என் மலர்
சினிமா செய்திகள்
தமிழ், தெலுங்கு, இந்தி மொழிப்படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை சமீரா ரெட்டியின் புதிய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
வாரணம் ஆயிரம் படத்தில் மேக்னாவாக தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் சமீரா ரெட்டி. பின்னர் வேட்டை, அசல், வெடி என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமானார். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சமீரா இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் வங்க மொழி படங்களிலும் நடித்துள்ளார். சமீராவுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

சமீரா ரெட்டி தனது சமூக வலைத்தள பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார். தற்போது தன் கணவர், குழந்தைகளுடன் பீச்சில் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
வலிமை படத்தில் நடித்து முடித்து இருக்கும் நடிகர் அஜித், டெல்லியில் உலகம் முழுவதும் பைக் ரைடு செய்த பெண்ணை சந்தித்து பேசியிருக்கிறார்.
அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ‘வலிமை’. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ரஷ்யாவில் நடைபெற்றது முடிந்தது. இதன் படப்பிடிப்புக்கு பிறகு அஜித் ரஷ்யாவில் பைக் ரைடு செய்த புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலானது.
இந்நிலையில் பைக்கில் தனியாக உலகம் சுற்றி வந்திருக்கும் மாரல் யசர்லோ என்ற பெண்ணை டெல்லியில் நேரில் சந்தித்து பேசி இருக்கிறார் அஜித். மாரல் யசர்லோ தன் பைக்கில் 7 கண்டங்கள், 64 நாடுகளை கடந்திருக்கிறார். எதிர்காலத்தில் தன் பைக்கில் உலகம் சுற்றும் திட்டத்தில் அஜித் இருப்பதால் மாரலிடம் ஆலோசனை கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அஜித் - மாரல் யசர்லோ
மாரல் யாசர்லோவுடன் அஜித் சந்தித்து பேசிய புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சக்தி சிதம்பரம் இயக்கத்தில் யோகிபாபு, மாளவிகா மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் பேய் மாமா படத்தின் முன்னோட்டம்.
சக்தி சிதம்பரம் இயக்கத்தில் யோகிபாபு நடித்துள்ள படம் பேய் மாமா. யோகிபாபுவுடன் மாளவிகா மேனன், மனோபாலா, மொட்ட ராஜேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர், இமான் அண்ணாச்சி, சிங்கம்புலி, நமோ நாராயணன், கோவை சரளா மற்றும் பலர் நடித்துள்ளனர். ஏலப்பன், விக்னேஷ் ஆகிய இருவரும் தயாரித்து வருகிறார்கள். யோகிபாபுவுடன் வில்லனாக பொன் குமரன், வில்லியாக காவியா ஆகிய இருவரும் நடித்துள்ளனர்.
படத்தை பற்றி இயக்குனர் கூறியதாவது: “பேய் மாமா, ஒரு திகில் படம். வில்லன் ஒரு வெளிநாட்டின் தீயசக்தியுடன் தொடர்பு வைத்துக்கொண்டு உயிரை கொல்லும் வைரஸ் கிருமியை உருவாக்கி, அதன் மூலம் பல கோடிகளை சம்பாதிக்க திட்டமிடுகிறான்.

யோகிபாபு
அவனுடைய முகமூடியை கிழித்து உலக மக்களை காப்பாற்ற முயற்சிக்கிறார், உள்ளூர் சித்த வைத்தியர். அவரை வில்லன் கொன்று விடுகிறான். சித்த வைத்தியரின் ஆவி, கதாநாயகனுக்குள் புகுந்து அப்பாவி மக்களை காப்பாற்ற களம் இறங்குகிறது. இதுவே ‘பேய் மாமா’வின் கதை. இந்த கதை இப்போதைய காலகட்டத்துக்கு பொருத்தமாக அமைந்து விட்டது”. என்றார்.
ரோடோ சயாகியூஸ் இயக்கத்தில் ஸ்டீபன் லேங், பிரெண்டன் செக்ஸ்டான், மேட்லின் கிரேஸ் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘டோன்ட் பிரீத் 2’ படத்தின் விமர்சனம்.
ராணுவப் போரில் கண் பார்வை இழந்த ஸ்டீபன் லேங் தனியாக ஒரு வீட்டில் வாழ்ந்து வருகிறார். அவரது வீட்டையும் வீட்டில் இருக்கும் பொருட்களையும் திருட, திருட்டு கும்பல் ஒன்று வீட்டிற்குள் நுழைய, அவர்களுக்கு தர்ம அடி கொடுத்து ஓட விடுகிறார் ஸ்டீபன் லேங். முதலில் ஹீரோவாக காட்டிவிட்டு பின்னர் அவர் எப்படிப்பட்ட வில்லன் என்பதையும் முதல்பாகத்தில் சொல்லி இருப்பார்கள்.
தற்போது வந்துள்ள இரண்டாம் பாகம், எட்டு வருடங்கள் கழித்து நடப்பது போல் காட்சிப்படுத்தி உள்ளனர். இதில் ஸ்டீபன் லேங் தனது வளர்ப்பு மகளுடன் தனியாக ஒரு வீட்டில் வாழ்ந்து வருகிறார். அவளை எங்கும் வெளியே செல்ல அனுமாதிக்காமல் பாதுகாத்து வருகிறார். அந்த சமயத்தில் குழந்தையைத் தேடி ஒரு கும்பல் வீட்டிற்குள் நுழைகிறது. யார் இந்த கும்பல்?, அவர்கள் ஏன் ஸ்டீபன் லேங் வளர்க்கும் குழந்தையைத் தேடுகிறார்கள்? என்பது தான் படத்தின் மீதிக்கதை.

ஃபெட் அல்வரெஸ் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளியாகி மெகாஹிட் ஆன ‘டோன்ட் பிரீத்’ படத்தின் இரண்டாம் பாகம் இது. நாயகன் ஸ்டீபன் லேங் முதல் பாகத்தைப் போல் இந்தப் பாகத்திலும் மாஸ் காட்டி இருக்கிறார். கண் தெரியாத ஒருவரின் நடவடிக்கைகளை அழகாகவும், மிரட்டும் விதமாக செய்திருப்பது சிறப்பு. மேலும் பிரெண்டன் செக்ஸ்டான், மேட்லின் கிரேஸ் ஆகியோரின் நடிப்பும் கச்சிதம்.
ரோடோ சயாகியூஸ் இப்படத்தை இயக்கி உள்ளார். மொத்தக் கதையும் இருட்டில் சேஸிங், ஆக்ஷன் என சென்று கொண்டிருக்கிறது. முதல் பாகத்தைப் போல் இந்த படத்தையும் சுவாரஸ்யம் குறையாமல் திரைக்கதை அமைத்துள்ள விதம் அருமை. நாய் சென்டிமென்ட் படத்திற்கு பிளஸ் ஆக அமைந்துள்ளது.

படத்தின் கதை முழுக்க முழுக்க இருட்டில் பயணித்தாலும், ஒளிப்பதிவாளர் பெட்ரோ லூக் மிக அற்புதமாக காட்சிப்படுத்தி இருக்கிறார். ரோக் பெனோஸின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது.
மொத்தத்தில் ‘டோன்ட் பிரீத் 2’ விறுவிறுப்பு.
இளையராஜா உடன் கமல்ஹாசன் சந்திப்பு மேற்கொண்டபோது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் கமல்ஹாசன், அரசியல் கட்சி தொடங்கிய பின்னரும் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம், ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் ‘இந்தியன் 2’ போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதுதவிர பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனை தொகுத்து வழங்க உள்ளார். அக்டோபர் மாதம் 3-ந் தேதி இந்நிகழ்ச்சி தொடங்க உள்ளது.

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன், இன்று இசையமைப்பாளர் இளையராஜாவின் புதிய ஸ்டுடியோவுக்கு சென்று பார்வையிட்டார். அந்த ஸ்டுடியோவுக்கு முதன்முறையாக வருகை தந்த நடிகர் கமல்ஹாசன், இசையமைப்பாளர் இளையராஜாவை நேரில் சந்தித்து பேசினார். மரியாதை நிமிர்த்தமாக இந்த சந்திப்பு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இளையராஜா உடன் கமல்ஹாசன் சந்திப்பு மேற்கொண்டபோது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
தெலுங்கு ஊடக செய்தியாளரை நடிகை சமந்தா திட்டிய வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாகார்ஜுனின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பிறகும் சமந்தா திரைப்படங்களிலும், வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல், தெலுங்கில் சாகுந்தலம் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.
நடிகை சமந்தாவுக்கும், அவரது கணவர் நாக சைதன்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு, இருவரும் பிரியப் போகிறார்கள் என்ற வதந்தி வெகுநாட்களாகவே உலவுகிறது.
இந்நிலையில், திருப்பதி கோவிலுக்கு வந்த நடிகை சமந்தாவிடம் தெலுங்கு ஊடக செய்தியாளர் ஒருவர், உங்களைப் பற்றி வதந்திகள் வந்து கொண்டிருக்கிறதே எனக் கேட்டதற்கு, “கோயிலுக்கு வந்து இதைக் கேக்குறீங்களே, புத்தி இருக்கா?” என்று கோபமாக பதிலளித்தார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Sam really proud of you!! Some people don’t understand what to ask when .. Just loved that reply of yours !@Samanthaprabhu2
— Multi Fandom (@multifandom5928) September 18, 2021
.
.#SamanthaAkkineni#SamanthaRuthPrabhu#Samanthapic.twitter.com/5RUO5bbhbz
ஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா நடித்துள்ள ‘தள்ளிப் போகாதே’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஜெயம் கொண்டான் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஆர்.கண்ணன். இதையடுத்து சேட்டை, கண்டேன் காதலை, இவன் தந்திரன், பூமரேங் போன்ற படங்களை இயக்கிய அவர், அடுத்ததாக அதர்வாவின் ‘தள்ளிப் போகாதே’ படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்.
கோபி சுந்தர் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தள்ளிப் போகாதே படத்தின் போஸ்டர்
இந்நிலையில், ‘தள்ளிப் போகாதே’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இப்படம் வருகிற அக்டோபர் 14-ந் தேதி ஆயுதபூஜை பண்டிகையன்று திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதே தினத்தில் விஷாலின் ‘எனிமி’, ஆர்யாவின் ‘அரண்மனை 3’ ஆகிய படங்களும் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச பட விழாக்களில் சிறந்த துணை நடிகைக்கான விருது வென்றுள்ள நடிகை மகிமா நம்பியாருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
அருள்நிதி நடித்த மௌனகுரு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சாந்தகுமார். 2011-ம் ஆண்டு வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து ஆர்யா, இந்துஜா, மகிமா நம்பியார் நடித்த ‘மகாமுனி’ படத்தை இயக்கினார் சாந்தகுமார். கடந்த 2019-ம் ஆண்டு வெளியான இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதோடு, சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளை வென்று வருகிறது.
அண்மையில் ஸ்பெயினில் நடைபெற்ற மேட்ரிட் சர்வதேச திரைப்பட விழாவில், மகாமுனி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை மகிமா நம்பியாருக்கு, சிறந்த துணை நடிகைக்கான விருது வென்றிருந்தார்.

நடிகை மகிமா டுவிட்டரில் பகிர்ந்த புகைப்படம்
இந்நிலையில், அவருக்கு மேலும் ஒரு சர்வதேச விருது கிடைத்துள்ளது. அதன்படி டொரண்டோ சர்வதேச திரைப்பட விழாவில், அவருக்கு சிறந்த துணை நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் இந்த திரைப்பட விழாவில், சிறந்த படத்துக்கான விருதையும் மகாமுனி திரைப்படம் வென்றுள்ளது. அடுத்தடுத்து 2 சர்வதேச விருது வென்றுள்ள நடிகை மகிமா நம்பியாருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘மகான்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘மகான்’. இப்படத்தில் விக்ரமும், அவரது மகன் துருவ் விக்ரமும் முதன்முறையாக இணைந்து நடித்துள்ளனர். மேலும் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா, சனத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் மூலம் லலித்குமார் இந்தப் படத்தை தயாரிக்கிறார்.

மகான் படத்தின் போஸ்டர்
இந்நிலையில், இப்படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி ‘மகான்’ படத்தில் இடம்பெறும் ‘சூறையாட்டம்’ என்கிற பாடல் வருகிற செப்டம்பர் 22-ந் தேதி வெளியிடப்படும் என அறிவித்துள்ளனர். மகான் படக்குழு வெளியிட்டுள்ள இந்த திடீர் அப்டேட்டால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
தந்தையை இழந்து தவிக்கு நடிகை நந்திதாவிற்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளம் வாயிலாக ஆறுதல் கூறி வருகின்றனர்.
நடிகை நந்திதா, பா.ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதை தொடர்ந்து எதிர் நீச்சல், இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, புலி, கபடதாரி, நெஞ்சம் மறப்பதில்லை என வித்தியாசமான கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்து கவனம் பெற்றார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நந்திதாவின் சமீபத்திய பதிவு அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

நந்திதா, சிவசாமி
அந்த பதிவில் “எனது அப்பா சிவசாமி (வயது 54) நேற்று காலமானார் என்பதை எனது நலம் விரும்பிகள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் நடிகை நந்திதாவிற்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
நெல்சன் - ஐஸ்வர்யா ராஜேஷ் கூட்டணியில் உருவாக உள்ள புதிய படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் கைவசம் டிரைவர் ஜமுனா, மோகன்தாஸ், தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் தமிழ் ரீமேக், துருவ நட்சத்திரம் ஆகிய படங்கள் உள்ளன. இதுதவிர தெலுங்கில் ரிபப்ளிக், பீம்லா நாயக் போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.
இவ்வாறு பிசியான நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி அவர் எஸ்.ஜே.சூர்யாவின் ‘மான்ஸ்டர்’ படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் உடன் கூட்டணி அமைக்க உள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷ், நெல்சன் வெங்கடேசன்
இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இப்படத்தில் நடிக்கும் இதர நடிகர், நடிகைகள் தேர்வு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அருண் விஜய் நடித்துள்ள பார்டர் திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
‘குற்றம் 23’ படத்தை அடுத்து அருண் விஜய்யும், இயக்குனர் அறிவழகனும் மீண்டும் இணைந்து பணியாற்றியுள்ள படம் ‘பார்டர்’. இப்படத்தில் நடிகைகள் ரெஜினா கசன்ட்ரா, ஸ்டெபி பட்டேல் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்து இருக்கிறார்கள்.
விஜய ராகவேந்திரா தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை சாபு ஜோசப் மேற்கொண்டுள்ளார். பார்டர் திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

பார்டர் படத்தின் போஸ்டர்
இந்நிலையில், பார்டர் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் வருகிற நவம்பர் மாதம் 19-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.






