என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ஆர்யா, தற்போது அரண்மனை 3, சார்பட்டா பரம்பரை, எனிமி போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.
    அருள்நிதி நடித்த மௌனகுரு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சாந்தகுமார். 2011-ம் ஆண்டு வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து ஆர்யா, இந்துஜா, மகிமா நம்பியார் நடித்த ‘மகாமுனி’ படத்தை இயக்கினார் சாந்தகுமார். கடந்த 2019-ம் ஆண்டு வெளியான இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதோடு, சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது.

    இந்நிலையில், இயக்குனர் சாந்தகுமார் அடுத்ததாக இயக்க உள்ள படத்திலும் ஆர்யா ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்தை ஆர்யாவே தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்த பின் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆர்யா
    ஆர்யா

    தற்போது நடிகர் ஆர்யா அரண்மனை 3, சார்பட்டா பரம்பரை, எனிமி போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்த 3 படங்களும் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளன. 
    தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி, இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில், 5-வது சீசன் எப்போது தொடங்கப்படும் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
    தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை தமிழில் நான்கு சீசன்கள் முடிந்துள்ளன. முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகின், நான்காவது சீசனில் ஆரி ஆகியோர் பிக்பாஸ் டைட்டிலை ஜெயித்தனர்.

    வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஜூன் மாதத்தில் தொடங்கி அக்டோபர் வரை நடத்தப்படும். ஆனால் கடந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக லாக்டவுன் போடப்பட்டதால், பிக்பாஸ் 4 நிகழ்ச்சி திட்டமிட்டபடி ஜூன் மாதம் தொடங்கப்படவில்லை. பின்னர் அக்டோபர் மாதம் தொடங்கி இந்தாண்டு ஜனவரி 16-ந் தேதி வரை ‘பிக்பாஸ் 4’ நடைபெற்றது.

    கமல்ஹாசன்
    கமல்ஹாசன்

    இந்நிலையில், கொரோனா 2-வது அலை பரவல் காரணமாக பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியும் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்தாண்டை போலவே இந்தாண்டும் அக்டோபர் மாதத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடங்க அதன் ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. வழக்கம்போல் இந்த சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க உள்ளாராம்.
    திருமணத்திற்குப் பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டிருந்த மீனா, தற்போது சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி உள்ளார்.
    தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மீனா. பின்னர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பிரபலமானார். இவருடைய நடிப்புக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே உண்டு. 

    திருமணத்திற்குப் பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டிருந்த மீனா, தற்போது சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி உள்ளார். இவர் கைவசம், ரஜினியின் ‘அண்ணாத்த’, திரிஷ்யம் தெலுங்கு ரீமேக் போன்ற படங்கள் உள்ளன. 

    இந்நிலையில், அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு: “எனக்கு வில்லி வேடத்தில் நடிக்க ஆர்வம் உள்ளது. சினிமா பார்வையாளர்களின் மன நிலை தற்போது மாறி இருக்கிறது. முன்பெல்லாம் கதாபாத்திரம் தனது இமேஜுக்கு பொருத்தமாக இருக்குமா? என்று யோசிக்க வேண்டி இருந்தது. ஆனால் இப்போது அப்படி இல்லை. 

    மீனா
    மீனா

    நாம் நடிப்பது ஒரு கதாபாத்திரம் என்பதை மக்கள் புரிந்து கொண்டு இருக்கிறார்கள். எனவேதான் எதிர்மறை கதாபாத்திரம் உள்ளிட்ட வித்தியாசமான வேடங்களில் நடிக்க விரும்புகிறேன். படையப்பா, தேவர் மகன் உள்பட பல வெற்றி படங்களை கால்ஷீட் பிரச்சினையால் தவற விட்டுள்ளேன். அது எனக்கு இப்போதும் வருத்தம் அளிக்கிறது.

    அடிப்படையில் நான் ஒரு நடன கலைஞர். எனவே எனக்கு நடன காட்சிகளில் நடிக்க மிகவும் பிடிக்கும். பரதநாட்டிய கதையம்சம் உள்ள படத்தில் நடிக்க ஆர்வம் இருந்தது. ஆனால் அது நிறைவேறவில்லை.” இவ்வாறு மீனா கூறியுள்ளார்.
    அட்லீயுடன் ராஜா ராணி படத்தில் பணியாற்றிய ஜெய், தற்போது அவருடன் மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் அட்லீ. ஆர்யா நடிப்பில் வெளியான ‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். பின்னர் விஜய்யுடன் தெறி, மெர்சல், பிகில் என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்தார். இவர் அடுத்ததாக பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து இந்திப் படம் ஒன்றை இயக்க உள்ளார்.

    இயக்குனர் அட்லீ, தனது மனைவி பிரியாவுடன் இணைந்து பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். இவர்கள் தயாரிப்பில் சங்கிலி புங்கிலி கதவ தொற, அந்தகாரம் போன்ற படங்கள் வெளியானது.

    ஜெய்
    ஜெய்


    இந்நிலையில், இயக்குனர் அட்லீ அடுத்ததாக தயாரிக்கும் புதிய படத்தில் நடிகர் ஜெய் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஒருவர், இப்படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அட்லீயுடன் ராஜா ராணி படத்தில் பணியாற்றிய ஜெய், தற்போது அவருடன் மீண்டும் இணைய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    கொரோனா 2-வது அலையில் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று நடிகர் அமிதாப்பச்சன் வலியுறுத்தி உள்ளார்.
    கொரோனா தொற்று இரண்டாவது அலையில் அதிகமானோர் பாதித்து இருப்பதால் பெரும்பாலான மாநிலங்கள் ஊரடங்கை பிறப்பித்து உள்ளன. நடிகர், நடிகைகள் முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், தேவையில்லாமல் வெளியே போவதை தவிர்த்தல் போன்றவற்றை வலியுறுத்தி விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படங்களையும் வலைத்தளத்தில் பகிர்கின்றனர். 

    இந்நிலையில் நடிகர் அமிதாப்பச்சன் கொரோனா 2-வது அலையில் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: “சில பகுதிகளில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம். 

    அமிதாப்பச்சன்

    கொரோனா விதிமுறைகளை பின்பற்றுங்கள். கைகளை கழுவுங்கள், முக கவசங்கள் அணியுங்கள், சமூக இடைவெளியை கடைப்பிடியுங்கள். தேவையில்லாமல் பயணம் செய்வதை தவிருங்கள், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்'' என்று தெரிவித்துள்ளார்.
    அண்ணன் இல்லாத நேரத்தில், அவருடைய ஆர்மோனியத்தை இளையராஜா எடுத்து வாசித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அண்ணன் பாவலர் வரதராஜன், பிரம்பை எடுத்து இளையராஜாவை விளாசினார்.
    அண்ணன் இல்லாத நேரத்தில், அவருடைய ஆர்மோனியத்தை இளையராஜா எடுத்து வாசித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அண்ணன் பாவலர் வரதராஜன், பிரம்பை எடுத்து இளையராஜாவை விளாசினார்.

    பாவலரின் கச்சேரிகளில் பெண் குரலில் பாடி அசத்திய இளையராஜாவை, திடீரென்று "நீ பாடவேண்டாம்'' என்று பாவலர் கூறிவிட்டார். அதற்குக் காரணம் இளையராஜாவின் குரலில் ஏற்பட்ட மாற்றம்தான்.

    இதுபற்றி இளையராஜா கூறுகிறார்:

    "நாளொரு கச்சேரி, பொழுதொரு ஊர் என்று போய்க்கொண்டிருந்த அந்த உற்சாக நாட்களில், ஆண்களுக்கு பருவ வயதில் வரும் "மகரக்கட்டு'' எனக்கு வந்துவிட்டது. அதாவது குரல் உடைந்து, ஆண் குரலாக மாறுவதை "மகரக்கட்டு'' என்பார்கள். என் குரல் பெண் குரல் போல் இல்லாததால், என்னை விட்டு விட்டு தம்பி அமரனை (கங்கை அமரன்) கச்சேரியில் டூயட் பாட அழைத்துக்கொண்டு போனார், அண்ணன்.

    "படிப்பும் போச்சு; பாட்டும் போச்சு! இதென்ன பெரிய பாடாய்ப் போச்சுதே!'' என்ற வேதனையுடன் பண்ணைபுரம் கிராமத்தையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தேன். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாக கழிந்தது.

    என்னுடன் படித்த நண்பர்கள் மதுரையில் கல்லூரிகளில் சேர்ந்து படித்து லீவு நாட்களில் ஊர் வருவார்கள். ஊரில் இருக்கும் நான், அவர்களை சந்திக்க நேரும்போது படிப்பின் இழப்பைப்பற்றி நினைத்து, மனம் துன்பப்படும்.

    அதே நேரம் அதிகமாக ஊர் சுற்றியதால் கிடைத்த அனுபவத்தில், அவர்களுக்குத் தெரியாத விஷயங்களை நான் தெரிந்து வைத்திருப்பதைக் கண்டு, அவர்கள் பொறாமைப் படுவதைக் காணப் பெருமையாகவும் இருக்கும்!

    எப்படியோ! எப்போதும் நான் தனிதான் என்று இறைவன் எழுதி வைத்து விட்டதால், அதை என்னால் எப்படி மாற்ற முடியும்?

    இந்தத் தனிமையைப் போக்க, "கல்கி''யின் சரித்திர நாவல்கள் எனக்கு உதவின. பள்ளியில் படிக்கும்போது ஏற்கனவே இந்த நாவல்களை படித்திருந்தாலும், என்றைக்குப் படித்தாலும் அன்றைக்குத்தான் எழுதியதைப் போலிருக்கும்.

    இதற்கிடையே கோவையில் கச்சேரிக்கு சென்று வந்த அண்ணன் ஆர்மோனியம் ஒன்றை வாங்கி வந்திருந்தார். அதன் விலை 85 ரூபாய் என்றார். அதை மிகவும் பத்திரமாக பாதுகாத்து வந்தார். யாரும் தொடக்கூடாது என்று உத்தரவே போட்டிருந்தார்.

    இது தெரிந்தும், அவர் வீட்டில் இல்லாத ஒரு நாள் நான் அந்த ஆர்மோனியத்தை எடுத்து சும்மா வாசிக்க முயற்சி செய்து கொண்டிருந்தேன். எதிர்பாராமல் அந்த நேரத்தில் அண்ணன் வந்துவிட்டார். நான் ஆர்மோனியமும் கையுமாக இருந்ததை பார்த்தவருக்கு, கோபம் வந்துவிட்டது. புறங்கையை நீட்டச்சொல்லி, பிரம்பால் விளாசிவிட்டார்.''

    - இவ்வாறாக இளமைப் பருவத்து நினைவுகளை பகிர்ந்து கொண்டார், இளையராஜா.

    இளையராஜா இப்படி பிரம்படி வாங்கியிருக்கிறாரே என்று உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். ஏற்கனவே அண்ணனிடம் அடிவாங்கிய அனுபவமும் இருக்கிறது. அதை அவரே கூறுகிறார்:

    "சிறு வயதில் கிணற்றில் நீச்சலடித்துவிட்டு வீட்டுக்கு வந்தபோது, பாதுகாப்புக்கு ஆளில்லாமல் சிறுவர்களாக சேர்ந்து குளித்ததை தெரிந்து கொண்டவர், என்னை வீட்டுத்தூணில் கட்டிப்போட்டார். மீண்டும் ஒரு முறை குளித்து விட்டு வந்ததற்காக, அம்மாவே என்னையும் பாஸ்கரையும் தூணில் கட்டி வைத்திருக்கிறார்கள். அதோடு நில்லாமல் கண்ணில் மிளகாயை அரைத்து வைத்தார்கள். அப்புறம் தண்டனையைக் குறைக்க வெங்காயத்தை அரைத்து வைப்பது வழக்கமாயிற்று.

    குறைந்தது மூன்று மணி நேரமாவது இப்படி தூணில் கட்டிப் போட்டிருப்பார்கள். பின்பு பரிதாபப்பட்டு அவிழ்த்து விடுவார்கள்.

    இப்படி தண்டனை வாங்குகிற அன்று இரவு சாப்பாட்டின்போது, கேட்பதெல்லாம் இல்லை என்று சொல்லாமல் போட்டிருக்கிறார்கள். அதுதான் சமயம் என்று நானும் பாஸ்கரும் "இந்த வீட்டைப்போல் எந்த வீடும் இருக்க முடியாது'' என்று ஆரம்பிப்போம்.

    "ஏண்டா அப்படிச் சொல்றீங்க?'' என்று அம்மா திருப்பிக் கேட்பார்.

    "குளிக்கிறதுக்குப் போய் எந்த வீட்டிலாவது அடிப்பாங்களா?'' என்று தொடங்கி "இனிமே தீபாவளி தீபாவளிக்குத்தான் `கங்கா ஸ்நானம்' பண்ணணுமாக்கும்?'' என்று சொல்லும்போதே சிரிப்பு வந்து சிரித்து விடுவோம்.

    ஆர்மோனியத்துக்காகவும் அடி வாங்க நேர்ந்ததால், அதன் பிறகு அண்ணன் வீட்டில் இருக்கும் நேரங்களில் ஆர்மோனியத்தை தொடுவதில்லை. அவர் இல்லாதபோது எடுத்து வாசிப்பது, வருவது தெரிந்தால் எடுத்து மூடி வைத்து விட்டு ஒன்றும் தெரியாதது போல் இருப்பது என்பது வழக்கமாகிவிட்டது.

    அம்மா, அண்ணனை கண்டிக்கவும் மாட்டார்கள்; நான் வாசிப்பதை தடுக்கவும் மாட்டார்கள். இதனால் அம்மாவின் மானசீக அனுமதி கிடைத்த மகிழ்ச்சியில், சீக்கிரமே ஓரளவுக்கு ஆர்மோனியம் வாசிக்க கற்றுக்கொண்டு விட்டேன்.

    ஆர்மோனியம் வீட்டுக்கு வந்த புதிதில், அண்ணனுடன் கச்சேரிக்கு வரும் சங்கரதாசிடம், எனக்கு ஆர்மோனியம் கற்றுத்தரும்படி கேட்டிருக்கிறேன். அவரும் `சரி' என்றார். ஆனால் வாய்ப்பு அமையாததால் அவரிடம் கற்கும் வாய்ப்பு கிடைக்காமலேயே போயிற்று. ஆனாலும் அவர் வாசிக்கிற பாணியை மனதில் கொண்டு வந்து `இப்படி வாசிப்பாரா? இல்லை, இப்படி வாசிப்பாரா?' என்று வாசித்து வாசித்து, ஓரளவுக்கு என்னால் வாசிக்க முடியும் என்ற தெளிவுடன், அதே நேரம் திருப்தியில்லாமலும் இருந்தேன்.

    இந்த நிலையில்தான் அண்ணனுக்கும், சங்கரதாசுக்கும் ஏதோ மனஸ்தாபம். கம்பத்தில் நடக்கவிருந்த ஒரு கச்சேரிக்கு, முந்தின நாள் தன்னால் வர இயலாது என்று சொல்லியனுப்பி விட்டார், சங்கரதாஸ்.

    அணணன் தவித்துப் போனார். ஒருநாள் இடைவெளியில் வேறு ஒருவரை பார்க்க வேண்டும். அதற்கு மதுரைக்குத்தான் போகவேண்டும். அப்படியே ஆள் கிடைத்தாலும் ஒத்திகை பார்க்க நேரம் வேண்டும்.

    இப்போதும் அம்மாதான் கைகொடுத்தார். அம்மா அண்ணனிடம், "தம்பி ராஜையாவை கூட்டிட்டுப் போகலாமே'' என்றார்.

    அம்மா இப்படிச் சொன்னதும், அண்ணன் ஒருமுறை என்னை மேலும் கீழும் பார்த்தார். நான் பிராக்டீஸ் செய்து வைத்திருப்பதை அவராகத் தெரிந்து கொண்டாரோ அல்லது எனக்குத் தெரியாமல் அம்மாதான் சொல்லியிருந்தாரோ, "சரி, வா!'' என்றார்.

    என் இசை வாழ்வுக்கு போடப்படும் முதல் அஸ்திவாரக்கல் அது என்று தெரியாமல், ஆர்மோனியத்துடன் அண்ணன் கச்சேரிக்கு புறப்பட்டேன்.

    கம்பத்தில் மெயின் ரோட்டில் மேடை போடப்பட்டிருந்தது. ஒரு சிறுவன் (இளையராஜா) அரை டிராயருடன் ஆர்மோனியம்வாசிக்க, பாஸ்கர் தபேலா வாசிக்க, அண்ணன் பாட கச்சேரி தொடங்கியது. என் கைகள் நடுக்கத்துடன் ஆர்மோனியம் வாசிக்க, நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை, என் வாசிப்புக்கும் கைதட்டல் கிடைக்குமென்று!

    தப்பும் தவறுமாய் வாசித்ததற்கே இவ்வளவு கைதட்டல் கிடைக்கிறதே, இன்னும் சரியாக வாசித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று

    எண்ணினேன்.இதன் பிறகு, வீட்டில் ஆர்மோனியத்தை நான் தொட்டால், அண்ணன் அடிப்பதில்லை
    பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான காளி வெங்கட் தற்போது ஹீரோவாக களமிறங்க இருக்கிறார்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருப்பவர் காளி வெங்கட். இவருடைய நடிப்பு பலருடைய கவனத்தை ஈர்த்து இருக்கிறது.

    இந்நிலையில் ஆடை திரைப்பட தயாரிப்பாளர் விஜி சுப்ரமணியம் தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் காளி வெங்கட் முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் தெரியவந்துள்ளன. இதேபோல் இந்த படத்தில் நாயகியாக பிக்பாஸ் 2-வது சீசன் டைட்டில் வின்னரான ரித்விகா நடிக்கிறார்.

    காளி வெங்கட்

    இப்படத்தின் மூலம் பிரம்மா என்பவர் இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார். மேலும் பல விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட இருக்கிறார்கள்.
    பாலிவுட் நடிகையும் மறைந்த நடிகை ஶ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர், பிரபல நடிகர் ஒருவருக்கு ஜோடியாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
    தெலுங்கில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஜூனியர் என்.டி.ஆர். இவர் தற்போது இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடித்துள்ளார். ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகிய இரு பிரபல ஹீரோக்கள் ஒன்றாக இணைந்து நடித்துள்ளதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

    இந்நிலையில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தை தொடர்ந்து மற்றுமொறு பிரம்மாண்ட இயக்குனரின் படத்தில் நடிக்க உள்ளார் ஜூனியர் என்.டி.ஆர். கேஜிஎஃப் படத்தை இயக்கிய கன்னட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தனது அடுத்த படத்தை ஜூனியர் என்.டி.ஆர் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    ஜூனியர் என்டிஆர் - ஜான்வி கபூர்
    ஜூனியர் என்டிஆர் - ஜான்வி கபூர்

    இதுவரை இந்த படத்தின் கதாநாயகி பற்றி அறிவிக்கப்படாத நிலையில் இப்போது ஜான்வி கபூரிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபலமாக இருக்கும் நடிகை ரகுல் பிரீத் சிங், முன்னணி நடிகை ஒருவரை புகழ்ந்து பேசி இருக்கிறார்.
    மனோஜ் பாய்பாய், சமந்தா, பிரியாமணி நடிப்பில் அமேசானில் வெளியாகியுள்ள வெப் தொடர் தி பேமிலி மேன்-2. இந்த தொடரை ஒளிபரப்பக்கூடாது என்று வைகோ, பாரதிராஜா, சீமான் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒரு பக்கம் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், மறு பக்கம் இப்படத்தை பாராட்டி வருகிறார்கள்.

    சமந்தா
    சமந்தா - ரகுல் பிரீத் சிங்

    இந்நிலையில் நடிகை ரகுல் சிங் டுவிட்டரில், ‛‛தி பேமிலி மேன்-2 தொடரில் நடித்துள்ள மனோஜ்பாஜ்பாயின் நடிப்பை பாராட்ட வார்த்தைகளே இல்லை. அதேபோல் சமந்தா ராஜி கேரக்டரை மிக அற்புதமாக செய்திருக்கிறார். இந்த தொடரை பார்த்த பிறகு எங்கள் குடும்பமே சமந்தாவின் ரசிகைகளாக மாறி விட்டோம்'' என்று பதிவிட்டுள்ளார்.
    வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகிவரும் மாநாடு படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகி இருக்கும் நிலையில் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
    சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்தை சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

    சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்‌ஷனும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மாநாடு படத்தின் முதல் பாடல் ரம்ஜான் பண்டிகையன்று வெளியிடப்படும் என அறிவித்திருந்த படக்குழு, அந்த சமயத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு தாயார் மரணமடைந்ததால், அப்பாடல் வெளியீடை தள்ளிவைத்தனர். 

    மாநாடு படத்தின் அறிவிப்பு


    இந்நிலையில் முதல் பாடலை ஜூன் 21 ஆம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இது சிம்பு ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
    கே.ஜி.எப் என்ற மாஸான படத்தை கொடுத்த இயக்குனர் பிரசாந்த் நீலை நெட்டிசன்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் கலாய்த்து வருகிறார்கள்.
    சமீபத்தில் தேசிய அளவில் பேசப்பட்ட படம் கேஜிஎப். யாஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். கன்னடப் படமான இது தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி லாபத்தை அள்ளியது. கேஜிஎப் இரண்டாம் பாகத்துக்கு இந்தியாவே காத்திருக்கிறது. 

    சமீபத்தில் இரண்டாம் பாகத்தின் ட்ரெய்லர் வெளியாகி பல சாதனைகளை படைத்தது. இதில் யாஷ் சிகரெட் பிடிக்கும் காட்சி மாஸாக இருக்கும். 

    இயக்குனர் பிரசாந்த் நீல்
    இயக்குனர் பிரசாந்த் நீல்

    சினிமாவில் இப்படி ஹீரோயிசத்தை உச்சத்தில் காட்டியவர், நிஜத்தில், ஊசி போடுவதைக் கூட பார்க்க பயந்து முகத்தை மூடிக் கொண்டிருக்கிறார். அந்த புகைப்படத்தை பிரசாந்த் நீல் இணையத்தில் பகிர, 100 பேரை அடிக்கிற மாதிரி மாஸ் சீன் வச்ச இயக்குனரா இது என்று கலாய்த்து வருகிறார்கள்.
    நடிகரும் தயாரிப்பாளருமான விஷால் தயாரிப்பாளரான ஆர்.பி.செளத்ரி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர், விநியோகஸ்தராக இருப்பவர் ஆர்.பி.செளத்ரி. இவர் பல படங்களுக்கு பைனான்ஸ் செய்தும் வருகிறார். இவரிடம் நடிகர் விஷால் கடன் பெற்று அக்கடனை கடந்த பிப்ரவரி மாதமே முறைப்படி அளித்துவிட்டார். 

    கடனுக்காக விஷால் தரப்பில் கையொப்பமிட்டு அளிக்கப்பட்ட செக் போன்ற பேப்பர்கள் இதுவரை ஆர்.பி.செளத்ரி தரப்பு திருப்பி அளிக்கவில்லை. அதனை பற்றி விஷால் தரப்பில் கேட்டதற்கு, செக் மற்றும் அனைத்து பேப்பர்களும் தொலைந்து விட்டதாக கூறி இருக்கிறார்கள். 

    ஆர்.பி.செளத்ரி
    ஆர்.பி.செளத்ரி

    இதனால் விஷால் சார்பில் காவல் துறையிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×