என் மலர்
சினிமா

கமல்ஹாசன், இளையராஜா
இளையராஜாவின் ஸ்டுடியோவுக்கு திடீர் விசிட் அடித்த கமல்ஹாசன்
இளையராஜா உடன் கமல்ஹாசன் சந்திப்பு மேற்கொண்டபோது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் கமல்ஹாசன், அரசியல் கட்சி தொடங்கிய பின்னரும் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம், ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் ‘இந்தியன் 2’ போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதுதவிர பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனை தொகுத்து வழங்க உள்ளார். அக்டோபர் மாதம் 3-ந் தேதி இந்நிகழ்ச்சி தொடங்க உள்ளது.

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன், இன்று இசையமைப்பாளர் இளையராஜாவின் புதிய ஸ்டுடியோவுக்கு சென்று பார்வையிட்டார். அந்த ஸ்டுடியோவுக்கு முதன்முறையாக வருகை தந்த நடிகர் கமல்ஹாசன், இசையமைப்பாளர் இளையராஜாவை நேரில் சந்தித்து பேசினார். மரியாதை நிமிர்த்தமாக இந்த சந்திப்பு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இளையராஜா உடன் கமல்ஹாசன் சந்திப்பு மேற்கொண்டபோது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
Next Story






