என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    அஜித் ஹீரோவாக நடிக்கும் வலிமை படத்தை எச்.வினோத் இயக்குகிறார், இப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார்.
    அஜித் நடிப்பில் தற்போது வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது. எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. கிட்டத்தட்ட ஒன்றரை வருடமாக படக்குழு எந்தவித அப்டேட்டையும் வெளியிடாமல் இருந்து வந்தனர். ரசிகர்களும் சமூக வலைதளங்கள் வாயிலாக படக்குழுவிடம் அடிக்கடி அப்டேட் கேட்டு வந்தனர்.

    போனி கபூரின் டுவிட்டர் பதிவு

    இந்நிலையில், ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்த வலிமை அப்டேட் வெளியாகி உள்ளது. இப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார். அதன்படி வருகிற மே 1-ந் தேதி, நடிகர் அஜித்தின் 50-வது பிறந்தநாளன்று வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். போனி கபூரின் இந்த அப்டேட் அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.
    தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் சுந்தர்.சி நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.
    தமிழ் சினிமாவில் இயக்குனராக வெற்றி பெற்றவர் சுந்தர்.சி. இவர் பல படங்களில் நாயகனாகவும் நடித்திருக்கிறார். தற்போது மீண்டும் புதிய படத்தில் நாயகனாக நடிக்கிறார். இந்த புதிய படத்தை கட்டப்பாவ காணோம் என்ற படத்தை இயக்கிய இயக்குனர் மணி செயோன் இயக்குகிறார். 

    வி.ஆர்.டெல்லா பிலிம் பேக்டரி சார்பாக வி.ஆர்.மணிகண்டராமன் தயாரிக்கும் இப்படம் கிரைம் டிராமாவாக உருவாக இருக்கிறது. இதில் சுந்தர்.சி.யுடன் ஹெபா படேல், சாந்தினி தமிழரசன், அபிராமி வெங்கடாசலம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

    படக்குழுவினர்

    மணி பெருமாள் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது. 
    ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரிஷ்யம் 2 படத்தை பார்த்து ராஜமவுலி புகழ்ந்து இருக்கிறார்.
    ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா மற்றும் பலர் நடித்த 'திரிஷ்யம் 2' மலையாளப் படம் கடந்த மாதம் ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

    முதல் பாகத்திற்குப் பொருத்தமான இரண்டாம் பாகம் என படத்தைப் பார்த்த பலரும் பாராட்டினார்கள். தற்போது தெலுங்குத் திரையுலகின் முக்கிய இயக்குனரான எஸ்எஸ் ராஜமவுலி படம் குறித்து மிகவும் பாராட்டி படத்தின் இயக்குனர் ஜீத்து ஜோசப்பிற்கு மெசேஜ் அனுப்பியுள்ளார். 

    “நான் ராஜமௌலி, திரைப்பட இயக்குனர். 'திரிஷ்யம் 2' படத்தை சில தினங்களுக்கு முன்பு பார்த்தேன். இயக்கம், திரைக்கதை, படத்தொகுப்பு, நடிப்பு மற்றும் அனைத்துமே மிகவும் அற்புதம் என உறுதியாகச் செல்வேன். ஆனால், எழுத்து உண்மையிலேயே மாறுபட்டு இருந்தது. அது உலகத்தரம் வாய்ந்த ஒன்று. 

    திரிஷ்யம் 2 படக்குழுவினர்

    முதல் பாகமே ஒரு மாஸ்டர் பீஸ்தான். இரண்டாம் பாகத்தில் முதல் பாகத்துடன் ஒன்றிப் போகும் அளவிற்கான கதை, இறுக்கமான கதை சொல்லல், புத்திசாலித்தனத்திற்குக் குறைவில்லாமல் இருந்தது. இது போன்ற இன்னும் பல மாஸ்டர் பீஸ்களை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்,” என தன்னுடைய மெசேஜில் ராஜமவுலி தெரிவித்துள்ளார்.
    உடல் நலக்குறைவு காரணமாக காலமான இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனின் இறுதி ஊர்வலத்தில் நடிகர் விஜய் சேதுபதி கண்கலங்கியபடி மலர்தூவிக் கொண்டே சென்றிருக்கிறார்.
    இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடைமை ஆகிய படங்களை இயக்கியவர் எஸ்.பி.ஜனநாதன். இவர் தற்போது விஜய் சேதுபதியை வைத்து லாபம் படத்தை இயக்கி இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

    இப்படத்தின் எடிட்டிங் பணியின் போது வீட்டுக்கு சென்ற எஸ்.பி.ஜனநாதன் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் காலமானார். இவரது மறைவிற்கு பலரும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்தனர். நடிகர்கள், நடிகைகள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.

    விஜய் சேதுபதி

    இன்று விஜய் சேதுபதி நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் இறுதி ஊர்வலத்தில் கலந்துக் கொண்ட விஜய் சேதுபதி, கண்கலங்கிய படி மலர்தூவிக் கொண்டே சென்றார்.
    உடல் நலக்குறைவு காரணமாக மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் உடலுக்கு நடிகர் விஜய் சேதுபதி நேரில் சென்று அஞ்சலி செலுத்தி இருக்கிறார்.
    தமிழ்த் திரையுலகில் பல வெற்றி படங்களை இயக்கிய எஸ்.பி.ஜனநாதன் நேற்று உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலர் சமூக வலைத்தளத்தில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்கள். ஜெயம் ரவி, அருண் விஜய், ஆரி, சௌந்தரராஜா, தன்ஷிகா, வெற்றி மாறன், சீனு ராமசாமி, சிம்பு தேவன் உள்ளிட்ட பலர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.

    தற்போது நடிகர் விஜய் சேதுபதி நேரில் வந்து எஸ்.பி.ஜனநாதனுக்கு அஞ்சலி செலுத்தி இருக்கிறார். எஸ்.பி.ஜனநாதன தற்போது விஜய் சேதுபதியை வைத்து 'லாபம்' படத்தை இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    விஜய் சேதுபதி

    ‘லாபம்' படத்தின் இறுதிக்கட்ட எடிட்டிங் பணியின் போது வீட்டுக்கு சென்ற எஸ்.பி.ஜனநாதன் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

    888 புரொடக்‌ஷன்ஸ் முதல் தயாரிப்பில் ஜெயசீலன் தவப்புதல்வி இயக்கத்தில் உருவாக இருக்கும் சாந்தி செளந்தரராஜன் படத்தின் முன்னோட்டம்.
    பல படங்களை விநியோகம் செய்து வரும் 888 புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் முதன் முறையாக தயாரிப்புத் துறையில் தடம் பதிக்கிறது. கடந்த வருடம் மம்மூட்டி நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற 'மாமாங்கம்' திரைப்படத்தில ஒளிப்பதிவாளராக பணியாற்றிய மனோஜ் பிள்ளையிடம் அசோஸியேட் ஒளிப்பதிவாளராகவும் மற்ற பல படங்களில் இணை, துணை ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ஜெயசீலன் தவப்புதல்வி இப்படத்தின் மூலம் கதை, திரைக்கதை, வசனமெழுதி இயக்குனராக அறிமுகமாகிறார்.

    இந்தியாவிற்கு 12 சர்வதேச பதக்கங்களையும், தன் சொந்த மாநிலமான தமிழகத்திற்கு 50 பதக்கங்களுக்கு மேல் வென்ற தடகள வீராங்கனை சாந்தி செளந்தரராஜன். ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் தமிழ் பெண் சாந்தி செளந்தரராஜன். 2006 ஆசிய விளையாட்டுப் போட்டியில் நடத்தப்பட்ட பாலின சோதனையின் அறிக்கையின் அடிப்படையில், பெண்களுக்கான போட்டியில் தகுதி மறுக்கப்பட்டு அவர் வென்ற வெள்ளிப் பதக்கம் அவரிடமிருந்து திரும்பி பெறப்பட்டது.

    இந்த அவமானகரமான சோதனையின் காரணமாக சாந்தி செளந்தரராஜன் தடகள போட்டிகளில் இருந்து நிரந்தரமாக வெளியேற்றப்பட்டார்.

    அவர் வாழ்க்கையில் நடந்த, இதுவரை வெளிவராத பல சுவாரஸ்யமான சம்பவங்கள் மற்றும் திருப்பங்களுடன் கதை வடிவமைக்கப்பட்டு, முழுக் கதையினையும் சாந்தி செளந்தரராஜனிடம் ஒப்புதல் பெற்று, இக்கதை படமாக்கப்பட உள்ளது.

    இப்படத்தில், சாந்தி செளந்தரராஜனின் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு மூன்று நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, 'ஆஸ்கர் விருது பெற்ற 'ரசூல் பூக்குட்டி ஒலி வடிவமைப்பு செய்கிறார். இப்படத்தின் பாடல்களை யுகபாரதி எழுத, வசனங்கள் பொன் பார்த்திபன் எழுதியுள்ளார். மேலும் இப்படத்தில், ஒளிப்பதிவு - கோபிநாத் D தேவ், படத்தொகுப்பு - சங்கத்தமிழன், கலை - காளி. ப்ரேம் குமார் என பல தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றுகின்றனர்.
    தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரிடம் அஜித் ரசிகர் ஒருவர் வலிமை படத்தின் அப்பேட் எப்போது வரும் கேட்டிருக்கிறார்.
    தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைப்பெறுகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டு வேட்பு மனுக்களையும் தாக்கல் செய்து வருகின்றனர். 

    இந்நிலையில் நேற்று பாஜக தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதில் கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து பாஜக தொண்டர் ஒருவர் அஜித் நடிக்கும் ‘வலிமை அப்டேட் எப்ப’ என சமூக வலைத்தளத்தில் வானதியிடம் கேட்டிருக்கிறார்.

    வானதியின் பதிவு

    அதற்கு, ’நான் வெற்றி பெற்ற உடன் நிச்சயமாக வலிமை பட அப்டேட் கிடைக்கும் தம்பி’ என பதிலளித்தார் வானதி சீனிவாசன். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
    தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில், பிரபல காமெடி நடிகர் மயில்சாமி சுயேட்சை வேட்பாளராக களமிறங்க இருப்பதாக அறிவித்து இருக்கிறார்.
    தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டு வேட்பு மனுக்களையும் தாக்கல் செய்து வருகின்றனர். தமிழ் திரையுலகை சேர்ந்தவர்களும் ஒரு சிலர் தேர்தலில் போட்டியிட்டு வருகின்றனர். 

    இந்த நிலையில் தற்போது பிரபல காமெடி நடிகர் மயில்சாமி சுயேட்சையாக தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார். அவர் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறார். மேலும் இன்று மனு தாக்கல் செய்துவிட்டு, தனது இல்லத்தில் பத்திரிகையாளர்களை சந்திக்கிறார்.

    மயில்சாமி

    எம்ஜிஆரின் தீவிர ரசிகரான மயில்சாமி, ஜெயலலிதா மரணம் அடையும் வரை அதிமுகவில் இருந்தார். அதன்பின் அக்கட்சியில் இருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
    சல்மான் கானின் முன்னாள் காதலி சோமி அலி அளித்த பேட்டியில் நானும் பாலியல் தொல்லைக்கு உள்ளானேன் என்று புகார் கூறியிருக்கிறார்.
    பிரபல இந்தி நடிகை சோமி அலி. இவர் 1990-களில் இந்தியில் அதிக படங்களில் நடித்தார். பின்னர் சினிமாவில் இருந்து விலகினார். பாகிஸ்தானை சேர்ந்த சோமி அலி தற்போது அமெரிக்காவில் வசிக்கிறார். புதிய தொண்டு நிறுவனத்தை தொடங்கி பாலியல் தொல்லைக்கு உள்ளானவர்களுக்கு உதவி செய்து வருகிறார். 

    இந்தி நடிகர் சல்மான்கானும், சோமி அலியும் பல வருடங்களாக காதலித்தனர். பின்னர் இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டார்கள். இந்த நிலையில் சோமி அலி அளித்த பேட்டியில், சிறுவயதில் தனக்கு பாலியல் தொல்லை எற்பட்டதாக பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். சோமி அலி கூறும்போது, “நான் 6 மற்றும் 9 வயதில் பாலியல் தொல்லைக்கு உள்ளானேன். 

    சோமி அலி

    14 வயதாகும்போது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டேன். பாலியல் தொல்லை குறித்து எனது பெற்றோரிடம் தெரிவித்தேன். ஆனால் அவர்கள் இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லாதே என்றனர். அது மனதுக்கு கஷ்டமாக இருந்தது. அந்த மன வலியோடு பல ஆண்டுகள் வாழ்ந்தேன். பாலியல் தொல்லைகளை வெளிப்படுத்த பெண்கள் தயங்கக்கூடாது’’ என்றார்.
    தற்போது அரசியலில் பிசியாக இருக்கும் நடிகை கவுதமி, இத்தனை காலம் சினிமாவில் நடிக்காமல் இருந்ததற்கு யார் காரணம் என்பதை பேட்டியளித்துள்ளார்.
    தமிழ் திரையுலகில் 1980 மற்றும் 90-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த கவுதமி தற்போது அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:-

    ''நான் சினிமாவுக்கு வருவேன் என்றோ அரசியலில் ஈடுபடுவேன் என்றோ நினைத்து பார்க்கவில்லை. ஆந்திராவில் பிறந்த நான் எம்.பி.ஏ படிக்க வேண்டும் என்ற ஆசையோடு இருந்தேன். ஆனால் குரு சிஷ்யன் படத்தில் நடித்த பிறகு திரும்பி பார்க்கவே நேரம் இல்லை. வருடத்துக்கு 15 படங்கள் வரை நடித்தேன். ஏழரை வருடங்களில் 120 படங்களில் நடித்து விட்டேன். அது பெரிய சாதனை. 
    சினிமாவால் வாழ்க்கையில் சில விஷயங்களை இழக்கிறோம் என்று தோன்றியது. அதன்பிறகு சினிமாவை விட்டு விலக முடிவு செய்தேன். திருமணம் ஆகி 3 ஆண்டுகளில் அந்த உறவு அறுந்து போனது. ஆனாலும் எனது வாழ்க்கையில் நான் தனிமையாக இல்லை. எனக்குள்ளேயே நான் இருக்கிறேன். எந்த விஷயம் ஆனாலும் எனது மகளிடம் மனம் விட்டு பேசுகிறேன். 

    மகளுடன் கவுதமி

    எனது கடந்த காலம், நிகழ்காலம் எல்லாம் அவளுக்கு தெரியும். எனது மகள் சுப்புலட்சுமிக்கு சினிமாவில் நடிக்க ஆர்வம் இல்லை. கேமராவுக்கு பின்னால் இருக்கத்தான் அவளுக்கு பிடிக்கிறது. சினிமாவில் நடிக்க வேண்டும் என்றாலும் எனக்கு ஆட்சேபனை இல்லை. எல்லாம் அவளுடைய விருப்பம்தான். இத்தனை காலம் சினிமாவில் நடிக்காமல் இருந்ததற்கு எனது மகள்தான் காரணம். இப்போது அவள் செட்டிலாகி விட்டதால் இனிமேல் சினிமாவில் நடிக்க நான் தயாராக இருக்கிறேன்.'

    இவ்வாறு கவுதமி கூறினார்.
    சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிரபல நடிகர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்காக கட்சிகள் தங்களுடைய வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது கேரள மாநிலத்தில் பாஜக போட்டியிடும் தொகுதிகள் குறித்த பட்டியல் வெளியாகி உள்ளது.

    அதில் தீனா, சமஸ்தானம், ஐ உள்ளிட்ட தமிழ் படங்களிலும் ஏராளமான மலையாள படங்களிலும் நடித்த நடிகர் சுரேஷ் கோபி, திருச்சூர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவரது ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.

    சுரேஷ் கோபி

    இந்த நிலையில் சமீபத்தில் நடந்த படப்பிடிப்பில் சுரேஷ்கோபி கலந்து கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பரிசோதனை செய்ததில் நிமோனியா காய்ச்சல் என தெரிய வந்தது. இதையடுத்து அதற்கான சிகிச்சை பெற்று வருகிறார். விரைவில் சிகிச்சை முடிந்து அவர் வீடு திரும்புவார் என்று கூறப்படுகிறது.
    சிவகுமார் நடித்த "மறுபக்கம்'' என்ற படத்துக்கு தேசிய விருது (தங்கத்தாமரை) கிடைத்தது.
    சிவகுமார் நடித்த "மறுபக்கம்'' என்ற படத்துக்கு தேசிய விருது (தங்கத்தாமரை) கிடைத்தது. எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி எழுதிய குறுநாவல் "உச்சி வெயில்.'' அதை, "மறுபக்கம்'' என்ற பெயரில் டைரக்டர் கே.எஸ்.சேதுமாதவன் படமாகத் தயாரித்தார். இந்தப் படத்துக்கு, "தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம்'' நிதி உதவி செய்தது. மொத்தம் ரூ.14 லட்சம் செலவில் இப்படம் தயாரிக்கப்பட்டது.

    வேம்பு அய்யர் என்ற வேடத்தில் சிவகுமார் நடித்திருந்தார். அவருடன் ராதா நடித்தார். 1991-ல் வெளிவந்த இப்படத்துக்கு, அகில இந்திய ரீதியில், சிறந்த படம் என்பதற்கான தேசிய விருது (தங்கத்தாமரை) கிடைத்தது.

    பிரபலமான மூத்த கலஞர்களுடன் சேர்ந்து நடிப்பதை 1974 முதல் சிவகுமார் தவிர்த்து வந்தார். கதாநாயகனாக நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தினார்.

    சிவாஜிகணேசன் நடிக்க, பாரதிராஜா இயக்கிய "பசும்பொன்'' படத்தில் நடிக்க, 1995-ல் அழைப்பு வந்தது. பாரதிராஜாவின் டைரக்ஷனில் நடிக்க வேண்டும் என்ற ஆவல், சிவகுமாருக்கு நீண்ட காலமாக இருந்தது.

    எனவே, தனது "விரத''த்தை முடித்துக்கொண்டு, 21 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு சிவாஜியுடன் இணைந்து நடித்தார், சிவகுமார்.

    "பசும்பொன்'' படத்தைப் பற்றி சிவகுமாரின் கருத்து:

    "பாரதிராஜாவுடன் நான் பணியாற்றிய ஒரே படம் இது. செதுக்கிச் செதுக்கி, இழைத்து இழைத்து காட்சிகளைப் படமாக்கினார்.

    எங்கோ ஓரிடத்தில் நடந்த தவறினால், ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற படம் தவறிவிட்டது. எனினும், பாரதிராஜாவின் மிகச்சிறந்த படைப்புகளில் பசும்பொன்னும் ஒன்று.

    ராதிகாவின் கதாபாத்திரம் `மாஸ்டர் பீஸ்.' வயதுக்கு மீறிய கதாபாத்திரத்தில் வாழ்ந்து காட்டினார் அவர்.

    திரைக்கதையை உருவாக்க சுமார் 6 முதல் 8 மாதங்கள் வரை உழைத்து, அதன்பின் அதை நண்பர்களிடம் படித்துக்காட்டி, அதை மேம்படுத்தி, அதற்குப் பிறகுதான் படப்பிடிப்புக்கு செல்வார், கதாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளரான நண்பர் எம்.பாஸ்கர்.

    தீர்ப்புகள் திருத்தப்படலாம், பவுர்ணமி அலைகள், தண்டிக்கப்பட்ட நியாயங்கள் ஆகிய படங்கள் இவர் இயக்கத்தில் நான் நடித்தவை.''

    இவ்வாறு சிவகுமார் கூறினார்.

    சினிமாவில் தந்தையும், மகனும் ஒரே படத்தில் நடிப்பது விசேஷமானது.

    இந்தி நடிகர் ராஜ்கபூரின் குடும்பத்தில் இப்படி நடந்துள்ளது. தமிழ்நாட்டில் சிவாஜிகணேசனும், அவர் மகன் பிரபுவும் சேர்ந்து நடித்துள்ளனர்.

    22-9-2000-ல் வெளிவந்த "உயிரிலே கலந்தது'' என்ற படத்தில் சிவகுமாரும், சூர்யாவும் சேர்ந்து நடித்தனர். இதில் சூர்யாவுக்கு ஜோடி ஜோதிகா.

    1997-ல் வெளிவந்த "காதலுக்கு மரியாதை'' படத்தில் இளம் நடிகர் விஜய்க்கு தந்தையாக நடித்தார், சிவகுமார்.

    இந்தப்படத்தில், இந்து மதத்தைச்சேர்ந்த விஜய்யும், கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த ஷாலினியும் காதலிப்பார்கள். காதலுக்கு மதம் தடையாக இருந்தாலும், இருவரும் பெற்றோர் மீது கொண்ட பாசத்தின் காரணமாக, காதல் வெற்றி பெறும்.

    இந்தப் படத்தில் நடித்தது பற்றி சிவகுமார் கூறியதாவது:-

    "காதல் இயற்கையானது. தவிர்க்க முடியாதது. மனித இனம் தோன்றிய காலம் தொட்டு நிகழ்வது.

    ஆனால், 25 வயது வரை பெற்று வளர்த்து ஆளாக்கி, வாழ்க்கையைக் கொடுத்த பெற்றோரை உதாசீனப்படுத்தி விட்டு புது உறவுடன் ஓடிப்போகலாமா? அது தவறு. போராடி, பெற்றோர் சம்மதத்தைப் பெற்று வாழ்க்கையில் ஒன்று சேருங்கள் என்ற உயர்ந்த படிப்பினையைச் சொன்ன படம் "காதலுக்கு மரியாதை.''

    நானும், ஸ்ரீவித்யாவும் விஜய்க்கு பெற்றோர்களாக நடித்தோம்.

    பாசில் உருவாக்கிய மிகச்சிறந்த படங்களில் இந்தப்படமும் ஒன்று.''

    இவ்வாறு கூறினார், சிவகுமார்.

    திரை உலக அனுபவங்கள் பற்றி அவர் மேலும் கூறியதாவது:-

    "நான் நடித்த மொத்த படங்கள் 193.

    152 தயாரிப்பாளர்களுடனும், 98 டைரக்டர்களுடனும் பணியாற்றியுள்ளேன். என்னுடன் நடித்த கதாநாயகிகள் 87 பேர்.

    எனக்குப் பிறகு திரைப்படங்களில் அறிமுகமாகி, எனக்கு ஜோடியாக அதிகப்படங்களில் நடித்தவர்கள் லட்சுமி, ஜெயசித்ரா, ஸ்ரீபிரியா, சுஜாதா, சரிதா, அம்பிகா, ராதிகா ஆகியோர்.

    மூன்று நான்கு படங்களில் இணையாக நடித்தவர்கள் ஸ்ரீவித்யா, ஜெயசுதா, ஸ்ரீதேவி, ராதா, சுஹாசினி ஆகியோர்.

    கதாநாயகியாக வளர்ந்து கொண்டிருந்த கட்டத்தில் "கவிக்குயில்'', "சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு'', "மச்சானைப் பாத்தீங்களா'' என்ற மூன்று படங்களில் ஸ்ரீதேவி என்னுடன் இணைந்து நடித்தார். துரதிர்ஷ்டவசமாக மூன்றுமே வெற்றிபெறத் தவறிவிட்டன.

    என்னுடன் அதிக படங்களில் கதாநாயகியாக நடித்தவர் லட்சுமி. மிகுந்த தைரியசாலி. சோதனைகளைச் சந்திக்க நேர்ந்தாலும், அவற்றால் துவண்டு விடாமல், தன் நடிப்பாற்றலைக் கொண்டு, வெற்றிகரமாக வாழ்ந்து காட்டுபவர். புத்தகம் படிக்கும் ஆர்வம் உள்ளவர்.

    "சில நேரங்களில் சில மனிதர்கள்'' படத்தில் அவர் ஏற்ற வேடம், அவரது அன்றைய வயதுக்கும், அனுபவத்துக்கும் மீறிய ஒன்று. ரொம்பவும் `மெச்சூர்டாக' அந்தப் பாத்திரத்தில் நடித்து, "ஊர்வசி'' விருது வாங்கினார்.

    தமிழ்த்திரை உலகுக்கு அறிமுகம் ஆகும்போதே சுஜாதாவின் தோற்றத்தில் `மெச்சூரிட்டி' இருந்தது. அதனால், குடும்பத் தலைவி, வக்கீல், டாக்டர், பழி வாங்கத் துடிக்கும் நடுத்தர வர்க்கத்துப்பெண்... என்று குணச்சித்திர வேடங்கள் அவருக்கு ரொம்பவும் கை கொடுத்தன. உணர்ச்சிகரமான கட்டங்களில், நீண்ட தமிழ் வசனங்களை சுத்தமான உச்சரிப்புடன் பொரிந்து தள்ளுவதில் வல்லவர்.

    சரிதா ரொம்பவும் திறமை சாலியான நடிகை. அவருடைய கண்களே ஆயிரம் கதைகள் பேசும்.''

    இவ்வாறு சிவகுமார் கூறினார்.
    ×