என் மலர்
சினிமா செய்திகள்
மந்திரா பேடியின் கணவர் ராஜ் கவுஷல் மறைவுக்கு பாலிவுட் திரையுலகினர் பலரும் சமூக வலைதளம் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்தி நடிகை மந்திரா பேடியின் கணவர் ராஜ் கவுஷல் இன்று காலமானார். பாலிவுட்டில் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் வலம்வந்த இவர் இன்று அதிகாலை 4.30 மணியளவில் மாரடைப்பால் மரணமடைந்தார். இவருக்கு வயது 49. இவர் பியார் மெயின் கபி கபி, ஷாதி கா லட்டு, அந்தோனி கவுன் ஹே போன்ற படங்களை இயக்கி உள்ளார்.
இயக்குனர் ராஜ் கவுஷலின் மறைவு பாலிவுட் திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மந்திரா பேடி - ராஜ் கவுஷல் தம்பதிக்கு வீர் என்ற மகனும், தாரா என்ற மகளும் உள்ளனர்.
பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம்வரும் ஷாருக்கான், விஜய் நடிப்பில் உருவாகும் புதிய படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளாராம்.
நடிகர் விஜய்யின் 65-வது படம் ‘பீஸ்ட்’. நெல்சன் இயக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் அபர்ணா தாஸ், யோகி பாபு, விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். காதல், நகைச்சுவை, அதிரடி சண்டை காட்சிகளுடன் இந்த படம் தயாராகி வருகிறது.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது. கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. அப்போது விஜய் - பூஜா ஹெக்டே நடிக்கும் பாடல் காட்சி படமாக்கப்பட உள்ளது.

விஜய், ஷாருக்கான்
இந்நிலையில், விஜய்யின் பீஸ்ட் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. இந்த கூட்டணி உறுதியானால், விஜய் - ஷாருக்கான் இணைந்து நடிக்கும் முதல் படமாக இது அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷங்கரின் இந்தியன் 2, லோகேஷ் கனகராஜின் விக்ரம் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ள கமல், அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க உள்ளாராம்.
தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுப்பவர் வெற்றிமாறன். தனுஷின் பொல்லாதவன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.
இவர் தற்போது சூரி நாயகனாக நடிக்கும் ‘விடுதலை’ படத்தை இயக்கி வருகிறார். எல்ரெட் குமார் தயாரிக்கும் இப்படம், எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து தயாராகி வருகிறது. நடிகர் விஜய்சேதுபதியும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இதையடுத்து சூர்யாவின் ‘வாடிவாசல்’ படத்தை இயக்க உள்ள வெற்றிமாறன், விரைவில் கமல்ஹாசனுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கமல் - வெற்றிமாறன் இணைய உள்ள படத்தை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்த பிரபலமாகி இருக்கும் நடிகர் அதர்வா, அடுத்ததாக ரீமேக் படம் ஒன்றில் நடிக்க உள்ளாராம்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்த முரளியின் மூத்த மகன் அதர்வா. பாணா காத்தாடி படம் மூலம் அறிமுகமானவர் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். இவர் கைவசம் தள்ளிப் போகாதே, குருதி ஆட்டம், ஒத்தைக்கு ஒத்த, அட்ரஸ் போன்ற படங்கள் உள்ளன. இதில் தள்ளிப் போகாதே, குருதி ஆட்டம் போன்ற படங்கள் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

இந்நிலையில், நடிகர் அதர்வா நடிக்க உள்ள புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி மலையாளத்தில் மிதுன் இயக்கத்தில் குஞ்சக்கோ போபன் நடிப்பில் கடந்தாண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ‘அஞ்சாம் பாத்திரா’ படத்தின் தமிழ் ரீமேக்கில் அதர்வா ஹீரோவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுருதிஹாசன், அக்ஷரா ஹாசன், கீர்த்தி சுரேஷ் போன்ற வாரிசு நடிகைகளின் வரிசையில் மேலும் ஒரு நடிகையும் தற்போது அறிமுகமாகி உள்ளார்.
வாரிசுகள் பலர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். கமல்ஹாசன் மகள்கள் சுருதிஹாசன், அக்ஷரா ஹாசன், நடிகை மேனகா மகள் கீர்த்தி சுரேஷ், நடிகை லிசி மகள் கல்யாணி, நடிகை ராதாவின் மகள்கள் கார்த்திகா, துளசி, மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி ஆகியோர் கதாநாயகிகளாகி உள்ளனர்.
இந்த வரிசையில் 1980-களில் தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நடிகை ஜீவிதாவின் மகள் சிவாத்மிகாவும் தமிழ் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி உள்ளார்.

சிவாத்மிகா, ஜீவிதா
அவரது முதல் படம் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அவர் தற்போது மேலும் ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அதன்படி இப்படத்தில் அவர் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தை ஆர்.கார்த்திக் இயக்குகிறார். காதல் கதையம்சம் கொண்ட இப்படத்தில் அபர்ணா பாலமுரளி, ரீத்துவர்மா ஆகிய மேலும் 2 கதாநாயகிகளும் நடிக்க உள்ளனர். இப்படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.
வணக்கம் சென்னை, காளி படங்களை தொடர்ந்து மூன்றாவதாக புதிய படத்தை இயக்கி வருகிறார் கிருத்திகா உதயநிதி.
கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான வணக்கம் சென்னை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கிருத்திகா உதயநிதி. இதை தொடர்ந்து இவர் விஜய் ஆண்டனியின் காளி திரைப்படத்தை இயக்கியிருந்தார். சமீபத்தில் இயக்குனர் கிருத்திகா உதயநிதியின் மூன்றாவது படம் குறித்த அறிவிப்பு வெளியாகியிருந்தது.

இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம் கதாநாயகனாகவும், தன்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். மேலும் பூர்ணிமா பாக்கியராஜ், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

படக்குழுவினருடன் கிருத்திகா உதயநிதி
இந்நிலையில் இன்று இயக்குனர் கிருத்திகா தனது பிறந்த நாளை காளிதாஸ் ஜெயராம், காளி வெங்கட், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் இணைந்து கேக் வெட்டி மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளார். இந்த கொண்டாட்டத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் ரகுல் பிரீத் சிங், பிரபல ஹாலிவுட் நடிகருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஷ்ணு விஷால் நடித்து கடந்த 2018-ம் ஆண்டு திரைக்கு வந்த திரைப்படம் ராட்சசன். இப்படத்துக்கு விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது. ராம்குமார் இயக்கி இருந்த இப்படத்தில், விஷ்ணு விஷால் ஜோடியாக அமலாபால் நடித்து இருந்தார்.


அக்ஷய் குமார் - ரகுல் ப்ரீத் சிங்
இப்படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் இப்படத்தை தயாரித்து நடிக்க இருக்கிறார். இதில் இவருக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடிக்க இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதியின் குத்தாட்டம் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். பல்வேறு மொழிகளில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் இவர், தற்போது ‘மாஸ்டர் செஃப்’ என்ற சமையல் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க உள்ளார்.
இதற்கான படப்பிடிப்பு இன்று தொடங்கி இருக்கிறது. ஆட்டம், பாட்டம் என்று தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி குத்தாட்டம் போட்டு இருக்கிறார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சந்தானம், இயக்குனரின் திருமணத்திற்கு நேரில் சென்று வாழ்த்தி இருக்கிறார்.
சந்தானம் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் டிக்கிலோனா. இப்படத்தை கார்த்திக் யோகி என்பவர் இயக்கி உள்ளார். கார்த்திக் யோகிக்கும் மணமகள் வினி ஷாமுக்கும் நேற்று முன் தினம் திருச்சியில் திருமணம் நடந்தது.

திருமணத்தில், நடிகர் சந்தானம் நேரில் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தார். நடிகர்கள் காளி வெங்கட், கண்ணன் ரவி (மண்டேலா பட நடிகர்), வத்ஸன் (எங்கேயும் எப்போதும்) ஆகியோரும் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

மணமக்களை வாழ்த்திய காளி வெங்கட்
மேலும், கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனர் கே.ஜே.ஆர் ராஜேஷ், கிளாப் போர்டு சத்யா மற்றும் டிக்கிலோனா திரைப்படத்தின் ஒட்டுமொத்த குழுவினரும் மணமக்களை வாழ்த்தினர்.
பாகுபலி படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகர் ராணா, தெலுங்கில் நடைபெறும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார்.
தமிழைப் போலவே தெலுங்கிலும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனை ஜுனியர் என்டிஆர், இரண்டாவது சீசனை நானி, மூன்று மற்றும் நான்காவது சீசன்களை நாகார்ஜுனா தொகுத்து வழங்கினார்.

தற்போது ஐந்தாவது சீசனுக்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் முன்னர் ஒத்துக் கொண்ட திரைப்படங்களின் படப்பிடிப்புகள் காரணமாக நாகர்ஜுனா இந்த சீசனை தொகுத்து வழங்க வாய்ப்பில்லை என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவருக்குப் பதிலாக 'பாகுபலி' நடிகர் ராணா தொகுத்து வழங்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு ராணா 'நம்பர் 1 யாரி' என்ற டிவி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘மஹா’ படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை ஹன்சிகா நடித்து இருக்கிறார்.
நடிகை ஹன்சிகாவின் 50-வது படம் ‘மஹா’. யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் நடிகர் சிம்பு முக்கிய கதாபாத்திரத்திலும், ஸ்ரீகாந்த் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்கள்.


ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டீசரை ஜூலை 2ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
ரஜினிக்கு மட்டும் அமெரிக்கா செல்ல அனுமதி கிடைத்தது எப்படி? என நடிகை கஸ்தூரி தனது சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பியதற்கு பதில் கிடைத்துள்ளது.
‛அண்ணாத்த' படத்தை முடித்துவிட்ட நடிகர் ரஜினி, உடல்நல பரிசோதனைக்காக கடந்தவாரம் அமெரிக்கா சென்றார். இதற்காக மத்திய அரசிடம் அவர் சிறப்பு அனுமதி பெற்று சென்றதாக கூறப்படுகிறது. இதனிடையே ரஜினியின் அமெரிக்க பயணம் குறித்து நடிகை கஸ்தூரி சில கேள்விகளை முன்வைத்திருந்தார்.
அதாவது, இந்தியாவிலிருந்து யாரும் அமெரிக்க வர அந்நாடு தடை செய்துள்ள நிலையில் ரஜினி மட்டும் எப்படி அங்கு சென்றார். உடல் நலப் பரிசோதனை என்றால் இந்தியாவில் சிறந்த சிகிச்சை இல்லையா, ரஜினிக்கு அப்படி என்ன உடல்நலக் கோளாறு'' என அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார் நடிகை கஸ்தூரி.
இந்நிலையில் கஸ்தூரி தனது சமூக வலைத்தள பக்கத்தில், ‛‛அலைபேசியில் அழைத்து விவரத்தை விளக்கினார்கள். ஆச்சரியம் கலந்த நன்றி. நாரதர் கலகம் நன்மையில் முடிந்தது. என் உள்மன கலக்கமும் முடிவுக்கு வந்தது. நல்ல செய்தி, நானே முதலில் சொல்கிறேன். பூரண நலமுடன் புது பொலிவுடன் தலைவரை வரவேற்க தயாராகட்டும் தமிழகம்! ரஜினிகாந்த், அண்ணாத்த'' என பதிவிட்டுள்ளார்.
அலைபேசியில் அழைத்து விவரத்தை விளக்கினார்கள்.
— Kasturi Shankar (@KasthuriShankar) June 29, 2021
ஆச்சரியம் கலந்த நன்றி !
நாரதர் கலகம் நன்மையில் முடிந்தது.
என் உள்மன கலக்கமும் முடிவுக்கு வந்தது.
நல்ல செய்தி- நானே முதலில் சொல்கிறேன்.
பூரண நலமுடன் புது பொலிவுடன்
'தலைவரை' வரவேற்க தயாராகட்டும் தமிழகம் ! #Rajinikanth#Annathe






