என் மலர்
சினிமா செய்திகள்
- பழம்பெரும் நடிகர் விக்ரம் கோகலே மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
- இவர் இறந்துவிட்டதாக இணையத்தில் தகவல்கள் பரவி வந்தன.
மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த பழம்பெரும் நடிகர் விக்ரம் கோகலே மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இவர் கமல்ஹாசனின் ஹே ராம் படத்தில் நடித்துள்ளார். 77 வயதான விக்ரம் கோகலே நவம்பர் 5ஆம் தேதி மராட்டிய மாநிலம் புனேவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர் மருத்துவ சிகிச்சையில் இருந்த போதிலும் விக்ரமின் இருதயம், சிறுநீரகம் போன்ற உறுப்புகளின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. நேற்று மாலை கோமா நிலைக்கு சென்ற விக்ரம் கோகலே, வென்டிலேட்டர் சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளார்.

விக்ரம் கோகலே
இந்நிலையில், விக்ரம் கோகலே காலமானதாக நேற்று இரவு செய்திகள் பரவிய நிலையில், இதை அவரது மனைவி விருஷாலி மறுத்துள்ளார். அவரது உடல் நிலை குறித்த தகவல்களை மருத்துவமனை இன்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கும் என்றார். விக்ரம் கோகலே பாரம்பரியமான சினிமா குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது சந்திரகாந்த் கோகலேவும் மராத்தி நாடக நடிகராவார். இவரது கொள்ளுப்பாட்டி துர்காபாய் காமத் இந்தியாவின் முதல் பெண் சினிமா நடிகை ஆவார். இவர் உடல் நலம் தேறி வீடு திரும்ப வேண்டும் என திரை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பிரார்த்தனை செய்திகளை பதிவிட்டுவருகின்றனர்.
- இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ள திரைப்படம் 'கட்டா குஸ்தி'.
- இப்படம் வருகிற டிசம்பர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ள திரைப்படம் 'கட்டா குஸ்தி'. இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடிக்கிறார். இந்த திரைப்படம் தமிழ்-தெலுங்கு என இருமொழிகளில் வெளியாக உள்ளது.

கட்டா குஸ்தி
'கட்டா குஸ்தி' படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஒரு மாதத்திற்கு முன்பே முடிவடைந்த நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. 'கட்டா குஸ்தி' திரைப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

கட்டா குஸ்தி
இந்நிலையில், இந்த படத்தின் முதல் பாடலான 'சல் சக்கா' பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த பாடலை இசையமைப்பாளர் தமன் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இந்த பாடலை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். 'கட்டா குஸ்தி' திரைப்படம் வருகிற டிசம்பர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- நடிகர் கவுதம் கார்த்திக்கும் மஞ்சிமா மோகனும் சமீபத்தில் தங்கள் காதலை உறுதி செய்தனர்.
- இவர்களுக்கு வருகிற நவம்பர் 28-ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது.
நடிகர் கார்த்திக் மகனான கவுதம் கார்த்திக்கும் மஞ்சிமா மோகனும் காதலித்து வந்த நிலையில் சமீபத்தில் இருவரும் தங்கள் காதலை சமூக வலைதளம் மூலம் உறுதி செய்தனர். இதனிடையே இவர்கள் இருவருக்கும் வருகிற நவம்பர் 28-ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் பரவி வந்தது.

மஞ்சிமா மோகன் - கவுதம் கார்த்திக்
இந்நிலையில், கவுதம் கார்த்திக்கும் மஞ்சிமா மோகனும் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது கவுதம் கார்த்திக் பேசியதாவது, "வருகிற நவம்பர் 28-ஆம் தேதி எங்கள் இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளது. இந்த திருமணம் குடும்பத்தினர் மட்டும் பங்கேற்கும்படியாக நடக்கிறது. திருமணத்துக்கு உங்களின் அன்பும் ஆசியும் தேவை.

மஞ்சிமா மோகன் - கவுதம் கார்த்திக்
நான்தான் முதலில் மஞ்சிமாவிடம் புரோபோஸ் செய்தேன். அவர் இரண்டு நாள் நேரம் எடுத்துக்கொண்டு அதன்பின் தான் எனது காதலை ஏற்றுக்கொண்டார். அந்த இரண்டு நாட்கள் எனக்கு மிகவும் பயமாக இருந்தது. இப்போது எங்கள் காதல் திருமண வாழ்க்கையில் இணையவுள்ளது.

மஞ்சிமா மோகன் - கவுதம் கார்த்திக்
மஞ்சிமா அழகானவர் மட்டுமல்ல, வலிமையான பெண்ணும்கூட. நான் எப்போது பலவீனமாக இருந்தாலும், என்னை அதிலிருந்து தூக்கிவிடுவது அவர்தான். தேவராட்டம் படத்தில் நடித்தபோது நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். கிட்டத்தட்ட ஒருவருடம் கழித்தே நாங்கள் காதலித்தோம்" என்று பேசினார்.
- விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
- இந்த படத்திற்கு தற்போது புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தீபாவளி தினத்தன்று 'வாரிசு' திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு, சங்கராந்திக்கு திரைப்படம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.

வாரிசு
இதனிடையே ஐதராபாத்தில் நடந்த தெலுங்கு தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் பொங்கல் பண்டிகையில் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து அதிக தியேட்டர்களை ஒதுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த முடிவால் விஜய்யின் வாரிசு திரைப்படம் தெலுங்கில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது. இந்த முடிவுக்கு தமிழ் சினிமாவில் இருந்து பலரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர்.

வாரிசு
தற்போது சென்னை அருகில் உள்ள தனியார் பொழுதுபோக்கு படப்பிடிப்பு தளத்தில் நடந்து வரும் வாரிசு படப்பிடிப்பின் போது உரிய அனுமதியின்றி யானைகளை அழைத்து வந்து பயன்படுத்தியதாக புதிய குற்றச்சாட்டு எழுந்தது. அதன்பின்னர் போலீசார் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று இதுகுறித்து விசாரணை நடத்தினர். அப்போது யானையை வாகனத்தில் அழைத்து வர மட்டுமே அனுமதி கடிதத்தை படக்குழு சமர்ப்பித்ததாக தெரிகிறது.

வாரிசு
படப்பிடிப்பில் யானையை பயன்படுத்துவதற்கான அனுமதி கடிதம் எங்களிடம் இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்ததாகவும், ஆனால் அந்த கடிதத்தை அவர்கள் தரவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையே யானையை பூஜைக்கு பயன்படுத்த மட்டுமே அழைத்து வந்ததாக படக்குழு கூறியிருந்தது. இதுதொடர்பாக உரிய ஆவணங்களை விரைவில் சமர்ப்பிப்பதாகவும் படக்குழு தெரிவித்திருந்தனர். இந்த சம்பவம் குறித்து விலங்கு நல ஆர்வலர்கள் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
- நடிகை சமந்தா சில தினங்களாக மையோசைட்டிஸ் என்ற நோயில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
- தற்போது அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் பரவின.
நடிகை சமந்தா சில நாட்களுக்கு முன்பு யசோதா பட வெளியீட்டிற்காக ரசிகர்களுடன் பேசிய வீடியோவில் தனக்கு மயோசிடிஸ் என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக உறுதிப்படுத்தினார். இதற்காக கடந்த 3 மாதங்களாக சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பதாகவும், இதனால் உயிருக்கு ஆபத்து இல்லையென்றாலும் கடுமையான வலி இருப்பதாகவும் விரைவில் நலம் பெற்று திரும்புவேன் என்றும் கண்ணீர் மல்க கூறியிருந்தார்.

சமந்தா
இந்நிலையில் நேற்று சமந்தாவுக்கு நோயின் தாக்குதல் தீவிரமானதால் ஐதராபாத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருப்பதாகவும், அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் பரவியது. இதனால் திரையுலகில் பரபரப்பு தொற்றி கொண்டது. ஊடகங்கள் பலவும் ஐதராபாத்திலுள்ள மருத்துவமனையில் குவிந்தனர்.

சமந்தா
இது தொடர்பாக சமந்தாவின் செய்தி தொடர்பாளர் சார்பில் கூறப்பட்டிருப்பதாவது, சமந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை. வீட்டிலிருந்தே சிகிச்சை எடுத்துக் கொள்கிறார். இப்படி இருக்கையில் இந்த தவறான செய்தி எப்படி பரவியது என்றே தெரியவில்லை. சமந்தா கடந்த 3 வாரங்களாக வழக்கமான பரிசோதனைக்காககூட எந்த மருத்துவமனைக்கும் போகவில்லை என்பதே உண்மை என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
- விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
- இந்த படத்திற்கு தற்போது புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

வாரிசு
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தீபாவளி தினத்தன்று 'வாரிசு' திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு, சங்கராந்திக்கு திரைப்படம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இதனிடையே ஐதராபாத்தில் நடந்த தெலுங்கு தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் பொங்கல் பண்டிகையில் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து அதிக தியேட்டர்களை ஒதுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த முடிவால் விஜய்யின் வாரிசு திரைப்படம் தெலுங்கில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது. இந்த முடிவுக்கு தமிழ் சினிமாவில் இருந்து பலரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர்.

வாரிசு
இந்நிலையில் வாரிசு படத்திற்கு புதிய சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. சென்னை அருகில் உள்ள தனியார் பொழுதுபோக்கு படப்பிடிப்பு தளத்தில் நடந்து வரும் வாரிசு படப்பிடிப்பின் போது உரிய அனுமதியின்றி யானைகளை அழைத்து வந்து பயன்படுத்தியதாக புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதன்பின்னர் போலீசார் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று இதுகுறித்து விசாரணை நடித்தினர். அப்போது யானையை வாகனத்தில் அழைத்து வர மட்டுமே அனுமதி கடிதத்தை படக்குழு சமர்ப்பித்ததாக தெரிகிறது.
படப்பிடிப்பில் யானையை பயன்படுத்தவதற்கான அனுமதி கடிதம் எங்களிடம் இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்ததாகவும், ஆனால் அந்த கடிதத்தை அவர்கள் தரவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையே யானையை பூஜைக்கு பயன்படுத்த மட்டுமே அழைத்து வந்ததாக படக்குழு தற்போது கூறியது. இதுதொடர்பாக உரிய ஆவனங்களை விரைவில் சமர்ப்பிப்பதாகவும் படக்குழு தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விலங்கு நல ஆர்வலர்கள் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உடல்நலக் குறைவு காரணமாக நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
- தற்போது கமல் நலமாக உள்ளதாக மருத்துவ நிர்வாகம் தகவல்.
நடிகர் கமல்ஹாசன் இந்தியன்-2 படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதற்கிடையில் தனியார் டி.வி. தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் பங்கு பெற்று வருகிறார். இதுமட்டுமல்லாமல், கட்சி பணியிலும் தொடர்ந்து ஈடுபடுகிறார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஐதராபாத் சென்ற நடிகர் கமல்ஹாசன், அங்கு இயக்குனர் விஸ்வநாத்தை சந்தித்தார். மேலும் அங்கு சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, நேற்று மதியம் சென்னை திரும்பினார்.

கமல்
நேற்று இரவு அவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வரும் கமல் நலமாக உள்ளார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
- 1990-களின் பிரபல நடிகை சிவரஞ்சனியும் தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த்தும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர்.
- இந்த தம்பதி தற்போது விவாகரத்து செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியானது.
தமிழில் 1990-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் சிவரஞ்சனி. தலைவாசல், தங்க மனசுக்காரன், சின்ன மாப்பிள்ளை, பொன் விலங்கு, கலைஞன், தாலாட்டு, ராஜதுரை, செந்தமிழ் செல்வன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
பிரபல தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் ஜோடியாக நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்து திருமணம் செய்து கொண்டனர். 25 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்த இருவரும் தற்போது விவாகரத்து செய்து பிரிய முடிவு செய்திருப்பதாக தெலுங்கு வலைத்தளங்களில் தகவல்கள் வெளியானது.

இதற்கு பதில் அளித்து சிவரஞ்சனி கூறும்போது, ''எனது கணவர் ஸ்ரீகாந்தும், நானும் குடும்ப வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்கிறோம். இருவரும் விவாகரத்து பெற்றுக் கொள்ளப்போவதாக வெளியான தகவல் மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. தினமும் எங்களை தொலைபேசியில் பலர் தொடர்பு கொண்டு விசாரிக்கிறார்கள். சமூக வலைதளத்தில் வரும் எங்களின் விவாகரத்து செய்தி முழுக்க பொய்" என்றார்.
நடிகர் ஸ்ரீகாந்த் கூறும்போது, ''என் மனைவி மற்றும் குடும்பத்தின் மீது நான் உயிராக இருக்கிறேன். எனவே தயவு செய்து விவாகரத்து வதந்தியை பரப்ப வேண்டாம்" என்றார்.
- பானா காத்தாடி, நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம், அஞ்சான், கத்தி, 24 படங்களில் நடித்து மிகவும் பிரபலமடைந்தவர் நடிகை சமந்தா.
- இவர் சில தினங்களாக மையோசைட்டிஸ் என்ற நோயில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
பானா காத்தாடி, நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம், அஞ்சான், கத்தி, 24 படங்களில் நடித்து மிகவும் பிரபலமடைந்தவர் நடிகை சமந்தா. இவர் விஜய், சூர்யா, விஷால், விஜய் சேதுபதி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். மேலும் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களிலும் நடித்து அனைவராலும் அறியப்பட்டார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான யசோதா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

சமந்தா
இப்படத்தின் டப்பிங் பணிகளை சமந்தா ட்ரிப்ஸ் ஏற்றிக் கொண்டு செய்தார். இதுகுறித்து அவர் பதிவிட்டது, உங்கள் அனைவருடனும் நான் பகிர்ந்து கொள்ளும் இந்த அன்புதான், வாழ்க்கை எனக்கு அளிக்கும் சவால்களைச் சமாளிக்க வலிமை தருகிறது. சில மாதங்களுக்கு முன்பு எனக்கு மியோசிடிஸ் எனப்படும் ஆட்டோ இம்யூன் பிரச்சினை இருப்பது கண்டறியப்பட்டது.

சமந்தா
முழுமையாக குணம் அடைந்த பின்னர் இந்த விஷயத்தை உங்களிடம் சொல்லலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் இந்த பிரச்னை குணம் அடைவதற்கு கூடுதல் காலம் எடுக்கும். இந்த பாதிப்பை ஏற்றுக் கொண்டு அதனுடன் நான் போராடிக் கொண்டிருக்கிறேன். நான் விரைவில் பூரண குணமடைவேன் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் எனக்கு நல்ல நாட்களும் கெட்ட நாட்களும் உண்டு' என்று பதிவிட்டார். இவரின் இந்த பதிவு திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும் இவர் விரைவில் குணமடைய பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

சமந்தாவின் முந்தைய பதிவு
இந்நிலையில் மையோசைட்டிசிற்கு வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வந்த சமந்தா, ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் சமந்தா எதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறித்த அவர் தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகவில்லை.
- பிக்பாஸ் 6-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
- இதில் தற்போது 15 நபர்கள் பிக்பாஸ் வீட்டினுள் இருக்கின்றனர்.
பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். மேலும் ஜி.பி. முத்து தாமாக முன் வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். பின்னர் அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி உள்ளிட்டோர் எலிமினேட் செய்யப்பட்டனர். இதில் தற்போது 15 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர்.

பிக்பாஸ் சீசன் 6
இதில் இந்த வாரத்திற்கான டாஸ்க்கில் பிக்பாஸ் வீடு நீதிமன்றமாக மாறியுள்ளது. இதில் போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வந்து கேமரா முன்பு தங்களது புகார்களை தெரிவித்து யார் தங்களுக்காக வாதாட வேண்டும் என்பதை தேர்வு செய்துள்ளார். மேலும், இந்த வார நாமினேஷனில் மணிகண்டனை கடுமையான போட்டியாளர் என்று கூறி பலர் நாமினேஷன் செய்தனர்.

மணிகண்டன் ராஜேஷ்
இந்நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது சகோதரர் மணிகண்டனுக்கு ஆதரவளிக்குமாறு தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு பிக்பாஸ் ரசிகர்கள் அவரால் மட்டுமே அவர் வெற்றி பெற வேண்டும் என்றும் மக்களை தன்னிச்சையாக முடிவெடுக்க விடுங்கள் என்றும் விமர்சித்து வருகின்றனர்.
Pls show ur support and love to my brother @Manikan97622480 🙏🙏🙏 pic.twitter.com/0nXjJvFJx2
— aishwarya rajesh (@aishu_dil) November 22, 2022
- சில்லுனு ஒரு காதல்', 'நெடுஞ்சாலை' படத்தை இயக்கிய ஒபலி என். கிருஷ்ணா பத்து தல படத்தை இயக்கி வருகிறார்.
- சமீபத்தில் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது.
சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து சிம்பு 'பத்து தல', 'கொரோனா குமார்' ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். பத்து தல படத்தை 'சில்லுனு ஒரு காதல்', 'நெடுஞ்சாலை' போன்ற படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இயக்குகிறார். இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

பத்து தல
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். கன்னடத்தில் 2017-ஆம் ஆண்டு வெளியான 'முஃப்தி' திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் இந்த படத்தில் ஏஜிஆர் என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது.

பத்து தல படக்குழு
இந்நிலையில் 'பத்து தல' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை சிம்பு தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து தெரிவித்துள்ளார். இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
Finally It's a wrap for #PathuThala … Cant wait for you all to witness #AGR … Thanks to my whole team for all the support and love :) @StudioGreen2 @Kegvraja @PenMovies @jayantilalgada @SilambarasanTR_ @Gautham_Karthik @arrahman @nameis_krishna pic.twitter.com/mAntbQhuiY
— Silambarasan TR (@SilambarasanTR_) November 23, 2022
- நடிகர் அஜித் தற்போது ‘துணிவு’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகிறது.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'துணிவு'. இப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்த படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து தயாராவதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், உண்மை கதையில் அஜித் நடித்து வருவதாக தகவல் வெளியானது.

துணிவு
இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இப்படம் 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

அஜித் - சிவகார்த்திகேயன்
இந்நிலையில், அஜித்தை நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள சிவகார்த்திகேயன், "நீண்ட நாட்களுக்குப் பிறகு அஜித் சாரை சந்தித்தேன். உங்களுடைய பாசிட்டிவான வார்த்தைகளுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி சார்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு அடுத்த திட்டம் என்ன? என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Met AK sir after long time ❤️ yet another meeting with sir, to cherish for life 🙏👍 Thank you for all the positive words and wishes sir ❤️❤️🤗🤗 pic.twitter.com/yVaYIc3Ca5
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) November 23, 2022






