என் மலர்tooltip icon

    கார்

    நிசான் நிறுவனத்தின் காம்பேக்ட் எஸ்யுவி மாடலான மேக்னைட் இந்திய உற்பத்தியில் புது மைல்கல் எட்டியுள்ளது.

    நிசான் நிறுவனம் தனது மேக்னைட் மாடல் உற்பத்தியில் 10 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளதாக அறிவித்து இருக்கிறது. இந்திய சந்தையில் அறிமுகமான ஆறு மாதங்களில் இந்த மைல்கல் எட்டப்பட்டு இருக்கிறது.

    தொடர்ச்சியான வரவேற்பு காரணமாக தமிழ் நாட்டில் செயல்பட்டு வரும் ஆலையில் உற்பத்தி எண்ணிக்கையை வெகுவாக அதிகரித்து இருக்கிறது. ஆயிரத்திற்கும் அதிக ஊழியர்கள் கொண்ட ஆலையில் உற்பத்தி பணிகளை மேற்கொள்ள நிசான் மூன்றாவது ஷிப்ட் துவங்கி உள்ளது.

     நிசான் மேக்னைட்

    இதன் மூலம் புதிய கார் வினியோகம் செய்வதற்கு ஆகும் காலக்கட்டத்தை குறைக்க நிசான் திட்டமிட்டு உள்ளது. இந்திய சந்தையில் நிசான் மேக்னைட் மாடல் கடந்த ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இதன் துவக்க விலை ரூ. 4.99 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டது. எனினும், தற்போது இதன் விலை அதிகரிக்கப்பட்டு விட்டது.
    ஹூண்டாய் நிறுவனம் மார்ச் மாதத்தில் மட்டும் இத்தனை கார்களை விற்று இருப்பதாக தெரிவித்து உள்ளது.


    ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனம் மார்ச் 2021 மாதத்தில் மட்டும் 64,621 யூனிட்களை விற்பனை செய்து இருப்பதாக அறிவித்து உள்ளது. உள்நாட்டில் மட்டும் 52,600 யூனிட்களும் வெளிநாடுகளுக்கு 12,021 யூனிட்களும் ஏற்றுமதி செய்யப்பட்டன.

     ஹூண்டாய் கார்

    கடந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடும் போது ஹூண்டாய் நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை 100 சதவீதமும், ஏற்றுமதியில் 101 சதவீதமும் வளர்ச்சியை பெற்று இருக்கிறது. உள்நாட்டில் 2020 மார்ச் மாதத்தில் 26,300 யூனிட்களும், வெளிநாடுகளுக்கு 5,979 யூனிட்களை ஏற்றுமதி செய்து இருந்தது.

    கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் நிறுவனம் விரைவில் புதிய அல்காசர் எஸ்யுவி மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. முதற்கட்டமாக இந்த கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இது கிரெட்டா மாடலை தழுவி உருவாகி இருக்கிறது.
    ரெனால்ட் இந்தியா நிறுவனம் 2021 மார்ச் மாதத்திற்கான வாகன விற்பனை விவரங்களை வெளியிட்டு இருக்கிறது.


    ரெனால்ட் நிறுவனம் மார்ச் 2021 மாதத்திற்கான வாகன விற்பனையில் 278 சதவீத விற்பனையை பதிவு செய்து இருக்கிறது. மார்ச் மாதத்தில் மட்டும் ரெனால்ட் நிறுவனம் 12,356 யூனிட்களை விற்பனை செய்து உள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ரெனால்ட் நிறுவனம் 3,269 யூனிட்களையே விற்பனை செய்து இருந்தது.

    ரெனால்ட் நிறுவனத்தின் சமீபத்திய கார் மாடலானகைகர் இத்தனை யூனிட்கள் விற்பனையாகி இருப்பதற்கு முக்கிய காரணமாமக கூறப்படுகிறது. கைகர் மட்டுமின்றி டிரைபர் மாடலும் இந்திய விற்பனையில் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.

     ரெனால்ட் கார்

    புதிய ரெனால்ட் கைகர் மாடல் 3டி கிராபிக் பினிஷ் செய்யப்பட்ட கிரில், ஹனிகொம்ப் வடிவ க்ரோம் ஹைலைட்கள், எல்இடி டிஆர்எல்கள் கொண்டுள்ளது. இந்த கார் 1.0 லிட்டர், 3 சிலிண்டர் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர், 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    இவை முறையே 70 பிஹெச்பி பவர், 96 என்எம் டார்க் செயல்திறனும், 97 பிஹெச்பி பவர், 160 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதன் டர்போ என்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு சிவிடி ஆப்ஷனில் கிடைக்கிறது.
    ஹோண்டா நிறுவனம் உலகம் முழுக்க ஏழு லட்சம் வாகனங்களை ரீகால் செய்வதாக அறிவித்து இருக்கிறது.


    ஹோண்டா மோட்டார் கோ நிறுவனம் உலகம் முழுக்க 7,61,000 வாகனங்களை ரீகால் செய்வதாக அறிவித்து உள்ளது. வாகனங்களின் பியூவல் பம்ப் கோளாறு இருப்பதால் ரீகால் செய்யப்படுகிறது. இது நாளடைவில் என்ஜின் சார்ந்த பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

     ஹோண்டா கார்

    அமெரிக்காவில் 2018-2020 வரையிலான காலக்கட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட 6,28,000 அக்யூரா மற்றும் இதர ஹோண்டா வாகனங்கள் ரீகால் செய்யப்படுகின்றன. இந்த கோளாறு காரணமாக பாதிப்பு ஏற்பட்டதாக இதுவரை ஹோண்டா நிறுவனத்திற்கு எந்த புகாரும் எழவில்லை.

    ரீகால் செய்யப்படும் வாகனங்களில் அக்கார்ட், சிவிக், சிஆர்-வி, பிட், பைலட், ரிட்ஜெலின், எம்டிஎக்ஸ், ஆர்டிஎக்ஸ் மற்றும் 
    டிஎல்எக்ஸ் போன்றவை அடங்கும். 
    ஹூண்டாய் நிறுவனம் தனது ஐ20 என் மாடல் இந்திய வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ஹூண்டாய் நிறுவனம் தனது ஐ20 மாடலின் ஸ்போர்ட் வேரியண்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்கிறது. புதிய ஐ20 என் மாடல் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு விடும் என ஹூண்டாய் தெரிவித்து உள்ளது. புதிய தலைமுறை ஐ20 மாடல் அசத்தலான தோற்றம் கொண்டுள்ளது.

     ஹூண்டாய் ஐ20 என்

    சர்வதேச சந்தையில் ஹூண்டாய் ஐ20 என் மாடலில் 1.0 லிட்டர் டி-ஜிடிஐ என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 120 பிஹெச்பி பவர், ஐஎம்டி டிரான்ஸ்மிஷன், ட்வீக் செய்யப்பட்ட சஸ்பென்ஷன், என்ஜின் ரெஸ்பான்ஸ், ஸ்போர்ட் தோற்றம் கொண்ட பம்ப்பர், வித்தியாசமான எக்சாஸ்ட் கொண்டிருக்கிறது.

    இந்திய சந்தையில் ஐ20 என் மாடல் 1.6 லிட்டர் டி-ஜிடிஐ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 201 பிஹெச்பி பவர், 250 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதன் கேபின் பகுதியில் முற்றிலும் பிளாக் நிற ஸ்போர்ட்ஸ் சீட், சிவப்பு நிற ஸ்டிட்ச், என் ஸ்டீரிங் வீல், என் பேட்ஜிங் வழங்கப்படுகிறது. 
    ஸ்கோடா நிறுவனம் தனது புதிய குஷக் மாடல் அந்த வேரியண்டிலும் அறிமுகமாகும் என சூசகமாக தெரிவித்து இருக்கிறது.


    ஸ்கோடா நிறுவனம் தனது குஷக் மாடலின் மான்ட் கார்லோ எடிஷன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என சூசகமாக தெரிவித்து இருக்கிறது. முதற்கட்டமாக ஸ்கோடா குஷக் ஆக்டிவ், ஆம்பிஷன் மற்றும் ஸ்டைல் என மூன்று வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்படும். 

     ஸ்கோடா குஷக்

    இவற்றில் டாப் எண்ட் வேரியண்ட் மற்ற முன்னணி எஸ்யுவி மாடல்களில் உள்ள முக்கிய அம்சங்கள் வழங்கப்படவில்லை. தற்போது ஸ்கோடா இந்தியா தனது குஷக் மாடலின் மான்ட் கர்லோ எடிஷன் பின்னர் அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்து இருக்கிறது.

    இந்தியாவில் ஸ்கோடா குஷக் மாடல் ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. சர்வதேச சந்தையில் மான்ட் கர்லோ எடிஷன் கமிக் எனும் பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. 

    ஆடம்பர கார் உற்பத்தி செய்யும் நிறுவனமான பென்ட்லி புது மைல்கல் பற்றிய விவரங்களை வெளியிட்டு இருக்கிறது.

    பென்ட்லி நிறுவனம் துவங்கப்பட்டதில் இருந்து தற்போது வரை சுமார் 2 லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் உற்பத்து செய்யப்பட்டு இருக்கின்றன. 1919 ஆண்டு துவங்கப்பட்ட பென்ட்லி 101 ஆண்டுகளாக பல்வேறு பாரம்பரியம் மிக்க கார் மாடல்களை உற்பத்தி செய்து இருக்கிறது.

    அந்த வரிசையில் தற்போது உற்பத்தியில் 2 லட்சம் கார்களை கடந்து இருப்பதாக பென்ட்லி அறிவித்து உள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த பென்ட்லி ஆடம்பர கார் உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக விளங்கி வருகிறது. இந்த நிறுவனம் புளோயர், அர்னேஜ், மல்சேன், கான்டினென்டல் ஜிடி என பல்வேறு தலைசிறந்த மாடல்களை உற்பத்தி செய்து இருக்கிறது.

    பென்ட்லி கார்

    2 லட்சம் யூனிட்களில் சுமார் 1,55,582 யூனிட்கள் 2003 ஆம் ஆண்டு முதல் உற்பத்தி செய்யப்பட்டவை ஆகும். தற்போது பென்ட்லி நிறுவனம் கான்டினென்டல், பிளையிங் ஸ்பர் மற்றும் பென்ட்யகா போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகிறது. மூன்று மாடல்கள் மற்றும் சப்-வேரியண்ட்கள் இங்கிலாந்தில் உள்ள தலைமையகத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றன. 

    மற்ற நிறுவனங்களை போன்றே டொயோட்டா நிறுவனமும் இந்திய சந்தையில் தனது வாகனங்கள் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது.


    டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் நிறுவனம் தனது அனைத்து கார் மாடல்களின் விலை இந்திய சந்தையில் உயர்த்தப்படுவதாக அறிவித்தது. இந்த நிறுவனத்தின் அனைத்து கார் மாடல்கள் விலையும் ஏப்ரல் 1, 2021 முதல் உயர்கிறது. இந்த ஆண்டில் டொயோட்டா கார் விலை உயர்த்தப்படுவது இரண்டாவது முறை ஆகும்.

     டொயோட்டா கார்

    முன்னதாக இந்த ஆண்டு துவக்கத்தில் டொயோட்டா தனது கார் மாடல்கள் விலையை உயர்த்தியது. விலை உயர்வு ஒவ்வொரு மாடல் மற்றும் வேரியண்ட் மற்றும் நகரங்களுக்கு ஏற்ப வேறுபடும். உற்பத்திக்கான செலவீனங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவேதே வாகனங்கள் விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகின்றன.

    கார் உற்பத்திக்கு தேவைப்படும் ஸ்டீல், அலுமினியம் மற்றும் பிளாஸ்டிக் போன்ற மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதுதவிர கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவது உற்பத்தி பணிகளை அதிக சவால் மிக்கதாக மாற்றி இருக்கிறது.
    ஹோண்டா நிறுவனம் தனது புத்தம் புதிய HR V ஹைப்ரிட் மாடலை அறிமுகம் செய்தது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ஹோண்டா நிறுவனம் புதிய HR V ஹைப்ரிட் மிட்-சைஸ் கிராஸ்-ஒவர் மாடலை அறிமுகம் செய்தது. இந்த மாடல் ஹோண்டா நிறுவனத்தின் மேன் மேக்சிமம், மெஷின் மினிமம் முறையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய ஹோண்டா கார் தற்போது சீன பூர்விக எலெக்ட்ரிக் எஸ்யுவி தோற்றம் பெற்று உள்ளது.

    கூப் எஸ்யுவி போன்ற ஸ்டைலிங், மெல்லிய ஹெட்லேம்ப்கள், பின்புறம் க்ளியர் லென்ஸ் எல்இடி டெயில் லைட், பிளாக் கிளாடிங், பாக்ஸ் ஸ்கிட் பிளேட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன. உள்புறம் பிரம்மாண்ட புளோட்டிங் டிஸ்ப்ளே உள்ளது.

    புதிய காரின் என்ஜின் பற்றிய விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும், இந்த மாடல் 1.5 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் சிலிண்டர் அல்லது 2.0 லிட்டர் என்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதே என்ஜின்கள் புதிய தலைமுறை ஜாஸ் ஹைப்ரிட் மற்றும் சிஆர்-வி ஹைப்ரிட் மாடல்களில் வழங்கப்பட்டு உள்ளது.

    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் ரூ. 39 லட்சம் பட்ஜெட்டில் புதிய ஏ கிளாஸ் லிமோசின் மாடல் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.


    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் புதிய ஏ கிளாஸ் லிமோசின் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்தியாவில் இதன் துவக்க விலை ரூ. 39.90 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். இந்த கார் ஆறுவித நிறங்கள் மற்றும் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    வெளிப்புறம் புதிய லிமோசின் மாடலில் எல்இடி ஹெட்லேம்ப்கள், பானரோமிக் சன்ரூப், எல்இடி டெயில் லைட்கள் உள்ளன. உள்புறம் MBUX இன்போடெயின்மென்ட் சிஸ்டம், விண்ட்ஸ்கிரீன் டிஸ்ப்ளே, டூயல்-சோன் கிளைமேட் கண்ட்ரோல், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, குரூயிஸ் கண்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜிங் வசதிகள் உள்ளன.

     மெர்சிடிஸ் பென்ஸ் ஏ கிளாஸ் லிமோசின்

    புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஏ கிளாஸ் லிமோசின் மாடலில் 1.3 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பெட்ரோல் என்ஜினுடன் 7 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 161 பிஹெச்பி பவர், 250 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

    இதன் டீசல் என்ஜின் 147 பிஹெச்பி பவர், 320 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் புதிய ஏ கிளாஸ் ஏ35 ஏஎம்ஜி மாடல் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 56.24 லட்சம் ஆகும். 
    ஸ்கோடா நிறுவனத்தின் கோடியக் பேஸ்லிப்ட் மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    ஸ்கோடா கோடியக் பேஸ்லிப்ட் மாடல் இந்தியாவில் 2021 மூன்றாவது காலாண்டு வாக்கில் அறிமுகமாகிறது. புது கார் வெளியீட்டு விவரத்தை ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் விற்பனை, சர்வீஸ் மற்றும் விளம்பர பிரிவு இயக்குனர் ஜாக் ஹாலின்ஸ் தனது ட்விட்டரில் தெரிவித்தார்.

     ஸ்கோடா கோடியக்

    இந்த எஸ்யுவி மாடல் 2020 ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக இதன் வெளியீடு பலமுறை தள்ளிப்போனது. வழக்கமான ஸ்கோடா கார்களை போன்றே, இந்த காரும் பெட்ரோல் என்ஜினுடன் வெளியாகும் என தெரிகிறது. அந்த வகையில் புது மாடலில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம்.

    இந்த என்ஜின் 188 பிஹெச்பி பவர், 320 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 4-வீல்-டிரைவ் சிஸ்டம் வழங்கப்படுகிறது. ஸ்கோடாவின் 2.0 லிட்டர் டிடிஐ டீசல் என்ஜின் 148 பிஹெச்பி பவர், 340 என்எம் டார்க் செயல்திறன் வழங்கியது.
    இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கும் புது கார் மாடல்கள் விவரங்களை போக்ஸ்வேகன் வெளியிட்டு இருக்கிறது.


    போக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் இந்த ஆண்டு மட்டும் நான்கு புது எஸ்யுவி மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நான்கு புதிய மாடல்களில் மிட்-சைஸ் எஸ்யுவி மாடலான டைகுன் மிகப்பெரும் மாடலாக இருக்கும். 

    இந்த மாடலின் சரியான வெளியீட்டு விவரம் இதுவரை வழங்கப்படவில்லை. இதுதவிர டி-ராக் மற்றும் டைகுன் ஆல்ஸ்பேஸ் போன்ற மாடல்கள் இந்தியாவில் சிபியு முறையில் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட இருக்கின்றன. புது மாடல்கள் வரிசையில், ஐந்து பேர் பயணிக்கக்கூடிய டைகுன் அனைவரின் கவனத்தை ஈர்க்கும் என தெரிகிறது.

     போக்ஸ்வேகன் கார்

    புதிய டைகுன் மாடல் போக்ஸ்வேகன் நிறுவனத்தின் MQB A0 IN பிளாட்பார்மில் உருவாகி வருகிறது. இந்த மிட்-சைஸ் எஸ்யுவி மாடலில் சதுரங்க வடிவ எல்இடி ஹெட்லேம்ப்கள், இன்டகிரேட் செய்யப்பட்ட எல்இடி டிஆர்எல்கள், 2-ஸ்லாட் குரோம் கிரில், சில்வர் பேஷ் பிளேட்கள், கேபின் பகுதியில் 2-டோன் பினிஷ், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டச்-ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது.

    டி-ராக் மற்றும் டிகுவான் ஆல்ஸ்பேஸ் மாடல்கள் இந்தியாவில் எவ்வித மாற்றமும் இன்றி அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. இரு எஸ்யுவி மாடல்களும் கடந்த ஆண்டு குறைந்த எண்ணிக்கையிலேயே இறக்குமதி செய்யப்பட்டன. இவற்றில் டி ராக் மாடல் இரண்டே மாதங்களில் விற்று தீர்ந்தது. இந்த மாடலுக்கான முன்பதிவு விரைவில் துவங்கும் என தெரிகிறது.

    ×