என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    நடிகர் ரஜினி கிஷன் மற்றும் திவிகா நடிக்க ரமேஷ் பாரதி இயக்கியுள்ளார்.

    நடிகர் ரஜினி கிஷன் மற்றும் திவிகா நடிக்கும் படம் ரஜினி கேங். இப்படத்தை ரமேஷ் பாரதி இயக்கியுள்ளார். மேலும் மொட்டை ராஜேந்திரன், ராம் தாஸ், கூல் சுரேஷ், கல்கி ராஜா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

    எம்.எஸ். ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைக்கிறார். இப்படத்தை மிஷ்ரி என்டர்பிரைசஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிலையில் இப்படத்தின் டிரெய்லர் நாளை காலை 11.55 மணிக்கு வெளியாகிறது. இப்படத்தின் டிரைலரை நடிகரும், தயாரிப்பாளருமான விஷ்ணு விஷால் வெளியிடுகிறார்.

    • சென்னை டி.ஜி.பி அலுவலகத்திற்கு மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
    • ரம்யா கிருஷ்ணன், எஸ்.வி.சேகர் உள்ளிட்டோர் வீட்டிலும் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது.

    சென்னை:

    நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள், பள்ளிகள், விமானங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், சென்னை டி.ஜி.பி அலுவலகத்திற்கு மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. அதில் சென்னையில் உள்ள நடிகர் அஜித்குமார் வீட்டிற்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

    மேலும், நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர் எஸ்.வி.சேகர் உள்ளிட்டோர் வீட்டிலும் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டிருந்தது.

    அதன்பேரில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர். சோதனை முடிவில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காந்தா படம் எம்.கே. தியாகராஜா பாகவதரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாகும்.
    • 'காந்தா' படம் வருகிற 14-ந்தேதி முதல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

    மலையாள சினிமா முன்னணி நடிகர்களுள் ஒருவர் துல்கர் சல்மான். இவர் கடைசியாக நடித்து வெளியான 'லக்கி பாஸ்கர்' படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

    அடுத்ததாக துல்கர் சல்மான் 'காந்தா' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை செல்வமணி செல்வராஜ் இயக்கி உள்ளார். இப்படம் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரான எம்.கே. தியாகராஜா பாகவதரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாகும்.

    இப்படத்தில் மிஸ்டர் பச்சன் திரைப்பட புகழ் பாக்யஸ்ரீ, துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாகவுள்ளது. 'காந்தா' படம் வருகிற 14-ந்தேதி முதல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

    இந்த நிலையில் காந்தா திரைப்படத்துக்கு தடை கோரி பாகவதரின் மகள் வழி பேரன் மனு அளித்துள்ளார். பழம்பெரும் நடிகர் எம்.கே.தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள காந்தா படத்தை, எடுப்பதற்கு முன் அவரின் சட்டப்பூர்வ வாரிசுகளின் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என பாகவதரின் மகள் வழி பேரன் மனு அளித்துள்ளார்.

    இந்த மனுவிற்கு தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் நடிகர் துல்கர் சல்மான் பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • இது மிகவும் அவமரியாதை மற்றும் பொறுப்பற்ற செயல்.
    • தயவுசெய்து எங்கள் குடும்பத்தினரின் தனியுரிமைக்கு உரிய மரியாதை கொடுங்கள்.

    இந்தி திரையுலகின் பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா உடல்நலக்குறைவால் இன்று காலமானார் என்று செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், நடிகர் தர்மேந்திரா உயிருடன் இருப்பதாக அவருடைய மனைவியும் நடிகையும் எம்.பி.யுமான ஹேமமாலினி தனது எக்ஸ் பக்கத்தில் பரபரப்பான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:- நடந்து கொண்டிருப்பது மன்னிக்க முடியாதது! சிகிச்சைக்குப் பதிலளித்து குணமடைந்து வரும் ஒருவரைப் பற்றி பொறுப்பான சேனல்கள் எவ்வாறு தவறான செய்திகளைப் பரப்ப முடியும்? இது மிகவும் அவமரியாதை மற்றும் பொறுப்பற்ற செயல். தயவுசெய்து எங்கள் குடும்பத்தினரின் தனியுரிமைக்கு உரிய மரியாதை கொடுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.


    அவரைத்தொடர்ந்து தர்மேந்திராவின் மகள் ஈஷா தியோல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "என் தந்தை நலமுடன் உள்ளார், குணமடைந்து வருகிறார். அவர் விரைவில் குணமடைய பிரார்த்தித்த அனைவருக்கும் நன்றி" என பதிவிட்டுள்ளார்.

    முன்னதாக, நேற்று நடிகர் தர்மேந்திராவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. இதற்கு தர்மேந்திராவின் குடும்பத்தினர் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கருணாநிதி இயக்கி உள்ள இப்படத்தை ஜி.ஆர். மதன் கிருஷ்ணன் தயாரித்துள்ளார்.
    • நடிகர் கிஷோர் மற்றும் நடிகை அபிராமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர்.

    பிரபல யூடியூப்பரும், சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவருமான டிடிஎஃப் வாசன் தற்போது படம் ஒன்றில் நடித்து உள்ளார். அப்படத்திற்கு ஐபிஎல் (Indian Penal Law) என்று பெயரிடப்பட்டுள்ளது.

    இப்படத்தில் நடிகர் கிஷோர் மற்றும் நடிகை அபிராமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். கருணாநிதி இயக்கி உள்ள இப்படத்தை ஜி.ஆர். மதன் கிருஷ்ணன் தயாரித்துள்ளார்.

    இப்படத்திற்கு அஷ்வின் வினாயகமூர்த்தி இசையமைத்துள்ளார். படத்தின் "அப்போ இப்போ" பாடல் அண்மையில் வெளியானது. இந்நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    படம் வரும் நவம்பர் 28 ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.  

    • அதர்வா, ரவி மோகன் மற்றும் பசில் ஜோசஃப் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
    • படத்தின் முதல் பாடலான அடியே அலையே கடந்த வாரம் வெளியானது.

    சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 25-வது படம் உருவாகி வருகிறது.

    பராசக்தி என பெயரிடப்பட்ட இந்த படத்தை ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures தயாரித்துள்ளது.

    படத்தில் அதர்வா, ரவி மோகன் மற்றும் பசில் ஜோசஃப் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நாயகியாக ஸ்ரீலீலா நடித்திருக்கிறார்.

    படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி உள்ளது.

    படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், போஸ்ட் ப்ரொடக்ஷன் பணி நடைபெற்று வருகிறது. படத்தின் முதல் பாடலான அடியே அலையே கடந்த வாரம் வெளியானது.

    இந்நிலையில் படத்தின் டப்பிங் படிகள் தொடங்கியுள்ளதை படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. முதற்கட்டமாக ரவி மோகன் தனது கதாபாத்திரத்திற்கு டப்பிங் செய்து வருகிறார். 

    அடுத்தாண்டு பொங்கல் விடுமுறையையொட்டி அடுத்தாண்டு ஜனவரி 14 இல் ஜனநாயகனுக்கு போட்டியாக இப்படம் திரைக்கு வருகிறது.

    தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக ஜாய் கிரிசில்டா தெரிவித்திருந்தார்

    தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக சமையல் கலை நிபுணரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இதுதொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

    இதனை தொடர்ந்து, தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக ஜாய் கிரிசில்டா கடந்த சில நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

    இதனிடையே, தன்னை 2வது திருமணம் செய்ததை மகளிர் ஆணையத்தின் முன் மாதம்பட்டி ரங்கராஜ் ஒப்புக் கொண்டார் என்று ஜாய் கிரிசில்டா இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து, ஜாய் கிரிசில்டாவின் இந்த கூற்றை மாதம்பட்டி ரங்கராஜ் நேற்று திட்டவட்டமாக மறுத்தார்.

    இந்நிலையில், தனக்கு எதிராக அவதூறு கருத்துக்கள் தெரிவிக்க ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்கக்கோரியும், சமூக வலைதளங்களில் உள்ள வீடியோக்களை நீக்கக்கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் தொடர்ந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது.

    அப்போது, "ஜாய் கிரிசில்டாவின் குழந்தைக்கு டிஎன்ஏ பரிசோதனை எடுக்க வேண்டும். அதில் நான்தான் தந்தை என தெரியவந்தால் குழந்தையை கவனிக்கும் பொறுப்பை வாழ்நாள் முழுவதும் ஏற்க தயார்" என்று மாதம்பட்டி ரங்கராஜ் தெரிவித்தார்.

    இதையடுத்து, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது. மேலும், இருதரப்பும் எழுத்துப்பூர்வ வாதங்களை வரும் 14ம் தேதி தாக்கல் செய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

    தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக ஜாய் கிரிசில்டா தெரிவித்திருந்தார்.

    தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக சமையல் கலை நிபுணரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இதுதொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

    இதனை தொடர்ந்து, தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக ஜாய் கிரிசில்டா கடந்த சில நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

    இதனிடையே, தன்னை 2வது திருமணம் செய்ததை மகளிர் ஆணையத்தின் முன் மாதம்பட்டி ரங்கராஜ் ஒப்புக் கொண்டார் என்று ஜாய் கிரிசில்டா இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து, ஜாய் கிரிசில்டாவின் இந்த கூற்றை மாதம்பட்டி ரங்கராஜ் நேற்று திட்டவட்டமாக மறுத்தார்.

    இந்நிலையில், ஜாய் கிரிசில்டா தனது பிஞ்சு குழந்தை பெயரில் இன்ஸ்டா ஐடி உருவாக்கியுள்ளார். ராகா மாதம்பட்டி ரங்கராஜ் என்ற நிற ஐடியில் இருந்து ஜாய் கிரிசில்டா பதிவிட்டுள்ளார்.

    அந்த பதிவில், "அப்பா, (madhampattyrangaraj )நான்

    உன் காதலில்

    உன் மோகத்தில்

    உன் வேகத்தில் உயிர்த்த கரு

    உன் கரு

    உன் உயிர்

    உன் குருதி

    உன் அடையாளம்!

    ஆனால்

    உன் அவமானமாய்

    நீ உதிர்த்த சொற்கள்

    காலம் கடந்தாலும்

    காயம் ஆற்றாது!

    புது உயிராய்

    பூமியில் ஜனித்தேன்

    ஒரு பாவம் அறியேன்

    இப்படிக்கு

    விடை வேண்டி வழக்கு தொடுத்த அப்பாவுடன் சண்டையிடும்

    பிஞ்சு குழந்தை

    ராகா ரங்கராஜ்

    என்று தெரிவித்துள்ளார்.

    • ஆஸ்கார் விருது பெற்ற தயாரிப்பு நிறுவனமான சீக்யா என்டர்டெயின்மென்ட், முதன்முறையாக கார்த்திக் சுப்பராஜுடன் இணைகிறது.
    • பல ஆண்டுகளாக புதுமையான மற்றும் விருதுகளுக்கு தகுதியான கதை சொல்லலுக்கு பெயர் பெற்றது சீக்யா என்டர்டெயின்மென்ட்.

    ஆஸ்கார் விருது பெற்ற இந்திய தயாரிப்பு நிறுவனம் தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான இயக்குநருடன் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் இன்று பூஜையுடன் தொடங்குகிறது.

    குனீத் மோங்கா கபூர் மற்றும் அச்சின் ஜெயின் ஆகியோரின் ஆஸ்கார் விருது பெற்ற தயாரிப்பு நிறுவனமான சீக்யா என்டர்டெயின்மென்ட், முதன்முறையாக புகழ்பெற்ற இயக்குநர் கார்த்திக் சுப்பராஜுடன் இணைகிறது. எளிமையான பூஜைக்கு பிறகு மதுரையில் படத்தின் படப்பிடிப்பு இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.

    பல ஆண்டுகளாக புதுமையான மற்றும் விருதுகளுக்கு தகுதியான கதை சொல்லலுக்கு பெயர் பெற்றது சீக்யா என்டர்டெயின்மென்ட். இந்தியாவின் முதல் ஆஸ்கார் விருது பெற்ற ஆவணப்படமான 'தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்', 'தி லஞ்ச்பாக்ஸ்', 'மசான்', 'பாக்லைட்' மற்றும் சமீபத்தில் தேசிய விருது பெற்ற 'காதல்' போன்ற உலகளவில் பாராட்டப்பட்ட பல திரைப்படங்களைத் தயாரித்துள்ளது இந்நிறுவனம். தனித்துவமான கண்ணோட்டத்துடன், புதிய திறமையாளர்களை வளர்த்து உலகளவில் உள்ள பார்வையாளர்கள் மத்தியில் நற்பெயரை இந்நிறுவனம் உருவாக்கியுள்ளது.

    கார்த்திக் சுப்பராஜ் சமகால இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநராக வலம் வருகிறார். இது அவருடைய பத்தாவது திரைப்படமாகும். கடந்த பத்தாண்டுகளில் 'பீட்சா', 'ஜிகர்தண்டா', 'பேட்ட', 'இறைவி', 'மெர்குரி', 'ஜகமே தந்திரம்', 'மகான்', 'ஜிகர்தண்டா டபுள்எக்ஸ்' மற்றும் 'ரெட்ரோ' என விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் பாராட்டப்பட்ட பல படைப்புகளை அவர் கொடுத்திருக்கிறார்.

    இந்தப் படம் குறித்து சீக்யா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பாளர் குனீத் மோங்கா கபூர் பகிர்ந்து கொண்டதாவது, "பல்வேறு கலாச்சாரங்களை கடந்து பார்வையாளர்களை சென்றடையும் மண்சார்ந்த கதைகளை சொல்வதில்தான் நாங்கள் எப்போதும் நம்பிக்கை கொண்டுள்ளோம். அந்த நம்பிக்கையை நிச்சயம் கார்த்திக் சுப்பராஜ் காப்பாற்றுவார். அவரது கதைகள் புதுமையாகவும் உலகளவில் உள்ள பார்வையாளர்களை ஈர்க்கும் விதமாகவும் அமையும். கார்த்திக்குடன் இந்தப் பயணத்தில் இணைவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்" என்றார்.

    இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டதாவது, "சீக்யா தயாரித்திருக்கும் படங்கள் அனைத்தையும் நான் ரசித்திருக்கிறேன். நான் திரைக்கு கொண்டு வர வேண்டும் என விரும்பும் கலையுடன் சீக்யாவின் ரசனையும் ஒத்துப்போகிறது. விருதுகளுக்கு அர்த்தமுள்ள, தகுதியான படங்களைத் தயாரித்த குனீத் மற்றும் அச்சினுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி. நான் எழுதியிருக்கும் இந்தக் கதை என் மனதுக்கு நெருக்கமானது. அந்தக் கதைக்கான சரியான தயாரிப்பாளர்கள் கிடைத்துள்ளனர்" என்றார்.

    சீக்யா எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பாளர் அச்சின் ஜெயின் பகிர்ந்து கொண்டதாவது, "கல்ட் மற்றும் கமர்ஷியல் என்ற இரண்டு விஷயங்களையும் சரியாகக் கையாளத் தெரிந்தவர் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். அவரது கதைகள் எதிர்பாராத திருப்பங்களையும் அதே சமயம் ஆழமான உணர்வுகளையும் கொண்டிருக்கும். பார்வையாளர்களின் எதிர்பார்ப்பையும் சரியான கதை சொல்லல் திறமையும் கொண்ட இயக்குநருடன் இணைவதில் மகிழ்ச்சியடைகிறோம். கார்த்திக் சுப்பராஜூடன் இணைந்திருப்பது சக்திவாய்ந்த வேரூன்றிய கதைகளை, உலகளாவிய சினிமா மொழி மூலம் வெளிப்படுத்தும் சீக்கியாவின் நோக்கத்தை பிரதிபலிக்கிறது" என்றார்.

    மாஸ்க் திரைப்படம் வரும் நவம்பர் 21-ம் தேதி திரைக்கு வருகிறது.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் கவின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்த லிப்ட், டாடா, ஸ்டார் உள்ளிட்ட படங்கள் நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது. சமீபத்தில் வெளியான கிஸ் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

    கிஸ் படத்தை தொடர்ந்து, கவின் அறிமுக இயக்குனர் விகர்னன் அசோக் இயக்கும் மாஸ்க் என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கவினுடன் ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

    தெலுங்கு நடிகையான ருஹானி சர்மா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களை தவிர, சார்லி, பாலா சரவணன், விஜே அர்ச்சனா, சந்தோஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    மாஸ்க் திரைப்படம் வரும் நவம்பர் 21-ம் தேதி திரைக்குவரவுள்ள நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

    டிரெய்லர் வெளியீட்டுக்கு பிறகு நடிகர் கவின் பேசியதாவது:-

    எங்களை வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றி. விஜய் சேதுபதி அண்ணாவுக்கு நன்றி. அவரின் பீட்சா படத்தில் தான் நான் அறிமுகமானேன். நாம் விரும்புவதை விருப்பத்துடன்  செய்தால் அது நடக்கும் என நிரூபித்தவர்.

    வெற்றிமாறன் சார் அவரெல்லாம் கூப்பிடுவார் என நான் நினைத்ததில்லை. அவர் ஆபிஸில் இருந்து கால் வந்தது. அவரே தான் கதை சொன்னார், அவரே கதை சொல்கிறார் என்றால் அவர் கதை மேல் வைத்திருக்கும் நம்பிக்கை எனக்கு முக்கியமாகப் பட்டது.

    அவர் சொக்கலிங்கம் சார் பற்றி மிகப்பெருமையாக சொன்னார். இந்தப்படம் ஜெயித்தே ஆக வேண்டும் என்றார், அது ஆடுகளம் இண்டர்வெல் மாதிரி இருந்தது. கண்டிப்பாகப் பந்தயம் அடித்துவிடுவோம் சார். ஆண்ட்ரியா மேடம் தான் முதலில் கதை கேட்டார். அவர் நடிப்பு மிகச்சிறப்பாகப் பேசப்படும்.

    ஜீவி சார் இத்தனை வேலைகளை எப்படிச் செய்கிறார் என ஆச்சரியமாக இருக்கும். சார் உடலை பார்த்துக்கொள்ளுங்கள். பவன் சார், ரெடின் சார் நடிப்பு கண்டிப்பாக பேசப்படும். படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் நன்றி.

    நவம்பர் 21 படம் திரைக்கு வருகிறது. அனைவரும் பார்த்து ரசிப்பீர்கள் என நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உடல் எடை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி என்னை உருவக் கேலியை செய்ததற்கு சமம் என நடிகை கூறினார்.
    • தனது கேள்வியால் வருத்தம் ஏற்பட்டிருந்தால் நடிகை கவுரி கிஷனிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக யூ டியூபர் கூறினார்.

    அபின் ஹரிஹரன் இயக்கத்தில் அறிமுக நடிகர் ஆதித்யா மாதவன் மற்றும் 96 பட நடிகை கௌரி கிஷன் நடிப்பில் அதர்ஸ் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் திரையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    இப்படத்தின் முந்தைய செய்தியாளர் சந்திப்பு கடந்த 30-ம் தேதி நடைபெற்றது. படத்தின் பாடலில் நடிகையை தூக்கினீர்களே நடிகையின் எடை என்ன? என கதாநாயகனிடம் யூடியூபர்கள் கேள்வி எழுப்பினர்.

    இது தொடர்பாக மற்ற தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் பேசிய கௌரி கிஷன் இதுபோன்ற ஸ்டுப்பிட்டான கேள்விகள் எழுப்பப்படுகிறது. இதுபோன்ற கேள்விகள் சரியான கேள்விகள் அல்ல என அந்த விமர்சனம் தொடர்பாக பேசியிருந்தார்.

    இந்த நிலையில் அண்மையில் நடைபெற்ற அதர்ஸ் பட செய்தியாளர் சந்திப்பில், நடிகை கௌரி கிருஷ்ணனை டார்கெட் செய்யும் அளவிற்கு யூ டியூபர்கள் இருவர் மாறி மாறி கேள்விகளை எழுப்பினர்.

    இதற்கு பதில் அளித்த நடிகை கௌரி கிருஷ்ணன் உடல் எடை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி என்னை உருவக் கேலியை செய்ததற்கு சமம். கதாநாயகனிடம் என்னைப் பற்றி கேட்டாலும் என்னுடைய எடை தொடர்பாகவே எழுப்பப்பட்ட கேள்வி எனவே அந்த கேள்வி தொடர்பாக நான் விமர்சனம் செய்திருந்தேன் என நிதானமாக பதில் அளித்தார்.

    கௌரி கிஷனின் இந்த துணிச்சல் இணையத்தில் பாராட்டுகளை பெற்றது. பல நடிகர்கள் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். நடிகர் சங்கமும் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தது.

    இதனையடுத்து நடிகை கவுரி கிஷனின் எடை குறித்து அநாகரிக கேள்வி எழுப்பியது தொடர்பாக வருத்தம் தெரிவித்து யூடியூபர் வீடியோ வெளியிட்டுள்ளார்.

    அந்த வீடியோவில், நடிகை கவுரி கிஷனின் எடை குறித்து தான் எழுப்பிய கேள்வி தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக யூடியூபர் R.S.கார்த்திக் விளக்கம் அளித்துள்ளார். மேலும், தனது கேள்வியால் வருத்தம் ஏற்பட்டிருந்தால் நடிகை கவுரி கிஷனிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக அவர் தெரிவித்தார்.

    இந்நிலையில் யூடியூபர் மன்னிப்பு கேட்கவில்லை என நடிகை கவுரி கூறியுள்ளார். மேலும், பொறுப்புணர்வு இல்லாமல் கேட்பது மன்னிப்பு அல்ல. வருத்தத்தையோ அல்லது வெற்று வார்த்தைகளையோ ஏற்றுக்கொள்ள மாட்டேன். கேள்வியை தவறாக புரிந்து கொண்டார், அது ஒரு வேடிக்கையான கேள்வி என மீண்டும் கூறுவதா? என நடிகை கவுரி கூறியுள்ளார்.

    போதை காளான் வளர்ப்பால் ஏற்படும் பிரச்சினையில் கணவனை இழக்கும் பெண்ணின் போராட்டக்கதை.

    கொடைக்கானல் மலைப்பகுதி கிராமமான 'வட்டகானல்' பகுதியில் விளையும் போதை காளானை விற்று போதை சாம்ராஜ்யத்தை நடத்தி வருகிறார் ஆர்.கே.சுரேஷ். அவருக்கு உறுதுணையாக துருவன் மனோ, விஸ்வந்த், சரத் ஆகியோர் இருந்து வருகின்றனர். ஒரு பிரச்சனையில் கணவனை இழந்த  வித்யா பிரதீப், ஆர்.கே.சுரேசை கொலை செய்வதற்கு முயற்சி செய்து வருகிறார்.

    இறுதியில் ஆர்.கே.சுரேசை வித்யா பிரதீப் கொலை செய்தாரா? வித்யா பிரதீப் கணவர் எப்படி இறந்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் ஆர்.கே.சுரேஷ் கதாபாத்திரத்திற்கு தகுந்தாற்போல் தனது உடல்மொழியோடு அற்புதமான நடிப்பை கொடுத்துள்ளார். படத்தின் கதாநாயகனான துருவன் மனோ நடிப்பு நேர்த்தியாக அமைந்து உள்ளது.

    இளமையும் அழகுமாக மீனாட்சி கோவிந்தராஜன் நடிப்பு ரசிக்க வைக்கிறது. விஷ்வந்த், வித்யா பிரதீப் நடிப்பு படத்துக்கு கூடுதல் பலம்.

    இயக்கம்

    போதை காளான் பற்றிய கதையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் பித்தாக் புகழேந்தி. காளான் பாதிப்பு குறித்த வலுவான காட்சிகள் இல்லை. எதுக்கு சண்டைபோடுகிறார்கள், யார் போடுகிறார்கள், என்ன நடக்கிறது என பல இடங்களில் திரைக்கதை குழப்பம். சுவாரசியமான காட்சிகள் மற்றும் தெளிவான திரைக்கதை இருந்திருந்தால் ரசித்து இருக்கலாம்.

    இசை

    மாரிஸ் விஜய் இசையில் பாடல்கள் பெரியதாக ஒர்க்கவுட் ஆகவில்லை. பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

    ஒளிப்பதிவு

    எம்.ஏ.ஆனந்த் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.

    ×