என் மலர்tooltip icon

    கார்

    நிசான் மற்றும் டேட்சன் பிராண்டு கார் மாடல்களின் விலை இந்தியாவில் மீண்டும் உயர்த்தப்பட்டு இருக்கிறது.


    நிசான் இந்தியா நிறுவனம் இந்தியாவில் தனது கார் மாடல்கள் விலையை மீண்டும் உயர்த்தி இருக்கிறது. விலை உயர்வு நிசான் மற்றும் டேட்சன் பிராண்டு மாடல்களுக்கு பொருந்தும். இரு பிராண்டு மாடல்களுக்கான விலை உயர்வு ஏப்ரல் 1, 2021 முதல் அமலுக்கு வருகிறது.

    சரியாக எத்தனை சதவீதம் விலை உயரும் என நிசான் இந்தியா இதுவரை தெரிவிக்கவில்லை. எனினும், ஒவ்வொரு மாடல் மற்றும் வேரியண்டிற்கு ஏற்ப விலை உயர்வு வேறுபடும். கடந்த முறை நிசான் நிறுவன கார் மாடல்களின் விலை 5 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது.

    கார் மாடல்களின் உற்பத்தி செலவீனங்கள் மற்றும் உதிரிபாகங்கள் விலை அதிகரித்து இருப்பதே விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது. விலை உயர்வில் நிசான் கிக்ஸ், டேட்சன் ரெடி-கோ, கோ மற்றும் கோ பிளஸ் போன்ற மாடல்கள் பாதிக்கப்பட இருக்கிறது. 
    மாருதி சுசுகி நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை உயர்த்தப்போவதாக அறிவித்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் நிறுவனம் தனது கார் மாடல்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. விலை உயர்வு ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வருகிறது. கடந்த ஆண்டுகளில் உற்பத்திக்கான செலவு அதிகரித்து இருப்பதே விலை உயர்வுக்கு காரணம் ஆகும். 

    இந்த ஆண்டு துவங்கியது முதல் இரண்டாவது முறையாக மாருதி சுசுகி விலை உயர்வை அறிவித்து இருக்கிறது. விலை உயர்வு ஒவ்வொரு மாடல் மற்றும் அவற்றின் வேரியண்ட்களுக்கு ஏற்ப மாறுபடும். தற்போது மாருதி சுசுகி நிறுவனம் 14 கார்களை இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது. 

     மாருதி சுசுகி கார்

    இவற்றின் விலை ஆல்டோ மாடலுக்கு ரூ. 2.99 லட்சம் என துவங்கி டாப் எண்ட் எக்ஸ்.எல். மாடல் விலை ரூ. 9.84 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    முந்தைய பண்டிகை கால மாதத்தில் மாருதி சுசுகி நிறுவனம் 1,64,469 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. கடந்த ஆண்டு பிப்ரவரியுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மட்டும் மாருதி சுசுகி நிறுவனம் 11.8 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. 
    ஆடி நிறுவனத்தின் புதிய எஸ்5 ஸ்போர்ட்பேக் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


    ஆடி இந்தியா நிறுவனம் புதிய எஸ்5 ஸ்போர்ட்பேக் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய மாடல் விலை ரூ. 79.06 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் வினியோகம் அடுத்த மாதம் துவங்குகிறது.

    புதிய ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் மாடலில் 3.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 349 பிஹெச்பி பவர், 500 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

     ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக்

    இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 4.5 நொடிகளில் எட்டிவிடும். தோற்றத்தில் இந்த காரின் வெளிப்புறம் பிளாக்டு-அவுட் சிங்கில் பிரேம் கிரில், எல்இடி ஹெட்லேம்ப்கள், இன்டகிரேட் செய்யப்பட்ட எல்இடி, ஸ்லோபிங் ரூப்லைன், பிளாக்டு-அவுட் ORVM-கள், பெரிய அலாய் வீல்கள் உள்ளன.

    உள்புறம் கார்பன்-பைபர் மற்றும் அல்கான்ட்ரா இன்சர்ட்கள், விர்ச்சுவல் காக்பிட், பெரிய தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், மல்டி-சோன் கிளைமேட் கண்ட்ரோல், பிலாட்-பாட்டம் ஸ்டீரிங் வீல் வழங்கப்பட்டு இருக்கிறது.
    சர்வதேச சந்தையில் 13 புது எலெக்ட்ரிக் கார் மாடல்களை அறிமுகம் செய்ய பிஎம்டபிள்யூ நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது.


    ஆடம்பர கார் உற்பத்தியாளரான பிஎம்டபிள்யூ தனது பிளாக்ஷிப் எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலான ஐஎக்ஸ்-ஐ சமீபத்தில் அறிமுகம் செய்தது. இந்த மாடல் எக்ஸ்டிரைவ் 40 மற்றும் எக்ஸ்டிரைவ் 50 என இரு வெர்ஷன்களில் கிடைக்கும் என பிஎம்டபிள்யூ தெரிவித்து இருக்கிறது.

     பிஎம்டபிள்யூ எலெக்ட்ரிக் கார்

    இதுமட்டுமின்றி சர்வதேச சந்தையில் 2030 ஆண்டுக்குள் 13 முழுமையான எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய இருப்பதாக பிஎம்டபிள்யூ அறிவித்து உள்ளது. அதன்படி 2023 ஆண்டுக்குள் ஒவ்வொரு முக்கிய பிரிவுகளில் குறைந்தபட்சம் ஒரு எலெக்ட்ரிக் மாடலை அறிமுகம் செய்ய பிஎம்டபிள்யூ திட்டமிட்டு இருக்கிறது.

    அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் சுமார் 20 லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்ய பிஎம்டபிள்யூ இலக்கு நிர்ணயித்து உள்ளது. மேலும் பிஎம்டபிள்யூ ஒட்டுமொத்த விற்பனையில் 50 சதவீதம் எலெக்ட்ரிக் மாடல்களாக மாறும் என கணித்துள்ளது. 
    ஸ்கோடா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட குஷக் எஸ்.யு.வி. மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகமாகி இருக்கிறது.


    ஸ்கோடா நிறுவனத்தின் குஷக் எஸ்.யு.வி. மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய குஷக் எஸ்.யு.வி. இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் வெளியாகும் முதல் மாடல் ஆகும். இந்த எஸ்.யு.வி. போக்ஸ்வேகன் குழுமத்தின் MQB A0 IN பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது. இது இந்திய சந்தைக்கென உருவாகி இருக்கிறது.

    புதிய ஸ்கோடா கார் எல்.இ.டி. ப்ரோஜக்டர் ஹெட்லேம்ப் யூனிட்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், கார்னெரிங் லைட்கள், இன்டிகேட்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது. 

     ஸ்கோடா குஷக்

    பாதுகாப்பிற்கு ஸ்கோடா குஷக் மாடலில் ஹில்-ஹோல்டு அசிஸ்ட், 6 ஏர் பேக், ஏபிஎஸ், இபிடி, இபிஎஸ், மல்டி-கொலிஷன் பிரேக், டி.பி.எம்.எஸ்., ரியர் பார்கிங் சென்சார், ரியர்வியூ கேமரா, ISOFIX உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

    ஸ்கோடா குஷக் மாடல் போக்ஸ்வேகன் குழுமத்தின் 1.0 டி.எஸ்.ஐ. யூனிட், 1.5 லிட்டர் டி.எஸ்.ஐ. இவோ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனுடன் கிடைக்கிறது. 1.0 லிட்டர் யூனிட் 113 பி.ஹெச்.பி. பவர், 175 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    இதன் 1.5 லிட்டர் யூனிட் 148 பி.ஹெச்.பி. பவர், 250 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 7 ஸ்பீடு டி.எஸ்.ஜி. கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படுகிறது.
    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு ரூ. 65 ஆயிரம் மதிப்பிலான சலுகைகளை வழங்குகிறது.


    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மார்ச் மாதத்திற்கான சலுகைகளை அறிவித்து இருக்கிறது. அந்த வகையில் கார்களுக்கு அதிகபட்சம் ரூ. 65 ஆயிரம் வரையிலான பலன்கள் கிடைக்கிறது. இவை டியாகோ, டிகோர், நெக்சான் மற்றும் ஹேரியர் உள்ளிட்ட மாடல்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் மார்ச் 31 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது.

     டாடா  கார்

    அல்ட்ரோஸ், சபாரி போன்ற மாடல்களுக்கு இந்த சலுகைகள் வழங்கப்படவில்லை. தற்போதைய அறிவிப்பின் படி பயனர்கள் எக்சேன்ஜ் சலுகை, கார்ப்பரேட் திட்டம் வடிவில் பெறலாம். டியாகோ மாடலுக்கு ரூ. 15 ஆயிரம் நுகர்வோர் சலுகை, ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் சலுகை வழங்கப்படுகிறது.

    டிகோர் மாடலுக்கு ரூ. 15 ஆயிரம் நுகர்வோர் சலுகையும், ரூ. 15 ஆயிரம் எக்சேன்ஜ் சலுகையும் வழங்கப்படுகிறது. நெக்சான் மாடல் ரூ. 15 ஆயிரம் மதிப்புள்ள சலுகையுன் கிடைக்கிறது. எனினும், இது டீசல் வேரியண்டிற்கு மட்டுமே வழங்கப்படுகிறது. 
    இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட ஜீப் ராங்லர் மாடல் பிரீமியம் விலையில் அறிமுதம் செய்யப்பட்டு இருக்கிறது.


    ஜீப் நிறுவனம் தனது புதிய ராங்லர் எஸ்யுவி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய 2021 ஜீப் ராங்லர் மாடல் தற்போது சிகேடி முறையில் இந்தியா கொண்டுவரப்பட்டு, இங்குள்ள ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. 

     ஜீப் ராங்லர்

    உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட ஜீப் ராங்லர் மாடல் துவக்க விலை ரூ. 53.90 லட்சம் ஆகும். இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 57.9 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    இது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்ட ராங்லர் மாடல்களின் விலையை விட ரூ. 10 லட்சம் குறைவு ஆகும். இந்த மாடல்களின் உற்பத்தி துவங்கிவிட்டதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், இதன் வினியோகம் விரைவில் துவங்கும் என தெரிகிறது.
    ஹூண்டாய் நிறுவனத்தின் 2020 கிரெட்டா மாடல் விற்பனை துவங்கிய ஒரே ஆண்டில் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.


    2020 ஹூண்டாய் கிரெட்டா மாடல் இந்திய சந்தையில் மிட்-சைஸ் எஸ்யுவி பிரிவில் அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்றாக இருக்கிறது. 2020 கிரெட்டா மாடல் இந்தியாவில் 1.21 லட்சத்திறஅகும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக ஹூண்டாய் தெரிவித்து உள்ளது.

    புதிய தலைமுறை ஹூண்டாய் கிரெட்டா மாடல் 2020 பிப்ரவரி மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகமானது முதல் இந்த மாடலை சுமார் 1.21 லட்சத்திற்கும் அதிகமானோர் வாங்கி இருக்கின்றனர். இதில் கிரெட்டா SX மற்றும் SX(O) வேரியண்ட்கள் மட்டும் 51 சதவீதம் விற்பனையாகி இருக்கிறது. 

     ஹூண்டாய் கிரெட்டா

    இந்திய சந்தையில் விற்பனையான மொத்த கிரெட்டா மாடல்களில் 60 சதவீத யூனிட்கள் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் கொண்டவை ஆகும். அதாவது 72 ஆயிரத்திற்கும் அதிக யூனிட்கள் டீசல் வேரியண்ட்கள் ஆகும். பிஎஸ்6 புகை விதிகள் அமலான போதும், டீசல் என்ஜின் ஆதிக்கம் தொடர்வதற்கு இதுவே சான்றாக அமைகிறது. 

    மேலும் இதுவரை விற்பனையான யூனிட்களில் 20 சதவீதம் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டவை ஆகும். இந்த மாடல் பல்வேறு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 2015 ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகமானது முதல் இதுவரை சுமார் 5.8 லட்சத்திற்கும் அதிக கிரெட்டா யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.
    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் புதிய இ கிளாஸ் பேஸ்லிப்ட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது.


    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் பேஸ்லிப்ட் செய்யப்பட்ட புது இ கிளாஸ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய இ கிளாஸ் மாடல் துவக்க விலை ரூ. 63.60 லட்சம் எக்ஸ்-ஷோரூம் ஆகும். இந்த ஆண்டு மெர்சிடிஸ் வெளியிட திட்டமிட்டு இருக்கும் 15 புது மாடல்களில் ஒன்றாக புதிய இ கிளாஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

    தோற்றத்தில் புது மாடலில் மேம்பட்ட முன்புறம், புதிய பம்ப்பர், கிரில் மற்றும் எல்இடி ஹெட்லேம்ப் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. பக்கவாட்டில் 17 இன்ச் அலாய் வீல்கள், புது டெயில் லைட்கள் வழங்கப்பட்டு உள்ளன. உள்புறம் புதிய MBUX இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஹே மெர்சிடிஸ் வாய்ஸ் கமாண்ட் வசதி, 2 யுஎஸ்பி போர்ட்கள், பின்புற சென்டர் கன்சோல் தொடுதிரை வசதி கொண்டுள்ளது.

     மெர்சிடிஸ் பென்ஸ் இ கிளாஸ் பேஸ்லிப்ட்

    புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இ கிளாஸ் பேஸ்லிப்ட் மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் மோட்டார், 2.0 லிட்டர் டீசல் மோட்டார் மற்றும் 3.0 லிட்டர் டீசல் என மூன்றுவித என்ஜின் ஆப்ஷன்களில் வழங்கப்படுகிறது. இவற்றுடன் 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. 

    பாதுகாப்பிற்கு 7 ஏர்பேக், ஏபிஎஸ், இபிடி, பார்கிங் அசிஸ்ட், பார்கோடிரானிக், ஆக்டிவ் பிரேக் அசிஸ்ட், 360 டிகிரி கேமரா உள்ளது. புதிய மாடல் ஆறுவித நிறங்களில் கிடைக்கிறது. இந்த காரின் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 80.90 லட்சம் எக்ஸ்-ஷோரூம் ஆகும்.
    நிசான் நிறுவனத்தின் புதிய எஸ்யுவி மாடலுக்கு அசத்தலான சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    நிசான் இந்தியா நிறுவனம் தனது கிக்ஸ் எஸ்யுவி மாடலுக்கு ரூ. 95 ஆயிரம் வரையிலான சலுகை வழங்குவதாக அறிவித்து இருக்கிறது. இவை எக்சேன்ஜ் சலுகை, தள்ளுபடி மற்றும் லாயல்டி வடிவில் வழங்கப்படுகின்றன. மேலும் இது மார்ச் 31 அல்லது ஸ்டாக் இருக்கும் வரை மட்டுமே வழங்கப்படுகிறது. 

     நிசான் கிக்ஸ்

    சலுகையை பொருத்தவரை ரூ. 50 ஆயிரம் எக்சேன்ஜ் தள்ளுபடி, ரூ. 25 ஆயிரம் தள்ளுபடி மற்றும் ரூ. 20 ஆயிரம் லாயல்டி பலன் வழங்கப்படுகிறது. இந்த பலன்கள் என்ஐசி உள்ள விற்பனையகங்களில் வழங்கப்படுகிறது. மேலும் ஒவ்வொரு பகுதி மற்றும் காரின் வேரியண்டிற்கு ஏற்ப சலுகை மதிப்பு வேறுபடும்.

    இந்தியாவில் நிசான் கிக்ஸ் மாடல் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறையே 105 பிஹெச்பி பவர், 142 என்எம் டார்க் மற்றும் 154 பிஹெச்பி பவர், 142 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு, 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
    மாருதி சுசுகி நிறுவனம் 2021 செலரியோ மாடலை இந்த தேதியில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மாருதி சுசுகி நிறுவனம் செலரியோ ஹேட்ச்பேக் காரின் புது தலைமுறை வேரியண்டை உருவாக்கி வருகிறது. இந்த மாடல் நாடு முழுக்க சோதனை செய்யப்பட்டு வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் இந்த காரின் ஸ்பை படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.

    இந்த நிலையில், தற்போதைய தகவல்களின் படி புதிய தலைமுறை மாருதி சுசுகி செலரியோ மாடல் மே மாத வாக்கில் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது. புதிய செலரியோ மாடல் அளவில் பெரியதாகவும், அதிக இடவசதியுடன் தற்போதைய மாடலை விட பாதுகாப்பானதாக இருக்கும் என கூறப்படுகிறது.

     மாருதி சுசுகி செலரியோ

    பல்வேறு மாற்றங்களுடன் வெளியாகும் என்பதால், இதன் விலையும் தற்போதைய வேரியண்டை விட அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம். புதிய செலரியோ ஹேட்ச்பேக் மாடல் மாருதி சுசுகியின் ஹார்டெக்ட் பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது. இதே பிளாட்பார்மில் மாருதி சுசுகியின் ஸ்விப்ட், வேகன்ஆர் மற்றும் டிசையர் மாடல்கள் உருவாகி இருக்கின்றன.

    புதிய மாடலில் முன்புறம் இரட்டை ஏர் பேக், ஸ்பீடு அலெர்ட்கள், சீட் பெல்ட் ரிமைன்டர், ஏபிஎஸ் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் எல்இடி லைட்டிங், புதிய அலாய் வீல்கள், மேம்பட்ட டேஷ்போர்டு, ஸ்டீரிங் மவுன்ட் செய்யப்பட்ட கன்ட்ரோல்கள், 7 இன்ச் அளவில் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகள் வழங்கப்படுகிறது.

    மாருதி சுசுகியின் புதிய தலைமுறை செலரியோ மாடலில் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.2 லிட்டர் என்ஜின் வழங்கப்படலாம் என தெரிகிறது. இவற்றுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், ஆப்ஷனல் ஆட்டோ கியர் ஷிப்ட் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படலாம்.
    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டியாகோ மாடல் கார் அசத்தலான புதிய நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்றாக டாடா டியாகோ விளங்குகிறது. முன்னதாக டியாகோ லிமிடெட் எடிஷன் மாடலை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்தது. தற்போது டியாகோ மாடல் புதிய நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

    முன்னதாக டாடா டியாகோ மாடல் டெக்டானிக் புளூ நிறத்தில் கிடைத்தது. தற்போது இந்த நிறத்திற்கு மாற்றாக டாடா டியாகோ மாடல் அரிசோனா புளூ எனும் புது நிறத்தில் கிடைக்கிறது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட டாடா சபாரி மாடலும் இதே நிற சாயல் கொண்டுள்ளது. 

     டாடா டியாகோ

    புதிய நிறம் தவிர டாடா டியாகோ மாடல் - விக்டரி எல்லோ, பிளேம் ரெட், பியல்சென்ட் வைட், பியூர் சில்வர் மற்றும் டேடோனா கிரே போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதுதவிர இந்த மாடலில் வேறு எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. 

    இதன் கேபின் ஹார்மன் இன்போடெயிமென்ட் சிஸ்டம், 4 ஸ்பீக்கர்கள், பவர் விண்டோ, சென்ட்ரல் லாக்கிங், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, 8 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளிட்ட அம்சங்களை கொண்டுள்ளது.

    டியாகோ மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 84 பிஹெச்பி பவர், 113 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் டியாகோ மாடல் மாருதி சுசுகி வேகன்ஆர், ஹூண்டாய் சான்ட்ரோ மற்றும் மாருதி சுசுகி செலரியோ மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    ×