என் மலர்tooltip icon

    கார்

    மாருதி சுசுகி நிறுவனத்தின் ஜிம்எனி எஸ்யுவி மாடல் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது முதல் மாருதி சுசுகியின் ஜிம்னி மாடல் இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் மாடலாக இருக்கிறது. இதன் இந்திய வெளியீடு பற்றி பல்வேறு தகவல்கள் இணையத்தில் அவ்வப்போது வெளியாகி வருகிறது. எனினும், மாருதி சுசுகி தரப்பில் இதுகுறித்து எந்த தகவலும் வழங்கப்படாமல் இருந்தது.

    இந்த நிலையில், ஜிம்னி மாடலை இந்திய சந்தையில் வெளியிடுவது குறித்து பிரீசலனை செய்து வருவதாக மாருதி சுசுகி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சஷாங் ஸ்ரீவஸ்தவா முதலீட்டாளர்கள் கூட்டம் ஒன்றில் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

     மாருதி சுசுகி ஜிம்னி

    2020 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமானதும் ஜிம்னி மாடலுக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. புதிய மாடலை எப்படி விளம்பரப்படுத்துவது, இந்தியாவில் எப்போது வெளியிடலாம் என்பது குறித்து ஆய்வு செய்வதாக அவர் மேலும் தெரிவித்தார் என கூறப்படுகிறது.

    முன்னதாக மாருதி நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட ஜிம்னி யூனிட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய துவங்கியது. இந்தியாவில் உற்பத்தியான முதற்கட்ட எஸ்யுவிக்கள் கொலம்பியா மற்றும் பெரு போன்ற லத்தின் அமெரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.
    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2021 சபாரி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சபாரி பிளாக்ஷிப் எஸ்யுவி மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய டாடா சபாரி விலை ரூ. 14.69 லட்சம் என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 21.45 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

    இத்துடன் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சபாரி அட்வென்ச்சர் பெர்சோனா எனும் பெயரில் புதிய ஸ்பெஷல் வேரியண்ட்டை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்திய சந்தையில் இதன் விலை ரூ. 20.20 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    கடந்த மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது சபாரி பெயரை கிராவிடாஸ் கான்செப்ட் காருக்கு சூட்ட இருப்பதாக தெரிவித்தது. அதன்படி இந்தியாவின் 72-வது குடியரசு தினத்தன்று புதிய சபாரி அறிமுகம் செய்யப்பட்டு முன்பதிவு நாடு முழுக்க நடைபெற்று வருகிறது.

     2021 டாடா சபாரி

    2021 டாடா சபாரி மாடல் எக்ஸ்இ, எக்ஸ்எம், எக்ஸ்டி, எக்ஸ்டி பிளஸ், எக்ஸ்இசட், எக்ஸ்இசட் பிளஸ் என ஆறு வேரியன்ட்களில் கிடைக்கிறது. இந்த மாடலில் சற்று உயரமான மேற்கூரை, புதிய வடிவமைப்பில் பின்புற விளக்குகள் ஆகியவை சிறப்பம்சமாக உள்ளது. உயரமான பொனெட் இதற்கு கம்பீரமான தோற்றத்தை அளிக்கிறது.

    புதிய சபாரி மாடலில் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட இருக்கிறது. இந்த என்ஜின் 168 பிஹெச்பி பவர், 350 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படலாம். இந்த மாடலில் நான்கு டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்படுகின்றன.
    ரெனால்ட் நிறுவனம் ஐந்து புதிய விற்பனை மையங்களை தெலுங்கானாவில் திறந்துள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ரெனால்ட் நிறுவனம் தெலுங்கானா மாநிலத்தில் புதிதாக ஐந்து விற்பனை மையங்களை திறந்துள்ளது. இவை எல்பி நகர், கொம்பள்ளி, மலக்பெட், வாரங்கல் மற்றும் நிசாம்பாத் போன்ற பகுதிகளில் அமைந்துள்ளன. இதுதவிர மேலும் ஏழு புதிய விற்பனை மையங்களை திறக்க ரெனால்ட் முடிவு செய்துள்ளது. 

    தெலுங்கானா மாநிலத்தின் புதிய விற்பனை மையங்களை பிபிஎஸ் மோட்டார்ஸ் எனும் தனியார் நிறுவனம் நிர்வகிக்கிறது. இந்த நிறுவனம் விற்பனை மட்டுமின்றி வாடிக்கையாளர்கள் வீட்டு வாசலில் சேவை வழங்குவதாக அறிவித்து இருக்கிறது. 

     ரெனால்ட் கார்

    முன்னதாக ரெனால்ட் நிறுவனம் இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கைகர் மாடலை அறிமுகம் செய்தது. இந்தியாவில் புதிய ரெனால்ட் கைகர் மாடல் விலை ரூ. 5.45 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 9.55 லட்சம் ஆகும். 

    இதற்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 11 ஆயிரம் ஆகும். புதிய ரெனால்ட் கைகர் மாடல் இரண்டு வித பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்கள், நான்கு வேரியண்ட்கள் மற்றும் ஆறுவித நிறங்களில் கிடைக்கிறது. 
    எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் இசட்எஸ் பெட்ரோல் வேரியண்ட் புதிய பெயரில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.


    எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் இசட்எஸ் எஸ்யுவி மாடலின் பெட்ரோல் வேரியண்ட்டை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புதிய இசட்எஸ் பெட்ரோல் மாடல் ஆஸ்டர் எனும் பெயரில் விற்பனைக்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது.

    புது வேரியண்ட் எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காரின் பவர்டிரெயினுக்கு மாற்றாக பெட்ரோல் மோட்டார் கொண்டிருக்கிறது. புதிய மாடல்- 111பிஎஸ்/160 என்எம் டார்க் வழங்கும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் யூனிட், 120பிஎஸ்/150 என்எம் டார்க் வழங்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 160பிஎஸ்/230என்எம் டார்க் வழங்கும் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என மூன்றுவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    என்ஜின் மட்டுமின்றி புதிய மாடலில் மேம்பட்ட கிரில், எல்இடி ஹெட்லேம்ப், ஆங்குலர் டிஆர்எல்கள் வழங்கப்படுகிறது. முன்புறம் மற்றும் பின்புற பம்ப்பர்கள் எலெக்ட்ரிக் மாடலில் உள்ளதை விட வித்தியாசமாக உள்ளது. அலாய் வீல், டெயில் லேம்ப் மற்றும் இதர பாகங்களில் எலெக்ட்ரிக் மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படுகிறது. 

    இந்தியாவில் புதிய எம்ஜி இசட்எஸ் மாடல் விலை ரூ. 10 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 15 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம். இது கியா செல்டோஸ் மற்றும் ஹூண்டாய் கிரெட்டா போன்ற கார்களுக்கு போட்டியாக அமைகிறது. மேலும் இது எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் என்ட்ரி-லெவல் மாடலாக இருக்கும்.
    ஜீப் நிறுவனத்தின் 2021 ராங்லர் மாடல் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


    ஜீப் இந்தியா நிறுவனம் 2021 ராங்லர் மாடலை மார்ச் 15 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. தற்சமயம் ராங்லர் மாடல் சிபியு முறையில் இந்தியாவில் கிடைக்கிறது. இதன் துவக்க விலை ரூ. 63.94 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

    சமீபத்தில் ஜீப் நிறுவனம் தனது ராங்லர் மற்றும் கிராண்ட் செரோக்கி மாடல்களை இந்தியாவில் உள்ள ரங்கூன் ஆலையில் உற்பத்தி செய்வதாக அறிவித்தது. அந்த வகையில் புதிய ராங்லர் சிகேடி வகையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

     ஜீப் ராங்லர்

    புதிய ராங்லர் மாடல் ஐந்து கதவு கொண்டிருக்கும் என்றும், 18-இன்ச் அலாய் வீல்கள், ஏழு-ஸ்லாட்கள் கொண்ட கிரில், டிராப்-டவுன் விண்ட்ஷீல்டு மற்றும் கழற்றக்கூடிய கதவுகள் மற்றும் ரூப் வழங்கப்படும் என தெரிகிறது. உள்புறம் மேம்பட்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், மேம்பட்ட இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஸ்டீரியோ சிஸ்டம், கழுவக்கூடிய இன்டீரியர்கள் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 

    ராங்லர் என்பதால் இது சிறப்பான ஆப்-ரோடு திறன், அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டிருக்கும். புதிய மாடலிலும் 2.0 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் மோட்டார், 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன், ஆல்வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்படலாம். இந்த என்ஜின் 268 பிஹெச்பி பவர், 400 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
    பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் எக்ஸ்3 மாடல் புது வேரியண்ட் இந்திய சந்தையில் பிரீமியம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.


    பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்திய சந்தையில் எக்ஸ்3 எக்ஸ்டிரைவ் 30ஐ ஸ்போர்ட்எக்ஸ் வேரியண்ட்டை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய பிஎம்டபிள்யூ மாடல் விலை ரூ. 56.50 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புது வேரியண்ட் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் மிட்-சைஸ் எஸ்யுவி பிரிவில் என்ட்ரி லெவல் மாடலாக அமைந்துள்ளது. புது வேரியண்ட் இந்த பிரிவில் குறைந்த விலை மாடலாக வெளியாகி இருக்கிறது. புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்3 எக்ஸ்டிரைவ் 30ஐ மாடல் சென்னையில் உள்ள ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது.

     பிஎம்டபிள்யூ எக்ஸ்3

    பிஎம்டபிள்யூ புது வேரியண்ட் ஒற்றை பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில் வழங்கப்படுகிறது. புதிய மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. புதிய காரை வாங்க பிப்ரவரி 28 ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேக சலுகை வழங்கப்படுகிறது.

    புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்3 எக்ஸ்டிரைவ் 30ஐ ஸ்போர்ட்எக்ஸ் வேரியண்ட் 2.0 லிட்டர் ட்வின்பவர் டர்போ பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 248 பிஹெச்பி பவர், 360 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஸ்டெப்டிரானிக் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
    ரெனால்ட் நிறுவனத்தின் புதிய கைகர் மாடல் இந்திய சந்தையில் ரூ. 5.45 லட்சம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.


    ரெனால்ட் நிறுவனம் இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கைகர் காம்பேக்ட் எஸ்யுவி மாடலை அறிமுகம் செய்தது. புதிய ரெனால்ட் கைகர் மாடல் விலை ரூ. 5.45 லட்சத்தில் துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 9.55 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    புதிய ரெனால்ட் கைகர் மாடல் முன்பதிவு துவங்கி நாடு முழுக்க நடைபெற்று வருகிறது. புதிய கைகர் மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 11 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் ரெனால்ட் கைகர் மாடல் ஆர்எக்ஸ்இ, ஆர்எக்ஸ்எல், ஆர்எக்ஸ்டி மற்றும் ஆர்எக்ஸ்இசட் என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

     ரெனால்ட் கைகர்

    இத்துடன் ஐஸ் கூல் வைட், பிளானெட் கிரே, மூன்லைட் கிரே, மஹோகனி பிரவுன், கேஸ்பியன் புளூ மற்றும் ரேடியன்ட் ரெட் என ஆறு நிறங்களில் கிடைக்கிறது. இந்த நிறங்கள் அனைத்தும் டூயல்-டோன் ஆப்ஷனிலும் வழங்கப்படுகிறது. டூயல் டோன் வேரியண்ட் விலை சிங்கில் டோன் மாடலை விட ரூ. 17 ஆயிரம் அதிகம் ஆகும்.

    ரெனால்ட் கைகர் மாடலில் 1.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் டர்போ பெட்ரோல் என்ஜின்கள் வழங்கப்படுகின்றன. இந்த என்ஜின் 72 பிஹெச்பி பவர், 96 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. 

    ரெனால்ட் நிறுவனம் புதிய கைகர் மாடலை விற்பனையகங்களுக்கு அனுப்ப துவங்கி உள்ள நிலையில், இந்த மாடலுக்கான வினியோகம் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    சிட்ரோயன் நிறுவனம் தனது சி5 ஏர்கிராஸ் மாடலின் முன்பதிவு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.


    சிட்ரோயன் நிறுவனம் தனது சி5 ஏர்கிராஸ் மாடல் முன்பதிவு மார்ச் 1 ஆம் தேதி துவங்கும் என அறிவித்து இருக்கிறது. புதிய சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ் மாடல் பீல் மற்றும் ஷைன் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும். இத்துடன் பியல் வைட், குமுலஸ் கிரே, டிஜூசா புளூ மற்றும் பெர்லா நெரா பிளாக் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கும்.

    சி5 ஏர்கிராஸ் மாடலில் கிராஸ்ஓவர் போன்ற ஸ்டான்ஸ், ட்வின்-ஸ்லாட் முன்புற கிரில், டூயல் பீம் எல்இடி ஹெட்லைட்கள், எல்இடி டிஆர்எல்கள், எல்இடி பாக் லேம்ப், 18 இன்ச் டூயல் டோன் அலாய் வீல், குரோம் பாக்ஸ் டூயல் எக்சாஸ்ட் பைப் மற்றும் எல்இடி டெயில் லேம்ப்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

     சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ்

    புதிய சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ் மாடலில் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 175 பிஹெச்பி பவர், 400 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    காரின் உள்புறம் பிளாட்-பாட்டம் ஸ்டீரிங் வீல், மவுண்ட் செய்யப்பட்ட கண்ட்ரோல்கள், எட்டு அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, 12.3 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
    கர்நாடகா மாநிலத்தில் உற்பத்தி ஆலை அமைப்பதற்கான பணிகளில் டெஸ்லா இந்தியா தீவிரம் காட்டி வருகிறது.


    கர்நாடக முதல்வர் பிஎஸ் எடியூரப்பாவின் சமீபத்திய அறிவிப்பின் படி டெஸ்லா இந்தியா கர்நாடக மாநிலத்தில் தனது உற்பத்தி ஆலையை கட்டமைக்க இருக்கிறது. முன்னதாக டெஸ்லா நிறுவனம் பெங்களூரு நிறுவனங்கள் பதிவாணையத்தில் டெஸ்லா இந்தியா மோட்டார்ஸ் மற்றும் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் எனும் பெயரில் நிறுவனத்தை பதிவு செய்தது.

    உற்பத்தி ஆலை மட்டுமின்றி டெஸ்லா இந்தியாவின் தலைமை அலுவலகமும் கர்நாடக மாநிலத்திலேயே அமையும் என கூறப்படுகிறது. டெஸ்லா இந்தியா நிறுவனத்தை வெங்கட்ரங்கம் ஸ்ரீராம், டேவிட் ஜான் பெயின்ஸ்டெயின் மற்றும் வைபவ் தனேஜா என மூன்று இயக்குனர்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

     டெஸ்லா எலெக்ட்ரிக் கார்

    மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை மந்திரி நிதின் கட்கரி டெஸ்லா நிறுவனம் இந்த ஆண்டு இந்திய சந்தையில் வியாபார பணிகளை துவங்கும் என தெரிவித்து இருந்தார். முதற்கட்டமாக இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் தனது வாகனங்களை சிபியு முறையில் கொண்டு வரும் என்றும் எதிர்காலத்தில் ஆய்வு மற்றும் உற்பத்தி ஆலையை கட்டமைக்கும் என தெரிகிறது. 

    டெஸ்லா நிறுவனத்தின் மாடல் 3 எலெக்ட்ரிக் கார் இந்திய சந்தையில் முதல் மாடலாக அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 55 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 60 லட்சம் என நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
    பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய எம்5 பேஸ்லிப்ட் மாடல் விரைவில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.


    பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இருந்து எம்5 செடான் மாடல் நீக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு மாற்றாக விரைவில் எம்5 பேஸ்லிப்ட் மாடல் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

    சர்வதேச சந்தையில் கடந்த ஆண்டு ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட எம்5 மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்பட்டு வந்தது. புதிய மாடலில் 4.4 லிட்டர் ட்வின் டர்போ வி8 என்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

     பிஎம்டபிள்யூ 5 சீரிஸ்

    இந்த என்ஜின் 592 பிஹெச்பி பவர், 750 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் யூனிட் வழங்கப்படுகிறது. புதிய எம்5 மாடலின் வெளிப்புறம் மேம்பட்ட பம்ப்பர்கள், எல்இடி ஹெட்லேம்ப்கள், ட்வின் எல் வடிவ எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்படுகின்றன.

    இத்துடன் புதிய அலாய் வீல்கள், கார்பன் பைபர் ரூப், ஸ்மோக்டு எல்இடி டெயில் லைட் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. உள்புறம் 12.3 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி வழங்கப்படுகிறது.
    எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் 2021 ஹெக்டார் பெட்ரோல் வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.


    எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் ஹெக்டார் மற்றும் ஹெக்டார் பிளஸ் மாடல்களை 8 ஸ்பீடு சிவிடி ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷனுடன் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய சிவிடி ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் பெட்ரோல் என்ஜின்களுடன் வழங்கப்படுகிறது.

    சிவிடி டிரான்ஸ்மிஷன் ஹெக்டார் மற்றும் ஹெக்டார் பிளஸ் மாடல்களின் ஸ்மார்ட் மற்றும் ஷார்ப் வேரியண்ட்களில் வழங்கப்படுகிறது. எம்ஜி ஹெக்டார் பெட்ரோல் சிவிடி வேரியண்ட் ஸ்மார்ட் மற்றும் ஷார்ப் வேரியண்ட் விலை முறையே ரூ. 16.52 லட்சம் மற்றும் ரூ. 18.10 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

     2021 எம்ஜி ஹெக்டார்

    இதேபோன்று எம்ஜி ஹெக்டார் பிளஸ் பெட்ரோல் சிவிடி வேரியண்ட் ஸ்மார்ட் மற்றும் ஷார்ப் வேரியண்ட் விலை முறையே ரூ. 17.22 லட்சம் மற்றும் ரூ. 18.90 லட்சம் என நிர்ணயம் ெய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

    புதிய சிவிடி டிரான்ஸ்மிஷன் டிசிடி கியர்பாக்ஸ் கொண்ட பெட்ரோல் வெர்ஷன்களுடன் விற்பனை செய்யப்படுகிறது. சிவிடி மற்றும் டிசிடி வேரியண்ட் விலை ஒரே மாதிரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. எனினும், சிவிடி மாடல்கள் அதிக மைலேஜ், கூடுதல் சவுகரியம் மற்றும் தலைசிறந்த அனுபவத்தை வழங்கும் என எம்ஜி மோட்டார் இந்தியா தெரிவித்து இருக்கிறது.
    போக்ஸ்வேகன் நிறுவனத்தின் போலோ மற்றும் வென்டோ மாடல்களுக்கு அசத்தல் சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


    இந்தியாவில் செயல்படும் தேர்வு செய்யப்பட்ட போக்ஸ்வேகன் விற்பனையாளர்கள் போலோ மற்றும் வென்டோ மாடல்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்து இருக்கின்றன. வாடிக்கையாளர்கள் இவற்றை கார்ப்பரேட் தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ் மற்றும் தள்ளுபடி வடிவில் பெற்று கொள்ள முடியும்.

    அந்த வகையில் ஹேட்ச்பேக் மாடலான போக்ஸ்வேகன் போலோ மாடலுக்கு ரூ. 20 ஆயிரம் எக்சேன்ஜ் தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் லாயல்டி போனஸ் மற்றும் ரூ. 15 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த மாடல் 1.0 லிட்டர் எம்பிஐ என்ஜின் மற்றும் 1.0 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் என இருவித பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

     போக்ஸ்வேகன் போலோ மற்றும் வென்டோ

    செடான் மாடலான வென்டோ டிஎஸ்ஐ ஹைலைன் பிளஸ் வேரியண்ட் ரூ. 9.99 லட்சம் எனும் சிறப்பு விலையில் கிடைக்கிறது. இத்துடன் ரூ. 40 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 25 ஆயிரம் எக்சேன்ஜ் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த மாடல் 1.0 லிட்டர் டிஎஸ்ஐ என்ஜினுடன் கிடைக்கிறது.

    இந்த என்ஜின் 109 பிஹெச்பி பவர், 175 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. போக்ஸ்வேகன் டி ராக், டிகுவான் ஆல்ஸ்பேஸ் மாடல்களுக்கு இந்த மாதம் எந்த சலுகையும் அறிவிக்கப்படவில்லை. 
    ×