என் மலர்tooltip icon

    இது புதுசு

    எம்.ஜி. மோட்டார் நிறுவனத்தின் புதிய எஸ்.யு.வி. கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.



    எம்.ஜி. மோட்டார் நிறுவனத்தின் புதிய எஸ்.யு.வி. ஆட்டோ எக்ஸ்போ 2020 விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. எம்.ஜி. குளோஸ்டர் என அழைக்கப்படும் புதிய எஸ்.யு.வி. அந்நிறுவனத்தின் பிரம்மாண்ட மாடலாக காட்சியளிக்கிறது.

    காட்சிக்கு வைக்கப்பட்ட எம்.ஜி. குளோஸ்டர் கார் எம்.ஜி. நிறுவனத்தின் பாரம்பரிய கிரில் வடிவமைப்பு, எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், மெல்லிய ஹெட்லைட் யூனிட்கள், பெரிய கிளாஸ்ஹூஸ் மற்றும் ரூஃப் ரெயில்கள் காணப்படுகிறது. பின்புறம் மெல்லிய வடிவமைப்பு, டெயில் லேம்ப் யூனிட்கள், அகலமான டெயில்கேட் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    எம்.ஜி. குளோஸ்டர்

    இந்தியாவில் வெளியாக இருக்கும் எம்.ஜி. குளோஸ்டர் எஸ்.யு.வி. மாடலில் 2.0-லிட்டர் ட்வின் டர்போ டீசல் என்ஜின் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த என்ஜின் 218 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 480 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் என கூறப்படுகிறது. எம்.ஜி. குளோஸ்டர் விலை ரூ. 35 லட்சத்தில் துவங்கலாம் என்றும் கூறப்படுகிறது.
    ஆட்டோ எக்ஸ்போ 2020 விழாவில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் வி கிளாஸ் மார்க்கோ போலோ அறிமுகம் செய்யப்பட்டது.



    இந்திய சந்தையில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் வி கிளாஸ் மார்க்கோ போலோ அறிமுகம் செய்யப்பட்டது. புதிய மாடல்: மார்க்கோ போலோ ஹாரிசான் மற்றும் மார்க்கோ போலோ கேம்ப்பர் என இரண்டு வேரியண்ட்களில் வெளியாகி இருக்கிறது.

    இவற்றின் விலை முறையே ரூ. 1.38 கோடி மற்றும் ரூ. 1.46 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளன. முதற்கட்டமாக மெர்சிடிஸ் பென்ஸ் வி கிளாஸ் மார்க்கோ போலோ ஹாரிசான் மாடலுக்கான முன்பதிவுகள் மட்டுமே துவங்கப்பட்டு இருக்கிறது.

    மெர்சிடிஸ் பென்ஸ் வி கிளாஸ் மார்க்கோ போலோ

    மெர்சிடிஸ் பென்ஸ் வி கிளாஸ் மார்க்கோ போலோ மாடல் 5140 எம்.எம். அளவு நீளமும், 3200 எம்.எம். அளவில் வீல்பேஸ் வழங்கப்பட்டுள்ளது. புதிய மெர்சிடிஸ் பென்ஸ் மாடலில் பி.எஸ்.6 விதிகளுக்கு பொருந்தும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் கொண்டிருக்கிறது. 

    இந்த என்ஜின் 163 பி.எஸ். பவர் மற்றும் 380 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
    ஹூண்டாய் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை ஹூண்டாய் கிரெட்டா கார் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்படுகிறது.



    தென் கொரிய ஆட்டோமொபைல் நிறுவனமான ஹூண்டாய், இந்தியாவில் புதிய தலைமுறை கிரெட்டா மாடல் காரை ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில், வெளியீட்டிற்கு முன் புதிய எஸ்.யு.வி. மாடல் டீசர்களை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

    2020 ஹூண்டாய் கிரெட்டா மாடலில் காஸ்மெடிக் அப்கிரேடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த கார் ஹூண்டாய் ஐ.எக்ஸ்.25 மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. சீனாவில் கிரெட்டா மாடல் கார் ஹூண்டாய் ஐ.எஸ்.25 பெயரில் விற்பனை செய்யப்படுகிறது.

    புதிய 2020 ஹூண்டாய் கிரெட்டா மாடலில் பெரிய கிரில், மெல்லிய இன்டிகேட்டர் லேம்ப்கள், புதிய மேம்படுத்தப்பட்ட பம்ப்பர், இருபுறங்களிலும் ஸ்கிட் பிளேட்கள், மேம்பட்ட டெயில் லைட்கள் வழங்கப்பட்டுள்ளன. வெளிப்புறம் போன்றே உள்புறத்திலும் மேம்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதிய ஹூண்டாய் கிரெட்டா வரைபடம்

    அந்த வகையில் காரின் உள்புறத்தில் முழுமையான பிளாக் நிறத்தாலான இன்டீரியர் எதிர்பார்க்கலாம். இத்துடன் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் திஸ்டம், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், ஹூண்டாயின் புளூ லின்க் கன்கெடிவிட்டி சூட் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படுகிறது.

    பாதுகாப்பிற்கு ஏ.பி.எஸ்., இ.பி.டி., சீட் பெல்ட் ரிமைன்டர், பெடஸ்ட்ரியன் சேஃப்டி சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், ஹை ஸ்பீடு அலெர்ட் சிஸ்டம், பல்வேறு ஏர்பேக், ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட் ஆன்க்கர்கள் வழங்கப்படலாம்.

    புதிய 2020 ஹூண்டாயட் கிரெட்டா மாடலில் தற்போதைய மாடல்களில் உள்ள 1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.4 லிட்டர் டீசல் என்ஜின்கள் பி.எஸ்.6 ரகத்திற்கு அப்டேட் செய்யப்பட்டு, 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின்கள் வழங்கப்படலாம் என தெரிகிறது.
    ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான லெக்சஸ் இந்தியாவில் எல்.சி.500ஹெச் ஹைப்ரிட் எலெக்ட்ரிக் வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது.



    லெக்சஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ஃபிளாக்‌ஷிப் காரை அறிமுகம் செய்துள்ளது. லெக்சஸ் எல்.சி.500ஹெச் என அழைக்கப்படும் புதிய ஹைப்ரிட் எலெக்ட்ரிக் காரின் விலை ரூ. 1.96 கோடி (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த காருடன் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட லெக்சஸ் இ.எஸ். 300ஹெச் மற்றும் என்.எக்ஸ். 300ஹெச் மாடல்களையும் அறிமுகம் செய்துள்ளது. இரு கார்களின் விலை முறையே ரூ. 51.90 லட்சம் மற்றும் ரூ. 60.60 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இரு விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    புதிய எல்.சி.500ஹெச் கூப் மாடலில் கூர்மையான கிரில், முக்கோன வடிவம் கொண்ட எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ள. இத்துடன் உயரமான கேபின், 21 இன்ச் அளவில் ஃபோர்ஜ் செய்யப்பட்ட அலுமினியம் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் நீண்ட பொனெட் காரின் பின்புறம் வரை நீள்கிறது. 

    லெக்சஸ் எல்.சி.500ஹெச்

    பின்புறம் எல்.இ.டி. டெயில் லேம்ப்கள், டூயல் எக்சாஸ்ட் மற்றும் பின்புற டிஃப்யூசர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. உள்புறம் லெக்சஸ் எல்.சி.500ஹெச் மாடலில் அதிநவீன தொழில்நுட்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரில் 10.3 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட மேம்பட்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

    புதிய எல்.சி.500ஹெச். மாடலில் 3.5 லிட்டர் வி6 பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 295 பி.ஹெச்.பி. பவர் வழங்குகிறது. இத்துடன் 110 கிலோவாட் எலெக்ட்ரிக் மோட்டார்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை காரின் செயல்திறனை 355 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 350 என்.எம். டார்க் வரை வழங்குகிறது.

    இத்துடன் 10 ஸ்பீடு யூனிட் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இதில் 3 ஸ்டெப் சி.வி.டி. மற்றும் 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பிற்கு புதிய காரில் லெக்சஸ் சேஃப்டி பிளஸ் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.
    ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் கிளாசிக் 500 டிரிபியூட் பிளாக் லிமிட்டெட் எடிஷன் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.



    ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கிளாசிக் 500 டிரிபியூட் பிளாக் எடிஷன் மோட்டார்சைக்கிளை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. புதிய லிமிட்டெட் எடிஷன் மோட்டார்சைக்கிள் பிப்ரவரி 10-ம் தேதி மதியம் 2.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை விற்பனை செய்யப்படுகிறது.

    புதிய ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 டிரிபியூட் பிளாக் லிமிட்டெட் எடிஷன் மோட்டார்சைக்கிளில் 499சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜின் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மாடலிலும் பிரத்யேக குறியீட்டு எண் மற்றும் டூயல் டோன் ஃபினிஷ் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 27.2 பி.ஹெச்.பி. பவர், 41.3 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

    ராயல் என்ஃபீல்டு கிளாசிக் லிமிட்டெட் எடிஷன்

    புதிய லிமிட்டெட் எடிஷன் மாடலுடன் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 யூனிட் விற்பனை நிறுத்தப்படுகிறது. இதற்கு மாற்றாக ராயல் என்ஃபீல்டு 650சிசி மோட்டார்சைக்கிள்களின் விற்பனையில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளது.

    முன்னதாக ராயல் என்ஃபீல்டு நிறுவனம் பி.எஸ்.6 ஹிமாலயன் மற்றும் கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்தது. பி.எஸ்.6 கிளாசிக் 350 மாடல் விலை ரூ. 1.65 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது பி.எஸ்.4 மாடலை விட ரூ. 11,000 வரை அதிகம் ஆகும். பி.எஸ். 6 கிளாசிக் 350 மாடலில் எலெக்டிரானிக் ஃபியூயல் இன்ஜெக்‌ஷன் வழங்கப்பட்டுள்ளது.

    பி.எஸ். 6 ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மாடலின் விலை ரூ. 1.87 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடலில் பி.எஸ். 6 என்ஜின் தவிர பல்வேறு இதர அப்டேட்கள் வழங்கப்பட்டுள்ளன.
    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் 2020 ஜி.எல்.இ. மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.



    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் 2020 ஜி.எல்.இ. எஸ்.யு.வி. மாடலை அறிமுகம் செய்துள்ளது. நான்காம் தலைமுறை மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.இ. 300டி பேஸ் மாடலின் துவக்க விலை ரூ. 73.70 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் டாப் எண்ட் ஜி.எல்.இ. 400டி எல்.டபுள்யூ.பி. விலை ரூ. 1.25 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    புதிய மாடலில் பல்வேறு அப்டேட்கள் செய்யப்பட்டு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்திய சந்தையில் இந்த ஆண்டின் முதல் மெர்சிடிஸ் மாடாலாக 2020 மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.இ. அறிமுகமாகி இருக்கிறது. இந்த ஆண்டு மட்டும் சுமார் பத்து வாகனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.இ. மாடல் மெல்லிய வடிவமைப்பு மற்றும் வளைந்த ஓரங்களை கொண்டிருக்கிறது. முன்புறம் ட்வின்-ஸ்லாட் க்ரோம் கிரில் மற்றும் நடுவில் மெர்சிடிஸ் பென்ஸ் லோகோ பொருத்தப்பட்டுள்ளது. இத்துடன் மேம்பட்ட ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் மற்றும் எல்.இ.டி. டெயில் லைட்கள் வழங்கப்பட்டுள்ளன.

    2020 மெரிசிடிஸ் பென்ஸ் ஜி.எல்.இ.

    காரின் உள்புறம் டூயல் 12.3 இன்ச் ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஒன்று டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் போன்றும் மற்றொன்று தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போன்று செயல்படுகிறது. 2020 ஜி.எல்.இ. எஸ்.யு.வி. மாடலில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் MBUX கனெக்ட்டெட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.

    இத்துடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே, பர்மெஸ்டர் சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம், ஏர்மேடிக் ஏர் சஸ்பென்ஷன், முன்புற இருக்கைகளை எலெக்ட்ரிக் மூலம் இயக்கும் வசதி, பானரோமிக் சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜிங், ஸ்டீரிங் மவுண்ட் கண்ட்ரோல்கள் வழங்கப்பட்டுள்ளன. பாதுகாப்பிற்கு ஏ.பி.எஸ்., இ.பி.டி., ஒன்பது ஏர்பேக்குகள், பார்க் அசிஸ்ட், 360 டிகிரி கேமரா, பின்புற பார்க்கிங் சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன.

    மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.இ. 300டி மாடலில் 2.0 லிட்டர் நான்கு சிலிண்டர் கொண்ட 245 பி.ஹெச்.பி. பவர் 500 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. ஜி.எல்.இ. 400டி மாடலில் 3.0 லிட்டர் ஆறு சிலிண்டர்கள் கொண்ட யூனிட் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 330 பி.ஹெச்.பி. பவர் 700 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இரு என்ஜின்களுடன் 9-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்பட்டுள்ளது.

    லம்போர்கினி நிறுவனத்தின் புதிய ஹரிகேன் இவோ ஆர்.டபுள்யூ.டி. கார் இந்திய சந்தையில் வெளியிடப்பட்டது.



    லம்போர்கினி நிறுவனத்தின் ஹரிகேன் இவோ ஆர்.டபுள்யூ.டி. கார் இந்தியாவில் வெளியிடப்பட்டது. புதிய லம்போர்கினி காரின் விலை ரூ. 3.22 கோடி (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இந்திய சந்தையில் லம்போர்கினி நிறுவனத்தின் புதிய சூப்பர்கார் மாடலாக ஹரிகேன் இவோ ஆர்.டபுள்யூ.டி. வெளியாகி இருக்கிறது. இது ஸ்டான்டர்டு ஆல்-வீல் டிரைவ் மாடலுடன் ஒப்பிடும் போது அதிகளவு மாற்றங்கள் மற்றும் சிறப்பான ஏரோடைனமிக்களை கொண்டிருக்கிறது.

    அந்த வகையில் புதிய காரின் முன்புறம் ஸ்ப்லிட்டர், ஏர் இன்டேக் பகுதியில் கிடமைட்ட ஃபின்கள் மற்றும் பின்புறம் டிஃப்யூசர் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து மாற்றங்களும் மேம்பட்ட ஏரோடைனமிக்கள் மற்றும் ஸ்டேபிலிட்டியை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    லம்போர்கினி ஹரிகேன் இவோ ஆர்.டபுள்யூ.டி.

    இந்த அப்டேட்கள் தவிர காரில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. காரின் உள்புறத்தில் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் 8.4 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயிமென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் இதர கனெக்டிவிட்டி அம்சங்களை கொண்டிருக்கிறது.

    ஹரிகேன் இவோ ஆர்.டபுள்யூ.டி. மாடலின் கேபின் அல்கான்ட்ரா மற்றும் லெதர் மூலம் உருவாக்கப்பட்டுள்ளன. இத்துடன் வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் கஸ்டமைஸ் செய்து கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஏ.பி.எஸ். மற்றும் இ.பி.டி., பெர்ஃபார்மன்ஸ் டிராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் மற்றும் பல்வேறு இதர வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

    லம்போர்கினி ஹரிகேன் இவோ ஆர்.டபுள்யூ.டி. மாடலில் 5.2 லிட்டர் வி10 என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதே என்ஜின் மற்ற ஹரிகேன் மாடல்களிலும் பயன்டுபத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 610 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 560 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இது ஸ்டான்டர்டு இவோ மாடலை விட 30 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 40 என்.எம். டார்க் செயல்திறன் குறைவாகும்.
    நிசான் நிறுவனம் விரைவில் நடைபெற இருக்கும் ஆட்டோ எக்ஸ்போ விழாவில் புத்தம் புதிய காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



    ஜப்பான் நாட்டு ஆட்டோமொபைல் நிறுவனமான நிசான், விரைவில் நடைபெற இருக்கும் ஆட்டோ எக்ஸ்போ விழாவில் புதிய சப்-காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய காம்பேக்ட் எஸ்.யு.வி. ‘மேக் இன் இந்தியா மேக் ஃபார் இந்தியா’ திட்டத்தில் உருவாக்கப்படும் என நிசான் தெரிவித்துள்ளது.

    இந்திய சந்தையின் காம்பேக்ட் எஸ்.யு.வி. பிரிவில் மாருதி சுசுகி, டாடா மோட்டார்ஸ், ஹூண்டாய் மற்றும் ஃபோர்டு மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அந்த வகையில் நிசான் நிறுவனத்தின் புதிய மாடல் அதிக போட்டியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என கூறப்படுகிறது.

    நிசான் டீசர்

    புதிய எஸ்.யு.வி. மாடல் மேம்பட்ட தொழில்நுட்பத்தில் நிசான் சர்வதேச எஸ்.யு.வி. பாரம்பரியத்தை பின்பற்றி உருவாக்கப்படும் என நிசான் தெரிவித்துள்ளது. அந்த வகையில் புதிய கார் நிசான் இன்டெலிஜன்ட் மொபிலிட்டியின் அங்கமாக அதிநவீன தொழில்நுட்பம் நிறைந்த மாடலாக இருக்கும் என எதி்ர்பார்க்கலாம்.

    இந்திய சந்தையில் நிசான் நிறுவனம் தற்சமயம் கிக்ஸ், மைக்ரா, மைக்ரா ஆக்டிவ், சன்னி, டெரானோ மற்றும் ஜி.டி.-ஆர் போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகிறது. 
    ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கலினன் பிளாக் பேட்ஜ் கார் இந்திய சந்தையில் வெளியிடப்பட்டது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



    ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கலினன் பிளாக் பேட்ஜ் வெர்ஷன் கார் இந்திய சந்தையில் வெளியிடப்பட்டது. ரோல்ஸ் ராய்ஸ் கலினன் பிளாக் பேட்ஜ் மாடலின் துவக்க விலை ரூ. 8.20 கோடி (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    புதிய ரோல்ஸ் ராய்ஸ் கலினன் பிளாக் பேட்ஜ் வெர்ஷன் ஆடம்பர ஸ்டான்டர்டு எஸ்.யு.வி. மாடலின் ஸ்போர்ட் வெர்ஷன் ஆகும். புதிய பிளாக் பேட்ஜ் எடிஷனில் பல்வேறு அப்டேட்கள் செய்யப்பட்டு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் புதிய பிளாக் பெயின்ட், பிளாக்டு அவுட் எக்சாஸ்ட் பைப்கள், புதிய 22 இன்ச் ஃபோர்ஜ் செய்யப்பட்ட அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன.

    ரோல்ஸ் ராய்ஸ் கலினன் பிளாக் பேட்ஜ்

    ரோல்ஸ் ராய்ஸ் கலினன் பிளாக் பேட்ஜ் மாடலில் 6.75 லிட்டர் ட்வின் டர்போ வி12 என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 600 பி.ஹெச்.பி. பவர், 900 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இது ஸ்டான்டர்டு மாடலில் உள்ள என்ஜினை விட 29 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 50 என்.எம். டார்க் அதிகம் ஆகும்.

    ரோல்ஸ் ராய்ஸ் பிராண்டின் முதல் எஸ்.யு.வி. மாடலாக கனினன் அறிமுகம் செய்யப்பட்டது. சர்வதேச சந்தையில் கலினன் மாடல் 2018 மே மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் ரோல்ஸ் ராய்ஸ் கலினன் மாடல் 2018 இறுதியில் அறிமுகம் செய்யப்பட்டது.

    இந்தியாவில் ரோல்ஸ் ராய்ஸ் கலினன் மாடலின் துவக்க விலை ரூ. 6.95 கோடி (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.
    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டியாகோ மற்றும் டிகோர் ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட டியாகோ மற்றும் டிகோர் மாடல்கள் இந்தியாவில் வெளியிடப்பட்டன. இவற்றின் விலை முறையே ரூ. 4.60 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்), ரூ. 5.75 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடல்களில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் டியாகோ மாடலின் முன்புறம் புதிய கிரில் மற்றும் சில வடிவமைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் அப்டேட் செய்யப்பட்ட ஹெட்லைட்கள், முன்புற பம்ப்பர், ஏர் டேம் மற்றும் வட்ட வடிவிலான ஃபாக் லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன.

    பக்கவாட்டு மற்றும் பின்புறங்களில் அலாய் வீல்கள், பியானோ பிளாக் ஃபினிஷ் செய்யப்பட்ட ORVMகள், பிளாக்டு அவுட் ரூஃப் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இவை தவிர காரின் பக்கவாட்டுகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. பின்புறம் டியாகோ மாடலில் புதிய டெயில் லைட்கள், பார்க்கிங் கேமரா மற்றும் சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன.

    ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட டியாகோ மாடலில் பி.எஸ். 6 ரக 1.2 லிட்டர், மூன்று சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதன் செயல்திறன் பற்றிய விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

    டாடா டிகோர் ஃபேஸ்லிஃப்ட்


    டிகோர் மாடலின் முன்புறம் மெல்லிய ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், புதிய வடிவமைப்பிலான ஃபாக் லேம்ப்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் பொனெட் புதிய பாதுகாப்பு விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கின்றன.

    டிகோர் ஃபேஸ்லிஃப்ட் பக்கவாட்டில் அதிகளவு மாற்றங்கள் செய்யப்படவில்லை. பின்புற டெயில்லைட்கள் அப்டேட் செய்யப்பட்டு, இருபுறங்களிலும் பம்ப்பர்கள் ட்வீக் செய்யப்பட்டுள்ளன.

    புதிய டிகோர் மாடலில் பி.எஸ்.6 ரக 1.2 லிட்டர் மூன்று சிலிண்டர் கொண்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 85 பி.ஹெச்.பி. பவர், 113 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.

    கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய சப்-காம்பேக்ட் எஸ்.யு.வி. கார் வரைபடங்களை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.



    கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது கான்செப்ட் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலின் முதற்கட்ட டீசர் வரைபடங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. சர்வதேச சந்தையில் இந்த கார் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    புதிய கியா காம்பேக்ட் எஸ்.யு.வி. கான்செப்ட் இந்திய சந்தையில் அந்நிறுவனத்தின் மூன்றாவது மாடல் ஆகும். இந்திய சந்தையில் இந்த கார் ஹூண்டாய் வென்யூ, மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா, டாடா நெக்சான் மற்றும் மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும்.

    டீசரை பொருத்தவரை புதிய கார் எதிர்கால வடிவமைப்புகளில் கம்பீர தோற்றம் கொண்டிருக்கும் என தெரிகிறது. காரின் முன்புறம் டிகோர் மாடலில் உள்ளதை போன்ற நோஸ் கிரில் தடிமனான க்ரோம் / சில்வர் பார்டெர்கள், மெல்லிய ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டேடைம் லேம்ப்களை கொண்டிருக்கிறது. 

    கியா கான்செப்ட் கார் வரைபடம்

    முன்புற பம்ப்பர் கம்பீரமாக காட்சியளிக்கிறது. பக்கவாட்டில் ஃபிளேர்டு வீல் ஆர்ச்கள், சில்வர் ரூஃப் ரெயில்கள், மெல்லிய ORVMகள், பெரிய டைமண்ட் கட் அலாய் வீல்கள் வழங்கப்படுகிறது. பின்புறம் எல்.இ.டி டெயில் லேம்ப்கள் லைட் ஸ்ட்ரிப் மூலம் இணைக்கப்பட்டுள்ளன.

    கியா சப் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல் இந்தியாவில் இந்த ஆண்டு இறுதியில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எஸ்.யு.வி.யின் ப்ரோடோடைப் மாடல் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. புதிய எஸ்.யு.வி. காரில் யு.வி.ஒ. கனெக்ட்டெட் கார் தொழில்நுட்பம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    எம்.ஜி. மோட்டார் நிறுவனத்தின் இசட்.எஸ். எலெக்ட்ரிக் கார் இந்திய சந்தையில் வெளியிடப்பட்டது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



    எம்.ஜி. மோட்டார் நிறுவனம் இந்தியாவில் இசட்.எஸ். இ.வி. காரை வெளியிட்டது. இதன் எக்சைட் வேரியண்ட் துவக்க விலை ரூ. 20.88 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    எனினும், இசட்.எஸ். காரை வாங்க ஜனவரி 17-ம் தேதிக்கு முன்னரே முன்பதிவு செய்தவர்களுக்கு இந்த கார் ரூ. 19.88 லட்சம் எனும் சிறப்பு விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    இத்துடன் எக்ஸ்குளுசிவ் வேரியண்ட் விலை ரூ. 23.58 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முந்தைய வேரியண்ட் போன்றே எக்ஸ்க்ளுசிவ் வேரியண்ட்டை ஜனவரி 17-ம் தேதிக்கு முன் முன்பதிவு செய்தவர்களுக்கு ரூ. 22.58 லட்சம் விலையில் வழங்கப்படுகிறது.

    எம்.ஜி. இசட்.எஸ். எலெக்ட்ரிக் கார்

    முதற்கட்டமாக எம்.ஜி. இசட்.எஸ். கார்: டெல்லி, மும்பை, ஆமதாபாத், பெங்களூரு மற்றும் ஐதராபாத் என ஐந்து நகரங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மற்ற நகரங்களின் சார்ஜிங் செய்வதற்கான உள்கட்டமைப்பு வசதிகளின் வளர்சிக்கு ஏற்ப வெளியீடு நீட்டிக்கப்படும் என தெரிகிறது.

    எம்.ஜி. இசட்.எஸ். காரில் 44.5 kWh IP6 சான்று பெற்ற பேட்டரி பேக் கொண்டிருக்கிறது. இது 141 பி.ஹெச்.பி. பவர், 353 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் 340 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும். மேலும் இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 8.5 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டிருக்கிறது.
    ×