என் மலர்tooltip icon

    இது புதுசு

    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய EQA மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது EQA எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய எஸ்யுவி அந்நிறுவனத்தின் என்ட்ரி-லெவல் எலெக்ட்ரிக் கார் ஆகும். புதிய கார் விற்பனை சர்வதேச சந்தையில் வரும் மாதங்களில் துவங்க இருக்கிறது.

    புதிய மெர்சிடிஸ் பென்ஸ் EQA வெளிப்புற தோற்றம் ஜிஎல்ஏ மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. எனினும், இதன் வடிவமைப்பு மற்றும் அம்சங்கள் தனித்துவமாக வழங்கப்பட்டு உள்ளன. அதன்படி புதிய கார் கிளாஸ்-பிளாக் பினிஷ் கொண்ட பேனல், எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

     மெர்சிடிஸ் பென்ஸ் EQA

    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் எஸ்யுவி 66.5kWh பேட்டரி மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மோட்டார் 188 பிஹெச்பி பவர் வழங்கும் திறன் கொண்டு இருக்கிறது. இது டபுள்-டெக்கர் லித்தியம் அயன் பேட்டரி பேக் கொண்டுள்ளது.

    புதிய EQA எலெக்ட்ரிக் கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் 480 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இதன் டூயல் மோட்டார் வேரியண்ட் ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கிலோமீட்டர்களுக்கும் அதிகமாக செல்லும் என மெர்சிடிஸ் பென்ஸ் தெரிவிக்கிறது.
    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் 2021 ஜிஎல்சி மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் 2021 ஜிஎல்சி எஸ்யுவி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஜிஎல்சி மாடலின் துவக்க விலை ரூ. 57.40 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய ஜிஎல்சி மாடல் மெர்சிடிஸ் மி கனெக்டெட் தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது. இந்த தொழில்நுட்பம் முதலில் எஸ் கிளாஸ் மேஸ்ட்ரோ எடிஷனில் வழங்கப்பட்டு இருந்தது. தற்சமயம் இது மெர்சிடிஸ் நிறுவனத்தின் அனைத்து மாடல்களிலும் வழங்கப்படுகிறது.

     2021 மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி

    கனெக்டெட் தொழில்நுட்பம் மட்டுமின்றி புது மாடலில்ல பல்வேறு அம்சங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. அதன்படி முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், என்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப், 360 டிகிரி கேமரா உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது.

    புதிய பென்ஸ் மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் பெட்ரோல் என்ஜின் 195 பிஹெச்பி, 320 என்எம் டார்க் செயல்திறன் மற்றும் டீசல் என்ஜின் 192 பிஹெச்பி பவர், 400 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகின்றன.

    வால்வோ நிறுவனத்தின் புதிய 2021 எஸ்60 மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

    வால்வோ கார்ஸ் நிறுவனம் இந்தியாவில் புதிய 2021 எஸ்60 செடான் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய வால்வோ எஸ்60 மாடல் இன்ஸ்க்ரிப்ஷன் எனும் ஒற்றை வேரியண்ட்டில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் 2021 வால்வோ எஸ்60 விலை ரூ. 45.90 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய 2021 வால்வோ எஸ்60 மாடலுக்கான முன்பதிவு ஆன்லைன் நடைபெறுகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 1 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய எஸ்60 விநியோகம் மார்ச் மாதத்தில் துவங்க இருக்கிறது.

    புதிய வால்வோ எஸ்60 அந்நிறுவனத்தின் சமீபத்திய வடிவமைப்பில் உருவாகி இருக்கிறது. இதில் அகலமான கிரில், நடுவில் வால்வோ லோகோ இடம்பெற்று இருக்கிறது. பக்கவாட்டுகளில் மெல்லிய எல்இடி தார் ஹேமர் ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டு உள்ளது.

     2021 வால்வோ எஸ்60

    முன்புற பம்ப்பரில் பெரிய ஏர் இன்டேக் வழங்கப்பட்டு உள்ளது. பக்கவாட்டில் குறைந்த அளவு வடிவமைப்பு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் பெரிய டூயல்-டோன் அலாய் வீல்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. பின்புறம் சி வடிவ எல்இடி டெயில் லைட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

    2021 வால்வோ எஸ்60 செடான் மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 187 பிஹெச்பி பவர், 300 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. தற்சமயம் இந்த மாடலில் டீசல் என்ஜின் வழங்கப்படவில்லை.

    இந்தியாவில் 2021 வால்வோ எஸ்60 மாடல் க்ரிஸ்டர் வைட் பியல், ஆனிக்ஸ் பிளாக், மேபிள் பிரவுன், டெனிம் புளூ மற்றும் பியூஷன் ரெட் என ஐந்து வித நிறங்களில் கிடைக்கிறது.
    ஸ்கோடா நிறுவனத்தின் ரேபிட் ரைட் வேரியண்ட் இந்திய சந்தையில் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

    ஸ்கோடா நிறுவனம் ரேபிட் ரைடர் வேரியண்ட்டை இந்திய சந்தையில் மீண்டும் அறிமுகம் செய்து இருக்கிறது. தற்சமயம் இதன் விலை ரூ. 7.79 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது முந்தைய விலையை விட ரூ. 30 ஆயிரம் அதிகம் ஆகும்.

    ரைடர் வேரியண்ட் ஸ்கோடா ரேபிட் செடான் இந்திய சந்தையில் போக்ஸ்வேகன் வென்டோ, ஹூண்டாய் வெர்னா, மாருதி சுசுகி சியாஸ் மற்றும் புதிய ஹோண்டா சிட்டி போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கிறது. மேலும் இது போட்டி நிறுவன மாடல்களின் விலையை விட ரேபிட் ரைடர் விலை குறைவாக இருக்கிறது. 

     ஸ்கோடா ரேபிட் ரைடர்

    ஸ்கோடா ரைபட் ரைடர் வேரியண்ட் டில்ட் மற்றும் டெலிஸ்கோபிக் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஸ்டீரிங் வீல், பவர் விண்டோ, ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், ரியர் ஏர்கான் வென்ட்கள், ORVMகள், பின்புறம் பார்க்கிங் சென்சார் உள்ளிட்ட அம்சங்களை கொண்டிருக்கிறது.

    ரைடர் பிளஸ் மாடலின் விலையை ரூ. 20 ஆயிரம் உயர்த்தப்பட்டு தற்சமயம் மேனுவல் டிரான்ஸ்மிஷன் ரூ. 8.19 லட்சம் என்றும் ஆட்டோமேடிக் வேரியண்ட் விலை ரூ. 9.69 லட்சம் என மாறி இருக்கிறது. 
    லெக்சஸ் நிறுவனத்தின் எல்எஸ் 500ஹெச் மாடலின் ஸ்பெஷல் எடிஷன் கார் பிரீமியம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.


    ஆடம்பர கார் உற்பத்தியாளரான லெக்சஸ் இந்திய சந்தையில் எல்எஸ் 500ஹெச் ஸ்பெஷல் எடிஷன் மாடலை அறிமுகம் செய்து உள்ளது. புதிய ஸ்பெஷல் எடிஷன் எல்எஸ் 500ஹெச் நிஷிஜின் என அழைக்கப்படுகிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 2.22 கோடி எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய லெக்சஸ் நிஷிஜின் எடிஷன் வெளிப்புறம் ஜின்-இ-லஸ்டர் நிறம் கொண்டிருக்கிறது. புதிய நிறம் தவிர இந்த மாடலின் பம்ப்பரில் சிறு மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. காரின் உள்புறம் முழுநிலவு கடலில் பிரதிபலிக்கும் நிகழ்வை ஒட்டி பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.

    இத்துடன் 12.3 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஸ்டீரிங் வீல் மற்றும் சென்டர் கன்சோல் பட்டன்கள் எளிதில் இயக்கும் வகையில் இடமாற்றம் செய்யப்ப்டடு உள்ளது.

     லெக்சஸ் எல்எஸ் 500ஹெச்

    புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடலிலும் 3.5 லிட்டர் வி6 பெட்ரோல் மோட்டார் மற்றும் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இவை ஒருங்கிணைந்து 354 பிஹெச்பி பவர் செயல்திறன் வழங்குகின்றன. இத்துடன் 10 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வங்கப்படுகிறது.

    இந்திய சந்தையில் லெக்சஸ் எல்எஸ் 500ஹெச் மாடல் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ், பிஎம்டபிள்யூ 7 சீரிஸ், ஜாகுவார் எக்ஸ்ஜெ மற்றும் ஆடி ஏ8எல் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 2021 பல்சர் 220எப் மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.


    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் சத்தமின்றி பல்சர் 220எப் மோ்டடார்சைக்கிள் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய பல்சர் 220எப் மாடல் விலை ரூ. 1.25 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய பஜாஜ் பல்சர் 220எப் மாடலில் காஸ்மெடிக் மாற்றங்கள் மற்றும் சில புது அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. அதன்படி இதன் பாடி கிராபிக்ஸ் மாற்றப்பட்டு பிளாக் புளூ மற்றும் பிளாக் ரெட் என இரண்டு வித புதிய நிறங்களில் கிடைக்கிறது.

     2021 பஜாஜ் பல்சர் 220எப்

    இத்துடன் மேம்பட்ட இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் அனலாக் டக்கோமீட்டருடன் செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் வழங்கப்பட்டு உள்ளது. இதன் டிஜிட்டல் ஸ்கிரீன் முன்பை விட அதிக விவரங்களை வழங்குகிறது.

    2021 பஜாஜ் பல்சர் 220எப் மாடலில் 220சிசி டிடிஎஸ்-எப்ஐ சிங்கிள் சிலிண்டர் ஆயில் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 20.4 பிஹெச்பி பவர், 18.55 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.
    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய EQA எலெக்ட்ரிக் கார் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    ஜெர்மன் நாட்டு ஆடம்பர் கார் உற்பத்தியாளரான மெர்சிடிஸ் பென்ஸ் தனது ஆல்-எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலான EQA-வை இந்தியாவில் ஜனவரி 20 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய EQA மாடல் அம்சங்கள் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படும் என தெரிகிறது.

    முதற்கட்டமாக 188 பிஹெச்பி திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டாரை அறிமுகம் செய்து பின் 268 பிஹெச்பி திறன் கொண்ட மோட்டார் மற்றும் ஆல்-வீல்-டிரைவ் வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

     மெக்சிடிஸ் பென்ஸ் EQA கான்செப்ட்

    புதிய EQA எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலில் எலெக்ட்ரிக் இன்டெலிஜன்ஸ் நேவிகேஷன் சிஸ்டம் வசதி வழங்கப்படுகிறது. இது போக வேண்டிய இடத்திற்கு வேகமாக செல்லும் வழியை கண்டறியும் நுட்பம் கொண்டுள்ளது. புதிய மெர்சிடிஸ் பென்ஸ் EQA முழு விவரங்கள் அறிமுக நிகழ்வில் வெளியாகும்.
    ஜீப் நிறுவனத்தின் புதிய காம்பஸ் பேஸ்லிப்ட் மாடல் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


    ஜீப் இந்தியா நிறுவனம் தனது காம்பஸ் பேஸ்லிப்ட் மாடல் இந்திய சந்தையில் ஜனவரி 27 ஆம் தேதி அறிமுகமாகும் என அறிவித்து இருக்கிறது. அறிமுக நிகழ்விலேயே புதிய கார் விலை மற்றும் விநியோக விவரங்கள் அறிவிக்கப்படலாம் என தெரிகிறது.

    புதிய காம்பஸ் பேஸ்லிப்ட் மாடலுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 50 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. வாடிக்கையாளர்கள் புதிய கார் வாங்க அருகாமையில் உள்ள விற்பனையகம் அல்லது ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியும்.

     ஜீப் காம்பஸ்

    புதிய ஜீப் காம்பஸ் பேஸ்லிப்ட் மாடலில் முன்புறம் மேம்பட்ட எல்இடி ஹெட்லேம்ப் யூனிட், டிஆர்எல்கள் வழங்கப்படுகிறது. முன்புற கிரில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. இத்துடன் மேம்பட்ட பம்ப்பர்கள், புதிய ஏர் இன்டேக் வழங்கப்படுகிறது.

    உள்புறம் 10.1 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி, கிளைமேட் கண்ட்ரோல், லெதர் ராப் செய்யப்பட்ட ஸ்டீரிங் மற்றும் மவுண்ட் செய்யப்பட்ட கண்ட்ரோல்கள், வயர்லெஸ் சார்ஜிங், எலெக்ட்ரிக் சன்ரூப், டிஜிட்டர் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    புதிய காம்பஸ் பேஸ்லிப்ட் மாடலில் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறையே 163 பிஹெச்பி பவர், 250 என்எம் டார்க் மற்றும் 173 பிஹெச்பி பவர், 350 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகின்றன.

    டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்பீட் டிரிபில் 1200 ஆர்எஸ் மாடலுக்கான டீசர் வெளியிடப்பட்டு உள்ளது.


    டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் தனது புதிய ஸ்பீட் டிரிபில் 1200 ஆர்எஸ் மோட்டார்சைக்கிள் மாடலுக்கான டீசரை வெளியிட்டு உள்ளது. மேலும் இந்த மோட்டார்சைக்கிள் ஜனவரி 26 ஆம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகமாகிறது.

    டீசர்களின் படி புதிய மோட்டார்சைக்கிள் டிரையம்ப் ஸ்டிரீட் டிரிபில் ஆர்எஸ் மாடலில் உள்ளதை போன்ற ஹெட்லேம்ப் மற்றும் எல்இடி டிஆர்எல்களை கொண்டிருக்கும் என தெரிகிறது. மேலும் முன்புறம் தங்க நிற போர்க்குகள், கார்பன் பைபர் பென்டரில் டிரையம்ப் லோகோ காணப்படுகிறது.

     டிரையம்ப் ஸ்பீர்ட் டிரிபில் 1200 ஆர்எஸ்

    இத்துடன் எம் வடிவ எல்இடி டெயில் லைட்கள், ஆர்எஸ் கிராபிக்ஸ் உள்ளிட்டவை பியூவல் டேன்க் மீது காணப்படுகிறது. டிரையம்ப் நிறுவனம் புதிய மாடலுக்கென டீசர் வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறது. எனினும், இதில் மோட்டார்சைக்கிள் தோற்றம் பற்றிய காட்சிகள் இடம்பெறவில்லை.

    புதிய டிரையம்ப் மோட்டார்சைக்கிள் விற்பனை முதற்கட்டமாக சர்வதேச சந்தையில் துவங்கி அதன் பின் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.

    அப்ரிலியா நிறுவனம் டியூனோ 660 மோட்டார்சைக்கிள் மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது.


    அப்ரிலியா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டியூனோ 660 நேக்கட் மோட்டார்சைக்கிள் மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது. புதிய டியூனோ 660 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் இந்த ஆண்டு இரண்டாவது அரையாண்டு வாக்கில் அறிமுகமாகும் என தெரிகிறது.

    புதிய டியூனோ 660 மாடல் ஆர்எஸ் 660 மோட்டார்சைக்கிளை சார்ந்து உருவாகி இருக்கிறது. இதன் வடிவமைப்பு டியூனோ வி4 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் 3-பாட் ஹெட்லேம்ப் செட்டப் வழங்கப்பட்டு இருக்கிறது. 

     அப்ரிலியா டியூனோ 660

    மேலும் இதில் எல்இடி ஹெட்லேம்ப்கள், டிஆர்எல்கள், எல்இடி டெயில் லேம்ப்கள், ஸ்ப்லிட் சீட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் மஸ்குலர் பியூவல் டேன்க் வழங்கப்பட்டு உள்ளது. 

    இந்த மோட்டார்சைக்கிளில் 660சிசி பேரலெல் ட்வின் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 94 பிஹெச்பி பவர், 67 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஸ்லிப் அசிஸ்ட் கிளட்ச் வழங்கப்படுகிறது.
    போக்ஸ்வேகன் நிறுவனத்தின் டைகுன் மாடலுக்கான புது டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ஜெர்மன் நாட்டு ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான போக்ஸ்வேகன் புதிதாக டைகுன் என்ற எஸ்யுவி மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய  டைகுன் எஸ்யுவி-க்கான டீசரை போக்ஸ்வேகன் வெளியிட்டு இருக்கிறது.

    முன்னதாக இந்த மாடல் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் மற்ற எஸ்யுவி மாடல்களுடன் காட்சிக்கு வைக்கப்பட்டது. இந்த மாடல் 2021 ஆண்டில் அறிமுகமாகும் என போக்ஸ்வேகன் ஏற்கனவே அறவித்து இருந்தது.

     போக்ஸ்வேகன் டைகுன்

    புதிய டைகுன் மாடல் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் MQB A0 IN பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது. இதன் முன்புறம் சதுரங்க வடிவம் கொண்ட ஹெட்லேம்ப்கள், செங்குத்தான கிரில், பம்ப்பரில் பாக் லேம்ப் மற்றும் ஸ்கிட் பிளேட் ஹவுசிங் செய்யப்பட்டு இருக்கிறது.

    ஃபோக்ஸ்வேகன் டைகுன் கார் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கும் என தெரிகிறது. இந்த என்ஜின் 148 பிஹெச்பி பவர், 250 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் வழங்கப்படலாம்.
    ஒரே ஆண்டில் 12 புதிய மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்ய டுகாட்டி முடிவு செய்து இருக்கிறது.


    டுகாட்டி இந்தியா நிறுவனம் 12 புதிய மோட்டார்சைக்கிள்களை 2021 ஆண்டில் அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கிறது. இவை அனைத்தும் பிஎஸ்6 விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாகி வருகிறது. 

    இதுதவிர டுகாட்டி ஸ்கிராம்ப்ளர் ஐகான் மற்றும் ஸ்கிராம்ப்ளர் ஐகான் டார்க் பிஎஸ்6 மாடல்களுக்கான முன்பதிவை துவங்கி இருக்கிறது. வாடிக்கையாளர்கள் இரு மோட்டார்சைக்கிள் மாடல்களை ரூ. 50 ஆயிரம் கட்டணத்தில் முன்பதிவு செய்ய முடியும்.

     டுகாட்டி மோட்டார்சைக்கிள்

    கடந்த ஆண்டு இறுதியில் டுகாட்டி நிறுவனம் புதிய பேனிகேல் வி2, ஸ்கிாம்ப்ளர் 1100 ப்ரோ மற்றும் மல்டிஸ்டிராடா 950எஸ் என மூன்று பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்தது. இந்த ஆண்டு டுகாட்டி மான்ஸ்டர், ஸ்கிராம்ப்ளர், மல்டிஸ்டிராடா, பனிகேல், டயவெல் மற்றும் ஸ்டிரீட்-பைட்டர் போன்ற மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.

    இந்த பட்டியலில் முதற்கட்டமாக பிஎஸ்6 ஸ்கிராம்ப்ளர், டயவெல், புதிய எக்ஸ் டயவெல் போன்ற மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த மாடல்கள் ரிவெர்டு வி4 என்ஜின் சார்ந்து உருவாகி வருகின்றன.
    ×