என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சோமி அலி"
- சல்மான் கான் தற்போது இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் அடுத்த ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி வெளியாகவுள்ள 'டைகர்' படத்தில் நடித்து வருகிறார்.
- முன்னாள் காதலியும் நடிகையுமான சோமி அலி சல்மான் கானை வெறி பிடித்த மிருகம், பெண்களை கொடூரமாக அடிப்பவர் என கூறி பரபரப்பை கிளப்பி உள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் தற்போது இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் அடுத்த ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி வெளியாகவுள்ள 'டைகர்' படத்தில் நடித்து வருகிறார். 56 வயதாகியும் நடிகர் சல்மான் கான் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. ஜரின் கான், கத்ரீனா, சினேகா உல்லல், டைசி ஷா, லூலியா வந்தூர், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல முன்னணி நடிகைகளுடன் சல்மான் கான் கிசுகிசுக்கபட்டார்.
சல்மான் கான் பாகிஸ்தானை சேர்ந்த சோமி அலியுடன் சில வருடங்களுக்கு முன்பு டேட் செய்ததாக கூறப்படுகிறது. தற்போது முன்னாள் காதலியும் நடிகையுமான சோமி அலி சல்மான் கானை வெறி பிடித்த மிருகம், பெண்களை கொடூரமாக அடிப்பவர் என கூறி பரபரப்பை கிளப்பி உள்ளார். அதில், "அவர் பெண்களை துன்புறுத்துபவர். நான் மட்டுமின்றி பலரும் துன்புறுத்தப்பட்டுள்ளோம். அவரை கொண்டாடுவதை நிறுத்துங்கள். உங்களுக்கு எதுவும் தெரியாது" என குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் அந்தப் பதிவை பதிவிட்ட 24 மணி நேரத்திற்குள் நீக்கியுள்ளார். சோமி அலியின் இந்த செயல் தற்போது பாலிவுட் திரை வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.