என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் பா.இரஞ்சித், அவ்வப்போது பட தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
    இயக்குனர் பா.இரஞ்சித் படம் இயக்குவது மட்டுமல்லாது தயாரிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இவர் தயாரிப்பில் வெளியான பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு ஆகிய படங்கள் பாராட்டுகளை பெற்றன. 

    அந்த வகையில் இவர் தயாரிப்பில் உருவாகும் புதிய படம் ‘ரைட்டர்’. சமுத்திரக்கனி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை பிராங்கிளின் ஜேக்கப் என்பவர் இயக்கி உள்ளார். இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். பிரதீப் கலைராஜா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு மணிகண்டன் சிவக்குமார் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

    ரைட்டர் படத்தின் போஸ்டர்
    ரைட்டர் படத்தின் போஸ்டர்

    இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ‘ரைட்டர்’ படத்தின் முக்கிய அப்டேட்டை இயக்குனர் பா.இரஞ்சித் வெளியிட்டுள்ளார். அதன்படி இப்படத்திற்கு சென்சாரில் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ளார். 
    மோகன்லாலின் தீவிர ரசிகையான ருக்மிணி, அழுதபடி பேசிய வீடியோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
    மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் மோகன்லால். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. இந்நிலையில், நடிகர் மோகன்லால் தனது ரசிகை ஒருவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

    கேரளாவின் புன்குன்னம் என்கிற பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் இருப்பவர் ருக்மிணி(வயது 80). மோகன்லாலின் தீவிர ரசிகையான இவர், அழுதபடி பேசிய வீடியோ சமீபத்தில் வைரலானது. அதில், மோகன்லால் பெயரை வைத்து தன்னைப் பலரும் கிண்டல் செய்வதாகவும், அவரை சந்திக்க முடியவில்லை என்பது குறித்தும் அவர் பேசி இருந்தார்.

    ருக்மிணியுடன் நடிகர் மோகன்லால் வீடியோ காலில் பேசியபோது எடுத்த புகைப்படம்
    ருக்மிணியுடன் நடிகர் மோகன்லால் வீடியோ காலில் பேசியபோது எடுத்த புகைப்படம்

    இதுகுறித்து அறிந்த நடிகர் மோகன்லால், ருக்மிணியை வீடியோ காலில் அழைத்துப் பேசி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அப்போது உங்களை சந்திக்க வேண்டும் என ஆசையுடன் கேட்ட ருக்மிணியிடம், கொரோனா அச்சுறுத்தல் முடிந்த பிறகு, நேரில் வந்து சந்திப்பதாக நடிகர் மோகன்லால் உறுதி அளித்துள்ளார். 
    அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள ‘சாணிக்காயிதம்’ படத்தில் கீர்த்தி சுரேஷின் நடிப்பை பார்த்து படக்குழுவினர்களே வியப்படைந்ததாக கூறப்படுகிறது.
    தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இதுவரை பிரபல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துவந்த கீர்த்தி சுரேஷ், தற்போது தொடர்ச்சியாக தங்கை வேடங்களில் நடித்து வருகிறார். அதன்படி சிவா இயக்கத்தில் உருவாகும் ‘அண்ணாத்த’ படத்தில் ரஜினியின் தங்கையாக நடித்துள்ள அவர், அடுத்ததாக வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘போலா ஷங்கர்’ சிரஞ்சீவியின் தங்கையாகவும் நடித்து வருகிறார்.

    இதில் இன்னொரு ஆச்சரியமான தகவல் என்னவென்றால், இயக்குனர் செல்வராகவன் நடிகராக அறிமுகமாகும் ‘சாணிக்காயிதம்’ திரைப்படத்திலும், நடிகை கீர்த்தி சுரேஷ், செல்வராகவனின் தங்கையாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    சாணிக்காயிதம் படத்தின் போஸ்டர்
    சாணிக்காயிதம் படத்தின் போஸ்டர்

    மேலும் இந்த படத்தில் 4 நிமிடம் சென்டிமெண்ட் காட்சி ஒன்று இருப்பதாகவும், அந்தக் காட்சியில் நடிகை கீர்த்தி சுரேஷ் கிளிசரின் இல்லாமலேயே கண்களில் கண்ணீரை வரவழைத்து நடித்ததாகவும், அதைப் பார்த்து படக்குழுவினர்களே வியப்படைந்ததாகவும் கூறப்படுகிறது.
    தமிழ் சினிமாவில் ரீ- என்ட்ரி கொடுக்க தயாராகி வரும் நடிகர் வடிவேலு, உதயநிதி ஸ்டாலினை திடீரென்று நேரில் சந்தித்து பேசி இருக்கிறார்.
    நகைச்சுவை நடிகர் வடிவேலு இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க மறுத்ததால் புதிய படங்களில் அவரை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது. இதனால் கடந்த சில வருடங்களாக அவர் நடிக்கவில்லை. தற்போது தடை நீக்கப்பட்டு உள்ளதால், மீண்டும் படங்களில் நடிக்க தயாராகி வருகிறார். 

    வடிவேலு

    வடிவேலு நடிக்க உள்ள புதிய படத்தை சுராஜ் இயக்க உள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த புதிய படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க இருக்கிறார். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் வடிவேலு, நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினை இன்று நட்பு ரீதியாக சந்தித்து பேசியிருக்கிறார். இதன் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    பார்டர் படத்தின் வெளியீட்டுக்காக காத்திருக்கும் நடிகர் அருண் விஜய், ஒளிப்பதிவாளர் தந்தை மரணத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறியிருக்கிறார்.
    அருண் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பார்டர்’. இப்படத்தில் கதாநாயகிகளாக ரெஜினா மற்றும் ஸ்டெபி படேல் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அறிவழகன் இயக்கி இருக்கும் இப்படத்திற்கு ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    இந்நிலையில், ஒளிப்பதிவாளர் ராஜசேகரின் தந்தை மா.பாலசுப்ரமணியம் மாரடைப்பால் 18.09.2021 அன்று காலமானார். இந்த துக்க நிகழ்வுக்கு வருகை தந்து இறுதிசடங்கு முடியும் வரை ஒளிப்பதிவாளர் ராஜசேகருடன் இருந்து நடிகர் அருண் விஜய் ஆறுதல் கூறி இருக்கிறார். இதனை ஒளிப்பதிவாளர் ராஜசேகர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்து இருக்கிறார்.

    அருண் விஜய்
    அருண் விஜய் - ஒளிப்பதிவாளர் ராஜசேகர்

    சமீபத்தில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் வரும் நவம்பர் மாதம் 19 ஆம் தேதி வெளியாகிறது.
    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், நடிகர் விஜய் சேதுபதியும் நேரில் சந்தித்து பேசி இருக்கிறார்கள்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் சமீபத்தில், ’லாபம்’, ‘துக்ளக் தர்பார்’, ‘அனபெல் சேதுபதி’ உள்ளிட்டப் படங்கள் வெளியாகின. மேலும், மாஸ்டர் செப் நிகழ்ச்சியிலும் விஜய் சேதுபதி பங்கேற்று வருகிறார்.

    இந்த நிலையில், நடிகர் விஜய் சேதுபதியும், கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தும் நேரில் சந்தித்து உரையாடியுள்ளனர். இந்த புகைப்படங்களை கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்து, “உங்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன் அண்ணா’ என்று உற்சாகமுடன் பதிவு செய்து இருக்கிறார்.

    விஜய் சேதுபதி - ஸ்ரீசாந்த்
    விஜய் சேதுபதி - ஸ்ரீசாந்த்

    விஜய் சேதுபதியுடன் ஸ்ரீசாந்த் இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    நடிகை மேக்னா ராஜ், பிக் பாஸ் பிரபலத்தை இரண்டாவதாக திருமணம் செய்துக் கொள்ளவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
    பிரபல கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா தனது கர்ப்பிணி மனைவி மேக்னா ராஜ் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களை தவிக்க விட்டு கடந்த ஆண்டு ஜூன் 7-ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது மறைவு செய்தி திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    சிரஞ்சீவி சார்ஜா மறைவிற்குப் பிறகு, சில தினங்களில் மேக்னாவுக்கு ஆரோக்கியமான ஆண் குழந்தை பிறந்தது. ஜூனியர் சிரஞ்சீவிக்கு ராயன் ராஜ் சர்ஜா எனப் பெயரிடப்பட்டது. குழந்தைக்கு பெயர் சூட்டு விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

    மேக்னா ராஜ்

    இந்நிலையில் மேக்னா இரண்டாவது திருமணம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும், பிக்பாஸ் சீசன் 4 கன்னட டைட்டில் வின்னர் பிரதமை தனது வருங்கால கணவராக தேர்ந்தெடுத்ததாகவும் செய்திகள் பரவி வந்தது. ஆனால், பிக்பாஸ் போட்டியாளர் பிரதம் இதற்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறார்.
    கதையின் நாயகனாக பல படங்களில் நடித்து வரும் யோகிபாபுவின் புதிய திரைப்படம் ஒன்று சர்ச்சையில் சிக்கியுள்ளது.
    யோகிபாபு நடிப்பில் உருவாகி உள்ள புதிய படம் ‘பேய் மாமா’. சக்தி சிதம்பரம் இயக்கி உள்ள இப்படத்தில் மாளவிகா மேனன், மனோபாலா, மொட்ட ராஜேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர், இமான் அண்ணாச்சி, சிங்கம்புலி, கோவை சரளா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விக்னேஷ் ஏலப்பன் இப்படத்தை தயாரித்துள்ளார்.

    இப்படம் வருகிற செப்டம்பர் 24-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக இருக்கிறது. இதற்கான போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், இப்படத்தின் போஸ்டர் பாலிவுட் திரைப்படம் பூட் (BHOOT) பட போஸ்டரை அப்படியே காப்பி அடித்திருப்பதாக நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்கள்.

    யோகி பாபு பட போஸ்டர்
    போஸ்டர்கள்

    மேலும் இரண்டும் போஸ்டர்களையும் ஒப்பிட்டு, யோகிபாபுவின் தலையை மட்டுமே மாற்றியிருப்பதாக கருத்து தெரிவித்து வருகிறார்கள். 
    ஆபாச வீடியோ வழக்கில் கைது செய்யப்பட்ட ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவின் மாஸ்டர் பிளான் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
    ஆபாச படம் எடுத்து அதை செல்போன் செயலியில் பதிவேற்றம் செய்து பணம் சம்பாதித்ததாக கடந்த ஜூலையில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரது நிறுவனத்தின் தொழில்நுட்ப பிரிவின் அதிகாரியும் கைது செய்யப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டு இருந்த குந்த்ராவுக்கு 2 மாதம் கழித்து நேற்று மும்பை ஐகோர்ட் ஜாமீன் வழங்கியது.

    ஆபாச வழக்கில் தனது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு ஜாமீன் வழங்கப்பட்ட சில நிமிடங்களில், நடிகை ஷில்பா ஷெட்டி தனது சமூக வலைத்தளத்தில் ஒரு மோசமான புயலுக்குப் பிறகு அழகான விஷயங்கள் நடக்கலாம் என்பதை நிரூபிக்க வானவில் உள்ளன என கூறி இருந்தார்.

    ஷில்பா ஷெட்டியின் கணவர்
    ஷில்பா ஷெட்டியின் கணவர்

    தற்போது வழக்கு விசாரணையில் புதிய திருப்பமாக குந்த்ராவின் செல்போன், லேப்டாப் மற்றும் ஹார்ட் டிரைவ் ஆகியவற்றிலிருந்து சுமார் 119 ஆபாச படங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக மும்பை போலீசார் தெரிவித்து உள்ளனர். மேலும், இந்த வீடியோக்களை ரூ.9 கோடிகளுக்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, அடுத்ததாக பிரபல இயக்குனர் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
    சூர்யா நடிப்பில் தற்போது எதற்கும் துணிந்தவன், ஜெய் பீம் படங்கள் உருவாகியுள்ளது. இப்படங்களை அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்க இருக்கிறார் சூர்யா. இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வாடிவாசல் படத்தை தள்ளி வைத்து சிவா இயக்கும் படத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    சூர்யா
    சூர்யா - சிவா

    இயக்குனர் சிவா, தமிழில் கார்த்தியை வைத்து சிறுத்தை படத்தை இயக்கி அறிமுகமானார். தற்போது ரஜினியை வைத்து அண்ணாத்த படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் நடந்து வருகிறது. இப்படம் வெளியான உடன் சூர்யா பட வேலைகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் அமலாபால், கையில் மது பாட்டிலுடன் நடனம் ஆடும் வீடியோ வைரலாகி வருகிறது.
    தமிழில் மைனா, வேட்டை, தெய்வத்திருமகள், தலைவா, வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தவர் அமலாபால். தெலுங்கு, மலையாளம், இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்களை பகிர்ந்து வருவார்.

    இந்நிலையில், தற்போது வீடியோ ஒன்றை பதிவு செய்து இருக்கிறார். அதில் கையில் மது பாட்டிலுடன் நடனம் ஆடுகிறார். அமலாபாலின் சகோதரருக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது. இதற்கான பார்ட்டியில் எடுக்கப்பட்ட வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது.


    திருமலை பாலுச்சாமி இயக்கத்தில் சரத்குமார், அஷ்வதி, சுஹாசினி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சமரன்’ படத்தின் முன்னோட்டம்.
    இயக்குநர் திருமலை பாலுச்சாமி இயக்கத்தில், ரோஷ் குமார் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘சமரன்’. இப்படத்தில் சரத்குமார் நாயகனாக நடிக்க, அஷ்வதி நாயகியாக நடிக்கிறார். நந்தா, சுஹாசினி, சிங்கம் புலி, சித்திக், கஞ்சா கருப்பு ஆகியோரும்  முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். வேத்சங்கர் சுகவனம் இசையமைக்கிறார். 

    தொரட்டி படத்திற்கு ஒளிப்பதிவு செய்து புகழ்பெற்ற குமார் ஶ்ரீதர் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை செய்கிறார். சண்டை பயிற்சி விக்கி வினோத்குமார் செய்ய, கலை இயக்கத்தை ஶ்ரீமன் பாலாஜி கவனிக்கின்றனர்.

    சமரன் படக்குழு
    சமரன் படக்குழு

    படம் குறித்து தயாரிப்பாளர் ரோஷ் குமார் கூறியதாவது: “
    இந்த கதை முழுக்க, முழுக்க குடும்பங்கள் கொண்டாடும் படமாகவும், இந்த காலகட்டத்திற்கு தேவையான கருத்துகளை உணர்த்தும் விதமாகவும் அமைந்துள்ளது. இந்த கதையை இயக்குநர் எழுதி முடித்த பின், இந்த மண் சார்ந்த கதாபாத்திரத்திற்கு, சரியான நபராக எனக்கு தோன்றியது சரத்குமார் தான். இயக்குநருக்கும் சரத்குமார் தான் மிகப்பொருத்தமாக இருப்பார் என்றார். நடிகர் சரத்குமார் இந்த கதையை கேட்டவுடன், ஆர்வமாக இது தனக்கான கதையென்று உணர்ந்து உடனடியாக நடிக்க ஒப்புக்கொண்டார்”. இவ்வாறு அவர் கூறினார். 
    ×