என் மலர்
சினிமா

லோகேஷ் கனகராஜ், ஜெகதீஷ், அனிருத்
‘மாஸ்டர்’ நண்பர்களுடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்ற லோகேஷ் கனகராஜ்
மாஸ்டர் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக லோகேஷ் கனகராஜ், அனிருத், தயாரிப்பாளர் ஜெகதீஷ் ஆகியோர் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த படம் மாஸ்டர். இதில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, மகேந்திரன், கவுரி கிஷான், ரம்யா, பூவையார், அர்ஜுன் தாஸ் என ஏராளமானோர் நடித்திருந்தனர். பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியான இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு வசூலையும் வாரிக் குவித்தது.

இந்நிலையில், மாஸ்டர் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக லோகேஷ் கனகராஜ், அனிருத், தயாரிப்பாளர் ஜெகதீஷ் ஆகியோர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு எடுத்த புகைப்படங்களை மாஸ்டர் படத்தின் இணை தயாரிப்பாளர் ஜெகதீஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Next Story






