என் மலர்
இது புதுசு
ஜாகுவார் நிறுவனத்தின் புதிய ஐ பேஸ் எலெக்ட்ரிக் கார் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் தனது முழு எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலான ஐ பேஸ் மார்ச் 9 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என அறிவித்து உள்ளது. புதிய ஐ பேஸ் மாடலுக்கான முன்பதிவு நவம்பர் மாதம் துவங்கியது. இதன் வினியோகம் மார்ச் மாத வாக்கில் துவங்க இருக்கிறது.
ஜாகுவார் ஐ பேஸ் மாடல் எஸ், எஸ்இ மற்றும் ஹெச்எஸ்இ என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கும். இந்த கார் புஜி வைட், கலெட்ரா ரெட், சன்டோரினி பிளாக், யுலொங் வைட், இன்டஸ் சில்வர், பிரென்ஸ் ரெட், கைசியெம் புளூ, பொராஸ்கோ கிரே, போர்டோபினோ புளூ, பரலூன் பியல் பிளாக் மற்றும் அருபா போன்ற நிறங்களில் கிடைக்கிறது.

புதிய ஜாகுவார் ஐ பேஸ் மாடலில் 90 கிலோவாட் லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் 389 பிஹெச்பி பவர் வழங்குகிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 4.8 நொடிகளில் எட்டிவிடும்.
இதில் உள்ள 90 கிலோவாட் பேட்டரி எட்டு வருடங்கள் அல்லது 1,60,000 கிலோமீட்டர் வாரண்டியுடன் வழங்கப்படுகிறது. இத்துடன் ஐந்து வருடங்களுக்கு சர்வீஸ் பேக்கேஜ், ஐந்து ஆண்டுகளுக்கு ஜாகுவார் ரோட்-சைடு அசிஸ்டண்ஸ், 7.4 கிலோவாட் ஏசி வால் மவுண்ட் செய்யப்பட்ட சார்ஜர் வழங்கப்படுகிறது.
மாசிராட்டி நிறுவனத்தின் 2021 ஜிப்லி ஹைப்ரிட் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
மாசிராட்டி நிறுவனத்தின் புதிய ஜிப்லி ஹைப்ரிட் செடான் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஹைப்ரிட் 2013 ஆம் ஆண்டு முதல் விற்பனை செய்யப்படும் ஸ்போர்ட்ஸ் செடான் மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.
எனினும், புதிய வெர்ஷனில் மைல்டு ஹைப்ரிட் பவர்டிரெயின் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய ஆடம்பர செடான் மாடல் வி6, வி8 மற்றும் புதிய மைல்டு ஹைப்ரிட் பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 2021 மாசிராட்டி ஜிப்லி மாடல் துவக்க விலை ரூ. 1.15 கோடி, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

புதிய ஜிப்லி ஹைப்ரிட் மாடலில் மேம்பட்ட கிரில், புதிய டெயில் லேம்ப் கிளஸ்டர்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதன் முன்புறம் எல்இடி அடாப்டிவ் மேட்ரிக்ஸ் ஹெட்லைட் மற்றும் எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதன் உள்புறம் 10.1 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது.
புதிய மாடலில் அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டண்ஸ் சிஸ்டம் மற்றும் ஸ்கைஹூக் சஸ்பென்ஷன் மற்றும் பிரெம்போ பிரேக்குகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. 2021 மாசிராட்டி ஜிப்லி மாடலில் 2.0 லிட்டர், 4 சிலிண்டர் பெர்டோல் மைல்டு ஹைப்ரிட் பவர்டிரெயின் வழங்கப்பட்டு உள்ளது.
இந்த என்ஜின் 325 பிஹெச்பி பவர், 450 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 5.7 நொிகளில் எட்டிவிடும். மேலும் இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 255 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டு இருக்கிறது.
ஆடி நிறுவனத்தின் இ டிரான் ஜிடி மாடல் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஜெர்மன் நாட்டு கார் உற்பத்தியாளரான ஆடி புதிய இ டிரான் ஜிடி மாடலை பிப்ரவரி 9 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. முன்னதாக இந்த கார் ஆர்க்டிக் பகுதியில் சோதனை செய்யப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது.
அதிநவீன ஸ்டைலிங் மட்டுமின்றி புதிய ஆடி இ டிரான் மேம்படுத்த பாதுகாப்பு அம்ங்களான அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல், பிளைன்ட் ஸ்பாட் மாணிட்டரிங், லேண் கீப் அசிஸ்ட், ஆட்டோ எமர்ஜன்சி பிரேக்கிங் உள்ளிட்டவைகளை கொண்டிருக்கும் என தெரிகிறது.

இதுதவிர முதற்கட்டமாக ஸ்டான்டர்டு மாடலும் பின் ஆர்எஸ் மாடல் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஆடி இ டிரான் ஜிடி மாடல் 582 பிஹெச்பி திறன் கொண்டிருக்கும் என தெரிகிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.5 நொடிகளில் எட்டிவிடும்.
இதன் ஆர்எஸ் வெர்ஷன் 628 பிஹெச்பி பவர் வழங்கும் என்றும் இது மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 3.0 நொடிகளில் எட்டிவிடும் என கூறப்படுகிறது. இதன் ஸ்டான்டர்டு மாடல் ஒருமுறை சார்ஜ் செய்தால் 401 கிலோமீட்டர் வரை செல்லும் என தெரிகிறது.
இதில் வழங்கப்படும் பேட்டரியை 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 20 நிமிடங்களே ஆகும் என கூறப்படுகிறது. இந்த கார் உள்புறம் பிரீமியம் இருக்கை, பெரிய தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற அம்சங்கள் வழங்கப்படுகிறது.
போர்ஷ் நிறுவனத்தின் 2021 பனமெரா மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
போர்ஷ் நிறுவனத்தின் 2021 பனமெரா மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன. புதிய சீரிஸ் பனமெரா, பனமெரா ஜிடிஎஸ், பனமெரா டர்போ எஸ் மற்றும் பனமெரா டர்போ எஸ்இ ஹைப்ரிட் என நான்கு மாடல்களில் கிடைக்கிறது. இவற்றின் துவக்க விலை ரூ. 1.45 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய மாடல்களில் பெரிய ஏர் இன்டேக் கிரில், பக்கவாட்டில் பெரிய கூலிங் வென்ட்கள், முன்புறம் சிங்கில் பார் லைட் யூனிட் வழங்கப்பட்டு இருக்கின்றன. டர்போ எஸ் மாடலில் சற்றே பெரிய ஏர் இன்லெட்கள் வழங்கப்பட்டு உள்ளன. பின்புறம் லைட் ஸ்ட்ரிப், எல்இடி டெயில் லைட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

பனமெரா மாடல்களில் 2.9 லிட்டர் வி6 பெட்ரோல் மோட்டார் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 325 பிஹெச்பி பவர், 450 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. பனமெரா ஜிடிஎஸ் மாடலில் வி8 என்ஜின் 473 பிஹெச்பி பவர், 620 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
டர்போ எஸ்இ ஹைப்ரிட் வேரியண்ட் வி8 பை-டர்போ மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இவை இணைந்து 552 பிஹெச்பி பவர், 750 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதனுடன் வழங்கப்பட்டுள்ள 17.9 கிலோவாட் பேட்டரி புல் எலெக்ட்ரிக் மோடில் 59 கிலோமீட்டர்கள் வரை செல்கிறது.
2021 மஹிந்திரா எக்ஸ்யுவி300 புது வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
மஹிந்திரா நிறுவனம் தனது பிரபல காம்பேக்ட் எஸ்யுவி மாடலான எக்ஸ்யுவி300 பெட்ரோல் ஆட்டோஷிப்ட் வேரியண்ட்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது. புதிய ஆட்டோஷிப்ட் வசதி எக்ஸ்யுவி300 டாப் எண்ட் டபிள்யூ8 (ஒ) வேரியண்ட்டில் மட்டுமே வழங்கப்படுகிறது.
புதிய மஹிந்திரா எக்ஸ்யுவி300 பெட்ரோல் ஆட்டோஷிப்ட் வேரியண்ட் விலை ரூ. 9.95 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய டாப் எண்ட் வேரியண்ட் டூயல்-டோன் ரெட் மற்றும் அக்வா-மரைன் நிறங்களில் கிடைக்கிறது. பேஸ் வேரியண்ட் புதிதாக கேலக்ஸி கிரே நிறத்தில் கிடைக்கிறது.

ஆட்டோஷிப்ட் மற்றும் புதிய நிறம் தவிர எக்ஸ்யுவி300 டபிள்யூ8 (ஒ) வேரியண்ட் மஹிந்திராவின் புதிய புளூசென்ஸ் பிளஸ் கனெக்டெட் தொழில்நுட்ப வசதியை பெறுகிறது. புதிய கனெக்டெட் தொழில்நுட்பத்தில் 40-க்கும் அதிக வசதிகளை கொண்டுள்ளது.
இதில் லொகேஷன் சார்ந்த வசதிகள், பாதுகாப்பு அம்சங்கள், ரிமோட் வெஹிகில் கண்ட்ரோல் மற்றும் இதர இன்போடெயின்மென்ட் கண்ட்ரோல்கள் வழங்கப்படுகின்றன. புதிய எக்ஸ்யுவி300 தற்சமயம் இசிம் வசதியை கொண்டுள்ளது. இது செயலி மூலம் ஸ்மார்ட்போனுடன் இணைந்து செயல்படுகிறது.
சிட்ரோயன் நிறுவனத்தின் முதல் எஸ்யுவி மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
சிட்ரோயன் நிறுவனம் இந்திய சந்தையில் தனது முதல் மாடலான சி5 ஏர்கிராஸ் எஸ்யுவி-யை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ் விற்பனை இந்தியாவில் துவங்குகிறது. முன்னதாக இதன் விற்பனை கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக தாமதமானது குறிப்பிடத்தக்கது.
கிராஸ்ஓவர் டிசைன், பல்வேறு அம்சங்கள், உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பத்துடன் சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ் உருவாகி இருக்கிறது. இந்தியாவில் இந்த கார் பிரீமியம் மிட்-சைஸ் எஸ்யுவி பிரிவில் களமிறங்குகிறது. இது 2021 ஜீப் காம்பஸ், போக்ஸ்வேகன் டி ராக் மற்றும் ஸ்கோடா குஷக் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ் மாடலில் 2.0 லிட்டர் டீசல் யூனிட் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 175 பிஹெச்பி பவர், 400 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்படுகிறது. இந்தியாவில் இந்த மாடல் பீல் மற்றும் ஷைன் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
இத்துடன் பல்வேறு சிங்கில் மற்றும் டூயல்-டோன் நிறங்களில் கிடைக்கிறது. மேலும் இந்த மாடலில் பானரோமிக் சன்ரூப், டூயல் சோன் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், ஆம்பியன்ட் லைட்டிங், ஏர் பியூரிபையர், ஸ்ப்லிட் ஏசி வென்ட் என பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
ஹோண்டா நிறுவனத்தின் புதிய மோட்டார்சைக்கிள் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஹோண்டா நிறுவனம் புதிய மோட்டார்சைக்கிளை பிப்ரவரி 16 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இதற்கென அந்நிறுவனம் டீசரை வெளியிட்டு இருக்கிறது. டீசரின் படி புதிய மோட்டார்சைக்கிள் ஸ்கிராம்ப்ளர் ரக மாடலாக இருக்கும் என தெரிகிறது.
புதிய மோட்டார்சைக்கிளில் சிபி300ஆர் மாடலில் உள்ளதை போன்ற டெயில் லேம்ப், க்ரோம் சஸ்பென்ஷன் செட்டப் வழங்கப்படுகிறது. இவைதவிர புதிய மோட்டார்சைக்கிளில் பிளாக்டு-அவுட் உபகரணங்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஹோண்டா மோட்டார்சைக்கிளில் 348சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜின் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சிபி350 மாடலில் வழங்கியதை போன்ற செயல்திறன் புதிய மாடலிலும் வழங்கும் என கூறப்படுகிறது.
இத்துடன் புதிய மாடலில் ஹோண்டா செலக்டபில் டார்க் கண்ட்ரோல், ப்ளூடூத் சார்ந்த இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், எல்இடி லைட்டிங் வழங்கப்படலாம் என தெரிகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டியாகோ லிமிடெட் எடிஷன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் டியாகோ லிமிடெட் எடிஷன் மாடலை அறிமுகம் செய்தது. இந்தியாவில் இதன் விலை ரூ. 5.79 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய லிமிடெட் எடிஷன் மாடல் எக்ஸ்டி வேரியண்டை தழுவி உருவாகி இருக்கிறது.
புதிய லிமிடெட் எடிஷன் மாடல் பிளேம் ரெட், பியல்சென்ட் வைட் மற்றும் டேடோனா கிரே என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. வெளிப்புறம் 14 இன்ச் அலாய் வீல்கள் கிளாஸ் பினிஷ் செய்யப்பட்டு இருக்கிறது. இவை தவிர புதிய மாடலில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

உள்புறம் 5 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட ஹார்மன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், வாய்ஸ் கமாண்ட் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் ரிவர்ஸ் பார்கிங் சென்சார் மற்றும் டிஸ்ப்ளே வசதி வழங்கப்படுகிறது. புதிய டியாகோ மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது.
இந்த என்ஜின் 85 பிஹெச்பி பவர், 113 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இதன் டாப் எண்ட் மாடல்களில் ஏஎம்டி டிரான்ஸ்மிஷன் வசதி வழங்கப்படுகிறது.
இந்தியாவில் சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ் மாடலின் உற்பத்தி துவங்கி உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ் மாடலின் உற்பத்தி இந்தியாவில் துவங்கி உள்ளது. இந்த மாடல் தமிழ் நாட்டில் உள்ள திருவள்ளூர் ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் சி5 ஏர்கிராஸ் அந்நிறுவனத்தின் பிளாக்ஷிப் மாடல் ஆகும். மேலும் இந்தியாவில் இது முதல் மாடல் ஆகும்.
இந்திய சந்தையில் புதிய சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ் மாடல் பிப்ரவரி 1 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் வெளியீடு முதல் காலாண்டில் துவங்குகிறது. புதிய சி5 ஏர்கிராஸ் மாடல் உற்பத்தி துவங்கி உள்ள நிலையில், இந்த கார் 2.5 லட்சம் கிலோமீட்டர்களுக்கும் மேல் பல்வேறு நிலைகளில் சோதனை செய்யப்பட்டதாக சிட்ரோயன் தெரிவித்து உள்ளது.

புதிய சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ் மாடலில் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 175 பிஹெச்பி பவர், 400 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
காரின் உள்புறம் பிளாட்-பாட்டம் ஸ்டீரிங் வீல், மவுண்ட் செய்யப்பட்ட கண்ட்ரோல்கள், எட்டு அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, 12.3 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய சபாரி மாடல் முன்பதிவு மற்றும் இதர விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய சபாரி மாடல் விவரங்கள் வெளியிடப்பட்டு இருக்கிறது. மேலும் புதிய எஸ்யுவி மாடலுக்கான முன்பதிவு பிப்ரவரி 4 ஆம் தேதி துவங்குகிறது. முன்பதிவு கட்டண விவரங்கள் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.
புதிய டாடா சபாரி அந்நிறுவனத்தின் புதிய பிளாக்ஷிப் மாடலாக அறிமுகமாகிறது. இந்த மாடல் ஆறு வேரியண்ட் மற்றும் மூன்றுக்கும் அதிக நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. முன்னதாக புதிய சபாரி மாடல் கிரவிடாஸ் எனும் பெயரில் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிக்கு வைக்கப்பட்டது.

இது ஹேரியர் எஸ்யுவி-யின் மூன்றடுக்கு வேரியண்ட் ஆகும். இதனால் இரு மாடல்களிடையே பெரும்பாலான அம்சங்கள் மற்றும் ஸ்டைலிங் ஒரே மாதிரி காட்சியளிக்கும் என தெரிகிறது. புதிய சபாரி மாடலில் டிரை-ஏரோ மெஷ் கிரில், பிளேர் செய்யப்பட்ட வீல் ஆர்ச்கள், பெரிய ஒவர்ஹேங் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
புதிய சபாரி மாடலில் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட இருக்கிறது. இந்த என்ஜின் 168 பிஹெச்பி பவர், 350 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படலாம். இந்த மாடலில் நான்கு டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்படுகின்றன.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் டாடா சபாரி மாடல் விற்பனையகம் வந்தடைந்தது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய அல்ட்ரோஸ் மாடலை தொடர்ந்து தற்சமயம் சபாரி மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புதிய டாடா சபாரி மூன்றடுக்கு எஸ்யுவி மாடல் வரும் நாட்களில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், வெளியீட்டுக்கு முன் புதிய சபாரி மாடல் விற்பனையகத்துக்கு வந்தடைந்துள்ளது. இதனை உறுதிப்படுத்தும் ஸ்பை படங்களில் புதிய சபாரி மாடல் சிக்னேச்சர் டார்க் புளூ நிறம் கொண்டிருக்கிறது. இதுதவிர புதிய கார் அசத்தலான கிரில், ஸ்ப்லிட் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப், சில்வர் பாக்ஸ் பிளேட் கொண்டுள்ளது.

பக்கவாட்டில் 18 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள், பெட்டல்-டைப் டிசைன், ஸ்டெப்டு-அப் ரூப் உள்ளிட்டவை காணப்படுகிறது. பின்புறம் புதிய ஹேரியர் மாடலில் ஸ்ப்லிட் டெயில் லேம்ப்கள், கிளாஸ் பிளாக் பினிஷ் செய்யப்பட்டு இருக்கிறது.
புதிய டாடா சபாரி மாடலில் ஹேரியர் மாடலில் உள்ளதை போன்றே 2.0 லிட்டர் க்ரியோடெக் டீசல் என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. ஹேரியர் மாடலில் இந்த என்ஜின் 168 பிஹெச்பி பவர், 320 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
இந்தியாவில் புதிய டாடா சபாரி மாடல் எம்ஜி ஹெக்டார் பிளஸ், டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா மற்றும் மஹிந்திரா எக்ஸ்யுவி500 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது.
2021 டுகாட்டி ஸ்கிராம்ப்ளர் ஐகான் மற்றும் ஸ்கிராம்ப்ளர் ஐகான் டார்க் மோட்டார்சைக்கிள்கள் இந்திய சந்தையில் அறிமுகம்.
டுகாட்டி நிறுவனம் இந்தியாவில் புதிதாக ஸ்கிராம்ப்ளர் ஐகான் மற்றும் ஸ்கிராம்ப்ளர் ஐகான் டார்க் மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 8.49 லட்சம் மற்றும் ரூ. 7.99 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இரு மோட்டார்சைக்கிள் மாடல்களின் அம்சங்கள் மற்றும் என்ஜின் ஒன்று தான். எனினும், இவை நிறங்களின் அடிப்படையில் வித்தியாசப்படுகிறது. ஸ்கிராம்ப்ளர் ஐகான் டார்க் மாடல் மேட் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இத்துடன் மெஷின் பினிஷ் செய்யப்பட்ட அலுமினியம் பெல்ட் கவர்கள், மாற்றக்கூடிய அலுமினியம் சைடு பேனல்கள் வழங்கப்படுகின்றன.
இரு மாடல்களிலும் புல் எல்இடி லைட்டிங், பிளாட்டர் சீட், 10-ஸ்போக் அலாய் வீல்கள், அப்சைடு-டவுன் போர்க், பின்புறம் மோனோ ஷாக், இரு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக், போஷ் கார்னெரிங் ஏபிஎஸ் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
புதிய டுகாட்டி ஸ்கிராம்ப்ளர் ஐகான் மற்றும் ஸ்கிராம்ப்ளர் ஐகான் டார்க் மாடல்களில் பிஎஸ்6 ரக 803சிசி, ஏர்-கூல்டு, ல்-ட்வின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
இந்தியாவில் இரு டுகாட்டி மோட்டார்சைக்கிள்களுக்கான முன்பதிவு நாடு முழுக்க அனைத்து விற்பனையகங்களிலும் துவங்கி நடைபெற்று வருகிறது.






