என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    மத்திய அரசு பற்றி விஜய் விமர்சனமே செய்வதில்லை... பயந்து போய் விட்டார் என்று பிரபல தயாரிப்பாளர் பட விழாவில் பேசி இருக்கிறார்.
    ருத்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ₹2000 திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. புதுமுக நடிகர்களின் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் 2016ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட உயர் மதிப்பு, பண மதிப்பிழப்பு நடவடிக்கையினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பேசப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தயாரிப்பாளர் கே.ராஜன் கலந்து கொண்டார்.

    இதில் அவர் பேசும் போது, "மணல் கொள்ளை, ஆணவக் கொலையை எதிர்த்து படம் எடுத்தால் சென்சார் பிரச்சனை வருவது இயல்பானதுதான். 

    ராஜன்
    தயாரிப்பாளர் ராஜன்

    மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி தொடர்பாக சிறிய விமர்சனத்தை முன்வைத்ததால் நடிகர் விஜய்க்கு 12 மணி நேரம் மன உளைச்சல் கொடுத்து விட்டார்கள். நெய்வேலியில் படப்பிடிப்பில் இருந்தவரை சென்னை அழைத்து வந்து விசாரித்தார்கள். அவர்களுடைய காரில் அழைத்துவரும்போது விஜயை என்ன என்ன செய்தார்களோ, அந்த படத்திற்கு பிறகு மத்திய அரசு பற்றி விஜய் விமர்சனமே செய்வதில்லை... விஜய் பயந்து போய் விட்டார். ஏனென்றால் அவர் கோடீசுவரர். பணம் அதிகம் சேர்த்துள்ளவர்களுக்கு ஆண்மை போய்விடுகிறது. கொடுமையை எதிர்க்கும் தன்மை போய்விடும். எங்களைப் போன்ற ஏழைகள்தான் எதிர்த்து நிற்போம் என்றார்.
    வினீத் வரப்பிரசாத் இயக்கத்தில் உருவாகி உள்ள லிப்ட் படத்தில் கவினுக்கு ஜோடியாக பிகில் பட நடிகை அம்ரிதா நடித்துள்ளார்.
    ‘சரவணன் மீனாட்சி’ சீரியலில் நடித்து பிரபலமான கவின், கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ‘நட்புன்னா என்னானு தெரியுமா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்து கொண்டதன் மூலம் ஏராளமான ரசிகர்களைப் பெற்ற கவின், தற்போது வினீத் வரப்பிரசாத் இயக்கியுள்ள ‘லிப்ட்’ படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக பிகில் பட நடிகை அம்ரிதா நடித்துள்ளார். 

    ஈகா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்தை கடந்த ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டு இருந்தனர். அந்த சமயத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவியதால், இப்படத்தை திட்டமிட்டபடி வெளியிட முடியாமல் போனது. இதையடுத்து லிப்ட் படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட முடிவு செய்த படக்குழு, இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. 

    லிப்ட் படத்தின் போஸ்டர்
    லிப்ட் படத்தின் போஸ்டர்

    இந்நிலையில், லிப்ட் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இப்படம் வருகிற அக்டோபர் 1-ந் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளது. மேலும் லிப்ட் படத்தின் டிரெய்லர் நாளை வெளியிடப்படும் எனவும் அறிவித்துள்ளனர். 
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி, அடுத்ததாக இந்தியில் தயாராகும் வெப் தொடரில் நடித்து வருகிறார்.
    கோலிவுட்டில் பிசியான நடிகராக வலம்வரும் விஜய் சேதுபதி, தற்போது இந்தியில் தயாராகும் வெப் தொடரில் நடித்து வருகிறார். இந்த வெப் தொடரை பிரபல பாலிவுட் இயக்குனர்களான ராஜ் மற்றும் டீகே இணைந்து இயக்குகின்றனர். இந்த வெப் தொடரில் விஜய் சேதுபதியுடன் பாலிவுட் நடிகர் ஷாகித் கபூரும் இணைந்து நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த வெப் தொடரில் ஷாகித் கபூருக்கு ஜோடியாக நடிக்க நடிகை ராஷி கண்ணா நடிக்கிறார். 

    விஜய் சேதுபதி, ரெஜினா
    விஜய் சேதுபதி, ரெஜினா

    அதேபோல் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வந்தது. இந்நிலையில், அவருக்கு ஜோடியாக நடிக்க பிரபல தமிழ் நடிகை ரெஜினா கசன்ட்ரா நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். நடிகை ரெஜினா நடிக்கும் முதல் வெப் தொடர் இதுவாகும். நடிகர் விஜய் சேதுபதியும், ரெஜினாவும் ஏற்கனவே ‘முகிழ்’ என்கிற தமிழ் படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    பிரபல தெலுங்கு நடிகர்களான ராணாவும், வெங்கடேஷும் முதன்முறையாக இணைந்து நடிக்க உள்ள வெப் தொடரை கரண் அன்ஷுமான் இயக்க உள்ளார்.
    ராணா டகுபதி 2010-ல் லீடர் என்கிற தெலுங்குப் படம் மூலமாகத் திரையுலகில் அறிமுகமானார். பாகுபலி படம் தான் இவரை புகழின் உச்சத்துக்குக் கொண்டு நிறுத்தியது. ஆரம்பம், இஞ்சி இடுப்பழகி, பெங்களூர் நாட்கள், எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்துள்ள இவர், அடுத்ததாக வெப் தொடர் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். 

    இந்த வெப் தொடரில் ராணாவுடன், அவரது மாமாவும், பிரபல தெலுங்கு நடிகருமான வெங்கடேசும் இணைந்து நடிக்க உள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து நடிப்பது இதுவே முதன்முறை. இந்த வெப் தொடருக்கு ‘ராணா நாயுடு’ என பெயரிடப்பட்டு உள்ளது. இந்த வெப் தொடர், அமெரிக்காவில் மிகவும் பிரபலமான “ரே டொனோவன்” என்கிற கிரைம் தொடரின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும். 

    ராணா, வெங்கடேஷ்
    ராணா, வெங்கடேஷ்

    இந்த வெப்தொடரை கரண் அன்ஷுமான் இயக்க உள்ளார். இந்த தொடர் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திற்காக தயாராகிறது. தற்போது இத்தொடரில் நடிக்கும் இதர நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் இத்தொடரின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. 
    பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    நடிகை மீரா மிதுன், பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசி சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இது தொடர்பாக அவர் மீது பல்வேறு அமைப்புகள் காவல்துறையில் புகார் அளித்தனர். 

    இந்த புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்பு சட்டம், கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    மீரா மிதுன்

    இந்நிலையில் நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.
    செந்தில்குமார் இயக்கத்தில் அங்காடித்தெரு மகேஷ், மேக்னா நடிப்பில் உருவாகி இருக்கும் வீராபுரம் படத்தின் முன்னோட்டம்.
    சுந்தர்ராஜ் பொன்னுசாமி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் வீராபுரம் 220. இப்படத்தை செந்தில்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தின் நாயகனாக அங்காடித்தெரு மகேஷ் நடிக்க, அவருக்கு ஜோடியாக மேக்னா நடித்துள்ளார். சதீஷ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

    மகேஷ், மேக்னா
    மகேஷ், மேக்னா

    இந்த படத்திற்கு இரட்டையர்களான ரித்தேஷ்-ஸ்ரீதர் என்கிற அறிமுக இசையமைப்பாளர்கள் இசையமைத்துள்ளனர். இப்படத்தின் ஒளிப்பதிவை பிரேம்குமார் கவனிக்கிறார். மேலும் கணேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார். மணல் கடத்தல் கும்பலுக்கு சவுக்கடி கொடுக்கும் வகையில் இப்படம் தயாராகி இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.
    பிரபல நடிகை உயிரிழந்த சம்பவம் அவரின் ரசிகர்கள் மற்றும் திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    மராத்தி மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் ஈஸ்வரி தேஷ்பாண்டே (வயது 25). இவர் கடந்த 15-ம் தேதி தனது காதலன் சுப்பம் டெஜ் (வயது 28) உடன் கோவாவுக்கு காரில் சுற்றுலா சென்றிருந்தார். 

    அங்கு சில நாட்கள் தங்கிவிட்டு, நேற்று முன்தினம் இருவரும் மும்பை திரும்பியுள்ளனர். கோவாவின் அர்போரா கிராமத்திற்கு அருகில் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த கார், அருகில் உள்ள குட்டையில் மூழ்கியது.

    ஈஸ்வரி தேஷ்பாண்டே
    ஈஸ்வரி தேஷ்பாண்டே

    காரில் இருந்து வெளியே வரமுடியாததால் இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். ஈஸ்வரி தேஷ்பாண்டேவுக்கும் அவரது காதலனுக்கும் அடுத்த மாதம் நிச்சயதார்த்தம் நடக்க இருந்ததாம். இந்த நிலையில் இருவரும் உயிரிழந்த சம்பவம் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம்வரும் அஜித்துக்கும், விஜய்க்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
    அஜித் - எச்.வினோத் கூட்டணியில் உருவாகி உள்ள ‘வலிமை’ படம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதேபோல் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படமும் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 

    பீஸ்ட் படத்தை நெல்சன் இயக்குகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வருகிற நவம்பர் மாதத்திற்குள் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டுள்ளார்களாம். இதையடுத்து பின்னணி பணிகளை வேகமாக முடித்து, பொங்கலுக்கு படத்தை திரைக்கு கொண்டு வர அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    பீஸ்ட், வலிமை படங்களின் போஸ்டர்
    பீஸ்ட், வலிமை படங்களின் போஸ்டர்

    இதன்மூலம், விஜய் - அஜித் படங்கள் மீண்டும் நேரடியாக மோதும் சூழல் உருவாகி உள்ளது. இதற்கு முன்னர் அஜித்தின் வீரம் மற்றும் விஜய்யின் ஜில்லா ஆகிய படங்கள் கடந்த 2014-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி ஒரே நாளில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.  
    கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமான ஓவியா, அடுத்ததாக யோகிபாபு உடன் ஜோடி சேர உள்ளார்.
    தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. தற்போது இவர் இல்லாத படங்களே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த கோலமாவு கோகிலா, கூர்கா, மண்டேலா போன்ற படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில், நடிகர் யோகிபாபு அடுத்ததாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, அப்படத்தை அன்கா மீடியா நிறுவனம் தயாரிக்க உள்ளதாம். 

    யோகிபாபு, ஓவியா
    யோகிபாபு, ஓவியா

    இப்படத்தில் யோகிபாபுவுக்கு ஜோடியாக நடிகை ஓவியா நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இப்படத்தின் பூஜை வருகிற செப்டம்பர் 24-ந் தேதி நடைபெற உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. நடிகை ஓவியா, யோகிபாபுவுக்கு ஜோடியாக நடிப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    நடிகர் அஜித்தின் 60-வது படம் வலிமை. எச்.வினோத் இயக்கி உள்ள இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, ‘குக் வித் கோமாளி’ புகழ், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

    போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகி உள்ள இதற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வலிமை படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

    போனி கபூரின் டுவிட்டர் பதிவு
    போனி கபூரின் டுவிட்டர் பதிவு

    இந்நிலையில், வலிமை படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி வலிமை படம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையன்று திரையரங்குகளில் வெளியாகும் என தயாரிப்பாளர் போனிகபூர் டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். 
    நடிகை மியா ஜார்ஜ், தற்போது விக்ரம் நடிப்பில் உருவாகும் ‘கோப்ரா’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
    மலையாள நடிகையான மியா ஜார்ஜ், அமரகாவியம் படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். இதையடுத்து இன்று நேற்று நாளை, வெற்றிவேல், ஒரு நாள் கூத்து, எமன் போன்ற படங்களில் நடித்து பிரபலமான இவர், தற்போது விக்ரம் நடிப்பில் உருவாகும் கோப்ரா படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

    நடிகை மியா ஜார்ஜ், கடந்த ஆண்டு கேரளாவை சேர்ந்த தொழில் அதிபர் அஸ்வின் பிலிப் என்பவரை திருமண செய்து கொண்டார். கடந்த ஜூலை மாதம் இந்த தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

    தந்தை ஜார்ஜ் ஜோசப் உடன் மியா ஜார்ஜ்
    தந்தை ஜார்ஜ் ஜோசப் உடன் மியா ஜார்ஜ்

    இந்நிலையில், நடிகை மியா ஜார்ஜின் தந்தை ஜார்ஜ் ஜோசப் (75) நேற்று மரணமடைந்தார். தந்தையை இழந்து வாடும் நடிகை மியா ஜார்ஜுக்கு, ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளம் வாயிலாக ஆறுதல் கூறி வருகின்றனர்.
    பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் இலியானா, அடுத்ததாக பிரபல தெலுங்கு நடிகருக்கு ஜோடியாக நடிக்க உள்ளாராம்.
    தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாகார்ஜுனா. இவர் தற்போது கோஸ்ட் என்கிற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். பிரவீன் சட்டாரு இயக்கும் இப்படத்தில் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக நடிக்க காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். ஆனால் தற்போது ஹீரோயினை மாற்ற படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இலியானா, நாகார்ஜுனா
    இலியானா, நாகார்ஜுனா

    ஏனெனில் நடிகை காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதால், அவருக்கு பதிலாக பிரபல பாலிவுட் நடிகை இலியானாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது. நடிகை இலியானா, நடிகர் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக நடிப்பது இதுவே முதன்முறை. நடிகை சமந்தாவின் கணவரும், நடிகருமான நாகசைதன்யாவின் தந்தை தான் நாகார்ஜுனா என்பது குறிப்பிடத்தக்கது.
    ×