளிக்கப்படும் என்றும், ‘மாஸ்டர்’ படத்தை தொடர்ந்து ஒவ்வொரு திரைப்படமாக வெளியிடலாம் என்றும் திரைத்துறையினர் எண்ணியிருந்தனர். இந்த நிலையில், விஜய் விடுத்த கோரிக்கை ஏற்கப்படாததால் திரையுலகினர் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தை தியேட்டரில் காண ஆவலோடு இருப்பதாக இயக்குனர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.
    நடிகர் விஜய்யின் 64-வது படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தை, கடந்த ஏப்ரல் மாதமே ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால், மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. இப்படத்தை ஓடிடி-யில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருப்பினும் படத்தை தியேட்டரில் தான் வெளியிடுவோம் என படக்குழு திட்டவட்டமாக கூறியது.

    இப்படத்தை வருகிற ஜனவரி 13-ந் தேதி பொங்கல் பண்டிகையையொட்டி தியேட்டரில் ரிலீஸ் செய்ய உள்ளனர். மாஸ்டர் படக்குழுவின் இந்த முடிவுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

    மிஷ்கின்

    அந்தவகையில், இயக்குனர் மிஷ்கின், தான் மாஸ்டர் படத்தை ஜனவரி 13-ந் தேதி தியேட்டரில் பார்க்க ஆவலோடு காத்திருப்பதாக கூறியுள்ளார். அதேபோல் சினிமா பிரியர்கள் திரளாக தியேட்டருக்கு வருமாறு கேட்டுக்கொண்டுள்ள மிஷ்கின். திரையுலகை மீண்டும் செழிக்க வைக்க உதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    ×