என் மலர்
சினிமா செய்திகள்
கமல் தொகுத்து வழங்க இருக்கும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை தமிழில் நான்கு சீசன்கள் முடிந்துள்ளன. 5-வது சீசனுக்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க உள்ளார்.


‘பிக்பாஸ் 5’ நிகழ்ச்சிக்கான புரமோ வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. தற்போது புதிய புரமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி, வருகிற அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மித்ரன் ஜவகர் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நடிகர் தனுஷின் 44-வது படம் ‘திருச்சிற்றம்பலம்’. மித்ரன் ஜவகர் இயக்கி உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், ராஷி கண்ணா ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தனுஷ், ஜானி
இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தில் நடன இயக்குனராக ஜானி பணியாற்றி வருகிறார். ஏற்கனவே தனுஷுடன் இணைந்து ‘மாரி 2’ படத்தில் பணியாற்றிய ஜானி தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் இணைந்துள்ளார். ‘மாரி 2’ படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடலுக்கு பிரபுதேவாவுடன் இணைந்து ஜானி நடனம் அமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
திரைப்படங்கள் வெளியானால் தான் திரைத்துறையை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த நடிகர் சிவகார்த்திகேயன் நிருபர்களிடம் கூறியதாவது: “நான் நடித்த டாக்டர் திரைப்படம் அடுத்த மாதம் 9-ந் தேதி வெளியாகிறது. திரைப்படங்கள் எப்போதும் தியேட்டர்களில் வெளியாக வேண்டும் என்பது தான் எனது ஆசை. திரையங்குகளில் நான் படம் பார்த்து வளர்ந்தவன் என்பதே அதற்கு காரணம். தற்போதுள்ள காலச்சூழலில் எனது தனிப்பட்ட சிந்தனையை மட்டும் இதில் திணிக்க முடியாது.
ஓடிடி தளங்களை பொறுத்தவரை அவற்றில் உள்ள நல்ல விஷயங்களை மட்டுமே நான் பார்க்கிறேன். நடிகர்கள் சேர்ந்து இவ்விவகாரத்தில் யாருக்கு எதிராகவும், சாதகமாகவும் முடிவு எடுக்க முடியாது. படங்கள் ஏதோ ஒரு வகையில் வெளியாக வேண்டும். அப்போது தான் திரைத்துறையை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்.

பொதுமக்கள் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தியேட்டர்களுக்கு வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் தற்போது தியேட்டர்களில் பொதுமக்கள் திரைப்படத்தை காண்பதற்கான வசதிகள் மேம்பட்டுள்ளன.
திரைப்படங்களுக்கு தமிழில் தலைப்பு வைப்பது நல்ல விஷயம். ஆனால் தமிழ் தலைப்புகள் சில நேரங்களில் கிடைப்பதில்லை. அதோடு தற்போது தற்போது படங்கள் ஓடிடி தளங்கள் வாயிலாக பிற இடங்களில் வெளியாகின்றன. அத்தகைய சூழலுக்கு தகுந்தவாறும் சில நேரங்களில் முடிவு எடுக்கப்படுகின்றன”. இவ்வாறு அவர் கூறினார்.
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர்கள் விஜய் மக்கள் இயக்க கொடியை பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அக்டோபர் 6 மற்றும் 9 என 2 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக வேட்புமனு தாக்கல் தொடங்கி உள்ள நிலையில், இந்த தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தின் போட்டியிட உள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் தகவல் வெளியானது.
இந்நிலையில், அதனை உறுதிப்படுத்தும் வகையில், செங்கல்பட்டு மாவட்டம், பவுஞ்சூர் ஒன்றியத்தில், ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு, நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ரகுபதி என்பவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இதேபோல் செங்கல்பட்டு
மாவட்டம், இலத்தூர் ஒன்றியம், வெளிக்காடு ஊராட்சியில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சுபா என்பவர் வேட்புமனு தாக்கல் செய்தார்.

வேட்புமனு தாக்கல் செய்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிக்கு உற்சாக வரவேற்பு அளித்த விஜய் ரசிகர்கள்
இதுதவிர உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ள 9 மாவட்டங்களிலும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். விஜய் மக்கள் இயக்கம் சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், விஜய் மக்கள் இயக்க கொடி மற்றும் நடிகர் விஜய்யின் புகைப்படம் உள்ளிட்டவற்றை பயன்படுத்திக் கொள்ள விஜய் மக்கள் இயக்க தலைமை அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் கார்த்திகேயா. இவர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் அவர் தமிழ் திரையுலகில் அறிமுகமாக உள்ளார். இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் கார்த்திகேயாவுக்கு, ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளம் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

வலிமை படக்குழு வெளியிட்டுள்ள புதிய போஸ்டர்
இந்நிலையில், நடிகர் கார்த்திகேயாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக ‘வலிமை’ படக்குழு சர்ப்ரைஸ் போஸ்டரை வெளியிட்டுள்ளது. கார்த்திகேயாவின் வில்லன் தோற்றத்துடன் கூடிய இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வலிமை படத்தை எச்.வினோத் இயக்கி உள்ளார். போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கி வரும் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 14 சீசன்கள் முடிவடைந்துள்ளன.
வெளிநாட்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வந்த ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி கடந்த சில ஆண்டுகளாக இந்திய தொலைகாட்சிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழில் கமல்ஹாசனும், தெலுங்கில் நாகார்ஜுனாவும், மலையாளத்தில் மோகன் லாலும், இந்தியில் சல்மான் கானும் தொகுத்து வழங்கி வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சி, இந்தியில் இதுவரை 14 சீசன் முடிவடைந்துள்ளது. தற்போது 15-வது சீசனுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 15-வது சீசனை தொகுத்து வழங்க உள்ள நடிகர் சல்மான் கானுக்கு ரூ.350 கோடி சம்பளம் பேசி இருப்பதாக தகவல் வெளியாகி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சல்மான் கான்
கடந்த இரண்டு சீசன்களாக ஒரு வாரத்துக்கு ரூ.13 கோடி சம்பளம் வாங்கி வந்த சல்மான் கான், தற்போது அதனை ரூ.25 கோடியாக உயர்த்தி உள்ளாராம். இதன்மூலம் அவர் தொகுத்து வழங்க உள்ள 14 வாரத்துக்கு ரூ.350 கோடி சம்பளம் கிடைக்க உள்ளதாக கூறப்படுகிறது. ‘பிக்பாஸ் 15’ நிகழ்ச்சிக்காக நடிகர் சல்மான் கான் வாங்கும் சம்பளம் ‘பாகுபலி 2’ பட பட்ஜெட்டை (ரூ.250 கோடி) விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
சிம்பு - கவுதம் மேனன் கூட்டணியில் உருவாகும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களை தொடர்ந்து சிம்பு - கவுதம் மேனன் கூட்டணியில் உருவாகும் புதிய படம் ‘வெந்து தணிந்தது காடு’. இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக இளம் நடிகை கயாடு லோகர் நடிக்கிறார்.
ஐசரி கணேசன் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்காக நடிகர் சிம்பு 15 கிலோ உடல் எடையை குறைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

கவுதம் மேனன், சித்திக்
இந்நிலையில், இப்படத்தில் சிம்புவுக்கு வில்லனாக நடிப்பது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பிரபல மலையாள நடிகர் சித்திக், சிம்புவுக்கு வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர் திரிஷ்யம், ஹே ஜூடு, ஒடியன் போன்ற மலையாள படங்களில் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் ஜெய், பிரேக்கிங் நியூஸ், எண்ணித் துணிக, பார்ட்டி, குற்றமே குற்றம், சிவ சிவா போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.
விஜய் நடிப்பில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான ‘பகவதி’ படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார் ஜெய். இதையடுத்து சென்னை 28, சுப்ரமணியபுரம், எங்கேயும் எப்போதும், கலகலப்பு 2 என பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து தமிழ் திரையுலகில் தனக்கென ஓர் இடத்தை பிடித்தார்.
இதுவரை 25 படங்களில் நடித்துள்ள ஜெய், தற்போது இசையமைப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘சிவ சிவா’ படத்துக்கு நடிகர் ஜெய் இசையமைத்துள்ளார்.

சிவ சிவா படத்தின் போஸ்டர்
இதுகுறித்து நடிகர் ஜெய் கூறியதாவது: “ஆரம்பத்தில் சினிமாவில் இசையமைப்பாளர் ஆக வேண்டும் என்ற கனவில் இருந்தேன். எதிர்பாராத விதமாக நடிகர் ஆனேன். இருப்பினும் இசையமைப்பாளர் ஆக வேண்டும் என்ற எனது 19 வருட கனவு தற்போது நனவாகி உள்ளது” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
சிவ சிவா படத்துக்காக அவர் இசையமைத்துள்ள ‘காட முட்ட’ என்கிற பாடல் நேற்று வெளியிடப்பட்டது. இப்பாடல் வரிகளை வைரமுத்து எழுதி உள்ளார். அனல் ஆகாஷ் இப்பாடலை பாடி உள்ளார். இப்பாடலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
The Melodious Folk song #KaadaMutta from #ShivaShivaa
— Maalai Malar News (@maalaimalar) September 20, 2021
A @Actor_Jai's Musical debuthttps://t.co/EzQYIW5UUW@Dir_Susi@meenakshigovin2@lendi_studios@aishwaryas24@VelrajR@mukasivishwa@Actormuthukumar@ajay250193@saregamasouth@DoneChannel1
தமிழில் பிளாக்பஸ்டர் ஹிட்டான 96 திரைப்படம் ஏற்கனவே தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் ’96’. ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற இப்படம், திரையரங்குகளில் 100 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடியது. ராம் என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியும், ஜானு என்ற கதாபாத்திரத்தில் திரிஷாவும் நடித்திருந்தார்கள்.
இப்படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்களை கவர்ந்தது. பள்ளி பருவ காதல், நட்பு என அழகாக திரைக்கதை அமைத்திருந்தார்கள். இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவின் இசை படத்திற்கு பெரும் பலமாக அமைந்தது. தமிழில் பிளாக்பஸ்டர் ஹிட்டான இப்படத்தை தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் ரீமேக் செய்தனர்.

அஜய் கபூர்
இந்நிலையில், 96 படம் அடுத்ததாக இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது. இதனை தனது சமூக வலைதள பதிவு வாயிலாக உறுதிப்படுத்தி உள்ள நடிகர் விஜய் சேதுபதி, இப்படத்தின் இந்தி ரீமேக்கை அஜய் கபூர் தயாரிக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளார். இப்படத்தை இயக்க உள்ள இயக்குனர் மற்றும் நடிக்க உள்ள நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தயாரிப்பாளர் அஜய் கபூர் தெரிவித்துள்ளார்.
சக்தி சிதம்பரம் இயக்கத்தில் யோகிபாபு, மொட்ட ராஜேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பேய் மாமா’ படம் ரிலீசுக்கு தயாராகி உள்ளது.
யோகிபாபு நடிப்பில் உருவாகி உள்ள புதிய படம் ‘பேய் மாமா’. சக்தி சிதம்பரம் இயக்கி உள்ள இப்படத்தில் மாளவிகா மேனன், மனோபாலா, மொட்ட ராஜேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர், இமான் அண்ணாச்சி, சிங்கம்புலி, கோவை சரளா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விக்னேஷ் ஏலப்பன் இப்படத்தை தயாரித்துள்ளார்.
கூர்கா பட பிரபலம் ராஜ் ஆர்யன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு எம்.வி.பன்னீர்செல்வம் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரீத்தம் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நீண்ட நாட்களாக முடங்கிக் கிடந்த இப்படம், தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இப்படம் வருகிற செப்டம்பர் 24-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அன்றைய தினம் ரியோவின் ‘பிளான் பண்ணி பண்ணனும்’, ராய் லட்சுமி நடித்துள்ள ‘சிண்ட்ரெல்லா’ ஆகிய படங்களும் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
சந்தானம் நடிப்பில் வெளியாகி இருக்கும் டிக்கிலோனா படத்தில் இடம் பெற்றிருக்கும் பேரு வச்சாலும் வைக்காம போனாலும் என்ற பாடல் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
கமல் நடிப்பில் 31 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த திரைப்படம் மைக்கேல் மதன காமராஜன். இப்படத்தில் 4 வேடத்தில் கமல்ஹாசன் நடித்திருப்பார். இளையராஜா இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. குறிப்பாக ‘பேரு வச்சாலும் வைக்காம போனாலும்...’ என்ற பாடல் மிகவும் பிரபலம்.
இந்த பாடலை சந்தானம் நடித்த டிக்கிலோனா படத்தில் மீண்டும் பயன்படுத்தி இருக்கிறார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. இந்த பாடலில் நடனம் ஆடிய அனகா ரசிகர்களிடம் மிகவும் பிரபலமாகி விட்டார். அப்பாடலில் அவர் நடனமாடியதை மட்டும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், இந்த பாடல் எப்படி உருவானது என்பதற்கான சுவாரஸ்யமான விளக்கத்தை கொடுத்துள்ளார் இளையராஜா. இப்பாடலுக்கான மெட்டை வாலியுடம் கூறிய போது, இது என்னயா மெட்டு, இதற்கு எப்படி பாடல் எழுதுவது எனக்கேட்டார். அதற்கு ‘துப்பார்க்கு துப்பாய’ குறள் மூலம் வள்ளுவர் ஏற்கனவே இப்பாடலை எழுதிவிட்டார் எனக்கூறினேன். அதன் பின்னரே இப்பாடல் உருவானது என இளையராஜா கூறியிருக்கிறார்.
இளையராஜா இந்த பாடல் குறித்து பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய், அஜித் இருவரும் நேரில் சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வலிமை படத்தின் படப்பிடிப்பை முடித்த நடிகர் அஜித், தற்போது டெல்லியில் நடைபெற இருக்கும் தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக சமீபத்தில் டெல்லி சென்ற நடிகர் அஜித், அங்கு தீவிர பயிற்கு மேற்கொண்டு வருகிறார்.
ஓய்வு நேரத்தில் டெல்லியில் உள்ள தாஜ்மஹாலை பார்க்க சென்றிருக்கிறார் அஜித். இதன் புகைப்படங்கள் நேற்று வெளியாகி வைரலானது. தற்போது பைக்கில் தனியாக உலகம் சுற்றி வந்திருக்கும் மாரல் யசர்லோவை டெல்லியில் சந்தித்து பேசிய புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில், நடிகர் விஜய்யை அஜித் சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பீஸ்ட் படப்பிடிப்பிற்காக நடிகர் விஜய்யும் டெல்லிக்கு சென்றிருக்கிறார். விமான நிலையத்தில் விஜய் நடந்து செல்லும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியானது. அஜித், விஜய் ஒரே சமயத்தில் டெல்லியில் இருப்பதால் இருவரும் நேரில் சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர்கள் சந்தித்துக் கொள்ளும் புகைப்படங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






