என் மலர்
சினிமா

சௌந்தரராஜா
தடுப்பூசி போட்டு வேண்டுகோள் விடுத்த சௌந்தர ராஜா
சுந்தர பாண்டியன், தர்மதுரை, பிகில் போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகர் சௌந்தரராஜா கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக வேகமாக பரவி வந்த கொரோனா தொற்றின் 2வது அலை, தற்போது படிப்படியாக குறையத் தொடங்கி உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும், தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் முதல் நடைபெற்று வருகிறது. அரசியல் பிரபலங்களும், சினிமா நட்சத்திரங்களும் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.


அந்த வகையில் தற்போது சுந்தர பாண்டியன், தர்மதுரை, கடைக்குட்டி சிங்கம், ஜிகர்தண்டா, தெறி, பிகில், ஜகமே தந்திரம் ஆகிய படங்களில் நடித்த நடிகர் சௌந்தரராஜா தடுப்பூசி போட்டு, பொது மக்கள் அனைவரும் மருத்துவர்கள் அறிவுரைப்படி விரைவில் தடுப்பூசியை போட்டுக்கொள்ளுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அரசாங்கத்தின் வழிகாட்டுதலின் படி என் குடும்ப மருத்துவரின் அறிவுரைப்படி இன்று என்னுடைய முதல் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டேன். நீங்களும் மருத்துவர்கள் அறிவுரைப்படி விரைவில் தடுப்பூசியை போட்டுக்கொள்ளுங்கள்.
— Soundara Raja Actor (@soundar4uall) June 30, 2021
கொரானாவை ஒழிப்போம்.!! #GetVaccinated#Covieshield#MannukkumMakkalukkumpic.twitter.com/dlpkcEz7JR
Next Story






