என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பிரபல பாலிவுட் நடிகர் திலீப் குமார் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    பழம்பெரும் இந்தி நடிகர் திலீப்குமார் (வயது 98). முதுமை காரணமாக இவருக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டு வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு சுவாசப் பிரச்சினை காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பினார்.

    திலீப் குமார்

    இந்நிலையில், மீண்டும் மூச்சு திணறல் ஏற்பட்டு மீண்டும் மும்பையில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருடைய உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
    தமிழில் ரஜினி, கமல் படங்களில் அவர்களுக்கு மகளாக நடித்த நிவேதா தாமஸின் தனித்திறமையை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள்.
    தமிழில் விஜய்யுடன் குருவி, ஜில்லா படங்களில் நடித்தவர் நிவேதா தாமஸ். மேலும் தர்பார் படத்தில் ரஜினிகாந்த் மகளாகவும், பாபநாசம் படத்தில் கமல்ஹாசன் மகளாகவும் நடித்திருந்தார். மலையாளம், தெலுங்கு படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். 

    இவர் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார். தற்போது அவர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த ஒரு இந்தி படத்தின் பாடலை கித்தாரை இசைத்தபடி பாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் நிவேதாவின் திறமையை புகழ்ந்து வருகிறார்கள்.


    தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்த நடிகை, ’விஜய்யுடன் மிக விரைவில் நடிப்பேன்’ என்று ரசிகரின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
    தெலுங்கில் மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன், விஜய் தேவரகொண்டா என முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழில் கார்த்தியுடன் சுல்தான் படத்தில் நடித்திருந்தார்.

    ராஷ்மிகா மந்தனா
    ராஷ்மிகா மந்தனா

    இந்நிலையில் ராஷ்மிகா தனது சமூக வலைத்தள பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வந்தார். அப்போது, விஜய்யுடன் எப்போது நடிப்பீர்கள்? என்று ரசிகர் ஒருவர் கேட்டக் கேள்விக்கு ’மிக விரைவில்’ என்று பதிலளித்துள்ளார். மற்றொரு ரசிகர் ‘தளபதியைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லுங்கள்?’ என்று கேட்டதற்கு “விஜய் என்னுடைய லவ்” என்று பதிலளித்துள்ளார்.
    சுந்தர பாண்டியன், தர்மதுரை, பிகில் போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகர் சௌந்தரராஜா கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
    இந்தியாவில் கடந்த சில மாதங்களாக வேகமாக பரவி வந்த கொரோனா தொற்றின் 2வது அலை, தற்போது படிப்படியாக குறையத் தொடங்கி உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும், தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் முதல் நடைபெற்று வருகிறது. அரசியல் பிரபலங்களும், சினிமா நட்சத்திரங்களும் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    சௌந்தர ராஜா

    அந்த வகையில் தற்போது சுந்தர பாண்டியன், தர்மதுரை, கடைக்குட்டி சிங்கம், ஜிகர்தண்டா, தெறி, பிகில், ஜகமே தந்திரம் ஆகிய படங்களில் நடித்த நடிகர் சௌந்தரராஜா தடுப்பூசி போட்டு, பொது மக்கள் அனைவரும் மருத்துவர்கள் அறிவுரைப்படி விரைவில் தடுப்பூசியை போட்டுக்கொள்ளுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    தமிழில் சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் ஆகிய நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள ரகுல் பிரீத் சிங்கின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையான ரகுல் பிரீத் சிங் தமிழில் அருண்விஜய் நடித்த ’தடையற தாக்க’ என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பெற்றார். அதன்பின், கார்த்தி நடித்த ’தேவ்’ ’தீரன் அதிகாரம் ஒன்று’, சூர்யா நடித்த ’என்ஜிகே’ உள்பட பல படங்களில் நடித்தார். தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘அயலான்’ படத்தில் ரகுல் பிரீத் சிங் நடித்துள்ளார்.

    இந்த நிலையில் ரகுல் பிரீத் சிங் தனது சமூக வலைத்தள பக்கத்தில் நீச்சல் குளத்தில் பிகினி உடையுடன் உட்கார்ந்து இருக்கும் ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகிறார்கள். 


    பிரபல தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கை விசாரித்த நீதிபதி தண்டபாணி அதிரடி உத்தரவை வெளியிட்டுள்ளார்.
    நடிகர் சசிகுமாரின் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்த அவரது இணை தயாரிப்பாளர் அசோக்குமார் என்பவர் கடன் பிரச்சினையால் ஏற்பட்ட தொல்லை காரணமாக 2017ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் சினிமா வட்டாரங்களில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

    அப்போது சினிமா பைனான்சியர் போத்ரா மீது, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அவதூறாக பேசியதாக வழக்கு தொடரப்பட்டது.

    ஞானவேல் ராஜா

    இந்நிலையில் போத்ரா இறந்து விட்ட நிலையில் இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கினை விசாரித்த நீதிபதி தண்டபாணி, ஞானவேல்ராஜா மீதான குற்றச்சாட்டுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்று சொல்லி அவர் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
    பிரபல தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. எர்த் மூவர்ஸ் என்ற பெயரில் கனரக வாகனங்களை வாடகைக்கு விடும் தொழிலை செய்து வந்துள்ளார். 2017 ஆம் ஆண்டு சுமார் 13 கோடி ரூபாய் தொழிலில் நஷ்டம் ஏற்பட்ட சூழ்நிலையில், 2018ஆம் ஆண்டு கொடுங்கையூரை சேர்ந்த கமலக்கண்ணன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    அப்போது ராமமூர்த்தி தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தை சரிசெய்ய 10 கோடி ரூபாய் கடன் வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு கமலகண்ணன் அந்த தொகையை வாங்கி தருவதாக கூறி பிரபல திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷை அறிமுகம் செய்து வைத்தார்.

    ஆர்.கே.சுரேஷ் ராமமூர்த்தியிடம் கடன் வாங்கித் தருவதாக உறுதியளித்து ஒரு கோடி ரூபாய் பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால், ராமமூர்த்திக்கு 10 கோடி ரூபாய் கடன் கிடைக்கவில்லை. ராமமூர்த்தி இறந்துவிட்ட நிலையில், அவரது மனைவி வீனா.ராமமூர்த்திக்கு ஆர்.கே.சுரேஷை அறிமுகம் செய்துவைத்த கமலகண்ணன் தங்களை போல் பலரை மோசடி செய்து மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டது தெரியவந்தது. குறிப்பாக ஆர்.கே.சுரேஷ் பாஜகவில் முக்கிய பொறுப்பில் இருப்பதால் காவல்துறையினர் அவர் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவதாக வீனா குற்றம்சாட்டியுள்ளார்.

    ஆர்கே சுரேஷ்

    இதுகுறித்து பல முறை காவல்துறையில் புகார் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனக் கூறும் வீனா, நேரடியாக காவல் ஆணையர் அலுவலகத்திலும், முதலமைச்சர் தனிப்பிரிவிலும் புகார் அளித்துள்ளார்.
    சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, கைதி உள்ளிட்ட படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நரேன், தனது கனவு நிறைவேறியதாக நெகழ்ச்சி அடைந்து கூறியிருக்கிறார்.
    கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் படம் "விக்ரம்". இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நரேன் நடிக்கிறார். ஏற்கனவே இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நாயகனாக நடித்த கைதி படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கமல் - நரேன்
    கமல் - நரேன்

    விக்ரம் படத்தில் இணைந்திருப்பது குறித்து நடிகர் நரேன் கூறுகையில், "இது என் வாழ்நாளில் மிக முக்கியமான படம். கைதி படம் முடித்த பிறகு நான் இரண்டு படங்கள் நடித்து முடித்திருந்தேன். விக்ரம் படத்தின் டீசர் வெளியான போது லோகேஷிற்கு வாழ்த்து தெரிவிப்பதற்கு அவரை தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது உங்களுக்கு ஒரு முக்கியமான கதாபாத்திரம் இப்படத்தில் உண்டு என்று சொன்னார். கேட்டவுடன் கனவு நிறைவேறியது போல உணர்ந்தேன். கமல்ஹாசன் சாரை பார்த்து சினிமாவுக்குள் நுழைந்த பல பேரில் நானும் ஒருவன்'' என்றார். 
    புதுமுக இயக்குனர் பிரகபல் இயக்கத்தில் யுவன், ரிதான் கிருஷ்ணா ஆகிய இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘மட்டி’ படத்தின் முன்னோட்டம்.
    இந்தியாவின் முதல் மண் சாலை பந்தயத்தை மையப்படுத்திய படம், ‘மட்டி’. யுவன், ரிதான் கிருஷ்ணா ஆகிய இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை புதுமுக இயக்குனர் பிரகபல் இயக்கியிருக்கிறார். பிரேமா கிருஷ்ணதாஸ் தயாரித்துள்ளார். 

    படத்தை பற்றி இயக்குனர் பிரகபல் கூறியதாவது: “மட்டி படத்தில் தொழில்நுட்ப வேலைகள் அதிகமாக இருந்தன. 14 கேமராக்களை பயன்படுத்தி படப்பிடிப்பை நடத்தினோம். படம் நன்றாக வந்திருக்கிறது. அதற்கு பின்னால் நிறைய சவால்கள் இருந்தன.

    மட்டி படக்குழு
    மட்டி படக்குழு

    எல்லோரும் மிக கடினமாக உழைத்து படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். டிரைலரில் பார்த்த பிரமிப்பு படத்திலும் இருக்கிறது. படம் 5 மொழிகளில் தயாராகி இருக்கிறது. எல்லோருக்கும் படம் பிடிக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.
    பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் தேர்வு செய்யப்படுவதாக மர்ம நபர்கள் அழைப்பு விடுத்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
    தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இது தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பாகி உள்ளது. தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். அதேபோல் மலையாளத்தில் நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்கி வருகிறார். 

    அந்தவகையில் அவர் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3-வது சீசன் நிகழ்ச்சியும் பரபரப்பாக நடந்து வந்த நிலையில், 95 நாட்களுக்கு பிறகு கொரோனா 2-வது அலை காரணமாக நிறுத்தி வைத்துள்ளனர். இதில் பங்கேற்ற போட்டியாளர்களில் வெற்றி பெறுபவரை தேர்வு செய்ய விரைவில் பொது ஓட்டெடுப்பு நடத்த இருக்கிறார்கள். 

    மோகன்லால்
    மோகன்லால்

    இந்நிலையில், மலையாளத்தில் அடுத்து தொடங்க உள்ள பிக்பாஸ் 4-வது சீசன் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் தேர்வு செய்யப்படுவதாக மர்ம நபர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இது மோசடியானது என்றும், உண்மை என்று நம்பி யாரும் தங்களுடைய விவரங்களை அனுப்பி ஏமாற வேண்டாம் எனவும் பிக்பாஸ் 4-வது சீசன் நிகழ்ச்சிக்கு போட்டியாளர்கள் தேர்வை இதுவரை நடத்தவில்லை என்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அறிவித்து உள்ளனர்.
    ஜாக்கி ஷெராப், ரவி கிருஷ்ணா, சம்பத் ராஜ் நடிப்பில் உருவாகி இருந்த ‘ஆரண்ய காண்டம்’ படத்தை தியாகராஜன் குமாரராஜா இயக்கி இருந்தார்.
    தியாகராஜன் குமாரராஜா இயக்குனராக அறிமுகமான படம் ‘ஆரண்ய காண்டம்’. எஸ்.பி.பி. சரண் தயாரித்த இந்தப் படம் கடந்த 2011-ம் ஆண்டு வெளியானது. இதில் ஜாக்கி ஷெராப், ரவி கிருஷ்ணா, சம்பத் ராஜ், யாஷ்மின் பொன்னப்பா, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

    இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. வெளியீட்டின் போது வெற்றி பெறாமல், பின்னர் மக்களால் கொண்டாடப்பட்ட படங்களில் ‘ஆரண்ய காண்டம்’ முக்கியமானது. இப்படம் வசூல் ரீதியாக நஷ்டமடைந்தாலும், விருதுகளை வென்று குவித்தது. குறிப்பாக சிறந்த படத்தொகுப்பு, சிறந்த அறிமுக இயக்குனர் ஆகிய தேசிய விருதுகளையும் வென்றது.

    ஆரண்ய காண்டம் படத்தின் போஸ்டர்
    ஆரண்ய காண்டம் படத்தின் போஸ்டர்

    இப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆகும் நிலையில், தற்போது இந்தப் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளனர். பாலிவுட் திரையுலகின் முன்னணித் தயாரிப்பு நிறுவனமான டிப்ஸ் நிறுவனம் இதன் ரீமேக் உரிமையை கைப்பற்றியுள்ளது. அடுத்த ஆண்டு இந்தப் படத்தின் ரீமேக் பணிகள் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
    ‘இந்தியன் 2’ படத்தை முடிக்காமல், இயக்குனர் ஷங்கர் வேறு படத்தை இயக்க தடை விதிக்கக்கோரி லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.
    ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 படம், விபத்து, கொரோனா பரவல், கமல்ஹாசனின் அரசியல் பணிகள் போன்ற காரணங்களால் பல மாதங்களாக முடங்கி இருந்தது. இந்தியன் 2 படப்பிடிப்பு தாமதமாவதால், அடுத்த பட பணிகளில் கவனம் செலுத்தி வந்தார்.

    இதனால் அதிருப்தியடைந்த, இந்தியன் 2 படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா, தங்கள் படத்தை முடிக்காமல் ஷங்கர் வேறு படத்தை இயக்க தடை விதிக்குமாறு நீதிமன்றத்தை நாடியது. ஆனால் நீதிமன்றமோ, இந்த பிரச்சனையை இருதரப்பும் பேசி தீர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியது. இதையடுத்து நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. 

    ஷங்கர்

    இந்நிலையில், லைகா நிறுவனம், இயக்குனர் ஷங்கர் இடையேயான பிரச்சினைக்கு தீர்வு காண, உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.பானுமதியை மத்தியஸ்தராக நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் விரைவில் இந்த பிரச்சினை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ×