என் மலர்tooltip icon

    இது புதுசு

    ஹோண்டா நிறுவனத்தின் 2020 சிட்டி மாடல் காரின் அறிமுக விவரங்கள் வெளியாகி இருக்கிறது.



    ஹோண்டா நிறுவனத்தின் ஐந்தாம் தலைமுறை ஹோண்டா சிட்டி மாடல் கார் மார்ச் 16-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அறிமுக நிகழ்விலேயே புதிய காருக்கான முன்பதிவு விவரங்களும் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

    புதிய 2020 ஹோண்டா சிட்டி மாடல் சர்வதேச மாடல்களுடன் ஒப்பிடும் போது சிறிதளவு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது. காரின் முன்புறம் கூர்மையான எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், மேம்பட்ட வடிவமைப்பில் புதிய பம்ப்பர்கள், முன்புற கிரில் மற்றும் ஃபாக் லேம்ப் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    காரின் உள்புறம் எட்டு அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி, எலெக்ட்ரிக் சன்ரூஃப், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், பின்புற ஏ.சி. வென்ட் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுகின்றன.

    2020 ஹோன்டா சிட்டி

    பாதுகாப்பிற்கு 2020 ஹோண்டா சிட்டி மாடலில் ஏ.பி.எஸ். இ.பி.டி. , குரூயிஸ் கண்ட்ரோல், வெஹிகில் ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல், பின்புறம் பார்க்கிங் சென்சார் மற்றும் கேமராக்கள், ஐசோஃபிக்ஸ் சைல்டு ஆன்க்கர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    புதிய 2020 ஹோண்டா சிட்டி மாடலில் பி.எஸ்.6 ரக 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. இதன் 1.5 லிட்டர் i-VTEC பெட்ரோல் என்ஜின் 117 பி.ஹெச்.பி. பவர், 145 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதன் 1.5 லிட்டர் i-DTEC டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது.

    இந்த என்ஜின் 100 பி.ஹெச்.பி. பவர், 200 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் சி.வி.டி. ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் சத்தமில்லாமல் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை உருவாக்கி வருதாக தகவல் வெளியாகியுள்ளது.



    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெயருக்கு ஏற்றார் போல் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கான்செப்ட் மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டரை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் என தெரிகிறது.

    புதிய ஹீரோ இ மேஸ்ட்ரோ கான்செப்ட் பற்றி அதிக விவரங்கள் வெளியாகவில்லை. எனினும் கான்செப்ட் மாடலின் தோற்றம் மேஸ்ட்ரோ எட்ஜ் 125 மாடலை போன்றே காட்சியளிக்கிறது. விற்பனைக்கு வரும் பட்சத்தில் சக்திவாந்த லித்தியம் அயன் பேட்டரி கொண்ட இ மேஸ்ட்ரோ ஸ்கூட்டரின் விலை ரூ. 1 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது.

    ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ்

    இந்தியாவில் ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் ஹீரோ எலெக்ட்ரிக் பிராண்டுகள் தனித்தனியே இயங்கி வாகனங்களை உருவாக்கி வருகின்றன. ஹீரோ இ மேஸ்ட்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஹீரோ பிராண்டின் ஆய்வு மற்றும் உற்பத்தி பிரிவுக்கான ஆலையில் உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது.

    இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மோகம் தற்சமயம் குறைவாக இருந்தாலும், எதிர்காலத்தில் இது முற்றிலும் மாறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக பஜாஜ் ஆட்டோ மற்றும் டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி போன்ற முன்னணி நிறுவனங்கள் தங்களின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளன.
    ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் 2020 ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் கார் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.



    2020 ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் எஸ்.யு.வி. இந்தியாவில் மார்ச் 6-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ஏழு பேர் பயணிக்கக்கூடிய டிகுவான் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இத்துடன் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் டி ராக் காரையும் அறிமுகம் செய்தது.

    தற்சமயம் புதிய 2020 ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் காருக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கப்பட்டுவிட்டது. டிகுவான் ஆல்ஸ்பேஸ் கார் இந்தியாவில் ஹோண்டா சி.ஆர்.-வி, டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு என்டேவர் மற்றும் மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 போன்ற கார்களுக்கு போட்டியாக அமைகிறது.

    2020 ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ்

    புதிய 2020 ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் கார் டர்போசார்ஜ் செய்யப்பட்ட 2.0 டி.எஸ்.ஐ. என்ஜின், 187 பி.ஹெச்.பி., 7 ஸ்பீடு டி.எஸ்.ஜி. ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஸ்டான்டர்டு அம்சமாக இருக்கிறது. இத்துடன் புதிய காரில் 4 மோஷன், ஆல் வீல் டிரைவ் சிஸ்டம், 4 மோஷன் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டிருக்கிறது.  

    ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் கார் ஒரே வடிவமைப்பு கொண்டிருக்கிறது. மாற்றங்களின் படி பெரிய ஸ்பாயிலர், கிளாஸி பிளாக் ஷேட், பின்பற பம்ப்பர் மற்றும் கிளாஸி பிளாக் கொண்டிருக்கிறது. இத்துடன் முன்புறம் புதிய எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், டூயல் டோன் 17 இன்ச் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன.

    தற்சமயம் டிகுவான் எஸ்.யு.வி. விலை ரூ. 28.07 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 31.46 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய 2020 ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் கார் விலை சற்றே அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் 2020 மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.சி. கூப் ஃபேஸ்லிஃப்ட் கார் வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.



    2020 மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.சி. கூப் ஃபேஸ்லிஃப்ட் கார் இந்தியாவில் மார்ச் 3-ம் தேதி வெளியாகிறது. சர்வதேச சந்தையில் இந்த கார் 2019 ஜெனிவா மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

    ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ஜி.எல்.சி. கூப் மாடலில் பல்வேறு காஸ்மெடிக் அப்கிரேடுகள் செய்யப்பட்டுள்ளது. கூப் எஸ்.யு.வி. மாடலில் மேம்பட்ட பவர்டிரெயின் வழங்கப்படும் என தெரிகிறது. அந்த வகையில் புதிய காரில் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுறது. இது பி.எஸ்.6 விதிகளுக்கு பொருந்தும் வகையில் இருக்கும் என கூறப்படுகிறது.

    2020 மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.சி. கூப் ஃபேஸ்லிஃப்ட்

    இந்தியாவில் ஜி.எல்.சி. கூப் மாடல் அறிமுகம் செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும். முன்னதாக இந்த காரின் ஏ.எம்.ஜி. வெர்ஷன் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டன. சர்வதேச சந்தையில் மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.சி. கூப் ஃபேஸ்லிஃப்ட் 2 பெட்ரோல் மற்றும் 3 டீசல் மோட்டார் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது.

    இதன் 200 4மேடிக் என்ஜின் 197 பி.ஹெச்.பி. பவர், 320 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதன் 300 4மேடிக் என்ஜின் 258 பி.ஹெச்.பி. பவர், 370 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதன் டீசல் மோட்டார் 163 பி.ஹெச்.பி. முதல் 245 பி.ஹெச்.பி. பவர் வழங்குகிறது. 

    கூப் எஸ்.யு.வி. மாடலில் டைமண்ட் பேட்டன் கிரில், ஃபிளான்க்டு மேம்பட்ட எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், மேம்பட்ட முன்புற பம்ப்பர் வழங்கப்பட்டுள்ளது. பின்பறம் புதிய டிஃப்யூஸர், ஆங்குலர் எக்சாஸ்ட் டிப், புதிய வடிவமைப்பு கொண்ட எல்.இ.டி. டெயில் லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன.
    ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் 2020 ஃபிகோ, ஆஸ்பையர், ஃபிரீஸ்டைல் பி.எஸ்.6 மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.



    ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் பி.எஸ்.6 ரக ஃபிகோ, ஆஸ்பையர் மற்றும் ஃபிரீஸ்டைல் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஃபோர்டு ஃபிகோ, ஃபிரீஸ்டைல் மற்றும் ஆஸ்பையர் பி.எஸ்.6 மாடல்களின் விலை முறையே ரூ. 5.39 லட்சம், ரூ. 5.89 லட்சம் மற்றும் ரூ. 5.99 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    புதிய ஃபோர்டு ஃபிகோ பி.எஸ்.6 மாடல்களின் விலை ரூ. 5.39 லட்சத்தில் துவங்குகிறது. இது பி.எஸ்.4 மாடலை விட ரூ. 16,000 அதிகம் ஆகும். டாப் எண்ட் புளூ வேரியண்ட் விலை ரூ. 7.85 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விலைகள் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    2020 ஃபோர்டு ஆஸ்பையர்

    ஃபிரீஸ்டைல் மற்றும் ஆஸ்பையர் பி.எஸ்.6 மாடல்களின் விலை முறையே ரூ. 5.89 லட்சம் மற்றும் ரூ. 8.19 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் விலை முந்தைய மாடல்களை விட முறையே ரூ. 2000 மற்றும் ரூ. 37,000 குறைவாகும்.

    இதேபோன்று ஃபோர்டு ஆஸ்பையர் பி.எஸ்.6 மாடல்களின் விலை ரூ. 4000 முதல் ரூ. 38000 வரை குறைந்திருக்கிறது. இவற்றின் விலை ரூ. 5.99 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 8.37 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விலைகள் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    2020 ஃபோர்டு ஃபிரீஸ்டைல்

    மூன்று மாடல்களும் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. பி.எஸ்.6 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 95 பி.ஹெச்.பி. பவர், 119 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதன் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் 100 பி.ஹெச்.பி. பவர், 215 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இரு என்ஜின்களும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் வருகிறது.

    புதிய மேம்பட்ட என்ஜின்களை தவிர புதிய ஃபோர்டு ஃபிகோ, ஃபிரீஸ்டைல் மற்றும் ஆஸ்பையர் மாடல்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.
    டொயோட்டா நிறுவனத்தின் சிறிய எஸ்.யு.வி. காருக்கான புதிய டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.



    டொயோட்டா நிறுவனம் விரைவில் புதிய எஸ்.யு.வி. கார் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்நிலையில், வெளியீட்டிற்கு முன் புதிய கார் டீசரை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

    டீசரின்படி புதிய டொயோட்டா கார் சிறிய எஸ்.யு.வி. மாடலாக இருக்கும் என தெரிகிறது. கார் அளவுகள் பற்றி அதிகளவு விவரங்கள் இல்லாத நிலையில், டெயில் லேம்ப்கள் மற்றும் பேட்ஜ்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    டொயோட்டா எஸ்.யு.வி. டீசர்

    புதிய காரில் அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ், ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம் மற்றும் டொயோட்டாவின் புதிய ஹைப்ரிட் பவர்டிரெயின் தொழில்நுட்பம் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களில் புதிய கார் மெல்லிய எல்.இ.டி. டெயில் லேம்ப்கள் டெயில் கேட் வரை நீளும் என கூறப்படுகிறது.

    முன்னதாக காரின் வரைபடத்தை மட்டும் டொயோட்டா வெளியிட்டது. அதில் காரின் பக்கவாட்டு பகுதி மட்டும் காணப்பட்டது. மேலும் இதில் ஃபிளாட் ரூஃப்லைன் வழங்கப்படும் என்றும் தெரிகிறது.
    கியா மோட்டார்ஸ் நிறுவனம் ஜெனிவா மோட்டார் விழாவில் புதிய சொரென்டோ எஸ்.யு.வி. காரை அறிமுகம் செய்தது.



    கியா மோட்டார்ஸ் நிறுவனம் ஜெனிவா மோட்டார் விழாவில் புதிய சொரென்டோ எஸ்.யு.வி. மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய தலைமுறை சொரென்டோ காரில் பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்த வகையில் புதிய காரில் ஹெட்லேம்ப்களில் எல்.இ.டி. டேடைம் ரன்னிங் லைட்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    காரின் உள்புறம் முந்தைய மாடலில் இருந்ததை விட அதிகளவு அப்டேட் செய்யப்பட்டு அதிநவீன இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பிரீமியம் பொருட்களால் ஆன அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. முந்தைய மாடல்களை போன்று புதிய மாடலிலும் அதிக இடவசதி இருப்பதை கியா மோட்டார்ஸ் உறுதி செய்திருக்கிறது.

    கியா சொரென்டோ

    இதன் கேபின் மெட்டாலிக் ரிம்களை கொண்டிருப்பதோடு, லெதர் இருக்கைகள், மரத்தாலான மேசைகள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம் கனெக்டிவிட்டி, டிரைவர் அசிஸ்டண்ஸ் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

    புதிய சொரென்டோ மாடலில் 10.25 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆடியோ-விஷூவல் நேவிகேஷன் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் 12.3 இன்ச் ஹை-ரெசல்யூஷன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது.
    டொயோட்டா நிறுவனம் தனது புத்தம் புதிய பிரீமியம் எம்.பி.வி. காரின் இந்திய வெளியீட்டு தேதியை அசதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.



    டொயோட்டா நிறுவனம் தனது பிரீமியம் எம்.பி.வி.- வெல்ஃபயர் கார் மாடலை இந்தியாவில் பிப்ரவரி 26-ம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. புதிய வெல்ஃபயர் காரில் பல்வேறு பிரீமியம் அம்சங்கள், உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் வழங்கப்படுகின்றன.

    டொயோட்டா வெல்ஃபயர் காரில் 2.5 லிட்டர் பெட்ரோல் ஹைப்ரிட் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 180 பி.ஹெச்.பி. பவர், 235 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் சி.வி.டி. ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. டொயோட்டா நிறுவனத்தின் புதிய பிரீமியம் எம்.பி.வி. கார், அளவில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    இது அதிக இடவசதியை வழங்குவதோடு, பிரீமியம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை கொண்டிருக்கிறது. இத்துடன் தொடுதிரை வசதி கொண்ட பெரிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் வயர்லெஸ் சார்ஜிங், புஷ் பட்டன் ஸ்டார்ட்-ஸ்டாப் வழங்கப்படுகிறது.

    டொயோட்டா வெல்ஃபயர்

    பாதுகாப்பிற்கு டொயோட்டா வெல்ஃபயர் மாடலில் பல்வேறு ஏர்பேக், எலெக்டிரானிக் ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல், பின்புற கேமரா, ஏ.பி.எஸ்., இ.பி.டி., எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், ஹில்-ஹோல்டு அசிஸ்ட் உள்ளிட்டவை முதன்மை அம்சங்களாக இருக்கின்றன. இதுதவிர பல்வேறு இதர அம்சங்களும் வழங்கப்படுகிறது.

    டொயோட்டா வெல்ஃபயர் மாடல் இந்தியாவில் பிரபலமாக இருக்கும் இன்னோவா க்ரிஸ்டா மாடலுக்கு அடுத்த நிலையில் நிறுத்தப்படும் என தெரிகிறது. அந்த வகையில் இது டொயோட்டா நிறுவனத்தின் புதிய ஃபிளாக்‌ஷிப் மாடலாக வெளியாக இருக்கிறது. இந்தியாவில் டொயோட்டா வெல்ஃபயர் மெர்சிடிஸ் பென்ஸ் வி கிளாஸ் மாடலுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது.
    மினி நிறுவனத்தின் புதிய கிளப்மேன் இந்தியன் சம்மர் ரெட் எடிஷன் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.



    மினி நிறுவனம் இந்தியாவில் கிளப்மேன் இந்தியன் சம்மர் ரெட் எடிஷன் காரை அறிமுகம் செய்துள்ளது. புதிய லிமிட்டெட் எடிஷன் மாடலின் விலை ரூ. 44.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    புதிய மினி கிளப்மேன் லிமிட்டெட் எடிஷன் காருக்கான முன்பதிவுகள் துவங்கியுள்ளது. இதன் விற்பனை அமேசான் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக நடைபெறுகிறது. இந்திய சந்தையில் இந்த கார் வெறும் 15 யூனிட்கள் மட்டுமே விற்பனைக்கு வழங்கப்படுகிறது. இது ஸ்டான்டர்டு மாடலில் இல்லாத பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டிருக்கிறது.

    அந்த வகையில் இந்த காரின் வெளிப்புறம் பியானோ பிளாக் அக்சென்ட்கள், முன்புற கிரிலில் மிரர் கேப்கள் வழங்கப்படுகிறது. ஸ்பெஷல் எடிஷன் மாடலில் சிறிதளவு மேம்பட்ட எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், ஃபாக் லேம்ப் மற்றும் எல்.இ.டி. டெயில் லைட்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் மேலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

    மினி கிளப்மேன் இந்தியன் சம்மர் ரெட் எடிஷன்

    காரின் உள்புறம் மினி கிளப்மேன் இந்தியன் சம்மர் ரெட் எடிஷனில் 6.5 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், எல்.இ.டி. ரிங், பானரோமிக் கிளாஸ் ரூஃப், பியானோ பிளாக் ஹைலைட்கள், ஆம்பியன்ட் லைட்டிங், ப்ரோஜெக்‌ஷன் லேம்ப், மெமரி அம்சம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

    மினி கிளப்மேன் இந்தியன் சம்மர் ரெட் எடிஷன் கார் 2.0 லிட்டர் ட்வின் டர்போ பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 190 பி.ஹெச்.பி. பவர், 280 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 7-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்பட்டுள்ளது. இந்த கார் மணிக்கு அதிகபட்சமாக 228 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.
    ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் புதிய வென்டோ காரின் வரைபடங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



    ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அடுத்த தலைமுறை வென்டோ காம்பேக்ட் செடான் கார் வரைபடங்களை வெளியிட்டுள்ளது. இதில் காரின் வெளிப்புற தோற்றம் தெளிவாக காட்சியளிக்கிறது.

    அந்த வகையில் புதிய வென்டோ காரின் பொனெட் ஃபோக்ஸ்வேகன் ஜெட்டா மாடலை தழுவி உருவாக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த காம்பேக்ட் செடான் மாடல் இந்தியாவில் அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. இதில் மேம்பட்ட பம்ப்பர், எல்.இ.டி. ஹெட்லைட்கள், பெரிய ஏர் டேம் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    ஃபோக்ஸ்வேகன் வென்டோ வரைபடம்

    காரின் பின்புறம் புதிய டெயில் லைட்கள், பிரம்மாண்ட பம்ப்பர்கள், ஃபாக்ஸ் டூயல் எக்சாஸ்ட் டிப்கள் வழங்கப்படுகிறது. புதிய வென்டோ மாடல் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் கொண்டிருக்கும் என தெரிகிறது. இத்துடன் கிளைமேட் கண்ட்ரோல் பேனலும் புதிதாக வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    இந்த காரின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக 8 இன்ச் அளவில் உருவாகி இருக்கும் மிதக்கும் வகையிலான தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன் இருக்கும். இதன் இருக்கை மேம்படுத்தப்பட்டு முன்புறம் வென்டிலேட் செய்யப்பட்ட இருக்கைகள், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், பின்புறம் ஏ.சி. வென்ட்கள் வழங்கப்படலாம்.
    ஹூண்டாய் நிறுவனம் தனது புதிய காருக்கான டீசரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
     


    அடுத்த தலைமுறை ஹூண்டாய் ஐ20 எலைட் காரின் புதிய டீசர் வெளியிடப்பட்டது. இந்த கார் மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ஐ20 எலைட் மாடல் ஜெனீவா சர்வதேச மோட்டார் விழாவில் காட்சிப்படுத்தப்பட இருக்கிறது. இந்த விழா மார்ச் 5-ம் தேதி துவங்கி மார்ச் 15 வரை நடைபெற இருக்கிறது.

    வெளியீட்டிற்கு முன் புதிய காருக்கான டீசரை ஹூண்டாய் வெளியிட்டுள்ளது. டீசரின் படி புதிய காரின் முன்புறம் முழுக்க கேஸ்கேடிங் கிரில் வழங்கப்படுகிறது. இருபுறங்களிலும் பெரிய ஏர் வென்ட்களும், மேல்புறம் எல்.இ.டி. டெயில் லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன. 

    இதன் பொனெட்டில் கேரக்டர் லைன்கள் இடம்பெற்றிருக்கிறது. இவை காருக்கு அதிரடியான தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. இதே போன்ற வடிவமைப்பு காரின் பக்கவாட்டிலும் பின்பற்றப்பட்டுள்ளது. 

    ஹூண்டாய் ஐ20 எலைட் டீசர்

    இத்துடன் காரில் கூப் மாடல்களில் உள்ளதை போன்ற ரூஃப்லைன் மற்றும் கூர்மையான சி பில்லர் வழங்கப்படும் என தெரிகிறது. பெரிய டூயல்டோன் டைமண்ட் கட் அலாய் வீல்கள் காரின் தோற்றத்தை மேலும் அழகாக்குகின்றன. பின்புறம் கூர்மையான ஐரோப்பிய வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. இதில் ராப்-அரவுண்ட் பம்ப்பர் வழங்கப்படுகிறது.

    புதிய கார் டூயல் டோன் நிறங்களில் வெளியாகும் என தெரிகிறது. உள்புறத்தில் 10.25 இன்ச் ஸ்கிரீன்கள் வழங்கப்படலாம் என தெரிகிறது. இவை இன்ஸ்ட்ரூமென்ட் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் அம்சத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.
    ஆட்டோ எக்ஸ்போ 2020 விழாவில் எம்.ஜி. மோட்டார் நிறுவனம் இந்தியாவில் ஹெக்டார் பிளஸ் காரை அறிமுகம் செய்துள்ளது.



    எம்.ஜி. மோட்டார் நிறுவனம் ஹெக்டார் பிளஸ் காரை ஆட்டோ எக்ஸ்போ 2020 விழாவில் அறிமுகம் செய்தது. புதிய ஹெக்டார் பிளஸ் மாடலில் மூன்றாம் அடுக்கு இருக்கைகளை கொண்டிருக்கிறது. மேலும் இது முந்தைய மாடலை விட 40 எம்.எம். நீளமாக இருக்கிறது.

    எம்.ஜி. ஹெக்டார் பிளஸ்- ஆறு பேர் இருக்கை மற்றும் ஏழு பேர் இருக்கை என இருவிதங்களில் கிடைக்கிறது. காரின் வெளிப்புறம் ட்வீக் செய்யப்பட்டு புதிய குரோம் கிரில், புதிய தோற்றம் கொண்ட எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் ஹெக்டார் பிளஸ் மாடலில் எல்.இ.டி. டெயில் லைட்கள் மற்றும் புதிய பம்ப்பர் வழங்கப்பட்டுள்ளன.

    எம்.ஜி. ஹெக்டார் பிளஸ்

    புதிய ஹெக்டார் பிளஸ் மாடலில் 170 பி.ஹெச்.பி. பவர் வழங்கும் 2.0 லிட்டர் டீசல் மோட்டார் மற்றும் 1.5 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் யூனிட் மற்றும் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 6-ஸ்பீடு டி.சி.டி. வழங்கப்படுகிறது.

    இந்தியாவில் எம்.ஜி. ஹெக்டார் பிளஸ் மாடல் வரும் வாரங்களில் வெளியிடப்பட இருக்கிறது. புதிய ஹெக்டார் பிளஸ் டாடா கிராவிடாஸ் மாடலுக்கு நேரடி போட்டியாக அமைகிறது. 

    ×