என் மலர்
சினிமா செய்திகள்
ரஜினி, விஜய்க்கு வில்லனாக நடிக்க தயார் என்று பிரபல கன்னட நடிகர் துருவா சார்ஜா சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறி இருக்கிறார்.
கன்னட நடிகர் துருவா சார்ஜாவின் 'பொகரு' படம் தமிழில் 'செம திமிரு' எனும் பெயரில் டப் செய்யப்பட்டு ரிலீசாக உள்ளது. ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்திருக்கும் இப்படத்துக்கு விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

துருவா சர்ஜா அளித்த பேட்டியில் கூறியதாவது, ’சின்ன வயசுல இருந்து சென்னைக்கு வந்துட்டு இருக்கேன். எப்பவும் சென்னை பிடிக்கும். முதல் முறையாக என்னோட படம் 'செம திமிரு' தமிழ்ல டப் ஆகுறது சந்தோஷத்தைக் கொடுக்குது. முக்கியமா, என்னோட தாய் மாமா அர்ஜூன் தமிழ் உரிமையை வாங்கி வெளியிடுகிறார்.'' 'சிவா' என்னும் கேரக்டர்ல நடிச்சிருக்கேன். முழுக்க முழுக்க வில்லத்தனம் நிறைஞ்ச கேரக்டர். படத்தோட கடைசி வரைக்குமே வில்லனா மட்டும்தான் இருப்பேன். இருந்தும், படத்தோட ஹீரோ நான்தான்.
படத்துல இன்டர்நேஷனல் பாடி பில்டர்ஸ் கூடவும் சேர்ந்து நடிச்சிருக்கேன். மாமா அர்ஜூனுடைய படங்கள் பார்த்துதான் தமிழ் பேச கத்துக்கிட்டேன். 'முதல்வன்', 'ஜென்டில்மேன்', 'சேவகன்', 'பிரதாப்' படமெல்லாம் பார்த்திருக்கேன். இயக்குநர் பாலா மற்றும் செல்வராகவனின் படங்கள் பிடிக்கும். சீக்கிரமே தமிழ்ல நடிக்கவும் ரெடியா இருக்கேன்.

ரஜினி, விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பு வந்தால் வில்லனாக நடிக்கவும் தயார். முக்கியமாக மாமாவுடைய டைரக்ஷன்ல நடிக்க ஆசை. ஏன்னா, அவர் படத்தோட திரைக்கதை வடிவம் நல்லாயிருக்கும். ஆனா, மாமா ஷூட்டிங் ஸ்பாட்ல நின்னா அவர் முன்னாடி நின்று நடிப்பதற்கு தயக்கமாக பீல் பண்ணுவேன்.'' இவ்வாறு அவர் பேட்டி அளித்தார்.
சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் எஸ்.ஜே.சூர்யாவை தொடர்ந்து மேலும் இரண்டு நடிகர்கள் இணைந்து இருக்கிறார்கள்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் சிபிசக்கரவர்த்தி இயக்க இருக்கும் ‘டான்’ திரைப்படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகி கொண்டிருக்கிறது. முதலாவதாக இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்க ’டாக்டர்’ படத்தின் நாயகி பிரியங்கா மோகன் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

அடுத்ததாக இந்த படத்தின் வில்லனாக எஸ் ஜே சூர்யா நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது.

இந்த நிலையில் நடிகர்கள் சூரி மற்றும் சமுத்திரக்கனி ஆகிய இருவரும் இந்த படத்தில் இணைந்திருப்பதாக அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளியாகி இருக்கிறது. நடிகர்கள் சூரியும் சமுத்திரகனியும் இதற்கு முன் ரஜினி முருகன் படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்திருந்தார்கள்.
சமீபத்தில் ரசிகர்களிடம் பேசிய சமந்தா, கணவர் நாகசைதன்யாவை உளவு பார்ப்பதாக கூறி இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா. தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். 2017 ஆம் ஆண்டு நடிகர் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் நடிகை சமந்தா தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.


சமூக வலைதளங்களில் தீவிரமாக இருக்கும் சமந்தா, சமீபத்தில் தனது ரசிகர்களுடன் உரையாடிய சமந்தா, ரசிகர் ஒரு ரகசியத்தை கூறுமாறு கேட்க, அப்போது “யாருக்கும் சொல்லாத ரகசியத்தை இங்கே உங்களிடம் சொல்கிறேன்.. நான் ஏன் ஜிம்மில் இணைந்தேன் தெரியுமா..? ஏன்னா என் கணவர் நாகசைதன்யாவும் இந்த ஜிம்தான். அவர் இங்கே என்ன செய்கிறார், நிஜாமாகவே வொர்க் அவுட் செய்கிறாரா என கணவரை உளவு பார்க்கத்தான் இந்த ஜிம்மில் சேர்ந்தேன்” என தான் ஜிம்மில் இணைந்தது ஏன் என்பது குறித்த ரகசியத்தையும் போட்டு உடைத்தார்.
கதையை விட ஹீரோ பெரிய ஆளாக இருக்க கூடாது என்று விஷமக்காரன் பட இயக்குனர் பட விழாவில் பேசி இருக்கிறார்.
ஹனி பிரேம் ஒர்க்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் விஷமக்காரன். இந்தப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளதுடன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார் அறிமுக நடிகர் வி (விஜய்). அனிகா விக்ரமன் மற்றும் ‘யாரடி நீ மோகினி’ சீரியல் புகழ் சைத்ரா ரெட்டி கதாநாயகியாக நடித்துள்ளனர்.

மனித வாழ்க்கையில் மனிதர்கள் ஒருவரை ஒருவர் கையாளுதல் என்பது அவர்களது வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை கூட உருவாக்கும். அந்தவகையில் இந்தப்படத்தின் கதையே மனிதர்களை தங்களுக்கு ஏற்றபடி திறமையாக கையாளுதல் என்கிற மையக்கருவை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில், படத்தின் நாயகனும் இயக்குனருமான வி (விஜய்) பேசும்போது, “இந்தப்படத்தில் இயக்குநர், நடிகர், பாடகர் என மூன்று பொறுப்புகளை ஏற்றுள்ளேன். சினிமா எடுக்கிறோம் என முடிவு செய்ததுமே ஏதாவது புதிய விஷயத்தை மையமாக வைத்து கதையை உருவாக்க நினைத்தபோது தோன்றியதுதான் இந்த விஷமக்காரன் படத்தின் கதை. இதில் ஹீரோவாக நடிப்பது சாதாரணம் என நினைத்தேன்.. ஆனால் ஹீரோவை வைத்து தான் இந்தப்படத்தின் மொத்த கதையுமே நகர்கிறது. அப்போது தான் ஹீரோவாக நடிப்பதன் கஷ்டம் தெரிந்தது.

இங்கே சத்யம் தியேட்டரில் இந்த விழாவுக்காக வந்தபோது கூட, கார் பார்க்கிங்கில் ஹீரோ யார் என விசாரித்தார்கள். யாரோ புது ஹீரோ என சொன்னேன்.. உடனே காரை அப்படி ஓரமா கொண்டுபோய் பார்க் பண்ணுங்க என சொன்னார்கள். ஹீரோவாக இருந்தால் தான் தியேட்டர் பார்க்கிங்கிலேயே மரியாதை தருகிறார்கள். இங்கே கதைகூட முக்கியமில்லை.. ஹீரோதான் முக்கியம்.. ஆனால் என்னை பொறுத்தவரை கதையை விட ஹீரோ பெரிய ஆளாக இருக்க கூடாது என்றுதான் சொல்வேன். என்றார்.
ஹலிதா ஷமீம் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஏலே’ படத்தின் முன்னோட்டம்.
ஒய் நாட் ஸ்டுடியோஸ் & ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் இணைந்து வழங்க, வால்வாட்சர்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள படம் 'ஏலே'. சமுத்திரகனி, மணிகண்டன் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தை, ஹலிதா ஷமீம் எழுதி இயக்கி உள்ளார். இந்தப் படம் நியோ ரியலிஸ்டிக் காமெடி படமாக உருவாகி உள்ளது.
எஸ்.சசிகாந்த் தயாரித்துள்ள இந்த படத்தின் மூலம் இயக்குனர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி ஆகியோர் கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களாக அறிமுகமாகி உள்ளனர். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு கபேர் வாசுகி இசையமைத்துள்ளார். ரேமண்ட் டெர்ரிக் கிரஸ்டா இப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ள மாநாடு படத்தின் டீசர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தை வி ஹவுஸ் புரடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கல்யாணி பிரியதர்ஷன் சிம்புவுக்கு ஜோடியாக வருகிறார்.
இப்படத்தில் சிம்புவுடன் எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா, டேனியல் போப், ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் பாரதிராஜாவின் மகன் மனோஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தமிழில் உருவாகி உள்ள மாநாடு படத்தை, தெலுங்கு, கன்னட, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர்.
இந்நிலையில், சிம்புவின் பிறந்தநாளான இன்று மாநாடு படத்தின் டீசரை ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டுள்ளார். பஞ்ச் வசனங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்றாலும் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த டீசராக இது அமைந்துள்ளது.
மாநாடு படத்தின் தெலுங்கு டீசரை ரவி தேஜாவும், கன்னட டீசரை சுதீப்பும், மலையாள டீசரை பிரித்விராஜும், இந்தி டீசரை அனுராக் கஷ்யப்பும் வெளியிட்டனர்.
Here is the teaser of Maanaadu. https://t.co/dFeyq21W6K#Maanaaduteaser#HBDSilambarasan#Rewind#Maanaadu#aVPpolitics@silambarasanTR_@vp_offl@sureshkamatchi@thisisysr
— A.R.Rahman (@arrahman) February 3, 2021
ஜான்சன் கே இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள ‘பாரிஸ் ஜெயராஜ்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
'ஏ1' படத்தின் வெற்றிக்கு பின் ஜான்சன் கே இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள படம் 'பாரிஸ் ஜெயராஜ்'. இதில் சந்தானத்துக்கு ஜோடியாக அனைகா சோடி மற்றும் சஷ்டிகா ராஜேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் மொட்டை ராஜேந்திரன் நடித்திருக்கிறார். முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகி இருக்கும் இதில் சந்தானம் தாதாவாக நடித்துள்ளார்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஆர்தர் கே.வில்சன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காதலர் தினத்தையொட்டி வருகிற பிப்ரவரி 12-ந் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளனர்.
மாஸ்டர் படம் 16 நாட்களில் ஓடிடியில் வெளியிடப்பட்ட நிலையில், திரையரங்க உரிமையாளர்கள் புதிய நிபந்தனை விதித்துள்ளனர்.
விஜய்யின் மாஸ்டர் பொங்கல் பண்டிகையை ஒட்டி திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. பொதுவாக திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் 50 நாட்களுக்கு பிறகே ஓ.டி.டி.யில் ரிலீஸ் செய்யப்படும். ஆனால் மாஸ்டர் படம் வெளியான 16 நாட்களிலேயே ஓ.டி.டி.யில் வெளியிடப்பட்டது. இது திரையரங்க உரிமையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் ஆலோசனை நடத்தியது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கூறும்போது, “திரையரங்க உரிமையாளர்களும், வினியோகஸ்தர்களும் பேசியதை தொடர்ந்து மாஸ்டர் படத்தின் லைசன்சை பிப்ரவரி 4-ந் தேதி இரவு வரை புதுப்பித்து தருவதாக தயாரிப்பாளர் ஒப்புக்கொண்டார்.

அதற்கு பிறகு படத்தை தொடர விரும்புகிறவர்கள் அந்தந்த மாவட்ட வினியோகஸ்தர்களிடம் பேசுங்கள். அவர்கள் படத்தை தொடர தேவையானதை செய்து கொடுப்பார்கள். மாஸ்டர் படத்துக்கு இப்படித்தான் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
சென்ற வாரம் வெளியான கபடதாரி படத்தை 30 நாட்கள் கழித்தே ஓ.டி.டி.யில் வெளியிடுவோம் என்று தயாரிப்பாளர் கடிதம் கொடுத்துள்ளார். சிறிய படங்களுக்கு 30 நாட்களும், பெரிய படங்களுக்கு 50 நாட்களும் கேட்கிறோம். இது தொடர்பாக தயாரிப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும்” என்றார்.
மருது படத்தில் இணைந்து பணியாற்றிய விஷால் - முத்தையா கூட்டணி, தற்போது மீண்டும் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.
குட்டிப் புலி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் முத்தையா. இதையடுத்து அவர் இயக்கிய கொம்பன், மருது, தேவராட்டம் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. சமீபத்தில் அவர் இயக்கத்தில் வெளியான புலிக்குத்தி பாண்டி திரைப்படம் டி.ஆர்.பி.யில் விஜய், அஜித், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் படங்களை பின்னுக்குத் தள்ளி சாதனை படைத்தது.

இந்நிலையில், முத்தையா அடுத்ததாக இயக்கும் படத்தில் நடிகர் விஷால் ஹீரோவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுவும் கிராமத்து கதையம்சம் கொண்ட படம் தானாம். விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் விஷால், ஏற்கனவே முத்தையா இயக்கிய மருது படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘டாக்டர்’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் டாக்டர். கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இந்த படத்தை இயக்கி உள்ளார். தெலுங்கில் கேங்ஸ்டர் படத்தில் நடித்து பிரபலமான பிரியங்கா மோகன் இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். மேலும் யோகிபாபு, வினய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள, இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், டாக்டர் படத்தின் ரிலீஸ் தேதியை நடிகர் சிவகார்த்திகேயன் அறிவித்துள்ளார். அதன்படி வருகிற மார்ச் மாதம் 26-ந் தேதி டாக்டர் படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மீசையை முறுக்கு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஹிப்ஹாப் ஆதி அடுத்ததாக இயக்கும் புதிய படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.
பாடகர், இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் ஹிப்ஹாப் ஆதி. இவர் ஆம்பள, தனி ஒருவன், அரண்மனை 2, கதகளி, கத்தி சண்டை, இமைக்கா நொடிகள், கோமாளி, ஆக்ஷன் உள்பட பல படங்களுக்கு இசைமைத்துள்ளார். மீசையை முறுக்கு என்ற படத்தை இயக்கி, கதாநாயகனாகவும் அறிமுகமானார். தொடர்ந்து நட்பே துணை, நான் சிரித்தால் ஆகிய படங்களிலும் கதாநாயகனாக நடித்தார். இந்த படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

இந்நிலையில், ஹிப்ஹாப் ஆதி இயக்கும் 2-வது படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அப்படத்திற்கு ‘சிவக்குமாரின் சபதம்’ என பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திலும் அவரே ஹீரோவாக நடித்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. அதேபோல் அஸ்வின் ராம் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி நடித்து வரும் அன்பறிவு படத்தையும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மாஸ்டர் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக லோகேஷ் கனகராஜ், அனிருத், தயாரிப்பாளர் ஜெகதீஷ் ஆகியோர் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த படம் மாஸ்டர். இதில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, மகேந்திரன், கவுரி கிஷான், ரம்யா, பூவையார், அர்ஜுன் தாஸ் என ஏராளமானோர் நடித்திருந்தனர். பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியான இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு வசூலையும் வாரிக் குவித்தது.

இந்நிலையில், மாஸ்டர் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக லோகேஷ் கனகராஜ், அனிருத், தயாரிப்பாளர் ஜெகதீஷ் ஆகியோர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு எடுத்த புகைப்படங்களை மாஸ்டர் படத்தின் இணை தயாரிப்பாளர் ஜெகதீஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.






