என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    செல்வ அன்பரசன் இயக்கத்தில் மீரா மிதுன், தருண் கோபி, கோதண்டம், முல்லை நடிப்பில் உருவாகி வரும் ‘பேய காணோம்’ படத்தின் முன்னோட்டம்.
    குளோபல் எண்டர்டெயின்மெண்ட் பட நிறுவனம் சார்பில் ஆர். சுருளிவேல் தயாரிக்கும் படத்திற்கு "பேய காணோம்" என்று வித்தியாசமான தலைப்பை வைத்துள்ளனர். இந்த படத்தில் மீரா மிதுன் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். மேலும் இயக்குனர் தருண் கோபி, கௌசிக், சந்தியா ராமச்சந்திரன், கோதண்டம், முல்லை, செல்வகுமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

    செல்வ அன்பரசன் இயக்கி உள்ளார். மிஸ்டர் கோளாறு இசையமைத்துள்ள இப்படத்திற்கு ராஜ்.ஓ.எஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை ஏ.கே.நாகராஜ் மேற்கொள்கிறார். 

    மீரா மிதுன்
    மீரா மிதுன்

    இப்படத்தின் கதை பற்றி படக்குழு கூறியதாவது: “வாழ்க்கையில் பணத்தை காணோம், குழந்தையை காணோம், பொருளை காணோம்,நண்பனை காணோம், இன்னும் எதை எதையோ காணோம் என்று தேடியிருப்போம். முதன் முதலாக ஒரு பேயை தேடுகிறார்கள். பேயை எதற்காக தேடுகிறார்கள் என்பது தான் படத்தின் திரைக்கதை. முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட பேய் படம் இது.” என தெரிவித்துள்ளனர். 90 சதவீதம் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
    செல்வ அன்பரசன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பேய காணோம்’ படத்தில் நடிகை மீரா மிதுன் பேயாக நடித்து உள்ளாராம்.
    குளோபல் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் ஆர்.சுருளிவேல் தயாரிக்கும் படத்திற்கு ‘பேய காணோம்’ என்று வித்தியாசமான தலைப்பை வைத்துள்ளனர். இந்த படத்தில் மீரா மிதுன் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். மேலும் இயக்குனர் தருண் கோபி, கௌசிக், சந்தியா ராமச்சந்திரன், கோதண்டம், முல்லை, செல்வகுமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். செல்வ அன்பரசன் என்பவர் இயக்கி உள்ளார்.

    வாழ்க்கையில் பணத்தை காணோம், குழந்தையை காணோம், பொருளை காணோம், நண்பனை காணோம், இன்னும் எதை எதையோ காணோம் என்று தேடியிருப்போம். ஆனால் முதன் முதலாக இப்படத்தில் ஒரு பேயை தேடுகிறார்கள். அவர்கள் 
    பேயை எதற்காக தேடுகிறார்கள் என்பதை நகைச்சுவையாக சொல்லியுள்ளதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    மீரா மிதுன்
    மீரா மிதுன்

    இதுவரை 90 சதவீதம் படப்பிடிப்பை முடித்துள்ள படக்குழு, எஞ்சியுள்ள படப்பிடிப்பை நடத்த முடியாமல் தவித்து வருகின்றனர். ஏனெனில், இப்படத்தின் நாயகி மீரா மிதுன் சிறையில் உள்ளதால், படப்பிடிப்பை நடத்த முடியவில்லையாம். அவருக்கு ஜாமீன் கிடைத்தவுடன் இதர 10 சதவீதம் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
    நடன நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக பங்கேற்ற நடிகை பூர்ணா, போட்டியாளரின் கன்னத்தை கடித்து சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
    மலையாள நடிகையான பூர்ணா, கடந்த 2008-ம் ஆண்டு வெளியான ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். இதையடுத்து தமிழில் ஆடுபுலி, கந்தக்கோட்டை, தகராறு, சவரக்கத்தி, கொடி வீரன், காப்பான் என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார். 

    சமீபத்தில் விஜய் இயக்கத்தில் வெளியான தலைவி படத்தில் சசிகலா வேடத்தில் நடித்து பாராட்டுக்களை பெற்றார். இதுதவிர ஒரு சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வருகிறார் பூர்ணா.

    பூர்ணா
     
    அந்த வகையில் தெலுங்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியின் சமீபத்திய எபிசோடில் நன்றாக நடனமாடிய ஒரு இளைஞருக்கு முத்தம் கொடுத்த பூர்ணா, அவரின் கன்னத்தை கடித்து சர்ச்சையில் சிக்கி உள்ளார். இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் வைரலாக பரவின. ஒரு நடுவர் செய்யும் வேலையா இது என்று நெட்டிசன்கள் சாடி வருகின்றனர்.
    தாஜ்மஹாலில் அஜித்துடன் ரசிகர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித், சமீப காலமாக துப்பாக்கி சுடுதல் போட்டியில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். கடந்த மார்ச் மாதம் சென்னையில் நடைபெற்ற 46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டு, 6 பதக்கங்களை வென்று அசத்தினார் அஜித்.

    மாநில அளவிலான போட்டியில் வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்க உள்ளார் அஜித். இந்தப் போட்டி விரைவில் டெல்லியில் தொடங்க உள்ளது. இதற்காக சமீபத்தில் டெல்லி சென்ற நடிகர் அஜித், அங்கு தீவிர பயிற்கு மேற்கொண்டு வருகிறார். 

    அஜித்

    இந்நிலையில், பயிற்சியின் இடையில் கிடைத்த ஓய்வு நேரத்தில் நடிகர் அஜித், தாஜ்மஹாலை சுற்றி பார்க்க சென்றுள்ளார். அவரை அடையாளம் கண்டுகொண்ட ரசிகர்கள், அவருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். தாஜ்மஹாலில் அஜித்துடன் ரசிகர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
    தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா உள்பட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் 11 பேர் மீது நடிகர் விஜய் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
    நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டுமென அவரது ரசிகர்கள் வலியுறுத்தி வந்த நிலையில், கடந்த ஆண்டு மத்தியில் அவர்களை நேரில் சந்தித்து விஜய் ஆலோசனை நடத்தினார். இதன்பின்னர் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியைப் பதிவு செய்ய அவரது தந்தையும், பிரபல இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

    கட்சித் தலைவராக உறவினர் பத்மநாபன், பொதுச் செயலாளராக எஸ்.ஏ.சந்திரசேகர், பொருளாளராக தாயார் ஷோபா ஆகியோர் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. கடந்த ஆண்டு நவம்பரில் இந்த செய்தி தீயாய் பரவிய நிலையில், கட்சியை பதிவு செய்த தகவல் தவறானது என விஜய் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

    இந்நிலையில் தனது பெயரை பயன்படுத்தி கூட்டங்களை நடத்தவோ அல்லது வேறு செயல்களில் ஈடுபடவோ தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா மற்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை நகர 5-வது உரிமையியல் நீதிமன்றத்தில் நடிகர் விஜய், கடந்த ஏப்ரல் மாதம் வழக்கு தொடர்ந்தார்.

    ஷோபா, எஸ்.ஏ.சந்திரசேகர்
    ஷோபா, எஸ்.ஏ.சந்திரசேகர்

    நடிகர் சி.ஜோசப் விஜய் என்ற பெயரில் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கில், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் பொதுச் செயலாளரான எஸ்.ஏ.சந்திரசேகர் (தந்தை), பொருளாளர் ஷோபா சேகர் (தாய்) உள்பட 11 பேர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டிருந்தனர்.

    கடந்த ஏப்ரல் 30-ந் தேதி தொடரப்பட்ட இந்த வழக்கு ஆகஸ்டு 23-ந்தேதி விசாரணைக்கு வந்த போது, வழக்கில் எதிர் மனுதாரர்களில் 6 பேருக்கு நோட்டீஸ் சென்றடையவில்லை என தெரிவிக்கப்பட்டது. அப்போது எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா, முத்து ஆகியோர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

    ஆனால் வழக்கு தொடர்ந்த நடிகர் விஜய் தரப்பில் வழக்கறிஞர் எவரும் ஆஜர் ஆகாததால், அந்த பதில் மனுக்களை அவர்களிடமே திருப்பி அளித்த நீதிபதி, வழக்கின் விசாரணையை செப்டம்பர் 27-ந் தேதிக்கு தள்ளிவைத்து, அன்றைய தினம் பதில் மனுவை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.
    பிக்பாஸ் பிரபலங்கள் நடிப்பில் உருவாகி உள்ள இரண்டு படங்களும் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
    கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்ட போதும் புதிய படங்களை ஓ.டி.டி.யில் வெளியிடும் போக்கு நீடிக்கிறது. சமீபத்தில் விஜய் சேதுபதி நடித்த ‘துக்ளக் தர்பார்’, ‘அனபெல் சேதுபதி’ போன்ற படங்கள் நேரடியாக ஓடிடி-யில் வெளியானது. 

    இந்நிலையில், மேலும் 2 தமிழ் படங்கள் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஹரீஷ் கல்யாணின் ‘ஓமணப்பெண்ணே’, கவின் நடித்துள்ள ‘லிப்ட்’ ஆகிய படங்கள் ஓ.டி.டி ரிலீசுக்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இந்த 2 படங்களின் ஹீரோக்களான கவினும், ஹரீஷ் கல்யாணும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    லிப்ட், ஓமணப்பெண்ணே படங்களின் போஸ்டர்
    லிப்ட், ஓமணப்பெண்ணே படங்களின் போஸ்டர்

    இதில் ‘ஓமணப்பெண்ணே’ படத்தை கார்த்திக் சுந்தர் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஹரீஷ் கல்யாணுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். அதேபோல் ‘லிப்ட்’ படத்தை வினீத் வரபிரசாத் இயக்கி இருக்கிறார். இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக அம்ரிதா நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘டான்’. இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சிபி சக்ரவர்த்தி, இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். மேலும் இப்படத்தில் சூரி, சிவாங்கி, சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

    லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    கவுதம் மேனன், சிவகார்த்திகேயன்

    இந்நிலையில், இப்படத்தில் பிரபல இயக்குனர் கவுதம் மேனன் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் சமீபத்தில் படமாக்கி முடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கவுதம் மேனன் - சிவகார்த்திகேயன் இணைந்து நடிப்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
    மோகன்லால், மம்முட்டி, டோவினோ தாமஸ் ஆகிய மலையாள நடிகர்களுக்கு ஏற்கனவே கோல்டன் விசா வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    அமீரக அரசு கடந்த 2019-ம் ஆண்டு விசா வழங்கும் நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தது. இதன் ஒரு பகுதியாக அமீரகத்தில் வசிக்க விரும்பும் வர்த்தகர்கள், விளையாட்டு வீரர்கள், திரைபிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் அமீரகத்தை சேர்ந்த நிறுவனம் அல்லது தனி நபர் ஆதரவு இல்லாமல் 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு வசிக்கும் வகையில் கோல்டன் விசா அறிமுகம் செய்யப்பட்டது. இந்த விசாவானது புதுப்பித்துக் கொள்ளும் வசதி கொண்டது ஆகும்.

    கோல்டன் விசாவுடன் நடிகர்கள் துல்கர் சல்மான், பிருத்விராஜ்
    கோல்டன் விசாவுடன் நடிகர்கள் துல்கர் சல்மான், பிருத்விராஜ்

    ஏற்கனவே நடிகர்கள் ஷாருக்கான், சஞ்சய்தத், மோகன்லால், மம்முட்டி, டோவினோ தாமஸ், தயாரிப்பாளர் போனி கபூர், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஆகியோருக்கு கோல்டன் விசா வழங்கிய அமீரக அரசு, தற்போது பிரபல மலையாள நடிகர்களான பிருத்விராஜ், துல்கர் சல்மான் ஆகியோருக்கும் கோல்டன் விசா வழங்கி உள்ளது. இவர்கள் இருவரும் தமிழ் படங்களிலும் நடித்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு, மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.
    ஜீவா, ஸ்ரேயா நடித்த ‘ரௌத்திரம்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கோகுல். இப்படத்தை தொடர்ந்து இவர் இயக்கிய ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இப்படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடித்திருந்தார். 

    பின்னர் ‘காஷ்மோரா’, ‘ஜூங்கா’ போன்ற படங்களை இயக்கிய கோகுல், அடுத்ததாக ‘கொரோனா குமார்’ என்ற படத்தை இயக்க உள்ளார். முதலில் இப்படத்தில் சந்தானம் நடிக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது சிம்பு ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

    கொரோனா குமார் படத்தின் போஸ்டர்
    கொரோனா குமார் படத்தின் போஸ்டர்

    இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ள படக்குழு, ஐ.பி.எல். தொடரில் களமிறங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பு பாடல் ஒன்றை உருவாக்கி உள்ளதாகவும், அப்பாடலை இன்று வெளியிட உள்ளதாகவும் அறிவித்துள்ளனர். ‘கொரோனா குமார்’ படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேசன் தயாரிக்க உள்ளார்.
    விஜய் சேதுபதி, டாப்சி, யோகி பாபு, ஜார்ஜ் மரியன், ராதிகா, மதுமிதா, ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் அனபெல் சேதுபதி படத்தின் விமர்சனம்.
    இந்தியா சுதந்திரமடைவதற்கு முன்பாகக் கட்டப்பட்ட ஒரு பெரிய அரண்மனை. அந்த அரண்மனையில் ஏகப்பட்ட பேய்கள் வசிக்கின்றன. அங்கு பௌர்ணமி தினத்தில் யார் தங்கினாலும் இறந்து, அவர்களும் ஆவியாகிவிடுகிறார்கள். அந்த அரண்மனையில் கதாநாயகி டாப்சி தனது குடும்பத்தினருடன் வந்து தங்குகிறார். 

    அதன்பின் வரும் பௌர்ணமி தினத்தில் டாப்சிக்கு என்ன ஆனது? அரண்மனையில் வசிக்கும் பேய்கள் ஏன் வெளியேற முடியவில்லை, அரண்மனையின் பின்னால் உள்ள மர்மம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

    விமர்சனம்

    நாயகனாக நடித்திருக்கும் விஜய் சேதுபதி, 1940களின் பின்னணியில் வரும் காட்சிகள் வருகிறார். படத்தில் குறைவான காட்சிகள்தான் என்றாலுமே கூட நடிப்புக்காக எந்த ஒரு மெனக்கெடலும் அவர் எடுத்தது போல் தெரியவில்லை. படத்தின் முழுக் கதையுமே டாப்சியை சுற்றியே நகர்கிறது. எனினும் அவரது நடிப்புக்கு தீனி போடும் அளவிற்கு எந்த காட்சியும் இல்லாதது வருத்தம். 

    ராதிகா, ராஜேந்திர பிரசாத், சேத்தன், தேவதர்ஷினி என நல்ல நடிகர்கள் இருந்தாலும் அதிகம் ஜொலிக்கவில்லை. வழக்கமான வில்லனாக வந்து சென்றிருக்கிறார் ஜெகபதி பாபு. யோகி பாபுவின் காமெடி ஆங்காங்கே கைக்கொடுத்து இருக்கிறது.

    விமர்சனம்

    பேயையும் நகைச்சுவையையும் கலந்து வெளியான பல திரைப்படங்கள் பாணியில் இப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் தீபக் சுந்தர்ராஜன். அரண்மனை, அதற்குள் நடக்கும் மர்ம மரணங்கள், பேய்களிடம் சிக்கிக்கொள்ளும் திருடர்கள் என சுவாரஸ்யமாக ஆரம்பிக்கும் திரைக்கதை, போக போக அந்த சுவாரஸ்யம் இல்லாமல் செல்கிறது. கதாபாத்திரங்களை கையாளத் தெரியாமல் விட்டிருக்கிறார் இயக்குனர் தீபக் சுந்தர்ராஜன்.

    கிருஷ்ண கிஷோர் இசையில் பாடல்கள் ஓகே ரகம். பின்னணியை ஓரளவிற்கு கவனிக்க வைத்திருக்கிறார். பிரம்மாண்ட அரண்மனையை கண்களுக்கு விருந்தாக்கி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் கௌதம். இவரின் உழைப்பு படத்திற்கு பலம்.

    மொத்தத்தில் ‘அனபெல் சேதுபதி’ ஜொலிக்கவில்லை.
    லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரன் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்ட திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’.
    மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘பொன்னியின் செல்வன்’. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. இப்படம் 2 பாகங்களாக உருவாகி வருகிறது.

    கொரோனா ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரி, ஐதராபாத், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இறுதியாக இதன் படப்பிடிப்பு பொள்ளியில் நடைபெற்று வந்தது. இதன் படத்தில் நடித்த நடிகர்களும் சமீபத்தில் தங்களுடைய நடிப்பை முடித்து விட்டதாக சமூக வலைத்தளத்தில் அறிவித்து வந்தனர். 

    பொன்னியின் செல்வன்
    பொன்னியின் செல்வன்படத்தின் புதிய போஸ்டர்

    இந்நிலையில், முதல் பாகத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து விட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் புதிய போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இப்படம் 2022 ஆம் ஆண்டு வெளியாக இருக்கிறது.
    நெல்சன் இயக்கத்தில் உருவாகி உள்ள டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயன், யோகிபாபு, வினய், பிரியங்கா மோகன் ஆகியோர் நடித்துள்ளனர்.
    சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் டாக்டர். கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இந்த படத்தை இயக்கி உள்ளார். தெலுங்கில் கேங்ஸ்டர் படத்தில் நடித்து பிரபலமான பிரியங்கா மோகன் இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். மேலும் யோகிபாபு, வினய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள, இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில தினங்களுக்கு முன்பு தியேட்டரில் வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்தனர்.

    சிவகார்த்திகேயன்

    இந்நிலையில், இப்படம் அக்டோபர் 9ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்கள்.
    ×