என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    திருமணத்தின் போது நடிகர் விஷ்ணு விஷாலும் பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவும் நடனம் ஆடிய புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    நடிகர் விஷ்ணு விஷாலுக்கும், பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவிற்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது. கொரோனா காலத்தில் நடந்த திருமணம் என்பதால் இரு தரப்பின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

    விஷ்ணு விஷால்  ஜுவாலா கட்டா
    ஜூவாலா கட்டா பதிவு செய்த புகைப்படம்

    இந்த திருமணம் குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இந்நிலையில் ஜூவாலா கட்டா தனது சமூக வலைத்தள பக்கத்தில் விஷ்ணுவுடன் இணைந்து டான்ஸ் ஆடியதாக குறிப்பிட்டு ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    தமிழ் சினிமாவில் நடிகராகவும் இசையமைப்பாளராகவும் இருக்கும் பிரேம்ஜி அமரனுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக அவரது தந்தை கூறியிருக்கிறார்.
    பிரபல இசையமைப்பாளர், இயக்குநர், பாடலாசிரியர், நடிகர் என பல அவதாரங்களில் தமிழ் திரையுலகில் ஜொலித்தவர் கங்கை அமரன்.

    இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தனது மகன் பிரேம்ஜி அமரன் திருமணம் குறித்து பேசியுள்ளார். அதில் பிரேம்ஜிக்கு இன்னும் ஒரு வருடத்தில் திருமணம் செய்து வைக்க முடிவு செய்து இருக்கிறோம். தற்போது தான் அவருடைய அம்மா இறந்து உள்ளதால் அந்த சோகம் முடிந்த பிறகு அவருக்கு திருமணம் செய்து வைக்க இருக்கிறோம்.

    கங்கை அமரன் - பிரேம்ஜி அமரன்
    கங்கை அமரன் - பிரேம்ஜி அமரன்

    மேலும் இதுவரை திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளாமல் இருந்த பிரேம்ஜி தற்போது ஒப்புக் கொண்டு இருப்பதாகவும், அவருக்கேற்ற சரியான பெண் அமைந்ததும் விரைவில் திருமணம் நடக்கும் என்றும் அவர் கூறி இருக்கிறார்.
    தமிழ், இந்தி மொழி படங்களில் நடித்த நடிகை ஒருவர், அஜித் படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.
    அஜித் நடிப்பில் வெளிவந்த படங்களில் ஒன்று சிட்டிசன். நிறைய கெட்டப், மிகவும் அழுத்தமான கதைக்களம், கொஞ்சம் காதல் என இப்படம் அமைந்திருக்கும்.

    அண்மையில் இப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆன நிலையில் ரசிகர்கள் இதை சமூக வலைத்தளத்தில் டிரெண்ட் செய்து கொண்டாடினார்கள்.

    அஜித் - சமீரா ரெட்டி
    அஜித் - சமீரா ரெட்டி

    தற்போது இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்த நடிகை குறித்த தகவல் வந்துள்ளது. அதாவது இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை சமீரா ரெட்டிக்கு வாய்ப்பு வந்துள்ளது. அந்நேரத்தில் சமீரா வேறு ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனதால் சிட்டிசன் படத்தில் நடிக்க முடியாமல் போனதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

    ஆனால் அதன்பிறகு அசல் படத்தில் அஜித்துடன் இணைந்து சமீராரெட்டி நடித்திருந்தார்.
    பல படங்களில் தன்னுடைய நடிப்புத் திறனால் பலரையும் கவனிக்க வைத்த நிதிஷ் வீராவின் இறப்பால் ஒரு படக்குழுவினருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
    புதுப்பேட்டை, வெண்ணிலா கபடி குழு மற்றும் அசுரன் ஆகிய படங்களில் நடித்த நடிகர் நிதிஷ் வீரா, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்தார். இவரது மறைவு திரை உலகத்தினர் இடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    அசுரன் படத்திற்கு பிறகு பல படங்களில் நடிக்க ஒப்பந்தமானார் நிதிஷ் வீரா. அதில் செல்வராகவன் நடிக்கும் சாணிக்காயிதம் படத்தில் நிதிஷ் வீராவிற்கு முக்கியமான கதாபாத்திரம் அளிக்கப்பட்டது.

    அந்த படத்தில் பாதிக் காட்சிகளில் நடித்திருந்த நிதிஷ் வீரா கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதனால் அவர் சம்மந்தப்பட்ட காட்சிகளை என்ன செய்வது என்ற குழப்பத்தில் படக்குழுவினர் இருக்கிறார்கள்.  

    நிதிஷ் வீரா
    நிதிஷ் வீரா

    நிதிஷ் வீரா நடித்த காட்சிகளை நீக்கி விட்டு, மீண்டும் வேறு ஒரு நடிகரை வைத்து மறுபடியும் படப்பிடிப்பு நடத்த படக்குழுவினர் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
    நாஞ்சில் இயக்கத்தில் ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள கா படத்தின் முன்னோட்டம்.
    ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் ‘கா’. இதில் ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கொடிய மிருகங்கள் வாழும் காட்டுப் பகுதிகளுக்கு சென்று அவற்றின் வாழ்க்கை முறைகளையும் மற்றும் குணாதிசயங்களையும் பதிவு செய்யும் வைல்ட் லைஃப் போடோகிராபர் கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ளார். 

    முழுக்க முழுக்க கதாநாயகியை முன்னிலைப் படுத்தி கதை உருவாக்கப்பட்டுள்ளது. சலீம்கோஸ் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அறிவழகன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அம்ரிஷ் இசையமைத்துள்ளார். 

    ஆண்ட்ரியா
    ஆண்ட்ரியா 

    படம் குறித்து இயக்குனர் நாஞ்சில் கூறியதாவது: ‘முழுக்க முழுக்க காட்டை மையமாக வைத்து இந்த படத்தை உருவாக்கி உள்ளோம். ரிஸ்க் எடுத்து நிறைய காட்சிகளை படமாக்கியிருக்கிறோம். 30 நாட்கள் அடர்ந்த வனப்பகுதிக்குள் இதுவரை யாரும் செல்ல முடியாத இடங்களுக்கு வன அலுவலகத்தில் அனுமதி பெற்று படப்பிடிப்பை நடித்தியிருக்கிறோம். அந்த காட்களை திரையில் பார்க்கும்போது மிகவும் பிரமிப்பாக இருக்கும்’ என்றார். 
    ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா ஜூன் 11 முதல் 20-ந் தேதி வரை நடைபெற உள்ளது, இதில் திரையிட இரண்டு தமிழ் படங்கள் தேர்வாகி உள்ளது.
    நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தை தொடங்கி திரைப்படங்களை தயாரித்து வருகிறார். இவர்கள் தயாரிப்பில் ‘நெற்றிக்கண்’, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ போன்ற படங்கள் உருவாகி வருகிறது. இதுதவிர பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘கூழாங்கல்’ படத்தையும் தயாரித்துள்ளார் நயன்தாரா. இப்படம் சர்வதேச பட விழாக்களில் கலந்துகொண்டு விருதுகளை வென்று வருகிறது. 

    ஏற்கனவே நெதர்லாந்தில் நடந்த ரோட்டர்டம் சர்வதேச திரைப்பட விழாவில் போட்டி பிரிவில் திரையிடப்பட்டு சிறந்த படத்துக்கான விருதை பெற்றது. ரோட்டர்டாம் சர்வதேச விழாவில் விருது பெற்ற முதல் தமிழ் படம் ‘கூழாங்கல்’ என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் நியூயார்க்கில் நடந்த டைரக்டர்ஸ் நியூ திரைப்பட விழாவிலும் ‘கூழாங்கல்’ திரையிடப்பட்டு சிறந்த திரைப்படத்துக்கான விருதை வாங்கியது.

    கூழாங்கல் படக்குழு வெளியிட்ட போஸ்டர்
    கூழாங்கல் படக்குழு வெளியிட்ட போஸ்டர்

    இந்நிலையில், சீனாவில் நடைபெற உள்ள ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட ‘கூழாங்கல்’ திரைப்படம் தேர்வாகி உள்ளது. நாளை தொடங்க உள்ள இவ்விழா, ஜூன் 20-ந் தேதி வரை நடைபெற உள்ளது. ஏற்கனவே, நடிகர் சூர்யா நடித்துள்ள ‘சூரரைப் போற்று’ திரைப்படமும் இவ்விருது விழாவில் திரையிட தேர்வாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
    கிரேஸி மோகனின் நினைவு தினமான இன்று, நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், அவர் குறித்த நினைவலைகளை பகிர்ந்துள்ளார்.
    நாடக கலைஞர், வசனம் மற்றும் திரைக்கதை ஆசிரியர், நடிகர், ஓவியர், கவிஞர் எனப் பல பரிமாணங்களில் மக்களை மகிழ்வித்த கிரேஸி மோகன், கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் 10-ந்தேதி காலமானார். கிரேஸி மோகனின் நினைவு தினமான இன்று, நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், அவர் குறித்த நினைவலைகளை பகிர்ந்துள்ளார்.

    இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “நாடகமே உலகம் என்கிற ஞானச்சொல்லை, நகைச்சுவை நாடகமே உலகம் என்று மாற்றியவர். சிரிப்பு முகமூடிக்குள் தீவிர மரபிலக்கிய முகத்தோடு வானம் போல் வாழ்ந்து மறைந்தவர் கிரேஸி மோகன். இரண்டாம் நினைவு நாளில் அவரை நினைவு கூர்கிறேன்”. என பதிவிட்டுள்ள கமல், அவருடன் எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

    கமல்ஹாசன் டுவிட்டரில் பகிர்ந்த புகைப்படம்
    கமல்ஹாசன் டுவிட்டரில் பகிர்ந்த புகைப்படம்

    கமலின் ‘சதி லீலாவதி’, ‘காதலா காதலா’, ‘மைக்கேல் மதன காமராஜன்’, ‘அபூர்வ சகோதர்கள்’, ‘இந்தியன்’, ‘அவ்வை சண்முகி’,  ‘தெனாலி’, ‘பஞ்ச தந்திரம்’ உள்ளிட்ட படங்களில் கிரேஸி மோகன் வசனகர்த்தாவாக பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    நடிகை வனிதா, மீண்டும் திருமணம் செய்து கொண்டதாக தகவல் பரவி வந்த நிலையில், அவரே அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
    பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் வனிதா. ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்ற இவர், கடந்தாண்டு கொரோனா ஊரடங்கு சமயத்தில் பீட்டர்பால் என்பவரை 3-வது திருமணம் செய்து சர்ச்சையில் சிக்கினார். பின்னர் சில தினங்களிலேயே அவரை குடிகாரர் என்று உதறித் தள்ளி மேலும் பரபரப்பு ஏற்படுத்தினார். இதையடுத்து தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த வனிதா, தற்போது சினிமாவில் தீவிர கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார். 

    இதனிடையே, நடிகை வனிதா, கொல்கத்தாவை சேர்ந்த பைலட் ஒருவரை அண்மையில் ரகசியமாக திருமணம் செய்துகொண்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது. 

    வனிதாவின் டுவிட்டர் பதிவு
    வனிதாவின் டுவிட்டர் பதிவு

    இந்நிலையில், இதுகுறித்து விளக்களித்து நடிகை வனிதா டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “உங்கள் அனைவருக்கும் ஒன்றை தெரியப்படுத்த விரும்புகிறேன். நான் இப்போதும் சிங்கிளாகவே இருக்கிறேன். அப்படியே இருக்க விரும்புறேன். எந்தவொரு வதந்தியையும் பரப்பவோ, நம்பவோ வேண்டாம்” எனக்கூறி திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
    மாஸ்டர் படம் இந்தியில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டாலும், அதனை தற்போது இந்தியில் ரீமேக் செய்ய உள்ளனர்.
    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடித்திருந்த படம் ‘மாஸ்டர்’. இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு உலகம் முழுவதும் வெளியான இப்படம், மாபெரும் வரவேற்பை பெற்றதோடு, வசூலையும் வாரிக் குவித்தது. இந்த ஆண்டில் திரையரங்கில் வெளியாகி அதிக வசூல் குவித்த படமும் மாஸ்டர் தான். 

    மாஸ்டர் படம் இந்தியில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டாலும், அதனை தற்போது இந்தியில் ரீமேக் செய்ய உள்ளனர். இதன் இந்தி ரீமேக் உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனம் கைப்பற்றி உள்ளது.

    விஜய், சல்மான் கான்
    விஜய், சல்மான் கான்

    இந்நிலையில், மாஸ்டர் இந்தி ரீமேக்கில் விஜய்யின் ஜேடி (வாத்தி) கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தில் உள்ளதாம். அடுத்தாண்டு இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
    நடிகர் ராணா 400 ஆதிவாசி குடும்பங்களுக்கு தேவையான மளிகை, உணவுப் பொருள், மருத்துவ பொருட்கள் ஆகியவற்றை வழங்கியுள்ளார்.
    தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ராணா. இவர் நடிப்பில் தற்போது விராட பருவம் திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தில் நடிகர் ராணா வனத்துறை அதிகாரியாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். இப்படத்தை கடந்த ஏப்ரல் மாதமே வெளியிட திட்டமிட்டிருந்தனர். இருப்பினும் கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால், இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.

    விராட பருவம் படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நிர்மல் எனும் மாவட்டத்தில் நடத்தப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பின்போது, அந்த பகுதியில் உள்ள ஆதிவாசி மக்களுடன் நெருங்கி பழகிய நடிகர் ராணா, தற்போது கொரோனா ஊரடங்கு சமயத்தில் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டி உள்ளார்.

    நடிகர் ராணா வழங்கிய நிவாரண பொருட்கள் ஆதிவாசி மக்களுக்கு வழங்கப்பட்டபோது எடுத்த படம்
    நடிகர் ராணா வழங்கிய நிவாரண பொருட்கள் ஆதிவாசி மக்களுக்கு வழங்கப்பட்டபோது எடுத்த படம்

    அங்கு வசிக்கும்  400 ஆதிவாசி குடும்பங்களுக்கு தேவையான மளிகை, உணவுப் பொருள், மருத்துவ பொருட்கள் ஆகியவற்றை வழங்கியுள்ளார். நடிகர் ராணாவின் இந்த செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ஆர்யா, தற்போது அரண்மனை 3, சார்பட்டா பரம்பரை, எனிமி போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.
    அருள்நிதி நடித்த மௌனகுரு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சாந்தகுமார். 2011-ம் ஆண்டு வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து ஆர்யா, இந்துஜா, மகிமா நம்பியார் நடித்த ‘மகாமுனி’ படத்தை இயக்கினார் சாந்தகுமார். கடந்த 2019-ம் ஆண்டு வெளியான இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதோடு, சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது.

    இந்நிலையில், இயக்குனர் சாந்தகுமார் அடுத்ததாக இயக்க உள்ள படத்திலும் ஆர்யா ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்தை ஆர்யாவே தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்த பின் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆர்யா
    ஆர்யா

    தற்போது நடிகர் ஆர்யா அரண்மனை 3, சார்பட்டா பரம்பரை, எனிமி போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்த 3 படங்களும் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளன. 
    தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி, இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில், 5-வது சீசன் எப்போது தொடங்கப்படும் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
    தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை தமிழில் நான்கு சீசன்கள் முடிந்துள்ளன. முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகின், நான்காவது சீசனில் ஆரி ஆகியோர் பிக்பாஸ் டைட்டிலை ஜெயித்தனர்.

    வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஜூன் மாதத்தில் தொடங்கி அக்டோபர் வரை நடத்தப்படும். ஆனால் கடந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக லாக்டவுன் போடப்பட்டதால், பிக்பாஸ் 4 நிகழ்ச்சி திட்டமிட்டபடி ஜூன் மாதம் தொடங்கப்படவில்லை. பின்னர் அக்டோபர் மாதம் தொடங்கி இந்தாண்டு ஜனவரி 16-ந் தேதி வரை ‘பிக்பாஸ் 4’ நடைபெற்றது.

    கமல்ஹாசன்
    கமல்ஹாசன்

    இந்நிலையில், கொரோனா 2-வது அலை பரவல் காரணமாக பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியும் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்தாண்டை போலவே இந்தாண்டும் அக்டோபர் மாதத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடங்க அதன் ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. வழக்கம்போல் இந்த சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க உள்ளாராம்.
    ×